Sunday, December 28, 2008

என் காவல் நாயகனே, கலப்படம் அற்ற தூயவனே


புது காதல் காலமிது இருவர் வாழும் உலகிமிது
நீ நான் என்பதில் பொருள் படவில்லை ஏனோ?
புது தேடல் படலமிது தேகம் தேயும் தருணம்இது
கரைவதும் நுரைவதும் கண் முன் நிகழுது ஏனோ?
கொடு உனையே நீ எடுடா எனைத்தானே
நீ தொட்டால் பனி பாறை போலே
தேகம் கரையும் மாயம் என்ன
கொடு எனையே நான் உந்தன் துணை தானே
உன் வெட்கம் எனை வேட்டையாடி வேட்டையாடி விடுகிறதே

பனிமலை நடுவில் விழுந்தது போலே
உன் மடி இடையில் விழுந்தேன்
கிளைகளின் நுனியில் மலர்களை போலே
உன் கிளை மேலே வளர்ந்தேன்
மறைக்கின்றே பாகம் எல்லாம் விடுதலை கேட்குதே
விடு விடு வேகமாக விருப்பம் போல மலாரட்டும்
தொட தொட தேகமெல்லாம் தேன் துளி சுரக்குதே
தொடு தொடு வேகமாக சுரந்து வழிந்து ஓடட்டும்
வா அருகே நான் வாசனை மரம் தானே
என் நிழலில் நீ மயங்கி கொள்ள மருத்துவம்
இருக்கு நீ அறிவாய்
தேன் மழையால் நீ நனைத்தாய் எனையே
அது ஏதோ நீ சொல்லு சொல்லு சொல்லு சொல்லு நானறியேன்
என் காவல் நாயகனே, கலப்படம் அற்ற தூயவனே
என்னை ரசித்து இம்சை செய்வது ஏண்டா
என் காதல் தாயகமே, காமன் செய்த ஆயுதமே
உயிரை குடித்து தாகம் தீர்ப்பது என்டி?


உடல் வழி ஊர்ந்து, உயிர் வழி புகுந்து
ஆய்வுகள் செய்ய வந்தாயோ
என்னுடல் திறந்து நீ அதில் நிறைந்து
தவம் பல செய்திட வந்தாயோ
உடல் எங்கும் ரேகை வேண்டும் உன் நகம் வரையுமோ
விரல் படும் பாகம் எல்லாம் வெடிக்கு தே எரிமலை
வாலிப வாசம் என்னை வாட்டிடும் பொழுதிலே
வன்முறை செய்ய சொல்லி என் காதல் தேவி
ஏய் புயலே, என்னை வதைக்கும் வெயிலே
இடி போலே என்னை தாக்கி முதலில்
கைது செய்தாய் ஏன் சொல்வாய்
உன் உள்ளே நான் போரை தொடங்கிடாவா
நீ அதனை இன்று மெல்ல மெல்ல மெல்ல மெல்ல
வழி நடத்து

புது காதல் காலமிது இருவர் வாழும் உலகிமிது
நீ நான் என்பதில் பொருள் படவில்லை ஏனோ?
புது தேடல் படலமிது தேகம் தேயும் தருணம்இது
கரைவதும் நுரைவதும் கண் முன் நிகழுது ஏனோ?
கொடு உனையே நீ எடுடா எனைத்தானே
நீ தொட்டால் பனி பாறை போலே
தேகம் கரையும் மாயம் என்ன
கொடு எனையே நான் உந்தன் துணை தானே
உன் வெட்கம் எனை வேட்டையாடி வேட்டையாடி விடுகிறதே

Friday, December 26, 2008

காதலே ஒருவகை ஞாபக மறதி
கண்முன்னே நடப்பது மறந்திடுமே


மின்னல்கள் கூத்தாடும் மழைக்காலம்
வீதியில் எங்கெங்கும் குடைக்கோலம்
என் முன்னே நீ வந்தாய் கொஞ்சநேரம்
என் விழி எங்கும் பூக்காலம்
உடல் கொதித்ததே உயிர் மிதந்ததே
அய்யோ அது எனக்குப் பிடித்ததடி
எடை குறைந்ததே தூக்கம் தொலைந்ததே
அய்யோ பைத்தியமே பிடித்ததடி

மின்னல்கள் கூத்தாடும் மழைக்காலம்
வீதியில் எங்கெங்கும் குடைக்கோலம்
என் முன்னே நீ வந்தாய் கொஞ்சநேரம்
என் விழி எங்கும் பூக்காலம்
உடல் கொதித்ததே உயிர் மிதந்ததே
அய்யோ அது எனக்குப் பிடித்ததடா

எடை குறைந்ததே தூக்கம் தொலைந்ததே
அய்யோ பைத்தியமே பிடிக்குதடி
முதன்முறை என் விரல் பூக்கள்
பறித்தது தோட்டத்திலே
தலையணை உறையும் ஸ்வீட் ட்ரீம்ஸ்
பறித்தது தூக்கத்திலே
காலைத் தேநீர் குழம்பாய்
மிதந்தது சோற்றுக்குள்ளே
கிறுக்கன் என்றொரு பெயரும்
கிடைத்தது வீட்டுக்குள்ளே

காதலே ஒருவகை ஞாபக மறதி
கண்முன்னே நடப்பது மறந்திடுமே
வவ்வாலைப் போல் நம் உலகம் மாறித்
தலைகீழாகத் தொங்கிடுமே
ஓ உடல் கொதித்ததே உயிர் மிதந்ததே
அய்யோ அது எனக்குப் பிடித்ததடா

எடை குறையுதே தூக்கம் தொலையுதே
அய்யோ பைத்தியமே பிடிக்கிறதே

என் பேர் கேட்டால் உன் பேர்
சொன்னேன் பதட்டத்திலே
பக்கத்து வீட்டில் கோலம்
போட்டேன் குழப்பத்திலே
காதல் கவிதை வாங்கிப்
படித்தேன் கிறக்கத்திலே
ஓ குட்டிப் பூனைக்கு முத்தம்
கொடுத்தேன் மயக்கத்திலே

ஓ காதலும் ஒருவகை போதைதானே
உள்ளுக்குள் வெறியேற்றும் பேய்போல
ஏனிந்தத்தொல்லை என்று தள்ளிப்போனால்
புன்னகை செய்துகொஞ்சும் தாய்போல

உடல் கொதித்ததே உயிர் மிதந்ததே
அய்யோ அது எனக்குப் பிடித்ததடா
எடை குறைந்ததே தூக்கம் தொலைந்ததே
அய்யோ பைத்தியமே பிடித்ததடா

மின்னல்கள் கூத்தாடும் மழைக்காலம்
வீதியில் எங்கெங்கும் குடைக்கோலம்
என்முன்னே நீ வந்தாய் கொஞ்ச நேரம்
என் விழி எங்கும் பூக்காலம்

உடல் கொதிக்குதே உயிர் மிதக்குதே
அய்யோ இது எனக்குப் பிடிக்குதடா
எடை குறையுதே தூக்கம் தொலையுதே
அய்யோ பைத்தியமே பிடிக்குதடா

உனைத் தேடி மண்ணில் வந்தேன் எனைத்தேடி நீயும் வந்தாய்
உன்னை நானும் என்னை நீயும் கண்டுகொண்டோம்


கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
நல்லான் தீம்பால் நிலத்து உக்காங்கு
எனக்கும் ஆகாது என் ஐக்கும் உதவாது
பசலை நோயிற் வேண்டும்
திதலை அருந்தும் என் மாமைக் கவினே

தீண்டாய் மெய் தீண்டாய் தாண்டாய் படி தாண்டாய்
தீண்டாய் மெய் தீண்டாய் தாண்டாய் படி தாண்டாய்
ஒரு விரல் வந்து என்னைத் தீண்டியதே
என் நரம்போடு வீணை மீட்டியதே
மனம் அவந்தானா இவன் என்று திடுக்கிட்டதே

தீண்டாய் மெய் தீண்டாய் தாண்டாய் படி தாண்டாய்
ஒரு விரல் வந்து உன்னைத் தீண்டியதோ
உன் நரம்போடு வீணை மீட்டியதோ
உன் உயிர்க்குள்ளே காதல் அம்பைத் தொடுத்திட்டதோ

விழியோடும் தீண்டல் உண்டு விரலோடும் தீண்டல் உண்டு
இரண்டோடும் பேதம் உள்ளது
விழித்தீண்டல் உயிர் கிள்ளும் விரல் தீண்டல் உள்ளம் கிள்ளும்
அதுதானே நீ சொல்வது
நதியோரப் பூவின்மேலே ஜதிபாடும் சாரல் போலே
என்னில் இன்பதுன்பம் செய்குவதோ
ஒரு கன்னம் தந்தேன் முன்னே மறு கன்னம் தந்தாய் பெண்ணே
ஏசுனாதர் காற்று வந்து வீசியதோ
உறவின் உயிரே உயிறே என்னைப் பெண்ணாய்ச் செய்க
அழகே அழகே உன் ஆசை வெல்க

கடலோடு முத்தம் தந்தும் கலையாத வானம் போல
உடலோடு ஒட்டிக்கொள்ளவோ
உடலோடு அங்கும் இங்கும் உறைகின்ற ஜீவன் போல
உன்னோடு கட்டிக்கொள்ளவோ
உனைத் தேடி மண்ணில் வந்தேன் எனைத்தேடி நீயும் வந்தாய்
உன்னை நானும் என்னை நீயும் கண்டுகொண்டோம்
பல பேர்கள் காதல் செய்து பழங்காதல் தீரும்போது
பூமி வாழப் புதிய காதல் கொண்டுவந்தோம்
பனியோ பனியின் துளியோ உன் இதழ்மேல் என
பனியோ தேனோ நீ சுவைத்தால் என்ன

தீண்டாய் மெய் தீண்டாய் தாண்டாய் படி தாண்டாய்
தீண்டாய் மெய் தீண்டாய் தாண்டாய் படி தாண்டாய்
படி தாண்டாய்...படி தாண்டாய்...
படி தாண்டாய்...படி தாண்டாய்...

எத்தனையோ கவிதைகள் எழுதி இதயங்கள் எல்லாம் வென்றேனே
காதல் என்ற கவிதையை மட்டும் இலக்கண பிழையாய் எழுதிவிட்டேன்


என்னையும் உன்னையும் நெருங்கவைத்து இயற்கை நம்மை பழிக்கிறதே
இயற்கை இணைத்து வைத்தாலும் உன் செயற்கை தான் நம்மை பிரிக்கிறதே

என் கேள்விகளுக்கு பதிலில்லை என் உறவுகளுக்கு முகம் இல்லை
உன் கேள்விக்கு பதிலும் நான் தானே உன் உறவின் முகவரி நான் தானே

எத்தனையோ வீடுகள் கட்டி தோள்களில் மாலை சூடினேன்
காதல் என்ற வீட்டை மட்டும் கவனக்குறைவாய் கட்டினேன்

எத்தனையோ கவிதைகள் எழுதி இதயங்கள் எல்லாம் வென்றேனே
காதல் என்ற கவிதையை மட்டும் இலக்கண பிழையாய் எழுதிவிட்டேன்

தாகம் தீர்க்க தண்ணீர் கேட்டேன் சமுத்திரம் தந்தது யார் குற்றம்
கடல் நீரெல்லாம் கூடி நீராக்கும் சூத்திரம் மறந்தது உன் குற்றம்
கடல் நீரெல்லாம் குடிநீர் செய்வேன் கண்ணீரின் உப்பை நான் என்ன செய்வேன்

என்னையும் உன்னையும் நெருங்கவைத்து இயற்கை நம்மை பழிக்கிறதே
இயற்கை இணைத்து வைத்தாலும் உன் செயற்கை தான் நம்மை பிரிக்கிறதே

என் கேள்விகளுக்கு பதிலில்லை என் உறவுகளுக்கு முகம் இல்லை
உன் கேள்விக்கு பதிலும் நான் தானே உன் உறவின் முகவரி நான் தானே

தாமரை பூ பறிக்க வந்தேன் தங்க குளத்தில் விழுந்து விட்டேன்
தங்கச் சகதியில் புதைந்து புதைந்து தாமரை பூவை மறந்துவிட்டேன்

நினைத்த பூவை பறித்து கொண்டு குளத்தைவிட்டு வெளியேறு
தாமரை தண்டை பற்றிக்கொண்டே தங்க குளத்தில் கரையேறு

சொல்வது எளிவது செய்வது கடினம் என்பது தானே தகராறு
குளத்தின் கரைகள் போனாலும் உன் குலத்தின் கறைகள் போகாதே

வாங்கிய காதலை மீண்டும் என்னிடம் தந்துவிடு
தூங்கிய நாட்கள் மறந்து போனேன் எனக்கொரு முடிவை சொல்லிவிடு

என்னையும் உன்னையும் நெருங்கவைத்து இயற்கை நம்மை பழிக்கிறதே
இயற்கை இணைத்து வைத்தாலும் உன் செயற்கை தான் நம்மை பிரிக்கிறதே

என் கேள்விகளுக்கு பதிலில்லை என் உறவுகளுக்கு முகம் இல்லை
உன் கேள்விக்கு பதிலும் நான் தானே உன் உறவின் முகவரி நான் தானே

கனவுகளில் வாழ்ந்துவிட்டேன் இறுதிவரை
கண்களிலே தூவிவிட்டாய் மண்துகளைஉயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி
உனக்கென வாழ்கிறேன் நானடி
விழியிலே உன் விழியிலே விழுந்தவன் தானடி
உயிருடன் சாகிறேன் பாரடி
காணாமல் போனாய் இது காதல் சாபமா?
நீ கரையை கடந்த பின்னாலும்
நான் மூழ்கும் ஓடமா?

கனவுகளில் வாழ்ந்துவிட்டேன் இறுதிவரை
கண்களிலே தூவிவிட்டாய் மண்துகளை
இந்த சோகம் இங்கு சுகமானது
அது வரமாக நீ தந்தது
நீ மறந்தாலுமே உன் காதல் மட்டும்
என் துணையாக வருகின்றது
ஆறாத காயங்கள் என் வாழ்க்கை பாடமா?
இனி தீயை வைத்து எரித்தாலும் என் நெஞ்சம் வேகுமா?

கடலினிலே விழுந்தாலும் கரையிருக்கும்
காதலிலே விழுந்தபின்னே கரையில்லையே
இந்த காதல் என்ன ஒரு நடை வண்டியா?
நான் விழுந்தாலும் மீண்டும் எழ
இரு கண்ணை கட்டி ஒரு காட்டுக்குள்ளே
என்னை விட்டாயே எங்கே செல்ல?
ஆண் நெஞ்சம் எப்போதும் ஒரு ஊமை தானடி
அது தெருவின் ஓரம் நிறுத்திவைக்கும்
பழுதான தேரடி

உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி
உனக்கென வாழ்கிறேன் நானடி
விழியிலே உன் விழியிலே விழுந்தவன் தானடி
உயிருடன் சாகிறேன் பாரடி
காணாமல் போனாய் இது காதல் சாபமா?
நீ கரையை கடந்த பின்னாலும்
நான் மூழ்கும் ஓடமா?

பெண்ணின் காதல் வலியில் இன்பம்
ஆணின் காதல் பிறவி துன்பம்


உன்னை தொட்ட உற்சாகத்தில்
விண்ணை தொட்டு மண்ணில் வந்தேன்

தொட்டு கொண்டது கனவா கனவா
விட்டு சென்றது நனவா நனவா

பிறக்கும் முன்பே சந்தித்தோமா
சொல்லு சொல்லு சொல்லு

பிறந்த பொழுதே பிரிவு உற்றோமா
சொல்லு சொல்லு சொல்லு

என்னை போல வலி கண்டாயா
இதயம் இரண்டாய் சிதறுண்டாயா
இற்று போகும் உயிர் கண்டாயா

பெண்ணின் காதல் வலியில் இன்பம்
ஆணின் காதல் பிறவி துன்பம்

நீயும் நானும் ஒன்று ஒன்று
நெஞ்சும் நெஞ்சும் கூடும் என்று
காதல் தெய்வம் காற்றில் சொன்னதே
புருவம் ரெண்டும் முட்டிக்கொள்ள
பருவம் ரெண்டும் கட்டிக்கொள்ள
சந்தர்ப்பங்கள் தானாய் வந்ததே

ஓ நீ என்னை எப்படி அறிவாய்
நான் உன்னை எப்படி அறிவேன்
சந்தித்து பிரிந்தோமா

அலையோடு எரியும் பூக்கள்
தரையோடு வருதல் போல
மீண்டும் நான் இனைந்தோமா

உன் கள்ள கண்களால் உயிர் கொத்தி குடித்தாய்
உன் நெஞ்ச பள்ளத்தில் ஏன் காதல் மறைத்தாய்

என்னை போல வலி கண்டாயா
இதயம் இரண்டாய் சிதறுண்டாயா
இற்று போகும் உயிர் கண்டாயா
பெண்ணின் காதல் வலியில் இன்பம்
ஆணின் காதல் பிறவி துன்பம்

பெண்ணே உந்தன் நெஞ்சில் நெஞ்சில்
காதல் ஏதும் இல்லை என்றால்
என்னை நானே மூட்டை கட்டுவேன்

தொண்டை வரையில் காதல் வைத்து
கொஞ்சம் கூட இல்லை என்றால்
சாட்சிக்காக யாரை தேடுவேன்

காற்றோடு போகும் மேகம்
எங்கேதான் சிந்தும் என்று
யாருக்கும் தெரிவதில்லை

அகங்கார கண்ணி பெண்ணின்
அன்றாட முடிவும் என்ன
ஆணுக்கு புரிவதில்லை

ஒரு ஈட்டி எடுத்து என் நெஞ்சில் செலுத்து
உன் பேரை சொல்லுமே அதில் உள்ள எழுத்து

என்னை போல வலி கண்டாயா
இதயம் இரண்டாய் சிதறுண்டாயா
இற்று போகும் உயிர் கண்டாயா
பெண்ணின் காதல் வலியில் இன்பம்
ஆணின் காதல் பிறவி துன்பம்

உன்னை தொட்ட உற்சாகத்தில்
விண்ணை தொட்டு மண்ணில் வந்தேன்

தொட்டு கொண்டது கனவா கனவா
விட்டு சென்றது நனவா நனவா

பிறக்கும் முன்பே சந்தித்தோமா
சொல்லு சொல்லு சொல்லு

பிறந்த பொழுதே பிரிவு உற்றோமா
சொல்லு சொல்லு சொல்லு

என்னை போல வலி கண்டாயா
இதயம் இரண்டாய் சிதறுண்டாயா
இற்று போகும் உயிர் கண்டாயா

பெண்ணின் காதல் வலியில் இன்பம்
ஆணின் காதல் பிறவி துன்பம்

மார்போரம் மன்றாடி நான் தோற்று போனாலும் கண்ணா அதுவே சுகம்தாங்குமா கனாக்களின் பாரத்தை பாவை விழி
நான் வாடும் கார்காலத்தில்சூடான போர்வை தர
காற்றோடு காற்றாகவே உன் மூச்சு காற்றும் வர
ஆ அது ஓர் தவம்
மார்போரம் மன்றாடி நான் தோற்று போனாலும்
கண்ணா அதுவே சுகம்
தாங்குமா கனாக்களின் பாரத்தை பாவை விழி

தாங்குமா கனாக்களின் பாரத்தை பாவை விழி


சேரும் வினாடிகளில் உன் மூச்சே எந்தன் மேலாடை
கண் கொட்ட மறந்தாயே நீ அங்கம் எங்கிலும் தேன் வாடை
ஓயும் இடைவேளையில் வந்தாயே வம்பாகவெ
தள்ளாடி நான் சாய்கையில் நின்றாயே கொம்பாகவெ
மார்போரம் மன்றாடி நான் தோற்று போனாலும்

கண்ணா அதுவே சுகம்

தாங்குமா கனாக்களின் பாரத்தை பாவை விழி
தாங்குமா கனாக்களின் பாரத்தை பாவை விழி


பேச்சே இல்லை அந்நேரம் மோகத்துடன் நான் வாட
என் வேர்வை ஆறாய் ஓடி தேகத்துடன் போராட
அந்நாள் பொன்னால் இல்லையே அந்நாளும் இன்றில்லையே
உன் நெஞ்சில் நான் வீழ்ந்ததும் பித்தாகினென் நண்பனே
ஆ அது கண் பாடும்
மார்போரம் மன்றாடி நான் தோற்று போனாலும்

கண்ணா அதுவே சுகம்

Thursday, December 25, 2008

பூ உலகை அவன் புதிதாய் செய்தானே, என் புத்தம் புதிய வாழ்வே அவன்தானே


வான் மழை, அது வானம் விட்ட தூது,
என் நண்பனுக்கு என் தூது சேர்ந்திடும்,
நாள் எப்போது?
புது பூ மனம், அது பூக்கள் விட்டு தூது,
என் காதல் பார்த்ததை கண்கள் பார்த்திடும்,
நாள் எப்போது?
இரு கண் பூத்து நான் காத்திருக்கும்போது,
ஒரு பூ திறந்ததும், புதையல் கொட்டிடும்,
நாள் எப்போது?
அடி நான் அன்று, உயிர் தத்தலித்தபோது,
என்னை வாழ வைத்தவன் ஆள வந்திடும்,
நாள் எப்போது?

தோழிகளே, என் சொர்ககம் தெரிகிறதே,
அதை தொட்டு தொடரும் முகவரி தெரியல்லையே,
வாசல் வந்து ஒரு வாழ்க்கை அழைக்கிறதே,
என் வலமும் இடமும் ரெண்டும் துடிக்கிறதே,
நெஞ்சிலே நெஞ்சிலே மின்னல் பூச்சி சுற்றுதே,
நிற்க சொன்னால் நிற்க மறுக்கிறதே,
ஆயிரம் நினைவுகள், ஆசை மூட்டிய கனவுகள்,
அவனை காண கண்கள் அரிக்கிறதே,
நண்பானா? வம்பனா?
நீ நண்பானா இல்லை வம்பனா?
முன்னால் வந்து முகவரி சொல்லு,


வான் மழை, அது வானம் விட்ட தூது,
என் நண்பனுக்கு என் தூது சேர்ந்திடும்,
நாள் எப்போது?


பூ உலகை அவன் புதிதாய் செய்தானே,
என் புத்தம் புதிய வாழ்வே அவன்தானே,
செவிகளிலே என் ஜீவன் தொட்டானே,
நெஞ்சில் சின்ன சின்ன பூக்கள் நட்டானே,
நேரிலே நேரிலே பார்த்தால் என்ன நேருமோ,
என் நெற்றிக்குள்ளே மின்னல் வெட்டு மடி,
வாழ்விலே முதல் முறை வெட்கம் வந்து சேருமோ?
மௌனம் என்னை வெட்டி தின்னும் அடி,
மன்மதா (மன்மதா), நீ யாரடா (யாரடா)?
டேய் மன்மதா, நீ யாரடா?
என் மாற்புக்கு முன்னே வாடா,


வான் மழை, அது வானம் விட்ட தூது,
என் நண்பனுக்கு என் தூது சேர்ந்திடும்,
நாள் எப்போது?
புது பூ மனம், அது பூக்கள் விட்டு தூது,
என் காதல் பார்த்ததை கண்கள் பார்த்திடும்,
நாள் எப்போது?
இரு கண் பூத்து நான் காத்திருக்கும்போது,
ஒரு பூ திறந்ததும், புதையல் கொட்டிடும்,
நாள் எப்போது?
அடி நான் அன்று, உயிர் தத்தலித்தபோது,
என்னை வாழ வைத்தவன் ஆள வந்திடும்,
நாள் எப்போது?

Tuesday, December 23, 2008

இதய பூ எப்போது மலரும் என்று இதுவரை சொன்னவர் கிடையாது


மலரே ஒரு வார்த்தை பேசு இப்படிக்கு பூங்காற்று
காற்று வந்து காது கடித்தும் இன்னும் என்ன மௌனமமோ
மோதி வந்து முத்தமிட்டால் மௌனம் தீருமோ
அச்சம் தான் உன் ஆடையோ வெட்கம் தான் முந்தாணையோ
மௌனம் தான் உன் வேளியோ செம்பூவே வா வா வா வா
விழியே ஒரு வார்த்தையானால் மொழி என்பது வேண்டாமே

வார்த்தையாடி பார்த்த போது காதல் வரவில்லை
காதல் வந்து சேர்ந்தபோது வார்த்தை வரவில்லை
நான்கு கண்கள் பேசும் போது தாய்மொழிக்கு இடமில்லை
மௌனம் பாடும் பாடல் போலே மனதுக்கு சுகமில்லை
மலர்களை எரிப்பது முறையில்லை மௌனத்தை உடைப்பது சரியில்லை
மௌனத்தின் ஓசைகள் கேளாமல் வார்த்தைகள் புரிவது எளிதில்லை
கண்ணில் ஆசை துடிக்குதே அன்பே அன்பே
நெஞ்சு பிடிக்குது முல்லை வெளியில் சொல்லவில்லை
வெட்க படாத பூக்களை வண்டுகள் தொடாதடி
முத்தம் தராமல் வெட்கமும் சாயம் போகாதடி

மலரே ஒரு வார்த்தை பேசு இப்படிக்கு பூங்காற்று


பெண்ணிடத்தில் உள்ளதெல்லாம் பெண்ணுக்கு தெரியாது
ஒரு ஆணின் கைகள் தீண்டு மட்டும் அவசியம் புரியாது
காதல் மங்கை சொன்ன வார்த்தை கவிதையில் கிடையாது
அட காதலிக்கும் ஆட்கள் போலே கவிஞர்கள் கிடையாது
இரவிலே தாமரை மலராது பகலிலே அல்லியும் அவிழாது
இதய பூ எப்போது மலரும் என்று இதுவரை சொன்னவர் கிடையாது
ராஜமோஹினி ரம்பா ரம்பா
உன் எடைக்கெடை தங்கம் தர துடிக்கும் நெஞ்சம்
கைகள் தொடாமல் கண்களால் நெஞ்சை பந்தாடினாய்
ரத்தம் வராமல் பார்வையால் என்னை தூண்டாடினாய்

மலரே ஒரு வார்த்தை பேசு இப்படிக்கு பூங்காற்று
காற்று வந்து காது கடித்தும் இன்னும் என்ன மௌனமமோ
மோதி வந்து முத்தமிட்டால் மௌனம் தீருமோ
அச்சம் தான் உன் ஆடையோ வெட்கம் தான் முந்தாணையோ
மௌனம் தான் உன் வேளியோ செம்பூவே வா வா வா வா
விழியே ஒரு வார்த்தையானால் மொழி என்பது வேண்டாமே

Wednesday, December 17, 2008

உள்ளத்துல நான் உன்னை நெனச்சேன்
கண்ணாளா தான வளைச்சுபுட்டேன்
நாள் முழுக்க உன்னை நெனச்சு
நூலாக தான் எலைச்சுபுட்டேன்


இவன் வீரன் சூரன்
மதுரைக்கார மாமன் மாமன்
உனக்கு மாலை போட
மணமகளா நானே வாரேன்
என்னை பொண்னெல்லாம் பாத்தாச்சு
நாள் ஒண்ணும் வச்சாச்சு
நளுங்கோடு கல்யாண பேச்சு

கண்ணுக்கழகா வண்ண மயிலு
கண்ணு படுமோ சின்ன குயிலு
கொஞ்சும் கிளி தான் கோவ பழம் தான்
கோவப்பட்ட நீ மண்ணு புழு தான்
பொம்பள கிட்ட தெம்பு இருக்கு
புரிஞ்சுக்கணும் புரிஞ்சுக்கணும்
வம்பு இழுத்தா என்ன நடக்கும்
தெரிஞ்சுக்கணும் தெரிஞ்சுக்கணும்
அட பொட்ட புள்ளைங்க சொன்னபடி தான்
நடந்துக்கணும் நடந்துக்கணும்
பட்டு புடைவ பாவாடை தான்
அவசியம் எடுத்து கொடுத்திடனும்
மாமான்னு பாக்காம நான் ஒண்ணும் கேட்காம
காதோரம் பூ சுத்தாலாமா

இவன் வீரன் சூரன்
மதுரைக்கார மாமன் மாமன்
உனக்கு மாலை போட
மணமகளா நானே வாரேன்
என்னை பொண்னெல்லாம் பாத்தாச்சு
நாள் ஒண்ணும் வச்சாச்சு
நளுங்கோடு கல்யாண பேச்சு

உள்ளத்துல நான் உன்னை நெனச்சேன்
கண்ணாளா தான வளைச்சுபுட்டேன்
நாள் முழுக்க உன்னை நெனச்சு
நூலாக தான் எலைச்சுபுட்டேன்
சொப்பணத்துல உன்னோட தான் கதை படிச்சேன் கதை படிச்சேன்
கற்பனையில் உன்னோட தான் கவி படிச்சேன் கவி படிச்சேன்
ஊரு முழுக்க பெண் கேட்டும் ஒதுக்கி புட்டேன் ஒதுக்கி புட்டேன்
கண்ணா வாசல் வரைக்கும் வந்தாணுங்க
மறுத்து புட்டேன் மறுத்து புட்டேன்
மாமான்னு பாக்காம நான் ஒண்ணும் கேட்காம
காதோரம் பூ சுத்தாலாமா

இவன் வீரன் சூரன்
மதுரைக்கார மாமன் மாமன்
உனக்கு மாலை போட
மணமகளா நானே வாரேன்
என்னை பொண்னெல்லாம் பாத்தாச்சு
நாள் ஒண்ணும் வச்சாச்சு
நளுங்கோடு கல்யாண பேச்சு

Tuesday, December 16, 2008

இரு கண்ணிலும்
உன் ஞாபகம்
உறங்காமல் இருக்கின்றது


ஒரு ஜீவன் தான்
உன் பாடல் தான்
ஓயாமல் இசைக்கின்றது
இரு கண்ணிலும்
உன் ஞாபகம்
உறங்காமல் இருக்கின்றது
பாசங்களும் பந்தங்களும்
பிரித்தாலும் பிரியாதது
காலங்களும் நேரங்களும்
கலைத்தாலும் கலையாதது

ஒரு ஜீவன் தான்
உன் பாடல் தான்
ஓயாமல் இசைக்கின்றது

ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உனைச் சேருவேன்
வேறாரும் நெருங்காமல் மனவாசல்தனை மூடுவேன்
உருவானது நல்ல சிவரஞ்சனி
உனக்காகத்தான் இந்த கீதாஞ்சலி
ராகங்களின் ஆலாபனை
மோகங்களின் ஆராதனை
உடலும் மனமும் தழுவும் பொழுதில் உருகும்

ஒரு ஜீவன் தான்
உன் பாடல் தான்
ஓயாமல் இசைக்கின்றது

காவேரி கரை சேர
அணை தாண்டி வரவில்லையோ
ஆசைகள் அலைபாய ஆனந்தம் பெறவில்லையோ
வரும் நாளெல்லாம் இனி மதனோற்சவம்
வளையோசைதான் நல்ல மணிமந்திரம்
நான்தானய்யா நீலாம்பரி
தாலாட்டவா நடுராத்திரி
சுதியும் லயமும் சுகமாய் இணையும் தருணம்

ஒரு ஜீவன் தான்
உன் பாடல் தான்
ஓயாமல் இசைக்கின்றது
இரு கண்ணிலும்
உன் ஞாபகம்
உறங்காமல் இருக்கின்றது
பாசங்களும் பந்தங்களும்
பிரித்தாலும் பிரியாதது
காலங்களும் நேரங்களும்
கலைத்தாலும் கலையாதது

கீழ் வர்க்கம் மேல் வர்க்கம்
இணயாத இரு கோடுகள் ஹாஹ் ஹ ஹ ஹ
சேர்ந்தாலும் சில நாளில்
கரைகின்ற மணல் வீடுகள்
கட்டில் சொந்தம் என்னைக் கைவிட்டது
தொட்டில் சொந்தம் என்னைத் தொடர்கின்றது
உயிர் வாழ்கிறேன் உனக்காகத்தான்
யாருமில்லை எனக்காகத்தான்
மலரே மலரே மடியும் தவழும் நிலவே

ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான்
ஓயாமல் இசைக்கின்றது

தெய்வங்கள் சில நேரம் தவறாக நினைக்கின்றது
பொருந்தாத இரு நெஞ்சை
மணவாழ்வில் இணைக்கின்றது
கல்யாணமே அன்பின் ஆதாரம்தான்
உன் வாழ்விலே அது வியாபாரம் தான்
மணி மாளிகை உன் வீடுதான்
மாஞ்சோலையில் என் கூடு தான்
மதுதான் மனைவி இனி என் வாழ்க்கை துணைவி

ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான்
ஓயாமல் இசைக்கின்றது
இரு கண்ண்ணிலும் உன் ஞாபகம்
உறங்காமல் இருக்கின்றது
பாசங்களூம் பந்தங்களும்
பிரித்தாலும் பிரியாதது
காலங்களும் நேரங்களும்
கலைத்தாலும் கலையாதது

எப்பொழுதும் உன் சொப்பனங்கள்
முப்பொழுதும் உன் கற்பனைகள்
சிந்தனையில் நம் சங்கமங்கள்
ஒன்றிரண்டா என் சஞ்சலங்கள்


தாலாட்டும் பூங்காற்று நானல்லவா
நீகேட்டுப் பாராட்டு ஓ மன்னவா
வருவாயோ வாராயோ
ஓ நெஞ்சமே ஓ நெஞ்சமே
என் நெஞ்சமே உன் தஞ்சமே

நள்ளிரவில் நான் கண்விழித்தேன்
உன் நினைவில் நான் மெய்சிலிர்த்தேன்
பஞ்சணையில் நீ முள்விரித்தாய்
பெண் மனதை நீ ஏன் பறித்தாய்
ஏக்கம் தீயாக ஏதோ நோயாக
காணும் கோலங்கள் யாவும் நீயாக
வாசலில் மன்னா உன் தேர் வர ஆடுது பூந்தோரணம்

தாலாட்டும் பூங்காற்று நானல்லவா
நீகேட்டுப் பாராட்டு ஓ மன்னவா
வருவாயோ வாராயோ
ஓ நெஞ்சமே ஓ நெஞ்சமே
என் நெஞ்சமே உன் தஞ்சமே

எப்பொழுதும் உன் சொப்பனங்கள்
முப்பொழுதும் உன் கற்பனைகள்
சிந்தனையில் நம் சங்கமங்கள்
ஒன்றிரண்டா என் சஞ்சலங்கள்
காலையில் நான் கேட்கும் காதல் பூபாளம்
காதில் கேட்காதோ கண்ணா என்னாளும்
ஆசையில் நான் தொடும் ஆலயம் நீயல்லவா

தாலாட்டும் பூங்காற்று நானல்லவா
நீகேட்டுப் பாராட்டு ஓ மன்னவா
வருவாயோ வாராயோ
ஓ நெஞ்சமே ஓ நெஞ்சமே
என் நெஞ்சமே உன் தஞ்சமே

ஸ்ரீராமன் ஜானகி பந்தம் இந்த சொந்தம்
தேவாதி தேவரும் சூழ.. நலம் பாட


தேவதை போல் ஒரு பெண்ணிங்கு வந்தது
நம்பி உன்னை நம்பி
இந்த மைத்துனன் கைத்தலம் பற்றிட வந்தது
தம்பி தங்க கம்பி
பூச்சூடவும் பாய் போடவும்
பூச்சூடவும் பாய் போடவும்
சுபவேளை தான்

ஸ்ரீராமன் ஜானகி பந்தம் இந்த சொந்தம்
தேவாதி தேவரும் சூழ.. நலம் பாட
மூன்று முடி போல ஆண்டாள் துணைக்கூட
வேதங்களின் பாரயணம் பூப்பந்தளில் ஆலிங்கனம்

சீதாவை பிரித்தது மான் தான்
புள்ளி மான் தான்
தோதாக சேர்ந்தது மான் தான்
அனுமான் தான்
நாங்கள் அனுமான்கள் வாழ்க இளமான்கள்
கல்யாணமே வைபோகம் தான்
பூந்தென்றலே ஊர்கோலம் தான்

அவன் தான் அன்புள்ள எதிரி கொஞ்சம் குறும்புள்ள எதிரி
எனக்கும் பிடிக்கின்ற எதிரி எனக்குள் இருக்கின்ற எதிரிஜீலை மலர்களே ஜீலை மலர்களே
உங்கள் எதிரியாய் ஒரு அழகி இருக்கிறாள்
அவள்தான் அன்புள்ள எதிரி கொஞ்சம் குறும்புள்ள எதிரி
எனக்கும் பிடிக்கின்ற எதிரி எனக்குள் இருக்கின்ற எதிரி

ஜீலை மலர்களே ஜீலை மலர்களே
உங்கள் எதிரியாய் ஒரு அழகன் இருக்கிறான்
அவன் தான் அன்புள்ள எதிரி கொஞ்சம் குறும்புள்ள எதிரி
எனக்கும் பிடிக்கின்ற எதிரி எனக்குள் இருக்கின்ற எதிரி

தூக்கம் எனக்கு பிடித்த நண்பனே அந்த
நண்பன் இன்று இல்லையே
காதல் வெப்பத்தை கண்ணில் ஊற்றினாள்
வெட்கம் எனக்கு பிடித்த தோழியே
அந்த தோழி இன்று இல்லையே
அர்த்த ராத்திரி அர்த்த மாற்றினாய்
யார் நீ குளிரான பூவா யார் நீ மெய்யான பொய்யா

உந்தன் கண்கள் பார்த்த நாள் முதல்
என்னை மட்டும் காற்று மண்டலம்
பறக்கும் மனுஷியாய் மாற்றிவிட்டதே
ஏய்..... உன்னை நானும் சேர்ந்த நாள் முதல்
இதயம் என்னும் மைய பகுதியில்
மைனஸ் டிகிரியில் ஹேய் ரத்தம் ஓடுதே
இதமாய் இம்சைகள் செய்தாய் அழகாய் அவஸ்தைகள் தந்தாய்

ஜீலை மலர்களே ஜீலை மலர்களே
உங்கள் எதிரியாய் ஒரு அழகி இருக்கிறாள்
அவள்தான் அன்புள்ள எதிரி கொஞ்சம் குறும்புள்ள எதிரி
எனக்கும் பிடிக்கின்ற எதிரி எனக்குள் இருக்கின்ற எதிரி

ஜீலை மலர்களே ஜீலை மலர்களே
உங்கள் எதிரியாய் ஒரு அழகன் இருக்கிறான்
அவன் தான் அன்புள்ள எதிரி கொஞ்சம் குறும்புள்ள எதிரி
எனக்கும் பிடிக்கின்ற எதிரி எனக்குள் இருக்கின்ற எதிரி

என்னை போல எவரும் உன்னை காதலிக்க முடியாது
முடியும் என்றால் கூட அவனை காதலிக்க முடியாது


இடம் பொருள் பார்த்து இதயத்தை மாற்று
இது ஒரு காதல் கூத்து
விழிகளை கோர்த்து விரல்களை சேர்த்து
உயிரினில் என்னை போர்த்து
என்னை போல எவரும் உன்னை காதலிக்க முடியாது
முடியும் என்றால் கூட அவனை காதலிக்க முடியாது

உன் நகங்களில் பார்த்தேன்
என் இருபது முகங்கள்
உன் கன்னங்கள் பார்த்தேன்
என் இதழின் ரேகைகள்
காதல் என்ற மரத்தின் கீழே புத்தனாகிறேன்
போதை கொண்ட உந்தன் மடியில் பூக்களாகிறேன்
நீ பார்க்கும் திசை எந்தன் நடை பாதையே
நீ பேசும் மொழி எந்தன் அகராதியே

உன் விழிகளின் வெயிலில்
என் வேர்வை இனிக்கிதே
உன் புன்னகை நினைவில் என் தூக்கம் தொலைந்ததே
காதல் என்ற தாயின் மடியில் குழந்தை ஆகிறேன்
மழலை பேசும் மொழியில் இன்று மனிதனாகிறேன்
கனவோடு உனை காண இமை தேடுவேன்
இமையாக நான் வந்து உனை மூடுவேன்

Monday, December 15, 2008

சிந்தைக்குள் ஆடும் ஜீவனே கண்மணியே
சந்திக்க வேண்டும் தேவனே என்னுயிரே


இந்த மான் உன்தன் சொந்த மான்
பக்கம் வந்து தான் சிந்து பாடும்
சிந்தைக்குள் ஆடும் ஜீவனே கண்மணியே
சந்திக்க வேண்டும் தேவியே என்னுயிரே

வேல்விழி போடும் தூண்டிலே
நான் விழலாலேன் தோளிலே
நூலிடை தேயும் நோயிலே
நான் வரம் கேட்கும் கோயிலே
அன்னமே என்தன் சொர்ணமே உன்தன்
எண்ணமே வனவில் வண்ணமே
கன்னமே மதுக் கிண்ணமே - அதில்
பொன்மணி வைரங்கள் மின்னுமே
எண்ணமே தொல்லை பன்னுமே
பெண்ணென்னும் கங்கைக்குள் பேரின்பமே

இந்த மான் உன்தன் சொந்த மான்
பக்கம் வந்து தான் சிந்து பாடும்
சிந்தைக்குள் ஆடும் ஜீவனே கண்மணியே
சந்திக்க வேண்டும் தேவனே என்னுயிரே

பொன்மணி மேகலை ஆடுதே
உன் விழி தான் இடம் தேடுதே
பெண்ணுடல் பார்த்ததும் நாணுதே
இன்பத்தின் வேதனை ஆனதே
எண்ணத்தான் உன்னை எண்ணித்தான் - உடல்
மின்னத்தான் மேகலை பின்னத்தான்
சொல்லித்தான் நெஞ்சைக் கிள்ளித்தான் - என்னை
சொர்க்கத்தில் தேவனும் சோதித்தான்
மோகந்தான் சிந்தும் தேகந்தான்
தாகத்தில் நான் நிற்க ஆனந்தம் தான்

என்னை மீறி எழுந்து வந்த என் பாடலில்
அவன் எதிரொலி வர


ஒரு நாள் மாலையில் எதையோ தேடினேன்
இமை பொழுதில் என் மனத்தில் யார் வந்ததோ

ஒரு நாள் மாலையில் எதையோ தேடினேன்
ஒரு நாள் மாலையில் எதையோ தேடினேன்

இமை பொழுதில் என் மனத்தில் யார் வந்ததோ
இமை பொழுதில் என் மனத்தில் யார் வந்ததோ

தேடி வந்து அலை அடிக்குதே
வழியும் துளிகள் உயிர் நனைக்குதே
தேடி வந்து அலை அடிக்குதே
வழியும் துளிகள் உயிர் நனைக்குதே
என்னை மீறி எழுந்து வந்த என் பாடலில்
அவன் எதிரொலி வர

சலவைக்கல் இதயத்தில் அவனது பெயரினை
காதல் எழுதி செல்ல
மலைகளின் வளைவென வளைந்தது எனது இடை
அவனை ஏந்தி செல்ல

மாறுதே உடல் மொழி சிணுங்குதே உயிர் மொழி
மாறுதே உடல் மொழி சிணுங்குதே உயிர் மொழி
ஒளி தேவதையாய் எனை மாற்றுக்கிறான்
ஒரு ஓவியமாய் எனை தீட்டுகிறான்
மனம் மஞ்சள் வர்ணத்தில் பூத்து ஆட

ஒரு நாள் மாலையில் எதையோ தேடினேன்
இமை பொழுதில் என் மனத்தில் யார் வந்ததோ

மனதினில் மலர் செடி வளருது வளருது
காதல் வாசம் சொல்ல
குளிர்ந்த என் விரல் என்ன துடிக்குது இரு இதழ்
முத்த பூவை கிள்ள

பனித்துளி ஆகிறேன் பூகளில் சாய்கிறேன்
பனித்துளி ஆகிறேன் பூகளில் சாய்கிறேன்
குடை ராட்டினத்தில் எனை ஏற்றுகிறான்
புது மயக்கத்திலே பயம் காட்டுகிறான்
மனம் மஞ்சள் வர்ணத்தில் பூத்து ஆட

ஒரு நாள் மாலையில் எதையோ தேடினேன்
இமை பொழுதில் என் மனத்தில்
யார் வந்ததோ

ஒரு நாள் மாலையில் எதையோ தேடினேன்
ஒரு நாள் மாலையில் எதையோ தேடினேன்

இமை பொழுதில் என் மனத்தில் யார் வந்ததோ
இமை பொழுதில் என் மனத்தில் யார் வந்ததோ

தேடி வந்து அலை அடிக்குதே
வழியும் துளிகள் உயிர் நனைக்குதே
தேடி வந்து அலை அடிக்குதே
வழியும் துளிகள் உயிர் நனைக்குதே
என்னை மீறி எழுந்து வந்த என் பாடலில்
அவன் எதிரொலி வர

ஒரு நாள் மாலையில் எதையோ தேடினேன்
இமை பொழுதில் என் மனத்தில்
யார் வந்ததோ

Thursday, December 11, 2008

என் நிழலாய் வந்தாய்
உயிராய் சென்றாய் ஐயையோ
ஒரு மாயம் செய்தாய்
நெஞ்சை காயம் செய்தாய் ஐயையோஎன் நிழலாய் வந்தாய்
உயிராய் சென்றாய் ஐயையோ
பணியாய் நின்றாய் தீயாய் குளிர்ந்தாய் ஐயையோ

கண்ணாடி பிம்பம் முன்னாடி வந்து
தள்ளாட செய்ததடி
கண் காது போல நீ ஒரு அங்கம்
என்னுயிர் உனக்கு சொந்தம்

என் நிழலாய் வந்தாய்
உயிராய் சென்றாய் ஐயையோ
ஒரு மாயம் செய்தாய்
நெஞ்சை காயம் செய்தாய் ஐயையோ

கண்ணாடி பிம்பம் முன்னாடி வந்து
தள்ளாட செய்ததடி
கண் காது போல நீ ஒரு அங்கம்
என்னுயிர் உனக்கு சொந்தம்

ஃபைவ் ஸ்டார் பார்வையினாலே
என் மனதை பறித்து விட்டாயே
திங்கள் என்பது முகம் அல்லவா
செவ்வாய் என்பது உன் இதழ் அல்லவா சாக்களேட்
புதன் என்பது புன்னகை அல்லவா
வியாழன் என்பது உன் விழிகள் அல்லவா
வெள்ளி என்பது உந்தன் நிறம் அல்லவா
சனி என்பது உந்தன் கூந்தல் அல்லவா
ஞாயிறு என்பது நகங்கள் அல்லவா
You are a walking Chocolate chocolate..
You are a walking Chocolate chocolate..

வாரம் முழுதும் வருஷம் முழுதும்
என் வாழ்க்கை முழுதும்
நீதான் நீதான் எந்தன் சக்களேட்

Wednesday, December 10, 2008

பூ போல மலர்ந்து விட்டேன் வாழ்வில் ஏதும் வாசம் இல்லை
கண்ணா உன்னை கண்டு கொண்டால் கண்கள் மீண்டும் தேவையில்லை


ஒரு நிமிடமா ஒரு நிமிடமா ஒரு நிமடமா தவறிவிட்டேன்
ஒரு ஜென்மமே ஒரு ஜென்மமே ஒரு ஜென்மமே இழந்துவிட்டேன்
அன்பே அன்பே எங்கே.....?
பள்ளி தோழியே வந்து போனாயா
பாவாடை பூவே வந்து போனாயா
காற்று எல்லாம் உன் வாசம் வந்து போனாயா
கரையெல்லாம் உன் தடங்கள் வந்து போனாயா
நதி எல்லாம் உன் கொலுசு வந்து போனாயா

ஒரு நிமிடமா ஒரு நிமிடமா ஒரு நிமடமா தவறிவிட்டேன்
ஒரு ஜென்மமே ஒரு ஜென்மமே ஒரு ஜென்மமே இழந்துவிட்டேன்
அன்பே அன்பே எங்கே.....?

(பள்ளி தோழியே...)
நிலா வந்து போனதற்கு வான் வெளியில் சாட்சியில்லை
ஆனாலும் பூமியிலே அல்லி எல்லாம் சாட்சி சொல்லும்
நீ வந்து போனதற்கு சாட்சி சொல்ல யாருமில்லை
ஆனாலும் அலையெல்லாம் அசையாமல் சாட்சி சொல்லும்
இளம் பிறையாக பார்த்தவளே இப்பொதெப்படி இருப்பாயோ
அங்கம் குளித்து திமிரும் அழகில் அடையாளங்கள் தொலைத்தாயோ
உதட்டில் ஒட்டிய புன்னகை மட்டும் உறைந்து விடாமல் இருப்பாயோ
அன்பே அன்பே எங்கே....?

(பள்ளி தோழியே...)
பூ போல மலர்ந்து விட்டேன் வாழ்வில் ஏதும் வாசம் இல்லை
கண்ணா உன்னை கண்டு கொண்டால் கண்கள் மீண்டும் தேவையில்லை
மறுமுறை என்னை பார்க்கையிலே மார்பில் புதைந்து அழுவாயோ
வெட்கம் தடவிய புன்னகையாலே விவகாரங்கள் செய்வாயோ
இலையில் சிக்கிய மழையை போலே என்னை தொடாமல் தவிப்பாயோ
அன்பே அன்பே எங்கே...?

பள்ளி தோழியே வந்து போனாயா
பாவாடை பூவே வந்து போனாயா
காற்று எல்லாம் உன் வாசம் வந்து போனாயா
கரையெல்லாம் உன் தடங்கள் வந்து போனாயா
நதி எல்லாம் உன் கொலுசு வந்து போனாயா

ஒரு நிமிடமா ஒரு நிமிடமா ஒரு நிமடமா தவறிவிட்டேன்
ஒரு ஜென்மமே ஒரு ஜென்மமே ஒரு ஜென்மமே இழந்துவிட்டேன்
அன்பே அன்பே எங்கே.....?

கண்ணில் விழுந்தாய் நெஞ்சில் நுழைந்தாய்
நான் வாழ நீயே அர்த்தம் தந்தாய்


எங்கே இருந்தாய் எங்கே இருந்தாய்
எப்படி நீயும் என்னுள் வந்தாய் கண்ணில் விழுந்தாய் நெஞ்சில் நுழைந்தாய்
நான் வாழ நீயே அர்த்தம் தந்தாய்

உனை பார்க்கும் முன்பு நான்
காகிதத்தின் வெண்மை அடி
உனை பார்த்த பின்பு நான்
வானவில்லின் வண்ணம் அடி

தோளில் சாயும் போது தோழி நீ அடி
மடியில் சாயும் போது தாயும் நீ அடி

என் வீட்டு தோட்டத்தில் பூக்கின்ற பூவெல்லாம்
பறிக்கதான் ஆள் இன்றி செடியில் உதிரும் அடி
உன்னை நான் பார்த்தவுடன் உனக்காக ஆசையுடன்
கை விரல்கள் கேட்காமல் பரித்திட போகுதடி
இதயம் முழுதும் விதையா விழுந்தாய்
வெறும் விதை என்று விட்டு விட்டு சென்றாய்
விருக்ஷத்தை போல நீ வளர்ந்து நின்றாய்
தோளில் சாயும் போது தோழி நீ அடி
மடியில் சாயும் போது தாயும் நீ அடி

என் பேரை கேட்டாலே உன் பேரை சொல்லுகிறேன்
எப்போதும் உன் நினைவு என்னை சுற்றுதடி
எதிரே யார் வந்தாலும் நீ என்று குழம்புகிறேன்
உன்னாலே என் மனத்தில் மின்னல் வெட்டுதடி
உயிரில் கலந்தாய் உணர்வில் நுழைந்தாய்
எந்தன் நிழல் இன்று என்னை விட்டு விட்டு சென்று
உந்தன் பின்னே வந்து உனை தொடர்கிறதே

தோளில் சாயும் போது தோழி நீ அடி
மடியில் சாயும் போது தாயும் நீ அடி

எங்கே இருந்தாய் எங்கே இருந்தாய்
எப்படி நீயும் என்னுள் வந்தாய் கண்ணில் விழுந்தாய் நெஞ்சில் நுழைந்தாய்
நான் வாழ நீயே அர்த்தம் தந்தாய்

உனை பார்க்கும் முன்பு நான்
காகிதத்தின் வெண்மை அடி
உனை பார்த்த பின்பு நான்
வானவில்லின் வண்ணம் அடி

Tuesday, December 9, 2008

வெட்டு புலி தீப்பெட்டி போல் கண்ணு உனக்கு நீ பாக்கும் போது பத்திக்கிச்சு மனசு எனக்குகருப்பான கையாலே என்ன புடுச்சான்
காதல் என் காதல் பூப்பூக்குதம்மா
மனசுக்குள்ளே பேய் புடுச்சு ஆட்டுதம்மா
பகல் கனவு கண்டதெல்லாம் பலிக்குதம்மா
அவன் மீச முடிய செஞ்சுக்குவேன் மோதிரமா

செவப்பாக இருக்காளே கோவப்பழமா
கலரு இந்த கலரு என்ன இழுக்குதம்மா
அருகம் புல்லு ஆட்ட இப்போ மேயுதம்மா
பார்வையால ஆயுள்ரேக தேயுதம்மா
இவ காதல் இப்போ ஜோலியத்தான் காட்டுதம்மா

வெள்ளிக்கிழம பத்திர பன்னன்டு உன்ன பாத்தேனே
அந்த ராகு கால நேரம் எனக்கு நல்ல நேரமே

தண்ணியால எனக்கு ஒண்ணும் கண்டமில்லையே
ஒரு கன்னியால கண்டமின்னு தெரியவில்லையே

ஆத்துக்குள்ள மீன்பிடிக்க நீச்சல் தெரியணும்
காதல் கடலுக்குள்ள முத்தெடுக்க பாய்ச்சல் புரியணும் ஐயா

செவப்பாக ஆஹா இருப்பாளே ஆமா
செவப்பாக ஆ....... ஆ......

ஓ..... உருக்கி வச்ச இரும்பு போல ஒதடு ஒனக்கு
அட நெருங்கும் போது கரண்டு போல ஷாக்கு எனக்கு

ஏ வெட்டு புலி தீப்பெட்டி போல் கண்ணு ஒனக்கு
நீ பாக்கும் போது பத்திக்கிச்சு மனசு எனக்கு
பூமீயிலே எத்தனையோ பூவு இருக்கு
உன் பூப்போட்ட பாவாட மேல் எனக்கு கிறுக்கு

Monday, December 8, 2008

சொந்த வேரோட தான் கொண்ட காதலினை
அது சொல்லாமல் போனாலும் புரியாதா?
போடும்


ஆவாரம்பூ அந்நாளில் இருந்தே யாருக்கு காத்திருக்கு
அந்தி பகல் மழை வெயில் சுமந்து உனக்காக பூத்திருக்கு

சொந்த வேரோட தான் கொண்ட காதலினை
அது சொல்லாமல் போனாலும் புரியாதா?

காற்றில் ஆடி தினந்தோறும் உனது திசையை தொடறுதடா
குழந்தை கால ஞாபகத்தில் இதழ்கள் விரித்தே கிடக்குதடா
நெடுநாள் அந்த நெருக்கம் நினைத்தே அது கெடக்கும்
சருகள் சத்தம் போடும் தினம் சுவடு கையெழுத்து போடும்
அது வார்த்தை அல்ல மௌனம் ஆகும்

ஆயுள் முழுதும் தவம் கிடந்தே ஒற்றை காலில் நிர்குதடா
மாலை ஆகி தவிழ்ந்திடவே உனது மார்பை கேட்குதடா
தனியே அது கிடக்கும் நீயும் பார்த்தால் உயிர் பிழைக்கும்
வண்ணங்கள் எல்லாம் நீதான் அதன் வாசங்கள் எல்லாம் நீதான்
நீ விட்டு சென்றால் பட்டு போகும்

சொந்த வேரோட தான் கொண்ட காதலினை
அது சொல்லாமல் போனாலும் புரியாதா?

ஆவாரம்பூ அந்நாளில் இருந்தே யாருக்கு காத்திருக்கு
அந்தி பகல் மழை வெயில் சுமந்து உனக்காக பூத்திருக்கு

உன்னை முதல் முறை முதல் முறை பார்த்தேன்
நீயும் எனக்கென பிறந்தததை உணர்ந்தேன்


நிபுணா நிபுணா என் நிபுணா
மனம் படித்திடும் புது நிபுணா
மதனா மதனா மன்மதனா
என்னை மடக்கிய மந்திறனா

உன்னை முதல் முறை முதல் முறை பார்த்தேன்
நீயும் எனக்கென பிறந்தததை உணர்ந்தேன்
நீ பல முறை தொடர்வதை அறிந்தேன்
என்னை உனக்கென கொடுத்திட துணிந்தேன்
நீ எனக்குள் வசிக்க பரிதவித்தேன்

ஒரு பார்வை பார்க்கின்றாய்
உயிர் சுண்டி இழுக்கின்றாய்
உனை எண்ணில் விதைக்கின்றாய்
சுகமாய் சுகமாய் வதைக்கின்றாய்

நெருப்பாக கொதிக்கின்றாய்
மறு நொடியே குளிர்கின்றாய்
உறக்கத்தை கெடுக்கின்றாய்
மனத்தில் நுழைந்து குதிக்கின்றாய்

உடைகள் இன்றி இருப்பதனால்
நிலவை நீ அழகு என்றாய்
நிலவாய் என்னை நினைப்பத்னால்
உடைகள் உனக்கு எதற்கென்றாய்

அடடா நீதான் அலைகின்றாய்
எதையோ நினைத்து சிரிக்கின்றாய்
முழு தரிசனம் காண பறக்கின்றாய்

நிபுணா நிபுணா என் நிபுணா
மனம் படித்திடும் புது நிபுணா
மதனா மதனா மன்மதனா
என்னை மடக்கிய மந்திறனா


எதிர்பாரா நேரத்திலே எதிர்கொண்டு அனைத்தாயே
எதிர்பார்க்கும் சமையத்திலே தவிக்க வைத்து ரசித்தாயே

புதிர் போடும் கண்களிலே என் மனதை கலைத்தாயே
அதிசையங்கள் காட்டிடவே வில்லாய் எனையே வளைத்தாயே

வாசல் புள்ளி கோலங்களில் பின்னல்கள் போல் நாமே
இனிமேல் நாம் இருவருமே பின்னி பிணைந்து கிடப்போமே

விரலால் இடை மேல் நடந்தாயே
வேக தடைகள் கடந்தாயே
என் அழகை முழுதாய் அளந்தாயே

நிபுணா நிபுணா என் நிபுணா
மனம் படித்திடும் புது நிபுணா
மதனா மதனா மன்மதனா
என்னை மடக்கிய மந்திறனா

உன்னை முதல் முறை முதல் முறை பார்த்தேன்
நீயும் எனக்கென பிறந்தததை உணர்ந்தேன்
நீ பல முறை தொடர்வதை அறிந்தேன்
என்னை உனக்கென கொடுத்திட துணிந்தேன்
நீ எனக்குள் வசிக்க பரிதவித்தேன்

Sunday, November 30, 2008

பூச்சூடி புதுப்பட்டு நான் சூடி மணச்செம்பு கையேந்தி


ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா
ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா
ஊர்கோலம் போவோமா உள்ளம் அங்கே ஓடுதம்மா

ஊர்கோலம் போவோமா உள்ளம் அங்கே ஓடுதம்மா
ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா

ஓ ஓ....பூச்சூடி புதுப்பட்டு நான் சூடி
மணச்செம்பு கையேந்தி
நாம் அங்கே போவோமா
பூச்சூடி புதுப்பட்டு நான் சூடி
மணச்செம்பு கையேந்தி
நாம் அங்கே போவோமா
மீனாவின் குங்குமத்தை
மீனாவின் குங்குமத்தை நானாள வேண்டுமம்மா
மானோடு நீராட மஞ்சள் கொண்டு செல்வோமா
ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா
ஊர்கோலம் போவோமா உள்ளம் அங்கே ஓடுதம்மா

பால்வண்ணம் பழத்தட்டு பூக்கிண்ணம்
மணப்பெண்ணின் தாய் தந்த சீராக காண்போமா
பால்வண்ணம் பழத்தட்டு பூக்கிண்ணம்
மணப்பெண்ணின் தாய் தந்த சீராக காண்போமா
ஊராரின் சன்னதியில் ஒன்றாக வேண்டுமம்மா
தாயென்றும் சேயென்றும் தந்தையென்றும் ஆவோமா
ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா

கண்ணென்றும் வளை கொண்ட கை என்றும்
இவள் கொண்ட அங்கங்கள் நீ காணும் சின்னங்கள்
பொன்மாலை அந்தியிலே என் மானை தேடி வரும்
அம்மா உன் பெண்ணுள்ளம் நாணம் சொல்லி ஆடி வரும்
ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா
ஊர்கோலம் போவோமா உள்ளம் அங்கே ஓடுதம்மா

ஒரே ஒரு வரம் கொடு உன்னோடு நான் வாழவேமனசே மனசே
மனசே மனசே குழப்பம் என்ன
இது தான் வயசே காதலிக்க
பூக்கள் மீது பனி துடைத்து கவிதைகள் எழுதிவிடு
காதல் கடிதம் நீ கொடுத்து நிலவினை தூது விடு
மனசே ... மனசே
நீ தினம் தினம் சுவாசிக்க தானே
காற்றில் தென்றலாய் நானும் ஆகவா ?
நீ என்னை தான் வாசிக்க தானே
உந்தன் கையில் நான் வீணை ஆகவா ?
மழை இல்லை நனைகிறேன் நம் காதலின் சாரலா ?
உன்னை கண்டு உறைகிறேன் உன் பார்வை மின்சாரமா ?
என்னை தந்தேன் உன்னை கொடு
மனசே மனசே

உன் கனவிலே நான் வர தானே
தினமும் இரவிலே விழிதிருப்பேனே
உன் மனதிலே குடிவர தானே
உனது விழியிலே நீந்திடு வேனே
ஒரே முறை நிழல் தொடு என் பிம்பம் நீயாகுமே
ஒரே ஒரு வரம் கொடு உன்னோடு நான் வாழவே
சுகம் தரும் கடல் இதோ
மனசே மனசே

உன் தேகம் தேக்கிலா தேன் உந்தன் வாக்கிலா , உன் பார்வை தூண்டிலா நான் கைதிக் கூண்டிலா?


கல்யாண தேன் நிலா காய்ச்சாத பால் நிலா
நீதானே வான் நிலா என்னோடு வா நிலா

கல்யாண தேன் நிலா காய்ச்சாத பால் நிலா
தென்பாண்டிக் கூடலா தேவாரப் பாடலா
தீராத ஊடலா தேன் சிந்தும் கூடலா

என் அன்புக் காதலா என்னாளும் கூடலா
பேரின்பம் நெய்யிலா நீ தீண்டும் கையிலா
பார்ப்போமே ஆவலாய் வா வா நிலா

கல்யாண தேன் நிலா காய்ச்சாத பால் நிலா
நீதானே வான் நிலா என்னோடு வா நிலா

உன் தேகம் தேக்கிலா தேன் உந்தன் வாக்கிலா
உன் பார்வை தூண்டிலா நான் கைதிக் கூண்டிலா

சங்கீதம் பாட்டிலா -நீ பேசும் பேச்சிலா.
என் ஜீவன் என்னிலா உன் பார்வை தன்னிலா
தேனூறும் வேர் பலா உன் சொல்லிலா

கல்யாண தேன் நிலா காய்ச்சாத பால் நிலா
தேயாத வெண்ணிலா உன் காதல் கண்ணிலா
ஆகாயம் மண்ணிலா
கல்யாண தேன் நிலா காய்ச்சாத பால் நிலா

Saturday, November 29, 2008

தாயும் ஆனவனே...என் நேற்றின் பாதையில் ஊற்றை திறந்த காதல்...காதல்... தீண்டவேஉதயா உதயா உளறுகிறேன்
உயிரால் உனையே எழுதுகிறேன்
காதல்...

காதல்... தீண்டவே
காதல் தாகம் தீண்டுதே
உன்னாலே தண்ணாலெ எந்நாகும்
உயிரே உயிரே உளறுகிறேன்
உலறியும் கவிதைகள் எழுதுகிறேன்
காதல்...காதல்...காதல்...

உன் பாதி வாழ்கிறேன்
என் பாதி தேய்கிறேன்
உன்னாலே தண்ணாலெ
எந்நாளும்...
உயிரே உயிரே உளறுகிறேன்
உலறியும் கவிதைகள் எழுதுகிறேன்
காதல்...காதல்...காதல்...

என்னை தொலைத்துவிட்டேன்
என் உன்னை அடைந்துவிட்டேன்
உன்னை அடைந்ததனால்
என் என்னை தொலைத்துவிட்டேன்
ஏனோ ஏன் ஏனோ தொலைந்தேன் மீண்டேனோ
ஏனோ ஏன் ஏனோ மீண்டும் தொலைவேனோ
ஆயுள் ஆனவரை
உன் கூந்தல் இருட்டில் என் கிழக்கு தொலைந்து
காதல்... தீண்டவே

மூச்சின் குலிர்கையிலெ ... உயிர் ஊற்றி அணைத்துவைத்தேன்
கூச்சம் வருகையிலே... உடல் மாற்றி நுழைந்துவிட்டேன்
ஏனோ ஏன் ஏனோ ஏதோ ஆனேனோ
ஏனோ ஏன் ஏனோ நீயாய் ஆனேனோ
தாயும் ஆனவனே
என் நேற்றின் பாதையில் ஊற்றை திறந்த காதல்...

காதல்... தீண்டவே
காதல் தாகம் தீண்டுதே
உன்னாலே தண்ணாலெ எந்நாகும்
உயிரே உயிரே உளறுகிறேன்
உலறியும் கவிதைகள் எழுதுகிறேன்
காதல்...காதல்...காதல்...
காதல்...காதல்...காதல்...

Friday, November 28, 2008

சிறுகச் சிறுக உன்னில் என்னை தொலைத்த மொழி சொல்லவா?உனக்குள் நானே உருகும் இரவில்,
உள்ளத்தை நான் சொல்லவா?
மருகும் மனதின் ரகசிய அறையில்,
ஒத்திக்கைப் பார்த்திடவா?

சிறுகச் சிறுக உன்னில் என்னை
தொலைத்த மொழி சொல்லவா?
சொல்லா சொல்லும் என்னை வாட்டும்
ரணமும் தேன் அல்லவா?

உனக்குள் நானே உருகும் இரவில்,
உள்ளத்தை நான் சொல்லவா?

ஏனோ நம் பொய் வார்த்தை தான்,
ஏன் அதில் உன் என் மௌனமே தான்,
உதட்டில் சிரிப்பைத் தந்தாய்!
மனதில் கனத்தைத் தந்தாய்!

ஒரு முறை உன்னை எனக்கென்று சுவாசிக்கவா?
மறுமுறை உன்னை புதிதாக சாசிக்கவா?

உனக்குள் நானே உருகும் இரவில்,
உள்ளத்தை நான் சொல்லவா?
மருகும் மனதின் ரகசிய அறையில்,
ஒத்திக்கைப் பார்த்திடவா?

தீப் போல், தேன் போல் சலனமே தான்,
மதி என் நிம்மதி சிதையவே தான்,
நிழலை விட்டுச் சென்றாயே!
நினைவை வெட்டிச் சென்றாயே!

இனி ஒரு பிறவி உன்னோடு வாழ்ந்திடவா?
அதுவரை என்னை காற்றோடு சேர்த்திடவா?

உனக்குள் நானே உருகும் இரவில்,
உள்ளத்தை நான் சொல்லவா?
மருகும் மனதின் ரகசிய அறையில்,
ஒத்திக்கைப் பார்த்திடவா?
சிறுகச் சிறுக உன்னில் என்னை
தொலைத்த மொழி சொல்லவா?
சொல்லா சொல்லும் என்னை வாட்டும்
ரணமும் தேன் அல்லவா?
ரணமும் தேன் அல்லவா?
ரணமும் தேன் அல்லவா?

காதலே காதலே பேச வைக்கிறாய்
நான் பேசினால் காற்றிலே வீசி போகிறாய்


காதலே காதலே எங்கு போகிறாய்
என் கண்ணையும் நெஞ்சையும் திருடி போகிறாய்

காதலே காதலே பேச வைக்கிறாய்
நான் பேசினால் காற்றிலே வீசி போகிறாய்

அந்த விதியேனும் ஒரு மாய வலையிலே
இரு பறவைகள் இன்று மாட்டிக்கொண்டதே
வலி தாங்குமா........
உயிரின் ஒரு துளி ,மிச்சம் உள்ளதே
உன் பேரை சொல்லியே , சிந்தி விட்டதே

எங்கே நீயும் என்றே
இப்போதெல்லாம் தேடும் எந்தன் விழிலை லை லை லை லாய் லாய் லாய்
லாஹி லாஹி லாஹிலே
மேற்கே மேற்கே மேற்கே தான்
சூரியன்கள் உதித்திடுமே
சுடும் வெயில் கோடைக்காலம்
கடும் பனி வாடைக்காலம்
இரண்டுக்கும் நடுவே ஏதும் காலம் உள்ளதா?
இலையுதிர் காலம் தீர்ந்து
எழுந்திடும் மண்ணின் வாசம்
முதல் மழைக்காலம் என்றே நெஞ்சம் சொல்லுதே
ஓ மின்னலும் மின்னலும்
நேற்று வரை பிரிந்தது ஏனோ?
பின்னலாய்ப் பின்னலாய்
இன்றுடன் பிணைந்திடத் தானோ?
லை லை லை லை லாய் லாய் லாய்
லாயே லாயே லாய் லாய் லாய்
(மேற்கே மேற்கே தான்)

ஓ கோபம் கொள்ளும் நேரம் வானம் எல்லாம் மேகம்
காணாமலே போகும் ஒரே நிலா
ஓ கோபம் தீரும் நேரம் மேகம் இல்லா வானம்
பெளர்ணமியாய்த் தோன்றும் அதே நிலா
இனி எதிரிகள் என்றே எவருமில்லை
பூக்களை விரும்பா வேர்களில்லை
நதியை வீழ்த்தும் நாணல் இல்லையே
இது நீரின் தோளில் கைபோடும்
ஒரு சின்னத் தீயின் கதையாகும்
திரைகள் இனிமேல் தேவையில்லையே
மேற்கே மேற்கே தான்...

வாசல் கதவை யாரோ தட்டும் ஓசை கேட்டால்
நீதான் என்று பார்த்தேனடி சகி
பெண்கள் கூட்டம் வந்தால் எங்கே நீயும் என்றே
இப்போதெல்லாம் தேடும் எந்தன் விழி
இனி கவிதையில் கைகள் நனைந்திடுமோ
காற்றே சிறகாய் விரிந்திடுமோ
நிலவின் முதுகைத் தீண்டும் வேகமோ
அட தேவைகள் இல்லை என்றாலும்
வாய் உதவிகள் கேட்டு மன்றாடும்
மாட்டேன் என நீ சொன்னால் தாங்குமோ
மேற்கே மேற்கே தான் சூரியன்கள்.....

நீ என்னைப் பார்க்கையில் நான் எங்கோ பார்க்கிறேன்
நீ எங்கோ பார்க்கையில் நான் உன்னைப் பார்க்கிறேன்


புலியைக் கிளி ஜெயிச்சா காதல் காதல் புயலைப் பூ ஜெயிச்சா காதல் காதல்
புலியைக் கிளி ஜெயிச்சா காதல் காதல் புயலைப் பூ ஜெயிச்சா காதல் காதல்
இந்தக் காதலில் யாரும் விழுந்துவிட்டால எழுந்திட மனசு இருக்குமா
எழுந்தாலும் மனசு இருக்குமா
நீ என்னைப் பார்க்கையில் நான் எங்கோ பார்க்கிறேன்
நீ எங்கோ பார்க்கையில் நான் உன்னைப் பார்க்கிறேன்


காதல் ஒரு கண்ணாடி ஆனால் இந்த கண்ணாடி
தோன்றுவதை எல்லாம் காட்டுவது இல்லை
உள்ளத்தைப் பூட்டி வைத்தாலும்
இரு கண்களில் காட்டிக் கொடுக்கிறதே
உனக்கும் எனக்கும் முன்னாலே
நம் நிழல்கள் ஒன்றாய் நடக்கிறதே
ஓ கண்கள் பார்க்கும் போதிலே களவாடிப் போகுமே
காதலைக் கட்டிடக் கயிறுகள் ஏதுமில்லை

நீ என்னைப் பார்க்கையில் நான் எங்கோ பார்க்கிறேன்
நீ எங்கோ பார்க்கையில் நான் உன்னைப் பார்க்கிறேன்
புலியைக் கிளி ஜெயிச்சா காதல் காதல் புயலைப் பூ ஜெயிச்சா காதல் காதல்

நீ தந்த மயிலிறகை நெடுங்காலம் வைத்திருந்தேன்
மீண்டும் அந்தக் காலம் மனதினில் ஓடும்
ஓ உன்னைக் காணும் முன்னாலே
அடி என்னை நானே வெறுத்து வந்தேன்
உன்னைக் கண்ட பின்னாலே நான்
புல்லையும் பூண்டையும் நேசிக்கிறேன்
ஓ தாய் தந்த சுவாசமும் தந்தை போல நெருக்கமும்
உன்னிரு தோள்களில் சாய்கையில் உணருகிறேன்

நீ என்னைப் பார்க்கையில் நான் எங்கோ பார்க்கிறேன்
நீ எங்கோ பார்க்கையில் நான் உன்னைப் பார்க்கிறேன்

புலியைக் கிளி ஜெயிச்சா காதல் காதல் புயலைப் பூ ஜெயிச்சா காதல் காதல்
இந்தக் காதலில் யாரும் விழுந்துவிட்டால எழுந்திட மனசு இருக்குமா
எழுந்தாலும் மனசு இருக்குமா

நீ என்னைப் பார்க்கையில் நான் எங்கோ பார்க்கிறேன்
நீ எங்கோ பார்க்கையில் நான் உன்னைப் பார்க்கிறேன்

பழைய குரல் கேட்கிறதா யாரோ யாரோ
புதிய குரல் அழைக்கிறதே யாரோ யாரோ


பழைய குரல் கேட்கிறதா யாரோ யாரோ
புதிய குரல் அழைக்கிறதே யாரோ யாரோ
எதனோடு என் நெஞ்சம் செவி சாய்க்குமோ
இரண்டோடும் சேராமல் உயிர் மாய்க்குமோ
யாரோ யாரோ

பகலில் நிலவு இரவில் சூரியன்
இரண்டும் பிழையா இரண்டும் சரியா
இயற்கை தீர்ப்பு சொல்லுமா

எந்தக் கண்ணால் உலகம் பார்ப்பேன் நொந்து இளைத்தேன் நூலாக‌
ரெட்டைப் பிள்ளையில் எதன்மேல் நேசம் என்று மயங்கும் தாயாக‌
துடிக்கும் துடிக்கும் மனது தடுக்கும் தடுக்கும் மரபு
எனது வானத்தில் என்னவோ ஏதோ இரண்டு திங்களா இரவு

கடலில் ஒருவன் கரையில் ஒருவன்
அவனோ உயிரில் இவனோ மனதில்
இரண்டில் எதுதான் வெல்லுமோ
சொல்லி முடிக்கும் துயரம் என்றால் சொல்லி இருப்பேன் நானாக‌
உள்ளுக்குள்ளே மூடி மறைத்தேன் ஊமை கண்ட கனவாக‌
துடிக்கும் துடிக்கும் மனது தடுக்கும் தடுக்கும் மரபு
எனது வானத்தில் என்னவோ என்னவோ இரண்டு திங்களா இரவு

Wednesday, November 26, 2008

வெத்தலயில் பாக்கு வச்சி பத்து பேர பாக்க வச்சி கட்டிக்கிட ஆசை பட்டேன் நானே
கூண்டை விட்டு ஒரு பறவை கோடு தாண்டி போச்சு
வழி கோணல் மானால் ஆச்சு
காதலிச்ச காலமெல்லாம் கனவு போல ஆச்சு
அதில் கரையுதெந்தன் மூச்சு

பூந்தோரணம் அது ஏன் வாடனும்
போராட்டம நாம் சீர் சீதனம்
தண்ணீயிலே மான போல நானிருக்கேன் ஓ
கரையிலே மீன போல நீயிருக்க

(கூண்டை)
வெத்தலயில் பாக்கு வச்சி பத்து பேர பாக்க வச்சி
கட்டிக்கிட ஆசை பட்டேன் நானே
பெத்தவங்க துணையுமில்ல அத்த மாமன் உறவுமில்ல
துக்கப்பட்டு துடிக்குததொரு மானே
தீராத கோபம் அது யார் போட்ட சாபம்
இதில் நான் செய்த பாவம் என்ன என்ன தான் பாடுறேன் சொந்தம் ஒண்ணு தேடு றேன்..
(கூண்டை)
நம்பி வந்த காதல் ஒண்ணு அன்பு உள்ள பாசம் ஒண்ணு
ரெண்டு பக்கம் தவிக்கிறேன்டி மானே
அண்ணனுக்கு பயந்த தம்பி அன்ணியாறு மனச நம்பி
உன்னை இங்கு அழைத்து வந்தேன் நானே
தாய் தந்தை கோபம் அதில் வாழ்கின்ற பாசம்
ஒரு தவறாகி போகாதடி
மெல்ல மெல்ல மாறும் நல்ல வழி கூறும்

கூண்டை விட்டு ஒரு பறவை கொடு தாண்டி போச்சு
வழி கோணல் மானால் ஆச்சு
தாலி கட்டி முடிந்ததுமே தாரமென்று ஆச்சு
இனி வேறு என்ன பேச்சு
பூந்தோரணம் அது வாடாதம்மா
போராடியே அதை காப்பேனம்மா
தண்ணீயிலே மான போல நானிருக்கேன் ஓ
கரையிலே மீன போல நீயிருக்க

(கூண்டை)

யார் மனதில் யார் இருப்பார் யார் அறிவார் உலகிலே


ஓடம் நதியிணிலே
ஒருத்தி மட்டும் கரையினிலே
உடலை விட்டு உயிர் பிரிந்து
பறக்குதம்மா வெளியிலே

ஆசை எனும் மேடையிலே
ஆடி வரும் வாழ்விலே
யார் மனதில் யார் இருப்பார்
யார் அறிவார் உலகிலே

கூட்டுக்குள்ளே குயில் இருக்கும்
பாட்டு வரும் வெளியிலே
குரலை மட்டும் இழந்த பின்னே
குயில் இருந்தும் பயனில்லை

ஓடம் நதியிணிலே
ஒருத்தி மட்டும் கரையினிலே
உடலை விட்டு உயிர் பிரிந்து
பறக்குதம்மா வெளியிலே

இனம் என்ன குலம் என்ன குணம் என்ன அறியேன் குணம் என்ன அறியேன் , ஈடோன்றும் கேளாமல் எனை அங்கு கொடுத்தேன்


கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே
கண்டே போதே சென்றன அங்கே
கால்கள் இங்கே மேனியும் இங்கே
காவல் இன்றி வந்தன இங்கே

மணி கொண்ட கரம் ஒன்று
அணல் கொண்டு வெடிக்கும் ,அணல் கொண்டு வெடிக்கும்
மலர் போன்ற இதழ் இங்கு பனி கண்டு துடிக்கும்
துணை கொள்ள அவன் இன்றி தனியாக நடிக்கும்
துயிலாத பெண்மைக்கு ஏன் இந்த மயக்கம்

கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே கண்டே போதே செந்டிரன அங்கே
கண்கள் எங்கே...

இனம் என்ன குலம் என்ன குணம் என்ன அறியேன் குணம் என்ன அறியேன்
ஈடோன்றும் கேளாமல் எனை அங்கு கொடுத்தேன்
கொடை கொண்ட மாத யானை உயிர் கொண்டு நடந்தான்
குறை கொண்ட உடலோடு நான் இங்கு மெலிந்தேன்

Monday, November 24, 2008

உத்தம ராசா உன்ன நினைக்கும் பத்தினி உள்ளம் அய்யா ,வேண்ட ஒரு சாமி இல்ல விரும்பி வந்தேன் உங்கள ,உன்னை விட யாரும் இங்கே உருப்படியா தோனல


என்னை மானமுள்ளே பொண்ணுன்னு மதுரையிலே கேட்டாக
மன்னார்குடியில் கேட்டகாக மாயவரத்தில கேட்டாக
சீர் செனத்தி ஓட வந்து சீமையிலே கேட்டாக
அந்த சிங்கபூரிலும் கேட்டாக நம்ம சின்னமனூரிலும் கேட்டாக
அதை எல்லாம் உன்னாலே வேணாமுன்னு சொன்னேன் தன்னால
என் மச்சான் உன் மேல ஆச பட்டு வந்தேன் முன்னால

கொண்ட முடி அழக பார்த்து கொயம்புதூரிலே கேட்டாக
நெத்தியிலே பொட்டை பார்த்து நெல்லூரிலெ கேட்டாக
ரெண்டு புருவ அழகை பார்த்தாக புது கோட்டையில் இவள கேட்டாக
கன்னழக பார்த்து பார்த்து கண்டமநூரில கேட்டாக
மூக்க்ழகை பார்த்து என்னை மூக்கையாகொட்டையிலே கேட்டாக
கோபமுள்ள பொண்ணுன்னு கொம்பையிலே கேட்டாக
பாசமுள்ள பொண்ணுன்னு பன்னபுரதுல கேட்டாக
இத்தன பேரு சுத்தி வலைச்சும்
உத்தம ராசா உன்ன நினைக்கும் பத்தினி உள்ளம் அய்யா

வேண்ட ஒரு சாமி இல்ல விரும்பி வந்தேன் உங்கள
உன்னை விட யாரும் இங்கே உருப்படியா தோனல
நல்ல வாட்டம் உள்ள ஆம்பள உன்னை மறக்க இவளுக்கு ஆகல
வாரி கட்ட தோலில் அணைச்சு வச்சிக்கோங்க வேற கேட்கல
மாறி நீங்க போநீங்கன்ன மனசு இப்போ ஆரள
ஒத்துழைக்க கூடாதா என்னை சூடி கொண்டா ஆகாதா
பட்டு துணி மேலாக்கு அத தொட்டு இழுக்க கூடாதா
உள்ளதெல்லாம் சொல்லி முடிச்சேன்
நல்ல முடிவா சொல்லுங்க மச்சான்
இன்னமும் சொல்லனுமா

Sunday, November 23, 2008

கல்லூரி பாடம் சொல்லும் நெஞ்சில் தான் நீயும் நீயும் , நான் கேட்கும் பாடம் என்ன உன் நெஞ்சம் அறியும் அறியும்


Hey baby baby மூன்றே மூன்று வார்த்தை ஒரு வாட்டி சொல்வாயா
முழு முழூசாக சொல்ல கூட வேண்டாம் ஒரு பாதி சொல்
Hey lovely lovely ஒரு பார்வை ஒரு தடவை பார்ப்பாயா
ரொம்ப பெருசாக பார்க்க கூட வேண்டாம் சின்ன சின்னதாய் பார்…

கல்லூரி பாடம் சொல்லும் நெஞ்சில் தான் நீயும் நீயும்
நான் கேட்கும் பாடம் என்ன உன் நெஞ்சம் அறியும் அறியும்

மல்லிகா ஐ லவ் யூ ஏய்…மல்லிகா ஐ லவ் யூ
மல்லிகா ஓ மல்லிகா நெஞ்சொடு சொல் சொல் ஐ லவ் யூ

ஏகாந்த மேகம் என்னை கேட்டதே அசைகின்ற மின்னல் அவள் எங்கே என்றுதான்
நடைபாதை பூக்கள் என்னை கேட்டதே மலர்வாச தேசம் அவள் எங்கே என்றுதான்
மலையோரும் நானும் சென்றால் அவள் எங்கே என்று கேட்கும்
இவை யாவும் கேட்கும் போது நான் கேட்க கூடாதா !!!

மல்லிகா ஐ லவ் யூ ஏய்…மல்லிகா ஐ லவ் யூ
மல்லிகா ஓ மல்லிகா நெஞ்சொடு சொல் சொல் ஐ லவ் யூ

உன்னை தொட்டு பார்த்த அந்த நேரமே பட்டாம்பூச்சி கூட்டம் பூக்களாக மாறுதே
உன்னை கண்ட காற்று அந்த மோகத்தில் வெயில் கால நதியாய் வெப்பமாக மாருதே
உனக்கான சாலை எல்லாம் பனி தேசம் போலே மாறும்
அவை யாவும் மாறும் போது நான் மாற கூடாதா

கல்லூரி பாடம் சொல்லும் நெஞ்சில் தான் நீயும் நீயும்
நான் கேட்கும் பாடம் என்ன உன் நெஞ்சம் அறியும் அறியும்

மல்லிகா ஐ லவ் யூ ஏய்…மல்லிகா ஐ லவ் யூ
மல்லிகா ஓ மல்லிகா நெஞ்சொடு சொல் சொல் ஐ லவ் யூ

Hey baby baby மூன்றே மூன்று வார்த்தை ஒரு வாட்டி சொல்வாயாமுழு முழூசாக சொல்ல கூட வேண்டாம் ஒரு பாதி சொல்Hey lovely lovely ஒரு பார்வை ஒரு தடவை பார்ப்பாயாரொம்ப பெருசாக பார்க்க கூட வேண்டாம் சின்ன சின்னதாய் பார்…

உன்னை ரசித்து உன்னை ரசித்து கலைத்து போனடதா விழியும்


உயிரை குடைந்து எத்தனை காலம் காதல் சிற்பம் நீ செய்தாய்
உணர வைக்க எத்தனை காலம் எனக்குள் மழையாய் பேய்தாய்
முதல் முதல் நாள் என்னையே பார்த்து வெட்கப்பட்டு சிரிக்கிறேன்
முதல் முதல் உன் கைகளை கோர்த்து நீண்ட தூரம் பறக்கிறேன்
இந்த நிமிடம் ..இந்த நிமிடம் நகர கூடாது…
இனிமேலும் உன்னை பிரிந்தால் எந்தன் உயிர் வாழாது

ஃப்ரீடம் ஃப்ரீடம் இது என்றும் நமக்கு தான்
ஃப்ரீடம் ஃப்ரீடம் இந்த பூமி நமக்கு தான்

உன்னை நினைத்து உன்னை நினைத்து இழைத்து போனதடி இதயம் ஓ ஓ
உன்னை ரசித்து உன்னை ரசித்து கலைத்து போனடதா விழியும் ஹே ஹே
காதல் சொல்ல காலம் நேரம் பார்த்து கிடந்தாய்
காற்றில் கூட சிற்பம் செய்யும் வித்தை அறிந்தாய்
வானம் உருளுது பூமி மிதக்குது ஏனோ தன்னாலே
ஞானம் பிறந்தது காதல் மலர்ந்தது எல்லாம் உன்னாலே

ஓடும் வரையில் வெற்றி நமக்கு ஒடுதல் நிறுத்தாதே
தேடும் வரையில் வாழ்க்கை நமக்கு தேடுதல் நிறுத்தாதே
வாழும் வரையில் பூமி நமக்கு வாழ்வதை நிறுத்தாதே
தடை தாண்டி பாரு தடை சொல்வதாரு
விடை தேடி பாரு உனை வெல்வது யாரு யாரு

ஃப்ரீடம் ஃப்ரீடம் இது என்றும் நமக்கு தான்
ஃப்ரீடம் ஃப்ரீடம் இந்த பூமி நமக்கு தான்

Thursday, November 20, 2008

சிலுவைகள் சிறகுகள் ரெண்டில் என்ன தரப் போதிறாய்என் காதலே என் காதலே.....என்னை என்ன செய்யப் போகிறாய்?.....
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ......
ஏன் கண்ணிரண்டைகேட்கிறாய்?........
சிலுவைகள் சிறகுகள்....
ரெண்டில் என்ன தரப் போதிறாய் ?.....
கிள்ளுவதைக் கிள்ளிவிட்டு ,
ஏன் தள்ளி நின்று பார்கிறாய் ?.....

காதலே நீ பூ எறிந்தால்
எந்த மலையும் கொஞ்சம் குழையும்,
காதலே நீ கல் எறிந்தால்
எந்த கடலும் கொஞ்சம் கலங்கும்
இனி மீள்வதா....... இல்லை வீழ்வதா
உயிர் வாழ்வதா....... இல்லை போவதா
அமுதென்பதா..... விஷம் என்பதா.........
உன்னை அமுத-விஷமென்பதா? ........

காதலே உன் காலடியில்
நான் விழுந்து விழுந்து அழுதேன்
கண்களை நீ மூடிக்கொண்டாய்
நான் குலுங்கி குலுங்கி அழுதேன்
இது மாற்றமா..... தடுமாற்றமா ?.......
என் நெஞ்சிலே...... பனி மூட்டமா ? ......
நீ தோழியா? இல்லை எதிரியா ?
என்று தினமும் போராட்டமா?......
என் காதலே.. என் காதலே
என்னை என்ன செய்யப் போகிறாய் ?.......

கம்பன் ஏமாந்தான் .............கம்பன் ஏமாந்தான் -
இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே
கற்பனை செய்தானே
கம்பன் ஏமாந்தான்

அம்பு விழி என்று ஏன் சொன்னான்
அது பாய்வதினால் தானோ - அவள்
அருஞ்சுவைப் பாலென ஏன் சொன்னான்
அது கொதிப்பதனால் தானோ

தீபத்தின் ஜோதியில் திருக்குறள் படித்தால்
தீபத்தின் பெருமையன்றோ - அந்த
தீபத்தினால் ஒரு நெஞ்சத்தை எரித்தால்
தீபமும் பாவமன்றோ

வள்ளுவன் இளங்கோ பாரதி என்றொரு
வரிசையை நான் கண்டேன் - அந்த
வரிசையில் உள்ளவர் மட்டுமல்ல அட
நானும் ஏமாந்தேன்

ஆத்திரம் என்பது பெண்களுக்கெல்லாம்
அடுப்படி வரைதானே - ஒரு
ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால்
அடங்குதல் முறைதானே

நீயா எனை இழுப்பதை அழைப்பதை மனசுக்குள் மனசுக்குள் ரசித்தேன் , வெளியே அது பிடிக்கலை பிடிக்கலை என ஒரு நாடகம் நடித்தேன்வல்லவா எனை வெல்லவா.. கொஞ்சம் கொள்ளவா நெஞ்சை அள்ளவா..
வல்லவா எனை வெல்லவா.. உனை கண்டதே வரம் அல்லவா..
பாதி கண்கள் முடியும் பார்வை உன்னை தேடுதே ..
உன்னை எண்ணி எண்ணியே உள்ளம் தான் வாடுதே ..
சந்தோஷத்தில் தள்ளாடுரேன் வெந்பனிகளில் திண்டாடுறேன்
காதலை நானும் கொண்டாடுரேன் கொண்டாடுரேன் கொண்டாடுரேன்

என் நெற்றி மீது உன் வேர்வை சிந்தி ஈரத்திலே எனை ஆட்டி விடும்..
உன் மூச்சு காற்று வெப்பத்தை சேர்த்து.. மூழ்கும் முன்னே எனை மீட்டு விடும்..
வெளி தோற்றம் தரும் காதல் யாவும்.. சில நாளில் வெறும் மாயம் ஆகும்..
பனி நெஞ்சில் சென்று குடி ஏறும்.. குணம் தானே பல யுகம் வாழும்..

நீயா எனை இழுப்பதை அழைப்பதை மனசுக்குள் மனசுக்குள் ரசித்தேன்..
வெளியே அது பிடிக்கலை பிடிக்கலை என ஒரு நாடகம் நடித்தேன்

வல்லவா ... வல்லவா..

ஏமாந்து போனேன் ஏமாந்து போனேன் ..
தென்றல் என்றே உனை எண்ணி விட்டேன் ..
நீ என்னை சூழ்ந்து ஆழ் கொண்ட போது ..
புயல் என்று உனை கண்டு கொண்டேன்..

என்னோடு நீ இருக்கும் பொது..பொருல் இல்லா பல சண்டை தோன்றும் ..
எனது அறையில் உள்ள சுவர் நான்கும் வித விதமா உன் படம் தாங்கும்..
காலம் பல கடந்தது கடந்தது உறவு இது உறவு இது கண்ணா..
யாரும் இதை பிரித்திட நினைத்திட உடல் மட்டும் உலவிடும் தன்னால் ..

வல்லவா என்னை வெல்லவா.. கொஞ்சம் கொள்ளவா நெஞ்சை அள்ளவா..
வல்லவா என்னை வெல்லவா.. உனை கண்டதே வரம் அல்லவா..
பாதி கண்கள் முடியும் பார்வை உன்னை தேடுதே ..
உன்னை எண்ணி எண்ணியே உள்ளம் தான் வாடுதே ..
சந்தோஷத்தில் தள்ளாடுரேன் வெந்பனிகளில் திண்டாடுறேன்
காதலை நானும் கொண்டாடுரேன் கொண்டாடுரேன் கொண்டாடுரேன்

வல்லவா ... வல்லவா..

Wednesday, November 19, 2008

கனிந்திடும் எந்நாளுமே கண்ணான என் ராஜாஅழைக்காதே நினைக்காதே
அவை தனிலே எனையே ராஜா
ஆருயிரே மறவேன்
அழைக்காதே நினைக்காதே
அவை தனிலே எனையே ராஜா
ஆருயிரே மறவேன்
அழைக்காதே ........

எழில் தரும் ஜோதியே மறந்திடுவென
ஏதும் அறியாதே இருந்திடுவேனா
எனை மறந்தடிட சமயமே தானா
கனிந்திடும் எந்நாளுமே கண்ணான என் ராஜா
கனிந்திடும் எந்நாளுமே கண்ணான என் ராஜா
அழைக்காதே ........

காதலினாலே காலத்தினாலே
காவலனே என்னை சபையின் முன்னாலே
சோதனையாகவே நீ அழைக்காதே
சோதனையாகவே நீ அழைக்காதே
கனிந்திடும் எந்நாளுமே கண்ணான என் ராஜா
கனிந்திடும் எந்நாளுமே கண்ணான என் ராஜா
அழைக்காதே ........

Tuesday, November 18, 2008

மறுபடி வருவாய் என்று துடித்தேன் நடந்ததை எண்ணி உறங்க மறுத்தேன் , பிரிய மனமில்லை இன்னும் ஒருமுறை வா


தூது வருமா?...தூது வருமா?
காற்றில் வருமா கரைந்து விடுமா
தூது வருமா?...தூது வருமா?
கனவில் வருமா?...கலைந்து விடுமா?
நீ சொல்ல வந்ததை சொல்லி விடுமா?
நீ சொல்ல வந்ததை சொல்லி விடுமா?
பாதி சொன்னதும் ஓடி விடுமா

நல்லதே நடக்கும் என்றே சீனத்தின் வாஸ்து அன்றே பார்த்தெனே வீட்டின் உள்ளே
சிவப்பிலே ட்ராகன் படமும் சிரித்திடும் புத்தர் சிலையும் வைத்தேனே தெற்கு மூலையிலே
பல பல தடை தாண்டி வந்தாய் வாஸ்துகள் எல்லாம் பொய்யே என்றாய்
கொடிய சாத்தானே என்னை தூக்கி செல்லவா

(தூது வருமா)

கருப்பிலே உடைகள் அணிந்தேன் இருட்டிலே காத்து கிடந்தேன் யட்சான் போல் நீயும் வந்தாய்
சரசங்கள் செய்த படியே சவுக்கடி கொடுக்கும் யுவனே வலித்தாலும் சுகம் தந்து சென்றாய்
மறுபடி வருவாய் என்று துடித்தேன் நடந்ததை எண்ணி உறங்க மறுத்தேன்
பிரிய மனமில்லை இன்னும் ஒருமுறை வா

நீ சொல்ல வந்ததை சொல்லி விடுமா?
பாதி சொன்னதும் ஓடி விடுமா

Monday, November 17, 2008

மறந்திட மறந்திட என் மனமும் கொஞ்சம் முயலுதெ , மறுபடி மறுபடி உன் முகமே என்னை சூழ


கரு கரு விழிகளால் ஒரு கண் மை என்னை கடத்துதே
ததும்பிட ததும்பிட சிறு அமுதம் என்னை குடிக்குதே
இரவினில் உறங்கையில் என் தூக்கம் என்னை எழுப்புதே
எழுந்திட நினைக்கையில் ஒரு மின்னல் வந்து சாய்க்க
நீ..ஒரு மல்லி சரமே நீ..இலை சிந்தும் மரமே
என்.. புது வெள்ளி குடமே உன்னை தேடும் கண்கள்
ஏ நீ தங்க சிலையா வெண் .. நுரை பொங்கும் மலையா
மன்மதன் பின்னும் வலையா உன்னை தேடும் கண்கள்

புது புது வரிகளால் என் கவிதை தாளும் நிறையுதே
கனவுகள் கனவுகள் வந்து கண்கள் தாண்டி வழியுதே
மறந்திட மறந்திட என் மனமும் கொஞ்சம் முயலுதெ
மறுபடி மறுபடி உன் முகமே என்னை சூழ
தாமரை இலை நீர் நீ தானா தனி ஒரு அன்றில் நீ தானா
புயல் தரும் தென்றல் நீ தானா புதையல் நீ தானா
நீ..ஒரு மல்லி சரமே மண்ணில் ..இலை சிந்தும் மரமே
மின்னும் ..புது வெள்ளி குடமே உன்னை தேடும் கண்கள்
ஏ நீ தங்க சிலையா வெண் நுரை பொங்கும் மலையா
அம்பால் ..மதன் பின்னும் வலையா உன்னை தேடும் கண்கள்

ஒரு நாள் ஒரு நாள் என்றே தினமும் போகும்
மறு நாள் வருமா என்றே இரவில் இதயம் சாகும்
பேசும் போதே இன்னும் ஏதோ தேடும்
கையின் ரேகை போலே கள்ளதநம் ஓடும்
நீரே இல்ல பாலையிலே நின்று பெய்யும் மழை மழை
உள்ளுக்குள்ளே உச்சு கொட்டி தொடர்ந்திடும் பிழை பிழை

கரு கரு விழிகளால் ஒரு கண்மை என்னை கடத்துதே
ததும்பிட ததும்பிட சிறு அமுதம் என்னை குடிக்குதே
இரவினில் உறங்கையில் என் தூக்கம் என்னை எழுப்புதே
எழுந்திட நினைக்கையில் ஒரு மின்னல் வந்து சாய்க்க
தாமரை இலை நீர் நீ தானா தனி ஒரு அன்றில் நீ தானா
புயல் தரும் தென்றல் நீ தானா புதையல் நீ தானா
தாமரை இலை நீர் நீ தானா (ஒரு மல்லி சரமே )
தனி ஒரு அன்றில் நீ தானா (இழை சிந்தும் மரமே )
புயல் தரும் தென்றல் நீ தானா (நீ தங்க சிலையா)
புதையல் நீ தானா (மதன் பின்னும் வளையா)
ஒரு மல்லி சரமே

Thursday, November 13, 2008

முகம் கொஞ்சம் நினைவிருக்கு அவன் முகவரி தெரியவில்லை - உன்னுடன்
கண்டுபிடி அவனை கண்டுபிடி நெஞ்சை களவாடி ஓடி விட்டான் கண்டுபிடி
கண்டுபிடி அவனை கண்டுபிடி நெஞ்சை களவாடி ஓடி விட்டான் கண்டுபிடி

கண்கள் மயங்க வைத்து இளம் கன்னம் வருடியவன்
விண் மீன் விழித்திருக்க அவன் நிலவை திருடியவன்

மணக்கும் கூந்தலினால் என் மார்பை வருடியவள்
தடையம் ஏதும் இன்றி என் இதயம் திருடியவள்

முகம் கொஞ்சம் நினைவிருக்கு அவன் முகவரி தெரியவில்லை
முதல் முதல் திருடியதால் என்னை முழுசாய் திருடவில்லை

யோசனை செய்வதர்க்கும் அந்த பூ முகம் நினைவில்லை
வாசலில் மறைந்து விட்டாள் அவள் வாசனை மறையவில்லை

திருடி சென்றதை திருப்பி தந்தால்
அந்த இதயத்தை அவனுக்கே பரிசளிப்பேன்
திருடி சென்றவள் திரும்பி வந்தால்
மிச்சம் இருப்பதை மீண்டும் திருட சொல்வேன்
உறவே உறவே வருக உயிரால் உயிரை தொடுக

கண்டுபிடி அவனை கண்டுபிடி நெஞ்சை களவாடி ஓடி விட்டான் கண்டுபிடி
கண்டுபிடி அவனை கண்டுபிடி நெஞ்சை களவாடி ஓடி விட்டான் கண்டுபிடி

நீ என்னை தழுவிகொண்டாள் என் நெற்றிக்கும் இனிக்கும் அடி
பெண்ணே உன் ஸ்பரிசத்திலே தங்கம் தண்ணீரில் விளையும் அடி
மாறாப்பை சரியாவிட்டு உந்தன் மார்போடு படரும் கோடி
பேரின்ப கவி எழுத கம்பன் பிறக்காட்டும் பழய படி
நேரம் தூரம் மறந்து விட்டு
ஒரு நிமிஷத்தை யுகமாய் நாம் வளர்ப்போம்
நீள இரவை நீள செய்து பொன் நிலவு தேய்வதை நிறுத்தி வைப்போம்
உறவே உறவே வருக உயிரால் உயிரை தொடுக

கண்டுபிடி அவனை கண்டுபிடி நெஞ்சை களவாடி ஓடி விட்டான் கண்டுபிடி
கண்டுபிடி அவனை கண்டுபிடி நெஞ்சை களவாடி ஓடி விட்டான் கண்டுபிடி

நீ நெருப்பாய் முறைத்தால் தவிர்த்தால் என் நெஞ்சுக்குள்ளே கப்பல் ஒன்று கவிழும்நான் சொல்வது எல்லாம் உண்மை
உண்மை தவிர வேறு எதுவும் இல்லை

பூமிக்கு வெளிச்சம் எல்லாம் நீ கண் திறப்பதனால்
பூவுக்கு பனி துளிகள் நீ முகம் கழுவுவதால்

கடலுக்கு நுரைகள் எல்லாம் நீ பல் துலக்குவதால்
காலையில் அடித்த மழை நீ என்னை தழுவீயதால்

நீ விழியால் விழியை பறிதாய் உன் உயிரினை எனக்குள்ளே விதைதாய்
உன் அழகால் எனை நீ அடிததாய் ஒரு அதிஸைய உலகத்தில் அடைத்தாய்

நீ இதமாய் இதயம் கடித்தாய் என் இதழ் சொட்டும் அருவியில் குளித்தாய்
நீ மதுவாய் என்னையே குதித்தாய் இந்த உலகை உடைத்திட துடித்தாய்

காதல் வந்த பிறகு ஒட்டி கொள்ளும் சிறகு
வாழ ஒரு பூமி இனி தேவை இல்லை
ஒப்பு கொண்ட உயிர்கள் கட்டி கொண்ட பறந்தால்
எட்டி நிற்கும் வானம் ஒன்றும் தூரம் இல்லை

பூமிக்கு வெளிச்சம் எல்லாம் நீ கண் திறப்பதனால்
பூவுக்கு பனி துளிகள் நீ முகம் கழுவுவதால்

கடலுக்கு நுரைகள் எல்லாம் நீ பல் துலக்குவதால்
காலையில் அடித்த மழை நீ என்னை தழுவீயதால்

நீ மெதுவா நடந்தால் கடந்தால் என் உணர்ச்சிகள் தீ பிடித்து எரியும்
நீ துளியாய் எனக்குள் விழுந்தால் என் உயிர் பனிக்கட்டியாக உறையும்
நீ இயல்பாய் அழைத்தால் சிரித்தாய் என் உள்ளம் வந்து மண்டியிட்டு தவழும்
நீ நெருப்பாய் முறைத்தால் தவிர்த்தால் என் நெஞ்சுக்குள்ளே கப்பல் ஒன்று கவிழும்
கண்களில் மின்மினி புன்னகை சிம்போனி மின்னலின் தங்கை நீ புரிகிறதே
தொட்ட உடன் உருகும் கட்டி கொண்டு பழகும் புத்தம் புது மிருகமும் தெரிகிறதே

கடலுக்கு நுரைகள் எல்லாம் நீ பல் துலக்குவதால்
காலையில் அடித்த மழை நீ என்னை தழுவீயதால்

உன் பேரை சொன்னாலே நான் திரும்பி பார்க்கிறேன் , உன் பேரை மட்டும் நான் நான் விரும்பி கேட்கிறேன் - பூவெல்லாம் கேட்டுப்பார்


சுடிதார் அணிந்து வந்த சொற்க்கமே
என் மீது காதல் வந்தது
எப்போது எங்கு கொஞ்சம் நீ சொல்வாயா
நீ சொல்வாயா நீ சொல்வாயா

விழிகள் பார்த்து கொஞ்சம் வந்தது
விரல் சேர்த்து கொஞ்சம் வந்தது
முழு காதல் என்று வந்தது தெரியாதே
அது தெரியாதே அது தெரியாதே

உன் மேல் நான் கொண்ட காதல்
என்மேல் நீ கொண்ட காதல்
எதை நீ உயர்வாக சொல்வாயோ

போட பொல்லாத பையா
நம்மேல் நான் கொண்ட காதல்
அதை நீ ரெண்டாக பார்பாயா

உன் பேரை சொன்னாலே நான் திரும்பி பார்க்கிறேன்
உன் பேரை மட்டும் நான் நான் விரும்பி கேட்கிறேன்

இருவர் ஒன்றாக இணைந்து விட்டோம் இரண்டு பெயர் ஏனடி
உனக்குள் நான் என்னை தொலைத்து விட்டேன் உன்னையே கேளு நீ
அட உன்னை நான் மறந்த வேளையில் உன் காதல் மாறுமா
விடி காலை தாமரை பூவிது விண்மீனை பார்க்குமா

உன் மேல் நான் கொண்ட காதல்
என்மேல் நீ கொண்ட காதல்
எதை நீ உயர்வாக சொல்வாயோ

போட பொல்லாத பையா
நம்மேல் நான் கொண்ட காதல்
அதை நீ ரெண்டாக பார்பாயா

பலகோடி பெண்களிலே எதற்கு என்னை தேடினாய்
நான் தேடும் பெண்ணாக நீ தானே தோன்றினாய்
நரை கூடும் நாட்களிலே என்னை க் தோன்றுமா
அடி போ டீ காதலிலே நரை கூட தோன்றுமா

உன் கண்ணில் உண்டான காதல் இது
முடிவிலும் நிற்குமோ
என் நெஞ்சில் உண்டான காதல் இது
நெஞ்சை விட்டு போகுமா ?

உன் மேல் நான் கொண்ட காதல்
என்மேல் நீ கொண்ட காதல்
எதை நீ உயர்வாக சொல்வாயோ

போட பொல்லாத பையா
நம்மேல் நான் கொண்ட காதல்
அதை நீ ரெண்டாக பார்பாயா

சுடிதார் அணிந்து வந்த சொற்க்கமே
என் மீது காதல் வந்தது
எப்போது எங்கு கொஞ்சம் நீ சொல்வாயா
நீ சொல்வாயா நீ சொல்வாயா

விழிகள் பார்த்து கொஞ்சம் வந்தது
விரல் சேர்த்து கொஞ்சம் வந்தது
முழு காதல் என்று வந்தது தெரியாதே
அது தெரியாதே அது தெரியாதே

Tuesday, November 11, 2008

உனது ரூபமே உள்ளம் தன்னில் வாழுதேமாசிலா உண்மை காதலே
மாறுமோ செல்வம் வந்த போதிலே
பேசும் வார்த்தை உண்மைதானா
பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேசமா

கண்ணிலே மின்னும் காதலே
கண்டுமா சந்தேகம் எந்தன் மீதிலே

நெஞ்சிலே நீங்கிடாது கொஞ்சும் இன்பமே
நிலைக்குமா இந்த எண்ணம் எந்த நாளுமே

நெஞ்சிலே நீங்கிடாது கொஞ்சும் இன்பமே
நிலைக்குமா இந்த எண்ணம் எந்த நாளுமே

பேசும் வார்த்தை உண்மைதானா
பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேசமா
கண்ணிலே மின்னும் காதலே
கண்டுமா சந்தேகம் எந்தன் மீதிலே

உனது ரூபமே உள்ளம் தன்னில் வாழுதே
இனிய சொல்லினால் எந்தன் உள்ளம் மகிழுமே
உனது ரூபமே உள்ளம் தன்னில் வாழுதே
இனிய சொல்லினால் எந்தன் உள்ளம் மகிழுமே

அன்பினாலே ஒன்று சேர்ந்தோம்
இன்று நாம் இன்ப வாழ்வின் எல்லை காண்போம்

மாசிலா உண்மை காதலே
மாறுமோ செல்வம் வந்த போதிலே

Friday, November 7, 2008

எல்லாம் நெஞ்சோட மூடி மூடி வச்சா தண்னாள ,ஒரு பாசம் அன்போட பாட்டெடுத்து தந்தா தண்னாள
இங்கே மானமுள்ள பொண்ணு ஒன்ன மனம் துடிக்க விட்டாக
மறுதளிக்க வச்சாக மதி மயங்க வச்சாக
பாசமுள்ள பொண்ணு ஒன்ன பரித்தவிக்க விட்டாக
துடி துடிக்க விட்டாக துயரப்பட விட்டாக
அட எல்லாம் நெஞ்சோட மூடி மூடி வச்சா தண்னாள
ஒரு பாசம் அன்போட பாட்டெடுத்து தந்தா தண்னாள

அம்மையில்ல அப்பணுமில்ல ஆறுதல் சொல்ல ஆளில்லா
ஆச பட்ட வாழ்வும் ஒண்ணு அவளுக்கிங்கே சேரலை
ஆளான நாள் முதலா ஆசையும் வச்சா மாறலை
அந்த கதை பாதியில் முடிந்து போனதையா தேறலை
பச்ச மண்ணு உன்னால பல பழி சுமந்தா தந்நால
பாவம் பழி முன்னால வந்து படருதைய்யா தந்நால
கஷ்டத்தை மட்டும் தூக்கி சுமக்கும் கண்ணி இவதான்
சின்ன மக தான் உத்தமி ரத்தினம் தான்

இங்கே மானமுள்ள பொண்ணு ஒன்ன மனம் துடிக்க விட்டாக
மறுதளிக்க வச்சாக மதி மயங்க வச்சாக

வண்டு விழி ரெண்டிலும் இப்போ வழியுத்தம்மா காவிரி
நெஞ்சிலுள்ள நிம்மதி விட்டு கலங்கி நின்னா காதலி
கூட வந்த ராஸனை எங்கே கோடி வரையிலும் காணல
பாட வந்த பாட்டுல உள்ள சங்கதி என்ன தோணலை
தாலி ஒண்ணு கையோட அதை தாங்க இவளுக்கு கூடலை
வாலிபத்து நாளுல அந்த வாட்டம் இவளுக்கு ஆரலை
உச்சம் தலையில் வச்சி எழுதி கச்சி பிரிச்சான்
அன்பை மரச்சான் யாராந்த சாமியப்பா

இங்கே மானமுள்ள பொண்ணு ஒன்ன மனம் துடிக்க விட்டாக
மறுதளிக்க வச்சாக மதி மயங்க வச்சாக
அட எல்லாம் நெஞ்சோட மூடி மூடி வச்சா தண்னாள
ஒரு பாசம் அன்போட பாட்டெடுத்து தந்தா தண்னாள

இமைகள் ரெண்டும் மூடும் போதும் உன்னை யோசிக்க - பொய் சொல்ல போறோம்


ஒரு வார்தை பேசாமல் ஒரு பார்வை பார்க்காமல்
உன் மௌனம் எதோ செய்யுதடா
புயல் காற்று வீசாமல் பூகம்பம் இல்லாமல்
என் நெஞ்சம் உன்னிடம் சாயுதடா
நான் நில் நில் நில் என்றாலும் என் மனம் கேட்கவில்லை
தினம் சொல் சொல் என்றாலும் என் உதடுகள் பேசவில்லை
ஆனால் கூட ஐயோ இந்த அவஸ்தைகள் புடிக்குதடா
ஐயோ ஐயோ ஐயோ எனக்கு காதல் வந்திருச்சு
பையா பையா பையா எனக்கு பைத்தியம் புடிச்சிருச்சு

போ போ போ எந்தன் இரவே நீயும் அவனிடம் சென்று
தூக்கம் இல்லை நெடுநாள் என்று சொல்வாயோ
போ போ போ எந்தன் இரவே நீயும் அவனிடம் சென்று
தூக்கம் இல்லை நெடுநாள் என்று சொல்வாயோ
இமைகள் ரெண்டும் மூடும் போதும் உன்னை யோசிக்க
என் இதயம் என்னும் புத்தகம் தருவேன் வாடா வாசிக்க
சொல்லாமல் போனாலும் என் காதல் தெரியாதா
கண்கள் பேசும் பாஷைகள் என் கண்ணா புரியாதா

போ போ போ எந்தன் பகலே நீயும் அவனிடம் சென்று
வெளிச்சம் இல்லை வெகுநாள் என்று சொல்வாயோ
போ போ போ எந்தன் பகலே நீயும் அவனிடம் சென்று
வெளிச்சம் இல்லை வெகுநாள் என்று சொல்வாயோ
காற்றை கேட்டு பூக்கள் எல்லாம் வாசம் தருகிறதா
கடிதம போட்டு கடலை தேடி நதிகள் வருகிறதோ
சொல்லாமல் போனாலும் என் காதல் தெரியாதா
கண்கள் பேசும் பாஷைகள் என் கண்ணா புரியாதா
ஐயோ ஐயோ ஐயோ எனக்கு காதல் வந்திருச்சு
பையா பையா பையா எனக்கு பைத்தியம் புடிச்சிருச்சு

ஒரு வார்தை பேசாமல் ஒரு பார்வை பார்க்காமல்
உன் மௌனம் எதோ செய்யுதடா
புயல் காற்று வீசாமல் பூகம்பம் இல்லாமல்
என் நெஞ்சம் உன்னிடம் சாயுதடா
நான் நில் நில் நில் என்றாலும் என் மனம் கேட்கவில்லை
தினம் சொல் சொல் என்றாலும் என் உதடுகள் பேசவில்லை
ஆனால் கூட ஐயோ இந்த அவஸ்தைகள் புடிக்குதடா
ஐயோ ஐயோ ஐயோ எனக்கு காதல் வந்திருச்சு
பையா பையா பையா எனக்கு பைத்தியம் புடிச்சிருச்சு