Tuesday, April 26, 2011

எதிரே நீ வந்தால் வானவில் தோன்றிடும்.. காதல் அதுவோ


அடடா என் மீது தேவதை வாசனை... காதல் இதுவோ
உன்னையே எங்கெங்கும் காட்சிகள் காட்டிடும்.. காதல் இதுவோ
உன்னை காணும், வரம் போதும், எதிர்காலம் வசம் வசம் வரும்
வழி பாதை மரம் யாவும், எனக்காக மழை மழை தரும்
யாரோ உன்னை என்னை யார் சேர்த்ததோ
யாரோ வாசம் தன்னை யார் பார்த்ததோ

உயிரில் ஒரு கோடி வானவில் பூத்திடும்.. காதல் இதுவோ
எதிரே நீ வந்தால் வானவில் தோன்றிடும்.. காதல் அதுவோ

ரம்மியம் ததும்பும் கனவு, உன்னை கண்டதும் பிறந்ததே
கண்களில் வழியும் நீரில், இன்று சக்கரை திறலுதே
போய் வரும் வீதியில் ஏனோ, புது வாசனை கமழுதே
காதலின் படலை இங்கே, இரு ஜீவன் பாடிடுதே

ல ல ல ல லால..
மௌனம் வந்து இடியை போல, மனதில் மீது விழுந்ததோ
காதலிலே நம்மை நாம் இழந்தோம், உண்மை நாம் உணர்ந்தோம்
என் கலந்தோம் நம் கனவில், நாம் அலைந்தோம்

காற்றினில் அலையும் இறகு, எந்த பறவை உதிர்த்ததோ
காதலில் மயங்கும் மனது, அந்த கடவுளும் கொடுத்ததோ
பூட்டிய கதவின் இடுக்கில், புது வெளிச்சம் நுழைந்ததோ
தாய்மையின் விரலை கொண்டு, நம்மை காதலும் வருடுதோ
உன்னை கண்ட நாளில் இருந்து, எனது வாழ்கை கிடைத்ததே
என்னுயிரை திறக்கும் சாவி, உனது உயிரில் இருக்குதே
காதலியே இது வேஷம் இல்லை, இங்கு பேதம் இல்லை
ஏதும் இல்லை, பனி துளியில் சாயம் இல்லை

அடடா என் மீது தேவதை வாசனை... காதல் இதுவோ
உன்னையே எங்கெங்கும் காட்சிகள் காட்டிடும்.. காதல் இதுவோ
உன்னை காணும், வரம் போதும், எதிர்காலம் வசம் வசம் வரும்
வழி பாதை மரம் யாவும், எனக்காக மழை மழை தரும்
யாரோ உன்னை என்னை யார் சேர்த்ததோ
யாரோ வாசம் தன்னை யார் பார்த்ததோ

உயிரில் ஒரு கோடி வானவில் பூத்திடும்.. காதல் இதுவோ
எதிரே நீ வந்தால் வானவில் தோன்றிடும்.. காதல் அதுவோ

இதயத்தில் நீ காதலை பூட்டி வைக்க முடியாதே சாவி எனது கரத்தில் இருக்கு புரிந்து கொள்வாய்


யார் சொல்லி காதல் வருவது
யார் சொல்லி காதல் போவது
யாருக்கு அடிமை இந்த காதல்

ஏன் இந்த காலம் நகருது
ஏன் இந்த காதல் தகருது
ஏன் இந்த மாறுபட்ட தேடல்

இதயங்கள்.. இணையும்.. தருணம் தெரிந்தால் சொல்வாய்
இமை மூடி.. இருந்தாலே.. வெளிச்சம் வருமா சொல்வாய்

பூமி முழுக்க காதல் இருக்க எங்கு ஓடி ஒளிகிறாய்
பூமி தாண்ட வழியே இல்லை வா

காதல் இங்கே தவறு என்றால் கடவுள் கூட தவறு தான்
காதலின்றி கடவுள் இல்லை வா

உன்னை நீ ஏன் மறைக்கிறாய் காரணங்கள் தெரியாமல்
காதல் தானே உன்னை மீண்டும் மீட்டு எடுக்கும்

என்னை நீ ஏன் வெறுக்கிறாய் என் நிலை புரியாமல்
காதல் உன்னை மெளனமாக அழுக வைக்கும்

தேதி போல் காதலை நீயும் கிழித்து விட முடியாதே
ஆகாயத்தை உள்ளங்கையில் மறைத்து வைக்க முடியாதே
காதலுக்கு மாற்று எதுவும் இல்லையே

ஆடை போல கழற்றிப் போட முடியவில்லையே உன்னை நான்
உயிரை போல எனக்குள் உள்ளாய் வா
என்னை மீறி உன்னை எதுவும் செய்திடாது காதல் தான்
காதலை தான் நம்புகின்றேன் நான்


இதயத்தில் நீ காதலை பூட்டி வைக்க முடியாதே
சாவி எனது கரத்தில் இருக்கு புரிந்து கொள்வாய்

வாய்வழி நீதான் என்னை வேண்டாம் என்று சொன்னாலும்
உன்னை ஒரு நாள் உந்தன் மனமே கொன்றுவிடுமே

நீயும் நானும் சேர்ந்தே செய்தோம் காதலெனும் சிற்பத்தை
சிற்பம் வேண்டாம் என்றே நீயும் தொடங்கினாய் யுத்தத்தை

இது என்ன நியாயம் நீ சொல்லடி

இன்னும் நூறு தலை முறைகள் இந்த மண்ணில் வாழுமே
அன்றும் இந்த காதல் இருக்கும் வா

உயிர்கள் ஜனித்த நொடியில் காதல் இனிதே வாழுதே
காதல் இன்றி உயிர்கள் ஏது வா

யார் சொல்லி காதல் வருவது
யார் சொல்லி காதல் போவது
யாருக்கு அடிமை இந்த காதல்

ஏன் இந்த காலம் நகருது
ஏன் இந்த காதல் தகருது
ஏன் இந்த மாறுபட்ட தேடல்

இதயங்கள்... இணையும்... தருணம் தெரிந்தால் சொல்வாய்
இமை மூடி இருந்தாலே வெளிச்சம் வருமா சொல்வாய்

பூமி முழுக்க காதல் இருக்க எங்கு ஓடி ஒளிகிறாய்
பூமி தாண்ட வழியே இல்லை வா

காதல் இங்கே தவறு என்றால் கடவுள் கூட தவறு தான்
காதல் இன்றி கடவுள் இல்லை வா

எந்தன் இதய கதவை ஏன் வந்து திறந்தாய்


கண்ணை படித்தேன் விண்ணை படித்தேன்
உன்னை படிக்க முடியலையே... இன்னும் முடியலையே
கண்ணை படித்தேன் விண்ணை படித்தேன்
உன்னை படிக்க முடியலையே ... இன்னும் முடியலையே
சுற்றி திரிந்தேன் திக்கித்து இருந்தேன்
சுற்றி திரிந்தேன் திக்கித்து இருந்தேன்
எந்தன் இதய கதவை ஏன் வந்து திறந்தாய்

கண்ணை படித்தேன் விண்ணை படித்தேன்
உன்னை படிக்க முடியலையே... இன்னும் முடியலையே


கண்ணை திறந்தாலும் மறந்தாலும்
தெரியுது உந்தன் உருவம் உயிர் உருவம்
இதயம் அதை வரையும்

கொஞ்சி சிரித்தாலும் தவிர்த்தாலும்
இனிக்குது இந்த பருவம் ..இந்த பருவம்

அலை அலையாய் ஆசைகளை
அடுக்கடுக்காய் அனுப்புகிறாய்
கொஞ்சம் ரசித்து கொஞ்சம் ருசித்து
கொஞ்சி அணைத்து காற்றி மிதக்க

கண்ணை படித்தேன் விண்ணை படித்தேன்
உன்னை படிக்க முடியலையே... இன்னும் முடியலையே

வட்ட வளையோடு கொலுசோடு உன்னை இசைத்திட வரவா
வண்ண நிலவே .. தரவா .. தந்து பெறவா

சின்ன மழையாக வெயிலாக தொட்டு தொட்டு
முத்தம் தரவா தாளம் இடவா

விழி அசைந்தால் உயிர் அசையும்
புது இசையை மீட்டுகிறாய்
இந்த நிமிடம் இந்த ஸ்பரிசம்
என்றும் நிலைக்கும் காலம் முழுதும்

கண்ணை படித்தேன் விண்ணை படித்தேன்
உன்னை படிக்க முடியலையே... இன்னும் முடியலையே
கண்ணை படித்தேன் விண்ணை படித்தேன்
உன்னை படிக்க முடியலையே ... இன்னும் முடியலையே
சுற்றி திரிந்தேன் திக்கித்து இருந்தேன்
சுற்றி திரிந்தேன் திக்கித்து இருந்தேன்
எந்தன் இதய கதவை ஏன் வந்து திறந்தாய்


கண்ணை படித்தேன் விண்ணை படித்தேன்
உன்னை படிக்க முடியலையே... இன்னும் முடியலையே

Tuesday, April 19, 2011

காதலைக் கொண்டாடும் காவியமே


சின்னக்கண்ணன் அழைக்கிறான்
சின்னக்கண்ணன் அழைக்கிறான்
ராதையை பூங்கோதையை - அவள்
மனங் கொண்ட ரகசிய ராகத்தைப் பாடி
சின்னக்கண்ணன் அழைக்கிறான்
சின்னக்கண்ணன் அழைக்கிறான்
ராதையை பூங்கோதையை - அவள்
மனங் கொண்ட ரகசிய ராகத்தைப் பாடி
சின்னக்கண்ணன் அழைக்கிறான்

கண்கள் சொல்கின்ற கவிதை - இளம்
வயதில் எத்தனை கோடி
கண்கள் சொல்கின்ற கவிதை - இளம்
வயதில் எத்தனை கோடி - என்றும்
காதலைக் கொண்டாடும் காவியமே
புதுமை மலரும் இனிமை - அந்த
மயக்கத்தில் இணைவது உறவுக்குப் பெருமை

சின்னக்கண்ணன் அழைக்கிறான்
சின்னக்கண்ணன் அழைக்கிறான்
ராதையை பூங்கோதையை - அவள்
மனங் கொண்ட ரகசிய ராகத்தைப் பாடி
சின்னக்கண்ணன் அழைக்கிறான்

நெஞ்சில் உள்ளாடும் ராகம் - இது
தானா கண்மணி ராதா
நெஞ்சில் உள்ளாடும் ராகம் - இது
தானா கண்மணி ராதா - உன்
புன்னகை சொல்லாத அதிசயமா?
அழகே இளமை ரதமே - அந்த
மாயனின் லீலையில் மயங்குது உலகம்

சின்னக்கண்ணன் அழைக்கிறான்
ராதையை பூங்கோதையை - அவள்
மனங் கொண்ட ரகசிய ராகத்தைப் பாடி
சின்னக்கண்ணன் அழைக்கிறான்

Monday, April 18, 2011

மனசுக்குள் ஆசை வைத்த மன்னன் வந்தானா


குயிலே கவிக்குயிலே யார் வரவை தேடுகிறாய்
மனசுக்குள் ஆசை வைத்த மன்னன் வந்தானா
குயிலே கவிக்குயிலே யாரை எண்ணி பாடுகிறாய்
உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா
உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா

குயிலே கவிக்குயிலே யார் வரவை தேடுகிறாய்
மனசுக்குள் ஆசை வைத்த மன்னன் வந்தானா
குயிலே கவிக்குயிலே யாரை எண்ணி பாடுகிறாய்
உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா
உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா

இளமை சதிராடும் தோட்டம் காயும் கனி ஆனதே
இனிமை சுவை காணும் உள்ளம் தனிமையை உறவாடுதே
ஜாடை சொன்னது என் கண்களே
வாடை கொண்டது என் நெஞ்சமே
குயிலே அவரை வரச் சொல்லடி
இது மோஹனம் பாடிடும் பெண்மை அதைச் சொல்லடி

குயிலே கவிக்குயிலே யார் வரவை தேடுகிறாய்
மனசுக்குள் ஆசை வைத்த மன்னன் வந்தானா
குயிலே கவிக்குயிலே யாரை எண்ணி பாடுகிறாய்
உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா
உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா

பருவ செழுப்பினிலே பனியில் நனைந்த மலர்
சிரிக்கும் சிரிப்பென்னவோ நினைக்கும் நினைப்பென்னவோ
மெல்ல மெல்ல அங்கம் எங்கும் துள்ள துள்ள
அள்ளிக்கொள்ள என்னை வெல்ல இதுதானே நேரம்
அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா
இது யௌவனம் காட்டிடும் முல்லை எனச் சொல்லடி

குயிலே கவிக்குயிலே யார் வரவை தேடுகிறாய்
மனசுக்குள் ஆசை வைத்த மன்னன் வந்தானா
குயிலே கவிக்குயிலே யாரை எண்ணி பாடுகிறாய்
உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா
உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா

என்னை ஆட்கொண்ட தாகம் என்றும் ஒரு ராகமே
இன்று நான் கொண்ட வேகம் என்றும் உனக்காகவே
வாழ்வில் மின்னல் போல் வந்தது
யாரோ எவரோ யார் கண்டது
குயிலே தெரிந்தால் வரச் சொல்லடி
ஒரு தேன்மலர் வாடுது என்று நீ சொல்லடி

குயிலே கவிக்குயிலே யார் வரவை தேடுகிறாய்
மனசுக்குள் ஆசை வைத்த மன்னன் வந்தானா
குயிலே கவிக்குயிலே யாரை எண்ணி பாடுகிறாய்
உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா
உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா

Sunday, April 17, 2011

உன் விழி பார்வை அன்று எனை விலை பேச கண்டேன் , நீ எனை வாங்கும் முன்பு நான் உன்னை வாங்கி கொண்டேன்


ஊதா ஊதா ஊதா பூ
ஊதும் வண்டு ஊதா பூ
ஊதா ஊதா ஊதா பூ
ஓத காற்றில் மோதா பூ

நான் பார்த்த ஊதா பூவே
நலம் தான ஊதா பூவே
தேன் வார்த்த ஊதா பூவே
சுகம் தானா ஊதா பூவே
ஊதா ஊதா ஊதா பூ
இன்றும் என்றும் உதிரா பூ

ஊதா ஊதா ஊதா பூ
ஊதும் வண்டு ஊதா பூ
ஊதா ஊதா ஊதா பூ
ஓத காற்றில் மோதா பூ

நீ பார்த்தால் ஊதா பூவே
நலமாகும் ஊதா பூவே
தோள் சேர்த்தால் ஊதா பூவே
சுகம் காணும் ஊதா பூவே
ஊதா ஊதா ஊதா பூ
உன்னை நீங்கி வாழா பூ

ஊதா ஊதா ஊதா பூ
ஊதும் வண்டு ஊதா பூ

ஓர் உயில் தீட்டி வைத்தேன்
நான் உனக்காக என்று
என்னுயிர் கூட இல்லை இனி எனக்காக என்று
ஓர் நெடுஞ்சாலை தன்னை
நான் கடந்தேனே அன்று
என்னை நிலம் கேட்டதம்மா
உன் நிழல் எங்கு என்று
உன்னில் நான் ஒரு பாதியென தெரியாதோ
அன்பே நீ அதை சொல்லுவதேன் புரியாதோ
ஊதா ஊதா ஊதா பூ
உன் பேர் தவிர ஓதா பூ


ஊதா ஊதா ஊதா பூ
ஊதும் வண்டு ஊதா பூ

உன் மழை கூந்தல் மீது
என் மன பூவை வைத்தேன்
ஓர் உயிர் நூலை கொண்டு
இரு உடல் சேர தைதேன்
உன் விழி பார்வை அன்று
எனை விலை பேச கண்டேன்
நீ எனை வாங்கும் முன்பு
நான் உன்னை வாங்கி கொண்டேன்
எந்தன் காதலி சொல்லுவதே இனி ஆணை
என்றும் தாவணி வென்றிடுமோ ஒரு ஆணை
ஊதா ஊதா ஊதா பூ
என்றும் நீதான் வாடா பூ

ஊதா ஊதா ஊதா பூ
ஊதும் வண்டு ஊதா பூ
ஊதா ஊதா ஊதா பூ
ஊதா காற்றில் மோதா பூ

நான் பார்த்த ஊதா பூவே
நலம் தானா ஊதா பூவே
தேன் வார்த்த ஊதா பூவே
சுகம் தான ஊதா பூவே
ஊதா ஊதா ஊதா பூ
இன்றும் என்றும் உதிரா பூ

கண்ணாடி பார்க்கையில அங்க முன்னாடி உம் முகம்தான்


ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ
என் பேரைச் சொல்லும் ரோசாப்பூ
ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ
என் பேரைச் சொல்லும் ரோசாப்பூ
காற்றில் ஆடும் தனியாக
என் பாட்டு மட்டும் துணையாக
காற்றில் ஆடும் தனியாக
என் பாட்டு மட்டும் துணையாக


மனசெல்லாம் பந்தலிட்டு மல்லிக்கொடியாக ஒன்னா விட்டேன்
உசுருக்குள் கோயில் கட்டி ஒன்னக் கொலு வச்சுக் கொண்டாடினேன்
மழை பேய்ஞ்சாதானே மண் வாசம் ஒன்ன நெனச்சாலே பூவாசம்தான்
பாத மேல பூத்திருந்தேன் கையில் ரேகை போல சேர்ந்திருதேன்

ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ
என் பேரைச் சொல்லும் ரோசாப்பூ
காற்றில் ஆடும் தனியாக
என் பாட்டு மட்டும் துணையாக


கண்ணாடி பார்க்கையில அங்க முன்னாடி உம் முகம்தான்
கண்ணே நீ போகையில கொஞ்சும் கொலுசாக என் மனம்தான்
நிழலுக்கும் நெத்தி சுருங்காம ஒரு குடையாக மாறட்டுமா
மலை மேல் விளக்க ஏத்தி வைப்பேன்
உன்னப் படம்போல் மனசில் மாட்டிவைப்பேன்


ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ
என் பேரைச் சொல்லும் ரோசாப்பூ
ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ
என் பேரைச் சொல்லும் ரோசாப்பூ
காற்றில் ஆடும் தனியாக
என் பாட்டு மட்டும் துணையாக
காற்றில் ஆடும் தனியாக
என் பாட்டு மட்டும் துணையாக

மனதை மனதை விழி துளைத்தால் காதலின் வண்ணம் விளைவதுண்டு


வெளிநாட்டு காற்று, தமிழ் பேசுதே ஹோ
புரியாத பூக்கள் தலையாட்டுதே
மொழி பெயர்க்கவே அதோ அதோ
குயில் வந்ததே குறை தீர்ந்ததே

வெளிநாட்டு காற்று, தமிழ் பேசுதே ஹோ

உலகை உலகை மறந்துவிட்டேன்
ஓர் இடம் தேடி ஒளிந்து கொள்வேன்
பூவை திறந்து மறைந்து கொண்டு
பூவுக்கு தாழ்பாள் போட்டு கொள்வோம்
கண் காணாமல் முப்போகம் நாம் காணுவோம்
பூ உள்ளூறும் தேனோடு நீராடுவோம்
ஸ்ரீங்கார மாநாடு போடு சிற்றின்ப கச்சேரி பாடு

வெளிநாட்டு காற்று, தமிழ் பேசுதே ஹோ
ஒஹ் தமிழ் பேசுதே

மழையின் துளியை ஒளி துளைத்தால்
வானவில் வண்ணம் எழுவதுண்டு
மனதை மனதை விழி துளைத்தால்
காதலின் வண்ணம் விளைவதுண்டு

உன் மின்சார முத்தங்கள் இட்டாடவா
என் ஆனந்த மூலங்கள் தொட்டாடவா
கண்கண்ட தேகங்கள் போக காணாத பாகங்கள் வாழ்க

வெளிநாட்டு காற்று, தமிழ் பேசுதே ஹோ
புரியாத பூக்கள் தலையாட்டுதே
மொழி பெயர்க்கவே அதோ அதோ
குயில் வந்ததே குறை தீர்ந்ததே."