Thursday, April 30, 2009

எந்த குதிரையில் வருவான் எப்போது வருவானோ தேடுகிறேன்


எந்த குதிரையில் வருவான்
எப்போது வருவானோ தேடுகிறேன்
தத்தித்தாவுது கால்கள் அதோபார்
அவனுடன் நான் ஓடுகிறேன்
காற்றின் ஈரம் காதின் ஓரம்
மோதும் நெஞ்சில் மோகம் ஏறும்
அந்திச் சூரியன் வெட்கம் வீசும்
அந்தச் சிவப்பை மேகம் பூசும்
தோ தோ தோ தோ தோதோ காமக் கத்திக்குத்தி
கிடைத்த தழும்புகள் வேர்க்காதோ தோ தோ தோ தோதோ
ஆசை நிலத்தில் அன்பில் நெளியும் துளிகள் பறக்க

இதற்க்கு தானே இத்தனை நாளாய் ஆசைபட்டேன்
பிராணநாதா பிராணநாதா பிராணநாதா...

எந்த குதிரையில் வருவான்
எப்போது வருவானோ தேடுகிறேன்
தத்தித்தாவுது கால்கள் அதோபார்
அவனுடன் நான் ஓடுகிறேன்

இதயம் ஏங்கி ஏங்கி தட்டியது
இதழ்கள் தேங்கி தேங்கி திட்டியது
இமைகள் ஓங்கி ஓங்கி கொட்டியது தேகம் தேளானது
இரவும் பகலும் வாளானது தனிமை உடைந்து தூளானது
இரவும் பகலும் வாளானது தனிமை உடைந்து தூளானது
இனி ஓரு ஜென்மம் மூங்கில் காடாய் பிறப்பேனா
கண்ணன் உதட்டில் புல்லாங்குழலாய் கிடப்பேனா
இதற்க்கு தானே இத்தனை நாளாய் ஆசைபட்டேன்
பிராணநாதா பிராணநாதா பிராணநாதா...

எந்த குதிரையில் வருவான்
எப்போது வருவானோ தேடுகிறேன்
தத்தித்தாவுது கால்கள் அதோபார்
அவனுடன் நான் ஓடுகிறேன்
இதற்க்கு தானே இத்தனை நாளாய் ஆசைபட்டேன்
பிராணநாதா பிராணநாதா பிராணநாதா...

காதல் பூக்கள் அள்ளி நீட்டியது கண்கள் வாங்கச் சொல்லி மூடியது
கனவில் நாணம் வந்து ஒட்டியது இளமை தீராது
வயதும் மனதும் போராடுது வழியும் கூட தேனானது
வயதும் மனதும் போராடுது வழியும் கூட தேனானது

என் காதல் இதழில் ஈர முத்தம் சுடுகிறது
என் தேகக் கதவை விரல்கள் தட்டி திறக்கிறது
இதற்க்கு தானே இத்தனை நாளாய் ஆசைபட்டேன்
பிராணநாதா பிராணநாதா பிராணநாதா...

எந்த குதிரையில் வருவான்
எப்போது வருவானோ தேடுகிறேன்
தத்தித்தாவுது கால்கள் அதோபார்
அவனுடன் நான் ஓடுகிறேன்

காற்றின் ஈரம் காதின் ஓரம்
மோதும் நெஞ்சில் மோகம் ஏறும்
அந்திச் சூரியன் வெட்கம் வீசும்
அந்தச் சிவப்பை மேகம் பூசும்
தோ தோ தோ தோ தோதோ காமக் கத்திக்குத்தி
கிடைத்த தழும்புகள் வேர்க்காதோ தோ தோ தோ தோதோ
ஆசை நிலத்தில் அன்பில் நெளியும் துளிகள் பறக்க
Casinovaa Casinovaa...
கிட்ட வா வா Casinovaa..Casinova Casinovaa...
கிட்ட வா வா Casinovaa..
கன்னம் ரெண்டும் செல்லமாக கடிக்க வா
Casinova..Loverboy Loverboy வருவாய்
Loverboy Loverboy வருவாய்

இதற்க்கு தானே இத்தனை நாளாய் ஆசைபட்டேன்
பிராணநாதா பிராணநாதா பிராணநாதா...

சாமிகிட்ட… சொல்லி புட்டேன்


சாமிகிட்ட… சொல்லி புட்டேன்…
உன்ன நெஞ்சில்… வச்சி கிட்டேன்…
ஒத்தையா நீ நானும் பேசிக்கவே முடியலன்னு
மனசுக்குள்ள பேசிக்கிட்டோம்…
சுத்தமா நீ நானும் பாத்துக்கவே முடியலன்னு
கனவுக்குள்ள பாத்துக்கிட்டோம்…
சாமிகிட்ட சொல்லி புட்டேன்…உன்ன நெஞ்சில் வச்சி கிட்டேன்…

ஒரு கோடி புள்ளி வச்சு நான் போட்ட காதல் கோலம்
ஒரு பாதி முடியும் முன்னே அழிச்சிருச்சு காலம்! காலம்!
இன்னொரு சென்மம் நான் மறுபடி பொறந்து வந்து
உனக்காக காத்திருப்பேன்…
அப்பவும் சேராமல் இருவரும் பிரியனுன்னா
பொறக்காமல் போயிடுவேன்…


மனசுக்குள்ள பொத்தி மறச்ச…இப்ப எதுக்கு வெளியில சிரிச்ச?
கனவுக்குள்ள ஓடிப் புடிச்ச…நெசத்திலதான் தயங்கி நடிச்ச…
அடி போடி பயந்தாங்கொள்ளி…எதுக்காக ஊம ஜாட?
நீ இருந்த மனச அள்ளிஎந்த தீயில் நானும் போட?
உன்னை என்னை கேட்டுகிட்டா காதல் நெஞ்சில் தட்டுச்சு?

தெப்ப குளத்தில் படிஞ்ச பாசி…கல்லெறிஞ்சா கலையும்? கலையும்?
நெஞ்சக்குளத்தில் படிஞ்ச காதல்எந்த நெருப்பில் எரியும்? எரியும்?
நீ போன பாத மேல…சருகாக கடந்தா சுகமா?
உன்னோட ஞாபகம் எல்லாம் மனசுக்குள்ள இருக்கும் ரணமா?
கட்டுக் காவல் மீறி வர காதல் நெஞ்சு கெஞ்சுதே…


சாமிகிட்ட… சொல்லி புட்டேன்…உன்ன நெஞ்சில்… வச்சி கிட்டேன்…
ஒத்தையா நீ நானும் பேசிக்கவே முடியலன்னு
மனசுக்குள்ள பேசிக்கிட்டோம்…
சுத்தமா நீ நானும் பாத்துக்கவே முடியலன்னு
கனவுக்குள்ள பாத்துக்கிட்டோம்…
சாமிகிட்ட சொல்லி புட்டேன்…உன்ன நெஞ்சில் வச்சி கிட்டேன்…

ஒரு கோடி புள்ளி வச்சு நான் போட்ட காதல் கோலம்
ஒரு பாதி முடியும் முன்னே அழிச்சிருச்சு காலம்! காலம்!
இன்னொரு சென்மம் நான் மறுபடி பொறந்து வந்து
உனக்காக காத்திருப்பேன்…அப்பவும் சேராமல் இருவரும் பிரியனுன்னா
பொறக்காமல் போயிடுவேன்…

Monday, April 27, 2009

ஓரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா கண் திறந்து பாரம்மா , வேறு துணை யாரம்மா

கோல விழியம்மா ராஜா காளியம்மா
பளையதாயம்மா பங்காரு மாயம்மா
முத்து மாரியம்மா பத்ர காளியம்மா
முண்டக்கன்னியம்மா எங்க கண்ணியம்மா
குங்கும கோதையே அன்னை யசோதையே
செந்தூர தேவானை சிங்கார ரூபினி
அன்னை விசாலாட்சி சொவ்தாம்பா விருப்பாட்சி
சுந்தர நீலியே சௌந்தர வல்லியே

வல்லியம்மா எங்கள் அல்லியம்மா
தங்க செல்லியம்மா செல்ல கொள்ளியம்மா
அடி அங்களாம்மா எங்கள் செங்கலம்மா
அருள் முப்பதம்மா அனல் வெப்பதம்மா
சிங்காரி ஓங்காரி சங்கரி உமையத்தா
மண்மாரி பன்னாரி செல்லாயி சிலம்பாயி
மருவத்தூர் அம்மாவே ஓம் சக்தியே


ஓரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா
கண் திறந்து பாரம்மா , வேறு துணை யாரம்மா ?
குதமில்லா ஓரு உத்தம நெஞ்சுக்கு
சோதனைகள் எதுக்கு ? - அவர்
கட்டிய தாலிக்கும் போட்டுக்கும் பூவுக்கும்
காவல் கொடு எனக்கு ..
நீதிக்கு கண் தந்து சோதிக்கும் துன்பத்தை
நீ வந்து மற்றிடம்மா ...
மடியேந்தி பிச்சை கேட்கிறேன் - அம்மா
மறு வாழ்வு உன்னை கேட்கிறேன்


காணாத பொய் வழக்கு வீணாக வந்திருக்கு
வாதாட சாட்சி ஏதம்மா ?
ஊர் வழ ஆட்சி செய்யும் மீனாக்ஷி தேவியம்மா
நான் வாழ நீதி கூறம்மா
சோதனையை வேதனையை சேர்த்து விட்டேன் உன்னடியில்
சோகங்களை திரோகங்களை தீர்த்துவிடு என் வழியில்
வாழ்வரசி ஆவதற்கு தாலி தந்த கண்ணியம்மா
வாசல் வந்த பிள்ளை மனம் வாடலமா பொன்னியம்மா
அகிலாண்டேஸ்வரி சபை ஏறம்மா
அவர் மீது வீழ்ந்த பழி தீரம்மா

திருபதூர் கௌமாரி திருவானைக்கா அம்மா
மாங்காட்டு காமாக்ஷி மலையாள பகவதி
தஞ்சாவூர் மாரியே கண்யாகுமரியே
மலையனூர் செண்பகம் மயிலாப்பூர் கற்பகம்
கன்னிகா பரமேஸ்வரி அன்னையே ஜகதம்பா
துளுக்கனதம்மாவே துர்க்கை அம்மாவே
முக்குழி அம்மாவே வழங்கி அம்மாவே
எல்லை அம்மாவே கங்கை அம்மாவே
நாச்சியம்மா தங்க பேச்சியம்மா
அன்னை மூகாம்பிகா எங்கள் யோகம்பிகா
அடி அலமேலம்மா தாயே வரிக்கோலம்மா
துய தஞ்சையம்மா வீர படவேட்டம்மா
வைரவி பைரவி தேனாட்சி திருபட்சி
அம்மாயி ப்ரம்மாயி அழக்கம்மா கனகம்மா
அதி பராசக்தியே ......

ஓரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா
கண் திறந்து பாரம்மா , வேறு துணை யாரம்மா ?


ஓயாத சத்தியமும் சாயாத சக்கரமும்
நீதானே பூமி மீதிலே ..
அத்தா நீ கண் திறந்து பத்தாலே வஞ்சனைகள்
வீழாதோ உந்தன் காலிலே ..
பெண்ணினங்கள் வேண்டுவது அன்னை உந்தன் குங்குமமே
குங்குமத்தில் நீ இருந்து காக்கணும் என் மங்கலமே
சத்தியத்தை காக்க உந்தன் சக்கரத்தை சுத்தி விடு
உக்கிரத்தில் நீ எழுந்து உண்மைக்கொரு வெற்றி கொடு
உன் நீதி பூமியில் தவறாகுமா ?
என் வாழ்வில் அது இன்னும் வெகு தூரமா ?



தாயே பெரியம்மா தாலி தரும் அம்மா
தெப்ப குலதம்மா தேரடி பூவம்மா
மங்களம் நீயம்மா மந்தவெளி அம்மா
அர்தனாரியம்மா அன்னை ஜோதியம்மா
வடிவுடையம்மாவே திரிப்புரசுந்தரி
வேற்காடு மாயம்மா கஸ்துரி தாயம்மா
உருமாறி உலகம்மா உருத்ரக்ஷா திலகம்மா
உண்ணாமுலை அம்மா பன்னாரி அம்மாவே
மகேஸ்வரி சர்ப்ப யாகெஸ்வரி
அடி லோகேஸ்வரி நல்ல யோகேஸ்வரி
சக்தி ஜெகதீச்வரி அன்னை பரமேஸ்வரி
எங்கள் புவனேஸ்வரி தாயே ராஜேஸ்வரி
அபிராமி சிவகாமி அருள்மாரி மகாமாயி
மமுண்டி சாமுண்டி பாஞ்சாலி அத்தாயீ
சோலையூர் மகாமாயி ஓம் சக்தி தாயே

Saturday, April 25, 2009

குட்டி போட்ட பூனை போல உன் காலை நான் சுத்துறேன்


மனசுகுள்ள காதல் சிரிக்குது
மழையும் இல்ல வெயிலும் இல்ல
அப்பறம் எப்படி வானவில் வந்தது
மாமன்காரன் எங்கே இருக்கான்...

ஏ ஏ ஏலே ஏலே...

மாமன் எங்கு இருக்கான் ஆல்காட்டி
மயிலு காத்திருக்கா ராபூட்டி

கண்ணுக்குள் வச்சிக்கிட்டே வெளியே நீயும் தேடாதே
வண்ணத்துப்பூச்சியென்றும் பூவை விட்டு போகாதே

குட்டி போட்ட பூனை போல உன் காலை நான் சுத்துறேன்

குறுக்கு போட்ட பின்னல் போல உன் மார்பில் இளைப்பருறேன்

பள்ளிக்குளம் மேலே கல்லு போட்ட போல வட்டம் போட்டு அலைப்பாயுறேன்

ஆரச்சங்கு சத்தம் கேட்கும் போது கூட உன்னோட பேர் சொல்லுதே
கைய தொட்டு பேசுற மாமன் மைய வச்ச முகத்தையும் தொடுவான்
நெருங்கி வருவான் முத்தம் தருவான் மத்த கத நான் சொல்லமாட்டேன்
பாசி மணி தடங்கற கழுத்தில் பத்து விரல் தடயங்கள் தருவான்
ஊசிவெடியாய் உள்ளே வெடிச்சேன் மூச்சு விட்டு மயங்கியே போவேன்

ஆளாகி நாளான ராசாத்தியே அழகான என் நெஞ்சை குடைசாத்தியே
வெள்ளை வேட்டி மேலே மஞ்சள் கறை போல ஒட்டிக்கொள்ள இடம் கேட்கிறேன்
ஏ வண்டி கட்டி நானே பொண்ணு கேட்டு வந்தேன் சொர்க்கத்தை நான் எடை பார்க்கிறேன்

தன தன தன தன நா நா தன தன தன தன நா நா தன தன தன தன நா நா
கூ கு கூ.
சைய்ய சைய்யா சைய்ய சைய்ய சய்ய சைய்யா...

தாலி கட்டி உனக்கும் எனக்கும் தேன்நிலவு நிலவுல நடக்கும்
பாலும் பழமும் இருக்கும் போதும் வேற பசி நெஞ்சில எடுக்கும்
கட்டிலுக்கு தினம் கால் வழிக்கும் நூத்தியெட்டு பிள்ளகுட்டி பிறக்கும்
நம்ம பிள்ளைஙக படிக்கத்தானே பள்ளிக்கூடம் தனியா திறக்கும்

எம்மாடி எம்மாடி தாங்காதுமா ஆனாலும் என் ஆசை தூங்காதமா
சைய்யா சைய்யா யா... அத்தை பெத்த பைய்யா
ஒத்திகைக்கு எப்ப வரட்டும்

ஒத்த பார்வை பார்த்தே செத்து புழைச்சேன்டி
மத்த பார்வை என்ன வரட்டும்...

மாமன் எங்கு இருக்கான் ஆல்காட்டி மயிலு காத்திருக்கா ராபூட்டி
கண்ணுக்குள் வச்சிக்கிட்டே வெளியே நீயும் தேடாதே
வண்ணத்துப்பூச்சியென்றும் பூவை விட்டு போகாதே
குட்டி போட்ட பூனை போல உன் காலை நான் சுத்துறேன்
குறுக்கு போட்ட பின்னல் போல உன் மார்பில் இளைப்பருறேன்
பள்ளிக்குளம் மேலே கல்லு போட்ட போல வட்டம் போட்டு அலைப்பாயுறேன்

ஏ...ஆரச்சங்கு சத்தம் கேட்கும் போது கூட உன்னோட பேர் சொல்லுதே... ஏ...

எந்தன் குரல் கேட்டு உன்னை தூக்கம் தழுவாதா


எந்தன் குரல் கேட்டு
உன்னை தூக்கம் தழுவாதா

எந்தன் குரல் கேட்டு
உன்னை தூக்கம் தழுவாதா
பந்தம் நானில்லை
பரிதாபம் கூடாதா
நண்பனே நண்பனே நண்பனே...
இவள் சொல்லும் வேதம் அரங்கேறுமா
உனக்கென்று வாழ்வில் ஓர் நியாயமா
இதை யாரிடம் சொல்வேன்
நண்பனே நண்பனே நண்பனே...

எந்தன் குரல் கேட்டு
உன்னை தூக்கம் தழுவாதா
பந்தம் நானில்லை
பரிதாபம் கூடாதா

ல ல லா ல ல லா........

இரவென்றும் பகலென்றும்
உனக்கில்லையே...
இளங்காலை பொன்மாலை
உனக்கில்லையே....
மது வென்னும் தவறுக்கு
ஆளாகிறாய்....
அதற்காக நியாயங்கள்
நீ தேடுகிறாய்
ஆயிரம் பூக்களில்
ஆனந்தம் காண்கிறாய்
நிறங்களே வேற்றுமை
நினைத்திடு நண்பனனே....
மது கிண்ணம் தலை எடுத்து
பெண்ணை விலைக்கொடுத்து
நீ மூடுவாய்.....

எந்தன் குரல் கேட்டு
உன்னை தூக்கம் தழுவாதா
பந்தம் நானில்லை
பரிதாபம் கூடாதா

ல ல லா ல ல லா........

வரவின்றி செலவானால்
தவறில்லையே
வாழ்நாட்கள் செலவானால்
வரவில்லையே
நேற்றோடும் இன்றோடும்
நீயில்லையே
நாளை உன் கையோடு
உனக்கில்லையே
யாரிடம் தவறு இல்லை
யாரிடம் குறை இல்லை
தூக்கமே நிம்மதி
தூங்கிடு நண்பனே.....
நீ கடந்த காலங்களை
களைந்து எறிந்துவிடு
விழி மூடுவேன்........

எந்தன் குரல் கேட்டு
உன்னை தூக்கம் தழுவாதா
பந்தம் நானில்லை
பரிதாபம் கூடாதா
நண்பனே.. நண்பனே ...நண்பனே...
இவள் சொல்லும் வேதம் அரங்கேறுமா
உனக்கென்று வாழ்வில் ஓர் நியாயமா
இதை யாரிடம் சொல்வேன்
நண்பனே... நண்பனே... நண்பனே...

ம்...ம்...ம்...ம்...ம்...ம்......

அய்யானாரு சாமியே காவலுக்கு வேண்டிதான் காதல நான் சொல்ல நினைச்சேன்



சிவகாசி ரதியே...ஏய்..
சிரிக்கின்ற வெடியே...
உன்னை எந்த காலம் பார்த்தது தாயி...
இவ அந்த கால ஜஸ்வர்யாராயி...

முகத்தில... தெரியுற... சுருக்கத்தை போல ...ஆ
அறுபது வயசில படுத்ததுரா ஆளை...
உன்னை எந்த காலம் பார்த்தது தாயி..
இவ அந்த கால ஜஸ்வர்யாராயி....

ஒற்றையடி பாதையில சொல்லி முறைச்சேன்
மத்தியானம் வருவான்னு காத்து கிடந்தேன்
ஒத்தபனை மேலே ஒரு பேய பார்த்துதான்
தலைதெரிக்க ஓட்டம் பிடித்தேன்
ஏ...அய்யானாரு சாமியே காவலுக்கு வேண்டிதான்
காதல நான் சொல்ல நினைச்சேன்
அவ பாம்பாட்டி ஒருத்தனை
பார்த்து பார்த்து சிரிச்சத
நான் எங்க போயி சொல்லி தொலைப்பேன்
அந்த பந்தகாலு பக்கத்தில பாரு
அவ அந்த கால சொக்கதங்க தேரு....

சிவகாசி ரதியே...ஏய்..சிரிக்கின்ற வெடியே...
உன்னை எந்த காலம் பார்த்தது தாயி..
இவ அந்த கால ஜஸ்வர்யாராயி..

பம்புசட்டு தண்ணீயில அவ குளிக்க
தென்னைமர உச்சியில நானும் இருப்பேன்
தென்னைமட்டை தேளூ ஒன்னு என்னை கடிக்க
பக்கத்திலே பள்ளு இளிப்பேன்
கென்டைமீனை போலத்தான் துள்ளிக்கிட்டு திரிஞ்சவ
கருவாடா வந்து நிற்குறா
இப்ப நல்ல நேரம் பார்க்கல தாம்பூலம் மாத்தல
தாளியைத் தான் கட்டப்போறேன்

உன்னை எந்த காலம் பார்த்தது தாயி..
இவ இப்ப கூட ஜஸ்வர்யாராயி..

சிவகாசி ரதியே...ஏய்..சிரிக்கின்ற வெடியே...
உன்னை எந்த காலம் பார்த்தது தாயி..
இவ என்னைக்குமே ஜஸ்வர்யாராயி..

இந்த ஜோடி சூப்பர்னு ஊருக்குள்ள பேச்சு


சுத்தி போடா வேணாமா , கண்ணு பட்டு போச்சு
இந்த ஜோடி சூப்பர்னு ஊருக்குள்ள பேச்சு
வயலுக்கு போற சனம் எல்லாம்
பச்ச நெல்லாக நம்ம பேர நடவும் செய்யுதையா ...
சந்தையில கூடும் கூட்டம் எல்லாம்
துட்டு இல்லாம , நம்ம சேதி வாங்கி போகுதையா ,,

அந்த ஆத்தங்கரையில , கலத்து மேட்டுல
நம்ம கதைய பேசித்தான் காத்தே வீசுது ...
சுத்தி போடா வேணாமா , கண்ணு பட்டு போச்சு
இந்த ஜோடி சூப்பர்னு ஊருக்குள்ள பேச்சு

மகளா , மருமகளா என் வீட்டுக்கு வருவா
வெளக்கா , குத்து வெளக்கா நீ வெளிச்சம் வீசுவா
புருஷன் தோளில் , நான் ஊஞ்சல் ஆடுவேன்
புகுந்த வீட்டுக்குள்ள , நான் புண்ணியம் சேமிப்பேன்

அழகா என்ன அதட்டி நீ கட்டளை போடுவ
குளிச்சா நல்ல துவட்டி நீ முத்தமும் வாங்குவ
தினமும் தினமும் நான்தான் வந்து வெத்தல மடிக்கணும்
பாதி கடிச்சு நீ தான் மிச்சம் எனக்கு கொடுக்கணும்
அட இப்படி ஓரு ஜோடியான்னு உலகும் கண்ணு வெக்கணும் ...

அடியே , என் கொடியே உன் மடியில் இடம் கொடு
முடிஞ்ச உன் மார்பில் கொஞ்சம் முணங்க வழி கொடு
ஆஹா இரவு நேரம் வந்தா உன் மெத்தையிலே இடம் கொடு
விடியும் நேரம் ஆனா என் சேலைய நீ கொடு
கன்னியே மச்ச கன்னியே உன் கன்னத்தில் ருசி கொடு
கடஞ்ச வெள்ளி சிலையே உன் கழுத்தில் மனம் குடு
உதட்டில் குடுத்த முத்தம் அதா திருப்பித்தான் கொடு
வெக்கமும் எனக்கு வந்த நீ இரண்டுதான் கொடு

எங்க அப்பன் ஆத்தா ரெண்டு பேருக்கும்
ஆளுக்கொன்ன பெத்து கொடு


சுத்தி போடா வேணாமா , கண்ணு பட்டு போச்சு
இந்த ஜோடி சூப்பர்னு ஊருக்குள்ள பேச்சு
வயலுக்கு போற சனம் எல்லாம்
பச்ச நெல்லாக நம்ம பேர நடவும் செய்யுதையா ...
சந்தையில கூடும் கூட்டம் எல்லாம்
துட்டு இல்லாம , நம்ம சேதி வாங்கி போகுதையா ,,

அந்த ஆத்தங்கரையில , கலத்து மேட்டுல
நம்ம கதைய பேசித்தான் காத்தே வீசுது ...
சுத்தி போடா வேணாமா , கண்ணு பட்டு போச்சு
இந்த ஜோடி சூப்பர்னு ஊருக்குள்ள பேச்சு

Thursday, April 23, 2009

ஸ்ரீ ராமஜெயம் எனக்கு எனக்கு உன் பேர்தான் பேர்தான் இனிமேலே


அத்திரி பத்திரி கத்திரிக்கா
என் அத்தான் நெஞ்சில் இடம் இருக்கா ?
என் படிப்ப நான் தொலைச்சேன்
என் மனச நான் தொலைச்சேன்
கணக்கு புக் தொறந்தா
உன் காதல் முகம் தோணும்
காம்பஸ் போல தானே
என் கண்ணு உன்ன சுத்தும்
என் மாமா மகன் நீங்க
என் அத்தான் முறை தாங்க
ஹே டும் டும் பீப்பீ
டும்டும் பீப்பீ எப்போ
அத்திரி பத்திரி கத்திரிக்கா
என் அத்தான் நெஞ்சில் இடம் இருக்கா ?

பரீட்சை எழுதும் நேரம்
உன் சிரிப்பு தானே - நெனச்சாலே
பிள்ளையார் சுழிய நெனச்சி
உன் பேரை தானே - வரைஞ்சாலே

ஸ்ரீ ராமஜெயம் எனக்கு எனக்கு உன்
பேர்தான் பேர்தான் இனிமேலே
கிளிபிள்ளையாய் தினமும் தினமும்
அதை சொல்வேன் சொல்வேன் தன்னாலே


திருக்குறளாய் திருக்குறளாய் உந்தன்
குரல்தான் உனக்கு உனக்கு
தலைநகரம் தலை நகரம் உந்தன்
தெருதான் உனக்கு உனக்கு
உயிரே உயிரே .....
என் மாமா மகன் நீங்க என்
அத்தான் முறை தாங்க
ஹே டும் டும் பீப்பீ
டும்டும் பீப்பீ எப்போ

ஒருநாள் ஒருநாள் ஒருநாள் ஓரு
காதல் பூதம் - புடிச்சிருச்சு
மறுநாள் மறுநாள் மறுநாள் அது
உன்பேர் சொல்லி - கடிச்சிருச்சு
உதடுகளை உணவாய் உணவாய்
அது கேட்கும் கேட்கும் தினம்தோறும்

ஊருசனம் உறங்கிய பின்னே அது
முழிச்சி மெதக்கும் கதவோரம்
குலசாமி திருநீறு வெச்சு பார்த்தேன்
அது நீ இல்ல
குத்தாலம் கோவிலில் தாலி கட்ட
சொல்லிச்சு நில்லு
உயிரே உயிரே ......

என் மாமா மகன் நீங்க என்
அத்தான் முறை தாங்க
ஹே டும் டும் பீப்பீ
டும்டும் பீப்பீ எப்போ


அத்திரி பத்திரி கத்திரிக்கா
என் அத்தான் நெஞ்சில் இடம் இருக்கா ?
என் படிப்ப நான் தொலைச்சேன்
என் மனச நான் தொலைச்சேன்
கணக்கு புக் தொறந்தா
உன் காதல் முகம் தோணும்
காம்பஸ் போல தானே
என் கண்ணு உன்ன சுத்தும்
என் மாமா மகன் நீங்க
என் அத்தான் முறை தாங்க
ஹே டும் டும் பீப்பீ
டும்டும் பீப்பீ எப்போ
ஹே டும் டும் பீப்பீ
டும்டும் பீப்பீ எப்போ

Tuesday, April 21, 2009

ஒருவன் நினைவிலே உருகும் இதயமே இதோ துடிக்க


நானே நானா யாரோ தானா
மெல்ல மெல்ல மாறினேனா
தன்னை தானே மறந்தேனே
என்னை நானே கேட்கிறேன்

ஒருவன் நினைவிலே உருகும் இதயமே இதோ துடிக்க
உலர்ந்த உதடுகள் தனிமை கவிதைகள் எதோ படிக்க
மதுவின் மயக்கமே உனது மடியிலே இனிமேல்
இவள் தான் சரணம் சரணம்


பிறையில் வளர்வதும் பிறகு தேய்வதும் ஒரே நிலவு
உறவில் கலப்பதும் பிரிவில் தவிப்பதும் ஒரே மனது
பருவ வயதிலே இரவும் பகலும் விரகம்
நரகம் சரணம் சரணம்

நானே நானா யாரோ தானா
மெல்ல மெல்ல மாறினேனா
தன்னை தானே மறந்தேனே
என்னை நானே கேட்கிறேன்

Monday, April 20, 2009

எனைக் கேட்டு காதல் வரவில்லையே நான் சொல்லி காதல் விடவில்லையே



ஓ வெண்ணிலா இரு வானிலா
நீ..
ஓ நண்பனே அறியாமலா
நான்..

கண்ணே கண்ணே காதல் செய்தாய்
காதல் என்னும் பூவை நெய்தாய்
நண்பன் அந்த பூவை கொய்தான்
ஓ நெஞ்சே நெஞ்சே நீயென் செய்வாய்
(ஓ வெண்ணிலா..)

மழை நீரில் வானம் நனையாதம்மா
விழி நீரில் பூமுகம் கரையாதம்மா
எனைக் கேட்டு காதல் வரவில்லையே
நான் சொல்லி காதல் விடவில்லையே
மறந்தாலும் நெஞ்சம் மறக்காதம்மா
இறந்தாலும் காதல் இறக்காதம்மா
(ஓ வெண்ணிலா..)

இருக்கின்ற இதயம் ஒன்றல்லவா
எனதல்ல அதுவும் உனதல்லவா
எதை கேட்ட போதும் தரக்கூடுமே
உயிர் கூட உனக்காய் விட கூடுமே
தருகின்ற பொருளாய் காதல் இல்லை
தந்தாலே காதல் காதல் இல்லை

ஓ வெண்ணிலா இரு வானிலா
நீ..
ஓ நண்பனே அறியாமலா
நான்..

கண்ணே கண்ணே காதல் செய்தாய்
காதல் என்னும் பூவை நெய்தாய்
நண்பன் அந்த பூவை கொய்தான்
ஓ நெஞ்சே நெஞ்சே நீயென் செய்வாய்

நீதானே எப்போதும் எந்தன் கண்களில் வாழ்கின்றாய்



நீயில்லை நிழலில்லை நிழல் கூட துணையில்லை
நீதானே எப்போதும் எந்தன் கண்களில் வாழ்கின்றாய்
அழுகின்றேன் இப்போது நீ என் கண்ணீராகின்றாய்

நீயில்லை நிழலில்லை நிழல் கூட துணையில்லை


உன் பேரை நான் எழுதி என்னை நான் வாசித்தேன்
எங்கேயோ எனை தேடி உன்னில்தான் சந்தித்தேன்
காதலே காதலே..ஊஞ்சலாய் ஆனதே
நான் அங்கும் இங்கும் அலைந்திட தானா
சொல் சொல்

நீயில்லை நிழலில்லை நிழல் கூட துணையில்லை
நீதானே எப்போதும் எந்தன் கண்களில் வாழ்கின்றாய்
அழுகின்றேன் இப்போது நீ என் கண்ணீராகின்றாய்


பகலின்றி வாழ்ந்திருந்தேன் சூரியனை தந்தாயே
நிறமின்றி வாழ்ந்திருந்தேன் வானவில்லை தந்தாயே
கூந்தலில் சூடினாய் வாடவும் வீசினாய்
அடி காதலும் பூவை போன்றது தானா
சொல் சொல்


நீயில்லை நிழலில்லை நிழல் கூட துணையில்லை
நீதானே எப்போதும் எந்தன் கண்களில் வாழ்கின்றாய்
அழுகின்றேன் இப்போது நீ என் கண்ணீராகின்றாய்

நீயில்லை நிழலில்லை நிழல் கூட துணையில்லை

காதல் வருவது புரிவதில்லையே அதை கடவுள் கூட அறிவதில்லையே


காதல் என்பது கடவுள் அல்லவா
அது கனவு தேசத்தின் கோவில் அல்லவா
காதல் என்றால் பொய்கள் அல்லவா
இரு விழிகள் வாங்கும் வலிகள் அல்லவா
செல்ல பொய்களும் சுகங்கள் அல்லவா
இங்கு விழியின் வலிகளும் வரங்கள் அல்லவா
வரங்கள் என்பது அலைகள் அல்லவா
அது விழுந்து எழுவது துயரம் அல்லவா
(காதல் என்பது..)

கண்கள் மூடி படுத்தால் கனவில் உந்தன் பிம்பம்
காலை நேரம் எழுந்தால் நினைவில் உந்தன் சுகந்தம்
உனை பார்க்கும்போது நானே வெட்ட வெளியிலே திரிந்தேன்
உன் அருகில் வந்ததால் வேடந்தாங்களாய் உணர்ந்தேன்
உனக்காக தானே உயிர் வாழ்வேனே நானே
நீ இன்றி நானாய் வெறும் கூடு தானே
தாயோடு உணர்கின்ற வெப்பத்தை நீயே தந்தாய்
(காதல் என்பது..)

காற்றில் ஆடும் கைகள் நெருங்கி நெருங்கி துரத்தும்
விரலை பிடித்து நடக்க விருப்பம் நெருப்பை கொடுக்கும்
உந்தன் அருகில் நானும் இருந்தால் நிமிடம் நொடிகள் என கரையும்
எனை விலகி நீயும் பிரிந்தால் நேரம் பாரமாய் கனக்கும்
உன் அருகில் இருந்தால் என்ன இனி வேண்டும்
உலகு கையில் வந்ததாய் எண்ணம் ஒன்று தோன்றும்
தாயோடு உணர்கின்ற வெப்பத்தை நீயே தந்தாய்
(காதல் என்பது..)

காதல் வருவது புரிவதில்லையே
அதை கடவுள் கூட அறிவதில்லையே
பூக்கள் பூப்பது தெரிவதில்லையே
அதை யாரும் எங்குமே பார்த்ததில்லயே

Sunday, April 19, 2009

காட்டில் தொலைத்துவிட்ட கண்ணின் நீர் துளியை எங்கு கண்டுப்பிடிப்பாய்


ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ
கண் ரெண்டும் தந்தியடிக்க கண்ணா வா கண்டுப்பிடிக்க

கொள்ளை நிலவடிக்கும் வெள்ளை ராத்திரியில்
கோதை ராதை நடந்தாள்
மூங்கில் காட்டில் ஒரு கானம் கசிந்தவுடன்
மூச்சு வாங்கி உறைந்தாள்
பாடல் வந்த வழி ஆடை பறந்ததையும்
பாவை மறந்து தொலைந்தாள்
நெஞ்சை மூடி கொள்ள ஆடை தேவை என்று
நிலவின் ஒளியை எடுத்தாள்
நெஞ்சின் ஓசை ஒடுங்கிவிட்டாள்
நிழலை கண்டு நடுங்கிவிட்டாள்
கண்ணன் தேடி வந்த மகள்
தன்னை தொலைத்து மயங்கிவிட்டாள்
தான் இருக்கின்ற இடத்தினில்
நிழலையும் காணவில்லை
எங்கே எங்கே சொல் சொல்
கண் ரெண்டும் தந்தியடிக்க
கண்ணா வா கண்டுபிடிக்க

கண்ணன் ஊதும் குழல் காற்றில் தூண்டிலிட்டு
காந்தம் போல இழுக்கும்
மங்கை வந்தவுடன் மறைந்து கொள்ளுவது
மாய கண்ணன் வழக்கம்
கால்கள் இருண்டு விட கண்கள் சிவந்துவிட
காதல் ராதை அலைந்தாள்
அவனை தேடி அவள் கண்ணை தொலைத்து விட்டு
ஆசை நோயில் விழுந்தாள்
உதடு துடிக்கும் பேச்சு இல்லை
உயிரும் இருக்கும் மூச்சு இல்லை
வந்த பாதை நினைவு இல்லை
போகும் பாதை புரியவில்லை
உன் புல்லாங்குழல் சத்தம் வந்தால்
பேதை ராதை ஜீவன் கொள்வாள்
கண்ணா எங்கே சொல் சொல்
கண்ணீரில் உயிர் துடிக்க கண்ணா வா உயிர் கொடுக்க..

கன்னம் தீண்டியதும் கண்ணன் என்று
அந்த கண்ணி கண்ணை விழித்தாள்
கன்னம் தீண்டியது கண்ணன் இல்லை
வெறும் காற்று என்று திகைத்தாள்
கண்கள் மூடிக்கொண்டு கண்ணன்
பேரை சொல்லி கைகள் நீட்டி அழைத்தாள்
காட்டில் தொலைத்துவிட்ட கண்ணின்
நீர் துளியை எங்கு கண்டுப்பிடிப்பாய்
கிளியின் சிறகு வாங்கிக்கொண்டு
கிழக்கு நோக்கி சிறகடித்தாள்
குயிலின் குரலை வாங்கிக்கொண்டு
கூவி கூவி அவள் அழைத்தாள்
அவள் குறை உயிர் கறையும்முன்
உடல் மண்ணில் சரியும்முன்
கண்ணா கண்ணா வா வா
கண்ணீரில் உயிர் துடிக்க
கண்ணா வா உயிர் கொடுக்க..

Saturday, April 18, 2009

வேற்று கிரகத்திலே நாம் விளையாட போவதெப்போ


காற்று குதிரையிலே என் கார் குழல் தூது விட்டேன்
காற்று குதிரையிலே என் கார் குழல் தூது விட்டேன்
அது நேற்று நடந்ததனை உன் நெஞ்சில் எழுதட்டுமே
ஆற்றங்கரை புதரில் சிக்கி ஓடும் நுரை போலே
வேற்று கிரகத்திலே நாம் விளையாட போவதெப்போ

உறங்காமல் நெஞ்சம் உருவாக்கும் ராகம் உனக்கள்ளவோ கேட்பாயோ மாட்டாயா


என் கல்யாண வைபோகம் உன்னோடு தான்
என் கல்யாண வைபோகம் உன்னோடு தான்
நல்ல நாளில் கண்ணன் மணி தோளில்
பூமாலை நான் சூடுவேன் பாமாலை நான் பாடுவேன்
என் கல்யாண வைபோகம் உன்னோடு தான்
வைபோகம் உன்னோடு தான்

மழைக்கால மேகம் திரள் கின்ற நேரம்
மலைச்சாரலே தாலாட்ட நீராட்ட
மலர் கூட்டம் எதிர்பார்க்கும் இள வேனிற் காலம்
பூவையும் ஒரு புவினம் அதை நான் சொல்லவோ...

........என் கல்யாண..........

உறங்காமல் நெஞ்சம் உருவாக்கும் ராகம்
உறங்காமல் நெஞ்சம் உருவாக்கும் ராகம்
உனக்கள்ளவோ கேட்பாயோ மாட்டாயா
சுகம் கொண்ட சிறு வீணை விரல் கொண்டு மீட்டு
மாலையும் அதிகாலையும் நல்ல சங்கீதம் தான்.........

Friday, April 17, 2009

காதல் ஒன்றும் நல்ல நேரம் பார்ப்பதில்லையே ராகு காலம் கூட ராசி ஆகுமே


காதலிக்கும் பெண்ணின்
கைகள் தொட்டு நீட்டினால்
சின்ன தகரம் கூட தங்கம் தானே
காதலிக்கும் பெண்ணின்
வண்ண கன்னம் ரெண்டிலே
மின்னும் பருவம் கூட பவளம் தானே
சிந்தும் வேர்வை தீர்த்தம் ஆகும்
சின்ன பார்வை மோக்‌ஷம் ஆகும்
காதலின் சங்கீதமே
பூமியின் பூபாளமே

(காதலின்)

காதலிக்கும் பெண் எழுதும் கை எழுத்திலே
கண்ட பிழைகள் கூட கவிதை ஆகுமே
காதல் ஒன்னும் குற்றம் கிற்றம் பார்ப்பதில்லையே
எச்சில் கூட புனிதம் ஆகுமே
குண்டு மல்லி ரெண்டு ரூபாய்
உன் கூந்தல் ஏறி உதிரம் பூ கோடி ரூபாய்
பஞ்சு மிட்டாய் அஞ்சு ரூபாய்
நீ பாதி தின்று தந்தால் லக்‌ஷ ரூபாய்

(காதலிக்கும்)

காதல் ஒன்றும் நல்ல நேரம் பார்ப்பதில்லையே
ராகு காலம் கூட ராசி ஆகுமே
காதலுக்கு அன்னபக்‌ஷி தேவையில்லையே
காக்கை கூட தூது போகுமே
காதல் ஜோதி குறைவதில்லை
காதல் என்றும் குற்றமே பார்ப்பதில்லை
இது நட்பமாந்தோ எதுவும் இல்லை
இந்த நுட்பம் ஊருக்கு புரிவதில்லை
பாலும் வண்ணம் மாறியே போகும்
காதல் என்றும் வாழுமே
ஆடாம் ஏவாள் பாடிய பாடல்
காற்றில் என்றும் கேட்குமே
காதல் கெட்ட வார்த்தையா
இல்லை யாரும் சொல்லலாம்
நீ சொல்லவேண்டும் இன்று
காதல் முள்ளின் வேலியா
இல்லை யாரும் செல்லலாம்
நீ செல்லவேண்டும் இன்று
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்

உனக்கு என்று இந்த உலகில் பிறந்தவளை பார்த்து விட்டாய்


உனக்கு என்று இந்த உலகில் பிறந்தவளை
பார்த்து விட்டாய்...
உயிரை திறந்து அவள் உருவம் இறங்குவதை
உணர்ந்து விட்டாய்...

யார் இவளோ என்றொரு கேள்வி ?
எழுகிறதா ஆ ஆ ...
மாறி வர என் இரு விழிகள்
துடிக்கிறதா ஆ ஆ ...

உலகம் உன் உலகம் இவளின் உள்ளங்'கையில்
அடங்கியதா ஆ ஆ ...
எடையும் குறைந்து உடல் காற்று மண்டலத்தில்
பறந்திடுதா?

ஒருவாசல் மூடி மறுவாசல் வைப்பான் .இறைவன்



நலம்வாழ என்னாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்

இளவேனில் உன் வாசல் வந்தாடும்
இளந்தென்றல் உன்மீது பண்பாடும்
ஓகோ..கோ..ஓகோ..கொ
ஓகோ...கோ..ஓகோ.கொ

மனிதர்கள் சிலநேரம் நிறம் மாறலாம்
மனங்களும் அவர் குணங்களும் தடம் மாறலாம்
இலக்கணம் சிலநேரம் பிழையாகலாம்
எழுதிய அன்பு இலக்கியம் தவறாகலாம்
விரல்களைத் தாண்டி வளர்ந்ததைக்கண்டு
நகங்களை நாமும் நறுக்குவதுண்டு
இதிலென்ன பாவம் எதற்கிந்த சோகம் கிளியே.....

கிழக்கினில் தினம் தோன்றும் கதிரானது
மறைவதும் பின்பு உதிர்ப்பதும் மரபானது
கடல்களில் உருவாகும் அலையானது
விழுவதும் பின்பு எழுவதும் இயல்பானது
நிலவினை நம்பி இரவுகள் இல்லை
விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை
ஒருவாசல் மூடி மறுவாசல் வைப்பான் .இறைவன்

Thursday, April 16, 2009

அவர் என் பதி பதி


தூது செல்வதாரடி
உருகிடும்போது செய்வதென்னடி
ஒஹ் வான் மதி மதி மதி மதி
அவர் என் பதி பதி
என் தேன் மதி மதி மதி
கேள் என் சகி சகி சகி
உடன் வர
தூது செல்வதாரடி
உருகிடும்போது செய்வதென்னடி

பெண்ணழகு பூச்சூடி பொட்டு வைத்து
மன்னவனின் சீர் பாடி மெட்டு போடுது
சென்ற சில நாளாக நெஞ்சம் மாருதேன்
செல்வன் அவன் தோள் சேர கண்கள் தேடுதே
நிலை பாரடி கண்ணமா பதில் கூறடி பொன்னமா
என் காதல் வேலன் உடன் வர

தூது செல்வதாரடி
உருகிடும்போது செய்வதென்னடி
ஒஹ் வான் மதி மதி மதி மதி
அவர் என் பதி பதி
என் தேன் மதி மதி மதி
கேள் என் சகி சகி சகி
உடன் வர
தூது செல்வதாரடி
உருகிடும்போது செய்வதென்னடி

காதலா ஐ லவ் யு என்று சொன்னாள் பொன்மணி


போட்டு வைத்த காதல் திட்டம் ஓகே கண்மணி
ஒஹொ காதலா ஐ லவ் யு என்று சொன்னாள் பொன்மணி
இதுதான் காதல் எக்ஸ்ப்ரெஸ் ஒன்லி இருவர் செல்லும் பஸ் பஸ்
வேலன் வேலை சக்சச்ஸ் இனி காலை மாலை கிஸ் கிஸ்

நாங்கள் போட்டு வைத்த காதல் திட்டம் ஓகே கண்மணி
ஒஹொ காதலா ஐ லவ் யு என்று சொன்னாள் பொன்மணி

காவேரி அல்ல ..
அணை போட்டு கொள்ள இந்த காதல்
விலை வாசி போலே
விஷம் போல ஏறும் இந்த காதல்
கேட்காத லவ் சாங் ஒன்று கேட்கின்ற நேரம் இது வா வா
பார்காத ஹனி மூன் ஒன்று பார்கின்ற வேளை இன்று வா வா
பயம் விட்டு ... புது புரட்சிகரமாக

நாங்கள் போட்டு வைத்த காதல் திட்டம் ஓகே கண்மணி
ஒஹொ காதலா ஐ லவ் யு என்று சொன்னாள் பொன்மணி

ராகத்தில் தோடி தாளத்தில் ஆதி ஒன்று கூடும்
ரஸ்ஸ்யாவை போலே உண்டாவதில்லை எந்த நாளும்
நூலாடை சூடி கொள்ளும் கோலாரின் தங்க பாலம் நீதான்
மேலாக தட்டி தட்டி மெருகேற்றும் ஆளும் இன்று நான்தான்
பயம் விட்டு ... புது புரட்சிகரமாக

நாங்கள் போட்டு வைத்த காதல் திட்டம் ஓகே கண்மணி
ஒஹொ காதலா ஐ லவ் யு என்று சொன்னாள் பொன்மணி
இதுதான் காதல் எக்ஸ்ப்ரெஸ் ஒன்லி இருவர் செல்லும் பஸ் பஸ்
வேலன் வேலை சக்சச்ஸ் இனி காலை மாலை கிஸ் கிஸ்

நாங்கள் போட்டு வைத்த காதல் திட்டம் ஓகே கண்மணி
ஒஹொ காதலா ஐ லவ் யு என்று சொன்னாள் பொன்மணி

நம்பிட செய்வார் நேசம் நடிப்பதெல்லாம் வெளி வேஷம்


வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே
வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே

அகம்பாவம் கொண்ட சதியாள் அறிவால் உயர்ந்திடும் பதி நான்
சதி பதி விரோதம் மிகவே சிதைந்தது இதம் தரும் வாழ்வே

வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே
வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே

வாக்குரிமை தந்த பதியால் வாழ்ந்திடவே சதி நான்
நம்பிட செய்வார் நேசம் நடிப்பதெல்லாம் வெளி வேஷம்

வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே
வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே

தன் பிடிவாதம் விடாது என் மனம் போல் நடக்காது
நமக்கென எதுவும் சொல்லாது நம்மையும் பேசவிடாது

அனுதினம் செய்வார் மோடி அகமகிழ்வார் போராடி
இல்லறம் இப்படி நடந்தால் நல்லறம் ஆமோ நிலவே

வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே
வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே

Wednesday, April 15, 2009

உன்னை எண்ணி வாழும் எந்தன் ஆவியே..


மணியே மணிக்குயிலே, மாலையிளங்கதிரழகே!
கொடியே கொடிமலரே, கொடியிடையின் நடையழகே !
மணியே, மணிக்குயிலே, மாலையிளங்கதிரழகே!
கொடியே, கொடிமலரே, கொடியிடையின் நடையழகே!

தொட்ட இடம் பூமணக்கும்;துளிர்க்கரமோ தொட இனிக்கும்;
பூமரப் பாவை நீயடி, இங்கு நான் பாடும் -
பாமரப் பாடல் கேளடி..

ஒஓ ஒஒ ஒஒஓ..

மணியே, மணிக்குயிலே, மாலையிளம் கதிரழகே!
கொடியே, கொடிமலரே, கொடியிடையின் நடையழகே!

பொன்னில் வடித்த சிலையே!ப்ரம்மன் படைத்தான் உனையே!
வண்ணமயில் போல வந்த பாவையே..
எண்ண இனிக்கும் நிலையே!இன்பம் கொடுக்கும் கலையே!
உன்னை எண்ணி வாழும் எந்தன் ஆவியே..

கண்ணிமையில் தூண்டிலிட்டு,காதல்தனை தூண்டிவிட்டு,
எண்ணி எண்ணி ஏங்கவைக்கும், ஏந்திழையே!

பெண்ணிவளை ஆதரித்து,பேசித்தொட்டுக் காதலித்து,
இன்பம்கொண்ட காரணத்தால், தூங்கலையே!

சொல்லிச் சொல்லி ஆசை வைத்தேன்,
துடியிடையில் பாசம் வைத்தேன்,
பூமரப் பாவை நீயடி, இங்கு நான் பாடும் -
பாமரப் பாடல் கேளடி..


ஒஓ ஒஒ ஒ
மணியே மணிக்குயிலே, மாலையிளம் கதிரழகே!
கொடியே கொடிமலரே, கொடியிடையின் நடையழகே!
தொட்ட இடம் பூமணக்கும்;துளிர்க்கரமோ தொட இனிக்கும்

பூமரப் பாவை நீயடி, இங்கு நான் பாடும் -பாமரப் பாடல் கேளடி..


ஆஆஅ ஆஆ...

கண்ணிமைகளை வருத்தி,கனவுகளைத் துரத்தி,
மென்மனதினால் முடித்த மூக்குத்தி..
என்னுயிரிலே ஒருத்தி,கண்டபடி எனைத் துரத்தி,
அம்மனவள் வாங்கிக்கொண்ட மூக்குத்தி..
கோடிமணி ஓசைநெஞ்சில்,கூடிவந்துதான் ஒலிக்க,
ஓடிவந்து கேட்கவரும், தேவதைகள்

சூடமலர் மாலை கொண்டு,தூபமிட்டு தூண்டிவிட்டு,
கூடவிட்டு வாழ்த்தவரும், வானவர்கள்

அந்தி வரும் நேரமம்மா,ஆசைவிளக்கேற்றுதம்மா,

பூமரப் பாவை நீயடி, இங்கு நான் பாடும் பாமரப் பாடல் கேளடி..


ஒஓ ஒஒ ஒஒஓ..
மணியே மணிக்குயிலே, மாலையிளம் கதிரழகே!
மணியே மணிக்குயிலே, மாலையிளம் கதிரழகே!
தொட்ட இடம் பூமணக்கும்;துளிர்க்கரமோ தொட இனிக்கும்;

பூமரப் பாவை நீயடி, இங்கு நான் பாடும் -பாமரப் பாடல் கேளடி..

ஒஓ ஒஒ ஒஒஓ..
னானன னான னான னா,

Tuesday, April 14, 2009

கனிந்த இதயத்தின் உள்ளே காதல் தூங்குவதுண்டு


அரேபியா அரேபியா..
இது ஜாதி குதுரை பழக போவது யாரு ?
இது சண்டி குதுரை அடக்கபோவது யாரு ?
தேசிங்கு ராஜா குதுரை
திமிரான செல்ல குதுரை
சவாரி செய்ய போவது யாரு ?
சவாரி செய்ய போவது யாரு ?

அரேபியா..
அஹா.. அஹா..
அரேரேரேரேரேபியா..
அரேபியா..

திமிரும் குதிரையை தாக்கி திணற செய்பவன் ஜாக்கி
வாயை பூட்டிய பின்னே கடிவாளம் ஒன்று தான் பாக்கி
உடம்போ குதிரை மனமோ குழந்தை
கனவே காண்பாள் கண்ணில் உயிரை தேக்கி

அரேபியா..அரேபியா..
இது ஜாதி குதுரை பழக போவது யாரு ?
இது சண்டி குதுரை அடக்கபோவது யாரு ?


கொள்கை வீரனை கண்டு குதிரை மயங்கியதென்ன ?
இதழை திருடிய கள்வன் இதயம் திருடுவதென்ன ?
வானம் உடைந்து தலையில் சரிந்து
மடியில் மடியில் நொடியில் விழுந்தது என்ன ?

சதைகளுக்குள்ளே விதைகள் இருப்பது போலே...
சதைகளுக்குள்ளே விதைகள் இருப்பது போலே...

பழத்தின் சதைகளுக்குள்ளே விதைகள் இருப்பது போலே
கனிந்த இதயத்தின் உள்ளே காதல் தூங்குவதுண்டு
அதுவாய் கனிந்து மெதுவாய் நிமிர்ந்து
சதையை தாண்டி விதியை காண்பது காதல்

அரேபியா..
அஹா.. அஹா..
அரேரேரேரேரேபியா..

இது ஜாதி குதுரை பழக போவது யாரு ?
இது சண்டி குதுரை அடக்கபோவது யாரு ?
தேசிங்கு ராஜா குதுரை
திமிரான செல்ல குதுரை
சவாரி செய்ய போவது யாரு ?
யாரு ?
சவாரி செய்ய போவது யாரு ?

Sunday, April 12, 2009

உன்னை எண்ணி நான் வாடிப்போவேன் நீயில்லாமல் கவிதையும் இசையும் சுவையே தராதே


தம் தர தம் தர மஸ்தி மஸ்தி
தர தம் தர தம் தர மஸ்தி மஸ்தி
தர தம் தம் தர தம்
என் ஆசை தாவது உன்மேலே

தம் தர தம் தர மஸ்தி மஸ்தி
தர தம் தர தம் தர மஸ்தி மஸ்தி
தர தம் தம் தர தம்
என் ஆசை தாவது உன்மேலே


ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா
சொல்லடி என் சகியே
ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா
சொல்லடி என் சகியே
ஓ... நீயில்லாத ராத்திரியோ
காற்றில்லாத இரவாய் ஒ
ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா
சொல்லடி என் சகியே
ஆருயிரே என்னை மன்னிப்பாயா மன்னிப்பாயா
சொல் என் சகியே

தம் தர தம் தர மஸ்தி மஸ்தி
தர தம் தர தம் தர மஸ்தி மஸ்தி
தர தம் தம் தர தம்
என் ஆசை தாவது உன்மேலே


ஆனால் என்னை விட்டுப் போனால்
எந்தன் நிலா சோர்ந்து போகும்
வானின் நீலம் தேய்ந்து போகுமே
முன் கோபக் குயிலே
பித்துப் பித்துக் கொண்டு தவித்தேன் தவித்தேன்
உன்னை எண்ணி நான் வாடிப்போவேன்
நீயில்லாமல் கவிதையும் இசையும்
சுவையே தராதே
ஐந்து புலன்களின் அழகியே
ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா
சொல்லடி என் சகியே...

தம் தர தம் தர மஸ்தி மஸ்தி
தர தம் தர தம் தர மஸ்தி மஸ்தி
தர தம் தம் தர தம்
என் ஆசை தாவது உன்மேலே


ஓ.... ரோஜாப் பூவை... ரோஜாப் பூவை முள்
காயம் செய்தால் நியாயமா?
பேசிப் பேசி என் ஊடல் என்ன தீருமா?

நிலாவிலே வாழ்வது இன்பம்
இருந்தும் இல்லை என்பது துன்பம்
அகிம்சை முறையில் நீயும் கொல்லாதே

தம் தர தம் தர மஸ்தி மஸ்தி
தர தம் தர தம் தர மஸ்தி மஸ்தி
தர தம் தம் தர தம்
என் ஆசை தாவது உன்மேலே


ஆருயிரே மன்னிப்பேனா மன்னிப்பேனா
சொல்லையா என் உயிரே
ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா
சொல்லடி என் சகியே ஓ...
நீயில்லாத ராத்திரியோ
காற்றில்லாத இரவாய் ஆகாதோ


தம் தர தம் தர மஸ்தி மஸ்தி
தர தம் தர தம் தர மஸ்தி மஸ்தி
தர தம் தம் தர தம்
என் ஆசை தாவது உன்மேலே

தம் தர தம் தர மஸ்தி மஸ்தி
தர தம் தர தம் தர மஸ்தி மஸ்தி
தர தம் தம் தர தம்
என் ஆசை தாவது உன்மேலே

உன் காதலி நானே... காதல் தானே காணேனே



நான் சீனியில் செய்த கடல்…
நான் சீனியில் செய்த கடல்..
வெள்ளை தங்கத்தில் செய்த உடல்..
வெள்ளை தங்கத்தில் செய்த உடல்..
உன் காதலி நானே…
காதல் தானே காணேனே….

நான் முத்தம் தின்பவள்..
ஒரு முரட்டு பூ இவள்..
நான் தினமும் தோற்பவள்..
அந்த ஆடை சண்டையில்
நான் முத்தம் தின்பவள்..
ஒரு முரட்டு பூ இவள்..
தினம் ஆடை சண்டையிலே
முதலில் தோற்பவள்…
திரி குறையட்டும் திருவிளக்கு
நீ இடம் சுட்டி பொருள் விளக்கு
அட கடவுளை அடையும் வழியில்
என் பேர் எழுதிருக்கு..
மைய்யா மைய்யா… நிலாவை வர்ணம் பூசி வைத்துக்கொள்..
மைய்யா மைய்யா…என் உடலினில் ஒளி விட்ட மலர்களும் பொய்யா பொய்யா..
மைய்யா மைய்யா… நிலாவை வர்ணம் பூசி வைத்துக்கொள்..
மைய்யா மைய்யா…என் உடலினில் ஒளி விட்ட மலர்களும் பொய்யா பொய்யா..ஆ..ஆ…
ஹே..ஹே..ஹே…

நான் புன்னகை செய்தால் போதும்…
நாலு திசைகள் அடைபட கூடும்..
என் கர்வமே என் க்ரீடமே
மலர் அம்புகள் சிலிர்த்திடும் பெண்மகள் நான்..

என்னை பார்த்ததுமே என் கண்ணாடி என்னை காதலிக்கும்
அட பெண்களை திருடும் பல ஆண்களுக்கெல்லாம்
காதலின் ஆயுதம் நானே..

மென் காற்று என் மூச்சு சில யுகமாய் வீசும்..
இனி நாளும் என் உடலில் பல பூ பூக்கள் தூவும்..
காமா..காமா… இது போதுமா…
என் பார்வை ஒளியை காலங்கள் தேடும்..
மை..மை.. மைய்யா.. ஹே..ஹே..ஹே…
மை..மை.. மைய்யா.. ஹே..ஹே..ஹே…

நான் முத்தம் தின்பவள்..
ஒரு முரட்டு பூ இவள்..
தினம் ஆடை சண்டையிலே
முதலில் தோற்பவள்…
திரி குறையட்டும் திருவிளக்கு
நீ இடம் சுட்டி பொருள் விளக்கு
அட கடவுளை அடையும் வழியில்
என் பேர் எழுதிருக்கு..
மைய்யா மைய்யா…
மைய்யா மைய்யா…
மைய்யா மைய்யா…
மைய்யா மைய்யா…
மை..மை.. மைய்யா..
மை..மை.. மைய்யா..
……..
…ஆ..ஏலீ..லியே..லி..ஹபீபீ…


மை..மை.. மைய்யா.. ஹே..ஹே..ஹே…
மை..மை.. மைய்யா.. ஹே..ஹே..ஹே…

மைய்யா மைய்யா…
மைய்யா மைய்யா…
…ஆ..ஏலீ..லியே..லி..ஹபீபீ…
மைய்யா மைய்யா…
…ஆ..ஏலீ..லியே..லி..ஹபீபீ…
மைய்யா மைய்யா…
…ஆ..ஏலீ..லியே..லி..ஹபீபீ…
மைய்யா மைய்யா…
…ஆ..ஏலீ..லியே..லி..ஹபீபீ…
மைய்யா மைய்யா…

மை..மை.. மைய்யா.. ஹே..ஹே..ஹே…
மை..மை.. மைய்யா.. ஹே..ஹே..ஹே…

Thursday, April 9, 2009

மன வீட்டை பூட்டி வைத்தேனே நான் தான், விழி ஜன்னல் பார்த்து குதித்தாயே நீ தான்



ஏன்டா ராட்சசா நீ என்னை தொடர்கிறாய்
ஐயோ அந்த மாதிரி என் மேல் படர்கிறாய்
காதலில் வன்முறை காதலன் நீயே
கொண்டு போ என்னை நீயே கொண்டு போ


நீ கொஞ்சம் முரடன் தான்
திமிர் கொண்ட உருவம் தான்
ஆனாலும் உன்னை பிடிக்குமே
நீ நல்ல மனுஷன் தான்
ஸ்ரிங்கார புருஷன் தான்
அன்பே உன் கண்கள் பலிக்குமே

மன வீட்டை பூட்டி வைத்தேனே நான் தான்
விழி ஜன்னல் பார்த்து குதித்தாயே நீ தான்
உஷ்ணங்கள் ஏறி நிற்கிறேன்
நீ வா வா உன் கையில் என்னை சேர்கிறேன்

ஏன்டா ராட்சசா நீ என்னை தொடர்கிறாய்
ஐயோ அந்த மாதிரி என் மேல் படர்கிறாய்
காதலில் வன்முறை காதலன் நீயே
கொண்டு போ என்னை நீயே கொண்டு போ

எறும்பூற கல் தேயும்
நீ ஊற நான் தேய்ந்தேன்
பிடிவாத மன்னன் நீயாட
தொலை தூரம் சென்றாலும்
தொடும் தூரம் நின்றாலும்
பிரியாத நிழல் போல் நானாட

குளம் கொண்ட நீரில் கல் வீசினார் போல்
உள்ளம் கொஞ்சம் ஆட கண் வீசலாமா
நெஞ்சத்தை லேசாய் கிள்ளினாய்
நீ ஏன்டா நெருப்பாற்றில் என்னை தள்ளினாய்

ஏன்டா ராட்சசா நீ என்னை தொடர்கிறாய்
ஐயோ அந்த மாதிரி என் மேல் படர்கிறாய்
காதலில் வன்முறை காதலன் நீயே
கொண்டு போ என்னை நீயே கொண்டு போ

Wednesday, April 8, 2009

உனகிங்கே உன்னை தவிர யாரும் இல்லை


கண்ணீரை போலே
வேறு நண்பன் இல்லை
கற்றுக்கொள் துன்பம் போலே
பாடம் இல்லை

உன் நெஞ்சின் சோகம் எல்லாம்
கேட்டுக் கொள்ள
உனகிங்கே உன்னை தவிர
யாரும் இல்லை

பணம் ஒன்றே எப்போதும்
வாழ்க்கை இல்லை
புரிந்தாலே இதயத்தில்
துயரம் இல்லை

கண்ணீரை போலே
வேறு நண்பன் இல்லை
கற்றுக்கொள் துன்பம் போலே
பாடம் இல்லை



ஒரு அலை மீது போவோம்
இலை போல தானே
உலகில் மனிதன் வாழ்க்கை
போகும் வரை போவோம் நாமே

அதில் அகங்காரம் என்ன
அதிகாரம் என்ன
அன்பின் வழியில் சென்றால்
கரை சென்று சேர்வோம் நாமே

கவலை இன்றி உலகத்திலே
மனிதன் யாரும் கிடையாது
கவலை தாண்டி போவதானால்
தாமரை பூக்கள் உடையாது

வாழ்க்கை என்னும் கண்ணீரை
காயத்தோடு தொட்டு பார்
காலமோட காயம் எல்லாம்
மாயமாய் மறையும் பார்

கண்ணீரை போலே
வேறு நண்பன் இல்லை
கற்றுக்கொள் துன்பம் போலே
பாடம் இல்லை



தாய் கருவோடு வாழ்ந்த
அந்நாளில் தானே
கவலை ஏதுமின்றி
கடவுள் போல் வாழ்ந்தோம் நாமே

பின் காசோடு கொஞ்சம்
கனவோடு கொஞ்சம்
நம்மை நாமே இன்று
தேடி தான் தொலைகின்றோமே

வழியில் நீயும் வளையமால்
மலையில் ஏற முடியாதே
வலிகள் ஏதும் இல்லாமல்
வாழ்கை இங்கே கிடையாதே

வாசல் தாண்டி போகாமல்
வானம் கண்ணில் தெரியாதே
காசும் பணமும் எப்போதும்
கானல் நீரை மறைந்திடுமே


கண்ணீரை போலே
வேறு நண்பன் இல்லை
கற்றுக்கொள் துன்பம் போலே
பாடம் இல்லை

உன் நெஞ்சின் சோகம் எல்லாம்
கேட்டுக் கொள்ள
உனகிங்கே உன்னை தவிர
யாரும் இல்லை

பணம் ஒன்றே எப்போதும்
வாழ்க்கை இல்லை
புரிந்தாலே இதயத்தில்
துயரம் இல்லை ...ஏ

அஞ்சு நொடி நேரத்தில .. கோடி முறை பார்க்குறே


சக்க போடு போட்டனே சவுக்கு கண்ணால
சத்தியமா பாக்கல இதுக்கு முன்னால
தாங்கதான் முடியல ஐயோ என்னால
என் தாவணி நழுவுது கீழே தன்னால

சக்க போடு போட்டாளே சவுக்கு கண்ணால
சத்தியமா பாக்கல இதுக்கு முன்னால
தாங்கதான் முடியல ஐயோ என்னால
என் தாகம் தன் கூடுது இந்த பொண்ணால


கொண்டையிலே பூவடுக்கி
கும்முனுதான் பேசுற
கெண்ட காலை நீவுற
கிச்சு கிச்சு மூட்டிகிட்டே கிறுக்கு புடிக்க வெக்கிற
அஞ்சு நொடி நேரத்தில .. கோடி முறை பார்க்குறே
மீனுகுஞ்சு போல துள்ளி ஐய்சாலக்கடி காட்டுற

எச்சி தொட்டு கச்சிதமா உன்னை என்னை ஒட்டிக்கலாம்
முத்தம் வெச்சு முத்தம் வெச்சு மூச்சு முட்ட கட்டிக்கலாம்

கொழுத்து போன பொம்பளை இடுப்ப கொண்டாடீ
ஹே .. கொஞ்சம் நானும் ஓடினா தவிப்ப திண்டாடி

சக்க போடு போட்டாளே சவுக்கு கண்ணால
சத்தியமா பாக்கல இதுக்கு முன்னால
ஹே ..தாங்கதான் முடியல ஐயோ என்னால
என் தாகம் தன் கூடுது இந்த பொண்ணால


உள்ளங்களை சேர்த்து வெச்சு ஊருக்காக வாழுற ..
பம்பரமா ஓடுற ..
உன்னை எண்ணி ஏங்கிரேனே என்ன செய்ய போகுற
உள்ளங்கையில் தூக்கி வெச்சு உத்து உத்து பார்க்கவா
உருட்டி கீழ தள்ளி ஒண்டிக்கு ஒண்டி ஆடவா

ஒத்த சொல்லு சொன்னதில பத்திகிச்சு என் மனசு
மத்தபடி கன்னத்துல முத்த கதை நீ எழுது

வடிச்ச சோறு போலதான் ஆவி பரகுற ..
ஹே மடிச்ச சேலை கலைக்க தான் கூவி அழைக்கிறேன்
சக்க போடு போட்டனே சவுக்கு கண்ணால
சத்தியமா பாக்கல இதுக்கு முன்னால

தாங்கதான் முடியல ஐயோ என்னால
என் தாகம் தன் கூடுது இந்த பொண்ணால

Sunday, April 5, 2009

தொடர்வதற்கு நன்றி புகழ்வதற்கு நன்றி சீக்கிரம் பார்த்து சிரித்தாய் நன்றி


அசத்துறா அசத்துறா அசத்துறா
உலகத்த உதட்டுல உலுக்குறா
கசக்குரா கசக்குரா
கண்களில் சூரியனை கசக்குரா

சன்னனா சன்னனானே
இந்த வயசு போனதுனா திரும்பாதே
சன்னனா சன்னனானே
இந்த வயசு வேறெதையும் விரும்பாதே

மாணவரே மாணவரே எங்களை படிக்காதே
நீ நானும் திருக்குறளாய் வாழ்ந்திட மறுக்காதே

பதினாறோ பதினேழோ உன்னை
பார்த்ததிலே ரசித்ததிலே புதுசானோம்
ஒ ஒ ஒ

அசத்துறா அசத்துறா அசத்துறா
உலகத்த உதட்டுல உலுக்குறா
கசக்குரா கசக்குரா
கண்களில் சூரியனை கசக்குரா


இரண்டு வயசானால் அன்னை மடி வேண்டும்
இருபத்தைந்து ஆனால் அவளின் மடி வேண்டும்
பதினெட்டிலே தோன்றும் பருவம் மறைக்காதே
நூருவயசோடும் காதல் மறைக்காதே

பதினாறோ பதினேழோ உன்னை
பார்த்ததிலே ரசித்ததிலே புதுசானோம்
ஒ ஒ ஒ

அசத்துறா அசத்துறா அசத்துறா
உலகத்த உதட்டுல உலுக்குறா
கசக்குரா கசக்குரா
கண்களில் சூரியனை கசக்குரா

சன்னனா சன்னனானே
சன்னனா சன்னனானே

கடல் தாண்டி வந்தாய் மலை தாண்டி வந்தாய்
உன் அழகை தாண்ட முடியாமல் போனேன்
தொடர்வதற்கு நன்றி புகழ்வதற்கு நன்றி
சீக்கிரம் பார்த்து சிரித்தாய் நன்றி

பதினாறோ பதினேழோ உன்னை
பார்த்ததிலே ரசித்ததிலே புதுசானோம்
ஒ ஒ ஒ

அசத்துறா அசத்துறா அசத்துறா
உலகத்த உதட்டுல உலுக்குறா
கசக்குரா கசக்குரா
கண்களில் சூரியனை கசக்குரா

மாணவரே மாணவரே எங்களை படிக்காதே
நீ நானும் திருக்குறளாய் வாழ்ந்திட மறுக்காதே

பதினாறோ பதினேழோ உன்னை
பார்த்ததிலே ரசித்ததிலே புதுசானோம்
ஒ ஒ ஒ

என் மன வீட்டின் ஓரு சாவி நீதானே முத்தாரமே மணி முத்தாரமே


குமுதம் போல வந்த குமரியே
முகம் குங்குமமாய் சிவந்த என்னவோ
மனம் வண்ணத்திரை கனவு கண்டதோ

குமுதம் போல வந்த குமரியே
முகம் குங்குமமாய் சிவந்த என்னவோ
மனம் வண்ணத்திரை கனவு கண்டதோ

நீ பேசும் நேரத்தில் கல்கண்டு கசக்கும்
உன் நிழல் கண்ட போதும் அடி தினகரனும் குளிரும்
நீ பேசும் நேரத்தில் கல்கண்டு கசக்கும்
உன் நிழல் கண்ட போதும் அடி தினகரனும் குளிரும்

இதயத்தின் உயிரோட்டமே
இன்ப உதயத்தின் ஒலிக்கூட்டமே
இதயத்தின் உயிரோட்டமே
இன்ப உதயத்தின் ஒலிக்கூட்டமே

என் மன வீட்டின் ஓரு சாவி நீதானே
முத்தாரமே மணி முத்தாரமே

குமுதம் போல வந்த குமரியே
முகம் குங்குமமாய் சிவந்த என்னவோ
மனம் வண்ணத்திரை கனவு கண்டதோ


பண்பாடும் உன் கண்கள் பொன் மாலை முரசு
மின்னும் தினமலர் போல் நீ எனை மெல்ல உரசு
பண்பாடும் உன் கண்கள் பொன் மாலை முரசு
மின்னும் தினமலர் போல் நீ எனை மெல்ல உரசு

தின தந்தி அடிக்கின்றதே ...
தின தந்தி அடிக்கின்றதே ...
மூச்சு தீயாக கொதிக்கின்றதே
உள்ளம் தினம் தந்தி அடிக்கின்றதே
மூச்சு தீயாக கொதிக்கின்றதே
நெஞ்சில் மணமாலை மலரே
உன் நினைவென்னும் மணியோசையே
தினமணி ஓசையே

குமுதம் போல வந்த குமரியே
முகம் குங்குமமாய் சிவந்த என்னவோ
மனம் வண்ணத்திரை கனவு கண்டதோ


ரதி என்னும் அழகிக்கும் நீ தானே ராணி
கதி நீயே எனை கொஞ்சம் கண் பாரு தேவி
ரதி என்னும் அழகிக்கும் நீ தானே ராணி
கதி நீயே எனை கொஞ்சம் கண் பாரு தேவி

ஆனந்த விகடம் சொல்லு
என்னை பேரின்ப நதியில் தள்ளு
ஆனந்த விகடம் சொல்லு
என்னை பேரின்ப நதியில் தள்ளு

நான் பாக்யாதிபதி ஆனேன்
உன்னாலே கண்ணே உஷா
பசும்பொன்னே உஷா

குமுதம் போல வந்த குமரியே
முகம் குங்குமமாய் சிவந்த என்னவோ
மனம் வண்ணத்திரை கனவு கண்டதோ

குமுதம் போல வந்த குமரியே
முகம் குங்குமமாய் சிவந்த என்னவோ
மனம் வண்ணத்திரை கனவு கண்டதோ

Saturday, April 4, 2009

கண்ணன் முகம் கண்டகண்கள் மன்னன் முகம் காண்பதில்லை கண்ணனுக்குத் தந்த உள்ளம் இன்னொருவர் கொள்வதில்லை


கங்கைக் கரைத் தோட்டம்
கன்னிப் பெண்கள் கூட்டம்
கண்ணன் நடுவினிலே...ஓஓ...கண்ணன் நடுவினிலே

காலை இளம் காற்று
பாடி வரும் பாட்டு
எதிலும் அவன் குரலே...ஓஓ...எதிலும் அவன் குரலே

கண்ணன் முகத்தோற்றம் கண்டேன்
கண்டவுடன் மாற்றம் கொண்டேன்
கண்மயங்கி ஏங்கி நின்றேன்
கன்னி சிலையாகி நின்றேன்

என்ன நினைந்தேனோ...தன்னை மறந்தேனோ!
கண்ணீர் பெருகியதே...ஓ...கண்ணீர் பெருகியதே!!

கண்ணன் என்னைக் கண்டுகொண்டான்
கை இரண்டில் அள்ளிக் கொண்டான்
பொன்னழகு மேனி என்றான்
பூச்சரங்கள் சூடித் தந்தான்

கண் திறந்து பார்த்தேன் கண்ணன் அங்கு இல்லை!
கண்ணீர் பெருகியதே...ஓ...கண்ணீர் பெருகியதே!!

அன்று வந்த கண்ணன் அவன்
இன்று வர வில்லை அவன்!
என்றோ அவன் வருவான்...ஓ...என்றோ அவன் வருவான்!

கண்ணன் முகம் கண்டகண்கள்
மன்னன் முகம் காண்பதில்லை
கண்ணனுக்குத் தந்த உள்ளம்
இன்னொருவர் கொள்வதில்லை

கண்ணன் வரும் நாளில், கன்னி இருப்பேனோ...
காற்றில் மறைவேனோ!
நாடி வரும் கண்ணன், கோல மணி மார்பில்
நானே தவழ்ந்திருப்பேன்!!
கண்ணா...!!கண்ணா...!!கண்ணா...!!

காற்றெல்லாம் இனிக்கும்படி கண்ணாளா காதுக்குள் பாட்டுபடி என் காலம் நடக்கட்டுமே என் தேவா உன் மார்பில் சாய்ந்தபடி



ஒ நெஞ்சே நெஞ்சே ..ரா ரா ரா
ஒ நெஞ்சே நெஞ்சே


நீ வெள்ளை சந்திர வீதியில் உலாப் போகிறாய்
நீ நட்சத்திரங்களில் வாழவே கனாக் காண்கிறாய்
நெஞ்சே நீ விண்ணை சுற்றி பறந்தாலும்
உன் காலை மண்ணில் ஊன்றி நில் நில் நில் நில்

அன்பே அன்பே உன் துக்கத்தை விட்டு
விண்ணைத் தொட்டு உன் பேரை நிலவில் வெட்டு ...


காற்றெல்லாம் இனிக்கும்படி கண்ணாளா காதுக்குள் பாட்டுபடி
என் காலம் நடக்கட்டுமே என் தேவா உன் மார்பில் சாய்ந்தபடி
ஒரு பார்வை சிறு வார்த்தை எந்தன் உயிருக்கு கவசமடி
இறந்தாலும் உயிரூட்டும் உந்தன் விரல்களின் ச்பரிசமடி

நான் சொல்லும் சொல்லைக் கேளாய் நாளைக்கு நீயே வெல்வாய்
சங்கீத நாதங்களுக்கு வேதம் சொல்வாய் வேதம் சொல்வாய்
பெண்ணே பெண்ணே உன் ஒற்றை சொல்லுக்கு
பொன்னும் முத்தும் நான் கொட்டித் தரவேண்டும்
அன்பே அன்பே உன் அன்பு சொல்வேண்டும்
இன்னும் சொல்லு என் ரத்தம் ஊற வேண்டும்

காலேஜு காலேஜு ..
அக்கா எந்த காலேஜு
அக்காவுக்கு love affair
எந்த மாசம் மேரேஜு
காற்றெல்லாம் கேட்குமே
love love love love


சந்தர்பம் அமைந்து விட்டால் பெண்பூவே சங்கீதம் மாற்றி வைப்பேன்
காலங்கள் கனியும் வரை பேசாமல் காற்றுக்கு இசைஅமைப்பேன்
கலங்காதே மயங்காதே உன் கனவுக்கு துணையிருப்பேன்
இந்த பூமி உடைந்தாலும் உன்னை உள்ளங்கையில் ஏந்தி பறப்பேன்

என் நெஞ்சில் சாய்த்து கொள்வேன் இதயத்தின் ஓசை கேளு
என் நெஞ்சில் ஓட்டிச்செல்லும் சத்தம் கேத்த மெட்டுப் போடு
பூவே பூவே உன் மூச்சே சங்கீதம்
சத்தம் சிந்தும் உன் முத்தம்கூட நாதம்
வாழ்வின் தீபம் அடி நீதான் எப்போதும்
வெல்லும் போதும் நீ சொல்லும் சொல்லே வேதம்

Friday, April 3, 2009

புன்னகை செய்தால் உயிர் வாழ்வேன் புறக்கணித்தால் நான் என்னாவேன்


ஓரு கல் ஓரு கண்ணாடி
புரியாமல் மோதிக்கொண்டால் காதல்
ஓரு சொல் சில மௌனங்கள்
பேசாமல் பேசிக்கொண்டால் காதல்
கண்கள் ரெண்டில் காதல் வந்தால்
அஹா
கண்ணீர் மட்டும் துணையாகுமே
ஓஹோ ஹோ ஹோ


திமிருக்கு மறு பெயர் நீதானே
தினம் தினம் உன்னால் இறந்தேனே
மறந்திட மட்டும் மறந்தேனே
தீ என புரிந்தும் அடி நானே
திரும்பவும் உனை தொட வந்தேனே
தெரிந்தே சுகமாய் எரிந்தேனே
கடும் விஷத்தினை எடுத்து குடித்தாலும்
அடி கொஞ்சம் நேரம் கழித்தே உயிர் போகும்
இந்த காதலிலே உடனே உயிர் போகும்
காதல் என்றால் பெண்ணே சித்ரவதை தானே

ஓரு கல் ஓரு கண்ணாடி
புரியாமல் மோதிக்கொண்டால் காதல்
ஓரு சொல் சில மௌனங்கள்
பேசாமல் பேசிக்கொண்டால் காதல்


உன் முகம் பார்த்தே நான் எழுவேன்
உன் குரல் கேட்டால் நான் அறிவேன்
உன் நிழல் உடனே நான் வருவேன்
புன்னகை செய்தால் உயிர் வாழ்வேன்
புறக்கணித்தால் நான் என்னாவேன்
பெண்ணே எங்கே நான் போவேன்
உன் உதட்டுக்குள் இருக்கும் ஒரு வார்த்தை
அதை சொல்லி விட்டால் தொடங்கும் என் வாழ்க்கை
உன் மௌனத்தில் இருக்கும் என்ன வரிகள்
காதல் என்றால் மெல்ல சாதல் என்றா சொல்ல

ஓரு கல் ஓரு கண்ணாடி
புரியாமல் மோதிக்கொண்டால் காதல்
ஓரு சொல் சில மௌனங்கள்
பேசாமல் பேசிக்கொண்டால் காதல்
கண்கள் ரெண்டில் காதல் வந்தால்
அஹா
கண்ணீர் மட்டும் துணையாகுமே
ஓஹோ ஹோ ஹோ

ஓரு கல் ஓரு கண்ணாடி
புரியாமல் மோதிக்கொண்டால் காதல்
ஓரு சொல் சில மௌனங்கள்
பேசாமல் பேசிக்கொண்டால் காதல்

Wednesday, April 1, 2009

ஜாதகம் சுப யோகங்கள் கண்டு காதல் கூடுவது உண்டோ



வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே
மண்ணில் நீலம் ஒட்டிக் கொண்டதே

ஒரு மூங்கில் காடெரிய சிறு பொறி ஒன்று போதும்
அந்த பொறி இன்று தோன்றியதே

காதல் இடம் பார்ப்பதில்லை
அது இனம் பார்ப்பதில்லை
அது பொசுக்கென்று பூத்திடுதே

ஒரு நீரோடை மீனுக்கு கரை மேலாசை வந்தது
இனி என்னென்ன நேர்ந்திடுமோ


வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே
மண்ணில் நீலம் ஒட்டிக் கொண்டதே

ஒரு மூங்கில் காடெரிய சிறு பொறி ஒன்று போதும்
அந்த பொறி இன்று தோன்றியதே

காதல் இடம் பார்ப்பதில்லை
அது இனம் பார்ப்பதில்லை
அது பொசுக்கென்று பூத்திடுதே

ஒரு நீரோடை மீனுக்கு கரை மேலாசை வந்தது
இனி என்னென்ன நேர்ந்திடுமோ


நியாயமா இது பாவமா என்று சொல்ல யாரும் இங்கு இல்லை

மௌனமே மொழியானதால் அட பாஷை என்பதொரு தொல்லை
அடுத்தொன்றும் தோன்றவில்லை

வெண்ணிலா நீராற்றிலே என்றும் வீழ்ந்து பார்த்தவர்கள் இல்லை

பெண்ணிலா தங்க சேற்றிலே இன்று வீழ்ந்து போனதொரு தொல்லை
இலக்கணம் பார்க்கவில்லை

பிறக்கும் மொட்டுகள் தேதி பார்ப்பதுவும் இல்லை

உறவு மாறலாம் உந்தன் கையில் அது இல்லை

ஒரு நீரோடை மீனுக்கு கரை மேலாசை வந்தது
இனி என்னென்ன நேர்ந்திடுமோ


எவ்விடம் மழை தூவலாம் என்று மேகம் யோசிப்பது உண்டோ
ஜாதகம் சுப யோகங்கள் கண்டு காதல் கூடுவது உண்டோ
உணர்ச்சிக்கு பாதை உண்டோ

விதியினும் காதல் வலியது இதில் வேறு வாதம் ஒன்று உண்டோ
காதலின் திசை ஆயிரம் அது கண்டு சொன்னவர்கள் உண்டோ
கனவுக்கு வேலியுண்டோ

காலம் சொல்லுவதை காதல் கேட்பதுவும் இல்லை

ஆசையென்ற நதி அணையில் நிற்பதுவும் இல்லை

ஒரு நீரோடை மீனுக்கு கரை மேலாசை வந்தது
இனி என்னென்ன நேர்ந்திடுமோ