Sunday, December 19, 2010

நிறையை மட்டுமே காதல் பார்க்கும் குறையை மட்டுமே கல்யாணம் பார்க்கும் ஏன் கண்ணா?



செப்டம்பர் மாதம் செப்டம்பர் மாதம்
வாழ்வின் துன்பத்தைத் தொலைத்து விட்டோம்
செப்டம்பர் மாதம் செப்டம்பர் மாதம்
வாழ்வின் துன்பத்தைத் தொலைத்து விட்டோம்;
அக்டோபர் மாதம் அக்டோபர் மாதம்
வாழ்வின் இன்பத்தைத் தொலைத்து விட்டோம்

துன்பம் தொலைந்தது எப்போ? காதல் பிறந்ததே அப்போ!
இன்பம் தொலைந்தது எப்போ? கல்யாணம் முடிந்ததே அப்போ!

செப்டம்பர் மாதம் செப்டம்பர்; மாதம்
வாழ்வின் துன்பத்தைத் தொலைத்து விட்டோம்;
அக்டோபர் மாதம் அக்டோபர் மாதம்
வாழ்வின் இன்பத்தைத் தொலைத்து விட்டோம்
துன்பம் தொலைந்தது எப்போ? காதல் பிறந்ததே அப்போ!
இன்பம் தொலைந்தது எப்போ? கல்யாணம் முடிந்ததே அப்போ!


ஏ பெண்ணே! காதல் என்பது இனிக்கும் விருந்து
கல்யாணம் என்பது வேப்பங் கொழுந்து ஏன் கண்ணே?
நிறையை மட்டுமே காதல் பார்க்கும்
குறையை மட்டுமே கல்யாணம் பார்க்கும் ஏன் கண்ணா?
காதல் பார்ப்பது இருண்டு கண்ணில்
கல்யாணம் பார்ப்பது நாலு கண்ணிலடி பெண்ணே
கிளிமூக்கின் நுனிமூக்கில் கோபங்கள் அழகென்று
ரசிக்கும் ரசிக்கும் காதல்
கல்யாணம் ஆனாலே துரும்பெல்லாம் தூணாக
ஏன் ஏன் ஏன் மோதல்?

பெண்கள் இல்லாமல் ஆண்களுக் காறுதல் கிடைக்காது
பெண்களே உலகில் இல்லையென்றால்
ஆறுதலே தேவை இருக்காது

செப்டம்பர் மாதம் செப்டம்பர்; மாதம்;
அக்டோபர் மாதம் அக்டோபர் மாதம்


நான் கண்டேன் காதல் என்பது கழுத்துச் சங்கிலி
கல்யாணம் என்பது காலில் சங்கிலி என் செய்வேன்;?
கல்யாணம் என்பதைத் தள்ளிப் போடு
தொண்ணூறு வரைக்கும் டூயட் பாடு வா அன்பே!
காதல் பொழுதில் விரும்பும் குறும்பு
கல்யாணக் கட்டிலில் கிடைப்பதில்லையே நண்பா!
பிரிவொன்று நேராத உறவொன்றில் சுகமில்லை
காதல் காதல் அதுதான்
உறவோடு சிலகாலம் பரிவோடு சிலகாலம்
நாம் வாழ்வோம் வா! வா!
ஆண்கள் இல்லாமல் பெண்களுக்காறுதல் கிடைக்காது
ஆண்களே உலகில் இல்லையென்றால்
ஆறுதலே தேவை இருக்காது

செப்டம்பர் மாதம் செப்டம்பர்; மாதம்
வாழ்வின் துன்பத்தைத் தொலைத்து விட்டோம்;
அக்டோபர் மாதம் அக்டோபர் மாதம்
வாழ்வின் இன்பத்தைத் தொலைத்து விட்டோம்

துன்பம் தொலைந்தது எப்போ?
காதல் பிறந்ததே அப்போ!
இன்பம் தொலைந்தது எப்போ?
கல்யாணம் முடிந்ததே அப்போ!

Wednesday, December 15, 2010

கண்ணோடு மணியானாய் அதனால் கண்ணைவிட்டுப் பிரிவதில்லை நீ என்னைவிட்டு பிரிவதில்லை


ப பனி பனிபம பனிபம கமப
சகசனி பனிபம கமகச கமப
தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதகஜம்
தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதகஜம்

கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா கண்களுக்குச் சொந்தமில்லை
கண்களுக்குச் சொந்தமில்லை
கண்ணோடு மணியானாய் அதனால் கண்ணைவிட்டுப் பிரிவதில்லை நீ
என்னைவிட்டு பிரிவதில்லை

தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதகஜம்
தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதகஜம்

சலசல சலசல இரட்டைக் கிளவி தகதக தகதக இரட்டைக் கிளவி
உண்டல்லோ தமிழில் உண்டல்லோ
பிரித்து வைத்தல் நியாயம் இல்லை பிரித்துப் பார்த்தால் பொருளும் இல்லை
இரண்டல்லோ இரண்டும் ஒன்றல்லோ
தினக்கு தினக்கு தின திந்தின்னானா நாகிருதானி தோங்கிருதானி தினதோம்
இரவும் பகலும் வந்தாலும் நாள் என்பது ஒன்றல்லோ
கால்கள் இரண்டு கொண்டாலும் பயணம் என்பது ஒன்றல்லோ
இதயம் இரண்டு என்றாலும் காதல் என்பது ஒன்றல்லோ

கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா கண்களுக்குச் சொந்தமில்லை
கண்களுக்குச் சொந்தமில்லை
கண்ணோடு மணியானாய் அதனால் கண்ணைவிட்டுப் பிரிவதில்லை நீ
என்னைவிட்டு பிரிவதில்லை

தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதகஜம்
தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதகஜம்

அன்றில் பறவை இரட்டைப் பிறவி
ஒன்றில் ஒன்றாய் வாழும் பிறவி
பிரியாதே விட்டுப் பிரியாதே
கண்ணும் கண்ணும் இரட்டைப் பிறவி
ஒரு விழி அழுதால் மறுவிழி அருவி
பொழியாதோ அன்பே வழியாதோ
தினக்கு தினக்கு தின திந்தின்னானா நாகிருதானி தோங்கிருதானி தினதோம்
ஒருவர் தூங்கும் தூக்கத்தில் இருவர் கனவுகள் காணுகிறோம்
ஒருவர் வாங்கும் சுவாசத்தில் இருவர் இருதயம் வாழுகிறோம்
தாங்கி கொள்ள மட்டும்தான் தனித் தனியே தேடுகின்றோம்

Tuesday, December 14, 2010

மரபு வேலிக்குள் நீ இருக்க மறக்க நினைக்கிறேன் முடியவில்லை


உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
என் நினைவு தெரிந்து நான் இதுபோல இல்லையே
எவளோ எவளோ என்று நெடுநாள் இருந்தேன்
இரவும் பகலும் சிந்தித்தேன்....
இவளே, இவளே, என்று இதயம் தெளிந்தேன்
இளமை இளமை பாதித்தேன்....
கொள்ளை கொண்ட அந்த நிலா
என்னைக் கொன்று கொன்று தின்றதே
இன்பமான அந்த வலி
இன்னும் வேண்டும் வேண்டும் என்றதே....

உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
என் நினைவு தெரிந்து நான் இதுபோல இல்லையே

ஏன் பிறந்தேன் என்று நான் இருந்தேன்
உன்னைப் பார்த்தவுடன் உண்மை நான் அறிந்தேன்
என் உயிரில் நீ பாதி என்று
உன் கண்மணியில் நான் கண்டு கொண்டேன்
எத்தனை பெண்களைக் கடந்திருப்பேன்
இப்படி என் மனம் துடித்ததில்லை
இமைகள் இரண்டையும் திருடிக் கொண்டு
உறங்கச் சொல்வதில் நியாயமில்லை
நீ வருவாய இல்லை மறைவாயோ? ஏ ஏ ஏ ஏ ஏ!
தன்னைத் தருவாயோ? இல்லை கரைவாயோ

உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
என் நினைவு தெரிந்து நான் இதுபோல இல்லையே

நீ நெருப்பு என்று தெரிந்த பின்னும்
உன்னைத் தொடத் துணிந்தேன் என்ன துணிச்சலடி
மணமகளாய் உன்னைப் பார்த்த பின்னும்
உன்னைச் சிறையெடுக்க மனம் துடிக்குதடி
மரபு வேலிக்குள் நீ இருக்க
மறக்க நினைக்கிறேன் முடியவில்லை
இமயமலை என்று தெரிந்த பின்னும்
எறும்பின் ஆசையோ அடங்கவில்லை
நீ வருவயோ? இல்லை மறைவாயோ? ஏ ஏ ஏ ஏ ஏ!
தன்னைத் தருவாயோ இல்லை கரைவாயோ


உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
என் நினைவு தெரிந்து நான் இதுபோல இல்லையே
எவளோ எவளோ என்று நெடுநாள் இருந்தேன்
இரவும் பகலும் சிந்தித்தேன்....
இவளே, இவளே, என்று இதயம் தெளிந்தேன்
இளமை இளமை பாதித்தேன்....
கொள்ளை கொண்ட அந்த நிலா
என்னைக் கொன்று கொன்று தின்றதே
இன்பமான அந்த வலி
இன்னும் வேண்டும் வேண்டும் என்றதே....

Monday, December 13, 2010

கண்ணால் கண்ணில் கற்பித்தோம் காதல் பாடம் ஒப்பித்தோம்


தோம் தோம் தித்தித்தோம்
தொலைவில் இருந்தும் சந்தித்தோம்
தோம் தோம் தித்தித்தோம்
தொலைவில் இருந்தும் சந்தித்தோம்

கண்ணால் கண்ணில் கற்பித்தோம்
காதல் பாடம் ஒப்பித்தோம்
கண்ணால் கண்ணில் கற்பித்தோம்
காதல் பாடம் ஒப்பித்தோம்
தீண்டித் தீண்டித் தூண்டும் விரலை
திட்டிக்கொண்டே தித்தித்தோம்

தோம் தோம் தித்தித்தோம்
தொலைவில் இருந்தும் சந்தித்தோம்
தோம் தோம் தித்தித்தோம்
தொலைவில் இருந்தும் சந்தித்தோம்

ஆணில் உள்ள பெண்ணைக் கொஞ்சம்
பெண்ணில் உள்ள ஆணைக் கொஞ்சம்
கொஞ்சச் சொல்லி கொஞ்சச் சொல்லி
கொஞ்சச் சொல்லி யாசித்தோம்
ஆணில் உள்ள பெண்ணைக் கொஞ்சம்
பெண்ணில் உள்ள ஆணைக் கொஞ்சம்
கொஞ்சச் சொல்லி கொஞ்சச் சொல்லி
கொஞ்சச் சொல்லி யாசித்தோம்
கொத்திக் கொத்தி பேசும் கண்ணை
திக்கி திக்கி வாசித்தோம்
சுற்றிச் சுற்றி வீசும் காற்றை
நிற்கச் சொல்லி ஸ்வாசித்தோம்
உன்னை என்னை துண்டித்தோம்
உயிரினில் ஒன்றாய் சந்தித்தோம்
மீண்டும் மீண்டும் சீண்டும் இதழை
முத்தம் செய்து தித்தித்தோம்

தோம் தோம் தித்தித்தோம்
தொலைவில் இருந்தும் சந்தித்தோம்
தோம் தோம் தித்தித்தோம்
தொலைவில் இருந்தும் சந்தித்தோம்


தீயில் உள்ள நீரைக் கொஞ்சம்
நீரிலுள்ள தீயைக் கொஞ்சம்
சேரச் சொல்லி சேரச் சொல்லி
சேரச் சொல்லி யாசித்தோம்
தீயில் உள்ள நீரைக் கொஞ்சம்
நீரிலுள்ள தீயைக் கொஞ்சம்
சேரச் சொல்லி சேரச் சொல்லி
சேரச் சொல்லி யாசித்தோம்

ஒற்றைச் சொல்லை சொல்லத்தானே
கோடி சொல்லை வாதித்தோம்
மெல்லப் பேசி மெல்ல தொட்டு
மெதுவாய் வயதை சோதித்தோம்
நிழலையும் தேடி நேசித்தோம்
கனவிலும் ஒன்றாய் யோசித்தோம்
இன்னும் இன்னும் என்றே நம்மை
தின்னச்சொல்லி தித்தித்தோம்

தோம் தோம் தித்தித்தோம்
தொலைவில் இருந்தும் சந்தித்தோம்
தோம் தோம் தித்தித்தோம்
தொலைவில் இருந்தும் சந்தித்தோம்

கண்ணால் கண்ணில் கற்பித்தோம்
காதல் பாடம் ஒப்பித்தோம்
கண்ணால் கண்ணில் கற்பித்தோம்
காதல் பாடம் ஒப்பித்தோம்
தீண்டித் தீண்டித் தூண்டும் விரலை
திட்டிக்கொண்டே தித்தித்தோம்

தோம் தோம் தித்தித்தோம்
தொலைவில் இருந்தும் சந்தித்தோம்
தோம் தோம் தித்தித்தோம்
தொலைவில் இருந்தும் சந்தித்தோம்

Sunday, December 12, 2010

பொறுத்தம் உடலிலும் வேண்டும் புரிந்தவன் துணையாக வேண்டும்


மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்
மனது மயங்கியென்ன உனக்கும் வாழ்வு வரும்
மனது மயங்கியென்ன உனக்கும் வாழ்வு வரும்
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்

இரவில் நிலவொன்று உண்டு உறவினில் சுகமொன்று உண்டு
இரவில் நிலவொன்று உண்டு உறவினில் சுகமொன்று உண்டு
மனைவியின் கனவொன்று உண்டு எனக்கது புரிந்தது இன்று
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்
மனது மயங்கியென்ன உனக்கும் வாழ்வு வரும்

பொறுத்தம் உடலிலும் வேண்டும் புரிந்தவன் துணையாக வேண்டும்
பொறுத்தம் உடலிலும் வேண்டும் புரிந்தவன் துணையாக வேண்டும்
கணவனின் துணையோடு தானே காமனை வென்றாக வேண்டும்
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்

கவிஞன் கண்டாலே கவிதை காண்பவன் கண்டாலே காதல்
கவிஞன் கண்டாலே கவிதை காண்பவன் கண்டாலே காதல்
அழகினை புரியாத பாவம் அருகினில் இருந்தென்ன லாபம்
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்
மனது மயங்கியென்ன உனக்கும் வாழ்வு வரும்
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்

என் காதல் என்னாகுமோ சொல்லாமலே நாள் போகுமோ ?


யாரோ இவள் இவள் யாரோ
எனக்கென மண்ணில் பிறந்தவள் தானோ
யாரோ இவன் இவன் யாரோ
எனக்கென மண்ணில் பிறந்தவன் தானோ
ஊரோ பேரோ சொல்வாளோ
கண்ணால் தினம் என்னை இனி கொல்வானோ

யாரோ இவள் இவள் யாரோ
எனக்கென மண்ணில் பிறந்தவள் தானோ


என் காதல் என்னாகுமோ சொல்லாமலே நாள் போகுமோ
உன் காதல் நீ சொல்லடா ஏன் இந்தக் கூச்சம்
தன் காதில் நான் சொன்னதை பூங்காற்றுமே போய் சொல்லுமோ
வேண்டாம் உன் தூண்டாடுதே ஓர்ப்பார்வை போதும்
உன் பார்வை கல்லாகுதே என் கால்கள் தள்ளாடுதே
கொண்டாடு கொண்டாடு அன்பே
தேணுண்ட வண்டாகிறேன்
நீ தூண்ட தேன் ஆகிறேன்
கொண்டாடு திண்டாடு அன்பே ஹே ஹே ஹே

யாரோ இவள் இவள் யாரோ
எனக்கென மண்ணில் பிறந்தவள் தானோ
யாரோ இவன் இவன் யாரோ
எனக்கென மண்ணில் பிறந்தவன் தானோ
ஊரோ பேரோ சொல்வாளோ
கண்ணால் தினம் என்னை இனி கொல்வானோ

காற்றோடு நான் கேட்கிறேன் உன் வாசனை மூச்சாகுமோ
உன் சுவாசக்காற்றோடுதான் என் வாசம் விடும்
கனவோடு நான் கேட்கிறேன் உன் காலடி தினம் கேட்குமோ
கனவென்னை நிஜமாகவே என் கைகள் தீண்டும்
ஹே ஹே உன் பாதி நானாகவே என் பாதி நீயாகவே
கொண்டாடு கொண்டாடு அன்பே
ஒருப்பிள்ளை அணைப்போடுதே மறுப்பிள்ளை எனைக்கூறுதே
கொண்டாடி திண்டாடு அன்பே ஹே ஹே ஹே


யாரோ இவள் இவள் யாரோ
எனக்கென மண்ணில் பிறந்தவள் தானோ
யாரோ இவன் இவன் யாரோ
எனக்கென மண்ணில் பிறந்தவன் தானோ
ஊரோ பேரோ சொல்வாளோ
கண்ணால் தினம் என்னை இனி கொல்வானோ

நீ தந்த ஒற்றை கடிதம் ஆயிரம் முறை நான் படிப்பேனே , உனக்காக ஆயிரம் கடிதம் ஒற்றை நொடியில் எழுதிடுவேனே


சாணக்யா சாணக்யா ஏதோ தந்திரம் செய்தாய்
உன் மதியால் என் மனதை நீதான் வசியம் செய்தாய்
அடம் பிடித்தேன் நீ எந்தன் நெஞ்சில் இடம் பிடித்தாய் ஐ லவ் யூ டா
காதலுக்காக உந்தன் நெஞ்சை கடன் கொடுத்தாய் ஐ லவ் யூ டா
தீராத உன் அன்பினால் போராடி எனை வென்றதால்
என் அழகெல்லாம் உனக்காக சமர்ப்பிக்கிறேன்
சாணக்யா சாணக்யா ஏதோ தந்திரம் செய்தாய்
உன் மதியால் என் மனதை நீதான் வசியம் செய்தாய்

உன்னை நானும் நினைப்பதை யாரும் தடுக்கின்ற வேளை
துடிக்கும் இதயம் வேலை நிறுத்தம் செய்கின்றதே உயிர் வலிக்கின்றதே
நீ தந்த ஒற்றை கடிதம் ஆயிரம் முறை நான் படிப்பேனே
உனக்காக ஆயிரம் கடிதம் ஒற்றை நொடியில் எழுதிடுவேனே
தினம் காலையில் எந்தன் நாள் காட்டியில்
உன் பிம்பம் நான் கண்டு கண் விழிக்கின்றேன்

சாணக்யா சாணக்யா ஏதோ தந்திரம் செய்தாய்
உன் மதியால் என் மனதை நீதான் வசியம் செய்தாய்

ஜன்னலின் வழியே வெண்ணிலவொளியே கசிகின்ற நேரம்
கட்டிலின் மேலே கவிதைகள் போலே நாம் வாழலாம் இனி நாம் வாழலாம்
என் மீது காலை போட்டு தூங்கும் உன்னை ரசிப்பேனே
நான் உந்தன் காதை கடித்து தூக்கம் கலைத்து சிரித்திடுவேனே
இது போலவே பல ஆசைகளே
உள் நெஞ்சில் ஓயாமல் உருண்டோடுதே

சாணக்யா சாணக்யா ஏதோ தந்திரம் செய்தாய்
உன் மதியால் என் மனதை நீதான் வசியம் செய்தாய்
அடம் பிடித்தேன் நீ எந்தன் நெஞ்சில் இடம் பிடித்தாய் ஐ லவ் யூ டா
காதலுக்காக உந்தன் நெஞ்சை கடன் கொடுத்தாய் ஐ லவ் யூ டா
தீராத உன் அன்பினால் போராடி எனை வென்றதால்
என் அழகெல்லாம் உனக்காக சமர்ப்பிக்கிறேன்

சாணக்யா சாணக்யா ஏதோ தந்திரம் செய்தாய்
உன் மதியால் என் மனதை நீதான் வசியம் செய்தாய்

Wednesday, December 1, 2010

நினைவுகளோடு வாழ்வது எந்தன் காதல் சொல்லுமடி


முழுமதி முழுமதி நிலவை கேளடி
முழுவதும் முழுவதும் உண்மை தானடி
காதலில் கரைந்தவன் என் போல் யாரடியோ ....

எத்தனை எத்தனை காதல் பார்த்தது
எத்தனை எத்தனை கனவை கேட்டது
என் போல் யாருமே இல்லை என்றது இங்கே

நிலவுக்கு நிலவுக்கு நன்றே தெரிந்தது
உயிருக்கு உயிருக்கு இன்றே புரிந்தது
கனவுக்கு கனவுக்கு சிறகுகள் முளைத்தது
நிலவினை உரசிட நினைவுகள் பறக்குது

முழுமதி முழுமதி நிலவை கேளடி
முழுவதும் முழுவதும் உண்மை தானடி
காதலில் கரைந்தவன் என் போல் யாரடியோ ....


காவிய காதல் ஆயிரம் கதைகள் பூமிக்கு சொன்னதடி
நினைவுகளோடு வாழ்வது எந்தன் காதல் சொல்லுமடி
உலகத்தில் சிறந்த இடம் அதை தேடி
உந்தன் இதயம் வந்தேனே வந்தேனே
உன் விரல் கோர்க்கும் நிமிடத்தில்
எந்தன் தனிமைக்கு தனிமை தந்தேனே தந்தேனே

முழுமதி முழுமதி நிலவை கேளடி
முழுவதும் முழுவதும் உண்மை தானடி
காதலில் கரைந்தவன் என் போல் யாரடியோ ....


நதியின் காதலை கரையிடம் வந்து அலைகள் சொன்னதடி
மறுபடி மறுபடி அதனை கரைகள் கேட்குதடி
நதியினில் நீந்தும் நிலவிதை பார்த்து
வெளிச்சத்தை அள்ளி சிந்தாதோ சிந்தாதோ
காலையில் நமது காதலை ஏந்தி
வானத்தை பிரிந்து செல்லாதோ செல்லாதோ

முழுமதி முழுமதி நிலவை கேளடி
முழுவதும் முழுவதும் உண்மை தானடி
காதலில் கரைந்தவன் என் போல் யாரடியோ ....

நிலவுக்கு நிலவுக்கு நன்றே தெரிந்தது
உயிருக்கு உயிருக்கு இன்றே புரிந்தது
கனவுக்கு கனவுக்கு சிறகுகள் முளைத்தது
நிலவினை உரசிட நினைவுகள் பறக்குது

முழுமதி முழுமதி நிலவும் சொன்னது
முழுவதும் முழுவதும் உண்மை தானது
உன் போல் யாரும் இல்லை என்றது