Friday, October 21, 2011

உன் கன்னக் குழியின் சிரிப்பில் விரும்பி மாட்டிக் கொண்டேன் நான் திரும்பி போக மாட்டேன்


அழகு குட்டி செல்லம்
உன்னை அள்ளி தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்

ஆளை கடத்தி போகும்
உன் கன்னக் குழியின் சிரிப்பில்
விரும்பி மாட்டிக் கொண்டேன்
நான் திரும்பி போக மாட்டேன்

மம்மு நீ என் பொம்மு நீ
மம்மு நீ என் மின்மினி

உனக்கு தெரிந்த மொழியிலே
எனக்கு பேச தெரியலை
எனக்கு தெரிந்த பாசை பேச
உனக்கு தெரியவில்லை

இருந்தும் நமக்குள்
இது என்ன புது பேச்சு
இதயம் பேச
எதற்கிந்த ஆராய்ச்சி

கிஞ்சலிஞ்ச கிஞ்சலிஞ்ச கிஞ்சலி
மஞ்சலிஞ்ச மஞ்சலிஞ்ச மஞ்சலி

அழகு குட்டி செல்லம்
உன்னை அள்ளி தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்

ஆளை கடத்தி போகும்
உன் கன்னக் குழியின் சிரிப்பில்
விரும்பி மாட்டிக் கொண்டேன்
நான் திரும்பி போக மாட்டேன்

ரோஜா பூ கை ரெண்டும்
காற்றோடு கதை பேசும்
உன் பின்னழகில் பௌர்ணமிகள்
தக திம்மிதா ஜதி பேசும்

எந்த நேரம் ஓயாத அழுகை
ஏன் இந்த முட்டிகால் தொழுகை
எப்போதும் இவன் மீது பால் வாசனை
என்ன மொழி சிந்திக்கும் இவன் யோசனை

எந்த நாட்டை பிடித்து விட்டான்
இப்படி ஒர் ஆட்டின கால் தோரணை
தோரணை

கிஞ்சலிஞ்ச கிஞ்சலிஞ்ச கிஞ்சலி
மஞ்சலைஞ்ச மஞ்சலிஞ்ச மஞ்சலி

அழகு குட்டி செல்லம்
உன்னை அள்ளி தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்

ஆளை கடத்தி போகும்
உன் கன்னக் குழியின் சிரிப்பில்
விரும்பி மாட்டிக் கொண்டேன்
நான் திரும்பி போக மாட்டேன்

நீ தின்ற மண் சேர்த்தால்
வீடொன்று கட்டிடலாம்

நீ சிணுங்கும் மொழி கேட்டால்
சங்கீதம் கற்றிடலாம்

தண்டவாளம் இல்லாத ரயிலை
தவழ்ந்தபடி நீ ஓட்டி போவாய்

வம்பு கிம்பு செய்கின்ற பொல்லாதவன்
கடவுள் போல் கவலைகள் இல்லாதவன்

ஒளிந்து ஒளிந்து போக்கு காட்டி
ஓடுகின்ற கண்ணனே
புன்னகை மன்னனே

கிஞ்சலிஞ்ச கிஞ்சலிஞ்ச கிஞ்சலிஞ்ச
மஞ்சலிஞ்ச மஞ்சலிஞ்ச மஞ்சலி

அழகு குட்டி செல்லம்
உன்னை அள்ளி தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்

ஆளை கடத்தி போகும்
உன் கன்னக் குழியின் சிரிப்பில்
விரும்பி மாட்டிக் கொண்டேன்
நான் திரும்பி போக மாட்டேன்

அம்மு நீ என் பொம்மு நீ
மம்மு நீ என் மின்மினி

உனக்கு தெரிந்த மொழியிலே
எனக்கு பேச தெரியலை
எனக்கு தெரிந்த பாசை பேச
உனக்கு தெரியவில்லை

இருந்தும் நம்மக்குள்
இது என்ன புது பேச்சு
இதயம் பேச
எதற்கிந்த ஆராய்ச்சி

கிஞ்சலிஞ்ச கிஞ்சலிஞ்ச கிஞ்சலி
மஞ்சலிஞ்ச மஞ்சலிஞ்ச மஞ்சலி

அழகு குட்டி செல்லம்
உன்னை அள்ளி தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்

Thursday, October 13, 2011

ஒரு நொடிக்குள் நூறு முறை மெத்தை இங்கு துள்ளும்


விழியும் விழியும் நெருங்கும் பொழுது
வளையல் விரும்பி வளையும் பொழுது
வசதியாக வசதியாக வளைந்து கொடு

இதழும் இதழும் இழையும் பொழுது
இமையில் நிலவு நுழையும் பொழுது
வசதியாக வசதியாக வளைந்து கொடு

காதலினால் காதல் தொட்டுவிடு
ஆதலினால் நாணம் விட்டுவிடு

விழியும் விழியும் நெருங்கும் பொழுது
வளையல் விரும்பி வளையும் பொழுது
வசதியாக வசதியாக வளைந்து கொடு

முத்தமொன்று தந்தவுடன் மூடிக்கொள்ளும் கண்கள்
மொத்தமாக கூந்தல் அள்ளி மூடிக்கொள்ளும் கைகள்
உடலிறங்கி நீந்தும் என்னை உயிரிழுத்து செல்லும்
ஓய்வு தந்த காரணத்தால் உடைகள் நன்றி சொல்லும்
விரலும்...விரலும் இறுகும்...பொழுது
முதுகின்...சுவரில் வழியும்...விழுது
விரலும்...விரலும் இறுகும்...பொழுது
முதுகின்...சுவரில் வழியும்...விழுது
உறங்கிடாமல்...உறங்கிடாமல் கிறங்கி விடு

இதழும் இதழும் இழையும் பொழுது
இமையில் நிலவு நுழையும் பொழுது
வசதியாக வசதியாக வளைந்து கொடு

புயல் முடிந்து போன பின்னே கடல் உறங்க செல்லும்...ம்ம்ம்
கண் விழித்த அலை திரும்ப களம் இறங்க சொல்லும்
உயிரணுக்கள் கூடி நின்று ஓசையின்றி கிள்ளும்...ஆஆஆ
ஒரு நொடிக்குள் நூறு முறை மெத்தை இங்கு துள்ளும்
இமையின்...முடியால் உடலை...உழவா
இளமை...வயலில் புயலை...நடவா
இமையின்...முடியால் உடலை...உழவா
இளமை...வயலில் புயலை...நடவா
இசை கெடாமல்...இசை கெடாமல் மூச்சுவிடு

விழியும் விழியும் நெருங்கும் பொழுது
வளையல் விரும்பி வளையும் பொழுது
வசதியாக வசதியாக வளைந்து கொடு

இதழும் இதழும் இழையும் பொழுது
இமையில் நிலவு நுழையும் பொழுது
வசதியாக வசதியாக வளைந்து கொடு

காதலினால் காதல் தொட்டுவிடு
ஆதலினால் நாணம் விட்டுவிடு

Sunday, October 9, 2011

இந்த கடலை கேளு அலைய சொல்லும் , தண்ணிய கேளு புது கதைய சொல்லும்


சலோமியா ஆஆ....
சலோமியா ஆஆ....
சுண்ட கஞ்சி சோறுடா
சுடும்பு கருவாடுடா
வாலை மீனு காலுடா
வர்ற ஸ்டைல பாருட
சலோமியா ஆஆ.... சலோமியா ஆஆ....


விரலோ நெத்திலி மீனு
கண்ணோ காரபொடி
முகமோ கெலுத்தி மீனு
மனமொ தென்னாகுனி
இது விலாங்குட கையில் சிக்காதுடா
அவ ரெக்கை வைச்ச வவ்வாலு டா
இது விலாங்குட கையில் சிக்காதுடா
அவ ரெக்கை வைச்ச வவ்வாலு டா
யெஹ் அந்தொன்ய் யெஹ் அல்ஃபொன்ச்(எ)உ
அவ பொன்மெனி ரொம்ப சில்ஃபான்சு
இந்த கடலை கேளு அலைய சொல்லும்
தண்ணிய கேளு புது கதைய சொல்லும்


சலோமியா ஆஆ....
சலோமியா ஆஆ....


கிளிஞ்சல் சிரிப்புக்காரி
சங்கு கழுத்துக்காரி
இரவில் விளக்கு போடும்
லைட் ஹவுஸ் கண்ணு காரி
அவ சுராங்கனி பாடும் மச்சக்கன்னி
கொக்கு கொத்திக்கிட்டு போகாதடா
அவ சுராங்கனி பாடும் மச்சக்கன்னி
கொக்கு கொத்திக்கிட்டு போகாதடா

ஏ அந்தோணி ஏ அல்போன்சு
அவ தொட்டுபுட்டா அது சில்பான்சு
மீன் கொழம்ப போல மணக்கும் பொண்ணு
கட்டு மரத்த போல உன்ன சுமக்கும் கண்ணு

சுண்ட கஞ்சி சோறுடா
சுடும்பு கருவாடுடா
வாலை மீனு காலுடா
வர்ற ஸ்டைல பாருட
சலோமியா ஆஆ.... சலோமியா ஆஆ....

Tuesday, October 4, 2011

அன்பே உந்தன் பேரைத்தானே விரும்பிக் கேட்கிறேன் போகும் பாதை எங்கும் உன்னைத் திரும்பிப் பார்க்கிறேன்


வீசும் காற்றுக்கு பூவைத் தெரியாதா?
பேசும் கண்ணுக்கு என்னைப் புரியாதா?
அன்பே உந்தன் பேரைத்தானே
விரும்பிக் கேட்கிறேன்
போகும் பாதை எங்கும் உன்னைத்
திரும்பிப் பார்க்கிறேன்

வீசும் காற்றுக்கு பூவைத் தெரியாதா?
பேசும் கண்ணுக்கு என்னைப் புரியாதா?
அன்பே உந்தன் பேரைத்தானே
விரும்பிக் கேட்கிறேன்
போகும் பாதை எங்கும் உன்னைத்
திரும்பிப் பார்க்கிறேன்

என்னையே திறந்தவள் யாரவளோ?
உயிரிலே நுழைந்தவள் யாரவளோ?
வழியை மறித்தாள்.. மலரைக் கொடுத்தாள்..
மொழியைப் பறித்தாள்.. மௌனம் கொடுத்தாள்..
மேகமே மேகமே அருகினில் வா..
தாகத்தில் மூழ்கினேன் பருகிட வா..

வீசும் காற்றுக்கு பூவைத் தெரியாதா?
பேசும் கண்ணுக்கு என்னைப் புரியாதா?
அன்பே உந்தன் பேரைத்தானே
விரும்பிக் கேட்கிறேன்
போகும் பாதை எங்கும் உன்னைத்
திரும்பிப் பார்க்கிறேன்

சிரிக்கிறேன் இதழ்களில் மலருகிறாய்..
அழுகிறேன் துளிகளாய் நழுவுகிறாய்...
விழிகள் முழுதும்.. நிழலா இருளா..
வாழ்க்கைப் பயணம் முதலா முடிவா..
சருகென உதிர்கிறேன் தனிமையிலே..
மௌனமாய் எரிகிறேன் காதலிலே..

வீசும் காற்றுக்கு பூவைத் தெரியாதா?
பேசும் கண்ணுக்கு என்னைப் புரியாதா?
அன்பே உந்தன் பேரைத்தானே
விரும்பிக் கேட்கிறேன்
போகும் பாதை எங்கும் உன்னைத்
திரும்பிப் பார்க்கிறேன்

மேகம் போலே என் வானில் வந்தவளே..
யாரோ அவள்.. நீதான் என்னவளே..
மேகமேக மேகக்கூட்டம் நெஞ்சில் கூடுதே..
உந்தன் பேரைச் சொல்லிச் சொல்லி மின்னல் ஓடுதே..

வீசும் காற்றுக்கு பூவைத் தெரியாதா?
பேசும் கண்ணுக்கு என்னைப் புரியாதா?
அன்பே உந்தன் பேரைத்தானே
விரும்பிக் கேட்கிறேன்
போகும் பாதை எங்கும் உன்னைத்
திரும்பிப் பார்க்கிறேன்

காதல் தேன் நானோ காதல் மீன் நானோ விடை சொல்பவர் தான் யாரோ


யாரோ யார் யாரோ யாரோடு யார் யாரோ
எவர் நெஞ்சினில் தான் யாரோ
யாரோ யார் யாரோ யாரோடு யார் யாரோ
எவர் நெஞ்சினில் தான் யாரோ
காதல் தேன் நானோ
காதல் மீன் நானோ
விடை சொல்பவர் தான் யாரோ

வானவில் தானே நம் சொந்தங்கள்
வாழ்வினில் ஏனோ அதில் துன்பங்கள்
ஆறுகள் சேரும் கடல் எல்லைகள்
யாரிடம் சேரும் இவர் உள்ளங்கள்
வலை தேடி நீயே அதில் வீணாக
விழாதே நீ விழாதே

யாரோ யார் யாரோ யாரோடு யார் யாரோ
எவர் நெஞ்சினில் தான் யாரோ
யாரோ யார் யாரோ யாரோடு யார் யாரோ
எவர் நெஞ்சினில் தான் யாரோ
காதல் தேன் நானோ
காதல் மீன் நானோ
விடை சொல்பவர் தான் யாரோ

சொல்லடி சிவ சக்தி - எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்


நல்லதோர் வீணை செய்தே - அதை
நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ
நல்லதோர் வீணை செய்தே
சொல்லடி சிவ சக்தி - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்
சொல்லடி சிவ சக்தி

நல்லதோர் வீணை செய்தே - அதை
நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ
நல்லதோர் வீணை செய்தே - அதை
நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ
சொல்லடி சிவ சக்தி - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்
சொல்லடி சிவ சக்தி - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்

வல்லமை தாராயோ - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே
சொல்லடி சிவ சக்தி - நிலச்
சுமையென வாழ்ந்திட புரிகுவையோ
நல்லதோர் வீணை செய்தே - அதை
நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ

விசையுறு பந்தினைப் போல் - ஆஆஆஆ
விசையுறு பந்தினைப் போல் - உள்ளம்
வேண்டிய படி செல்லும் உடல் கேட்டேன்
நசையறும் மனம் கேட்டேன் - நித்தம்
நவமெனச் சுடர்தரும் உயிர் கேட்டேன்
உயிர் கேட்டேன் உயிர் கேட்டேன்

தசையினைத் தீச்சுடினும் - சிவ
சக்தியைப் பாடும் நல் அகம் கேட்டேன்
அசைவுறு மதி கேட்டேன் - இவை
அருள்வதில் உனக்கேதும் தடையுளதோ - இவை
அருள்வதில் உனக்கேதும் தடையுளதோ

நல்லதோர் வீணை செய்தே - அதை
நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ
நல்லதோர் வீணை செய்தே - ஆஆஆஆ

Monday, October 3, 2011

நல்ல பூப்போல உள்ளத்தைக் காட்டு இந்தப் பெண் மீது எண்ணத்தை மாற்று


ரங்கா ரங்கையா எங்கே போனாலும்
ரகசியம் மனசுக்கு சுமைதானே
ரங்கா ரங்கையா எங்கே போனாலும்
ரகசியம் மனசுக்கு சுமைதானே
பொல்லாத கோபத்தைத் தள்ளு
இங்கு என்னோடு ஏதேனும் சொல்லு
பொல்லாத கோபத்தைத் தள்ளு
இங்கு என்னோடு ஏதேனும் சொல்லு
நல்ல பூப்போல உள்ளத்தைக் காட்டு
இந்தப் பெண் மீது எண்ணத்தை மாற்று

ஹா.... ரங்கா ரங்கையா எங்கே போனாலும்
ரகசியம் மனசுக்கு சுமைதானே

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
பொய்யான கணக்கெழுதும் வணிகருண்டு
பொழுதெல்லாம் ஊர் கெடுக்கும் மனிதருண்டு
தவறாகப் பணம் சேர்க்கும் கயவர் உண்டு
சத்தியமே தலை மறைவாய்ப் போனதுண்டு
நல்ல மனிதர் ஆயிரம் சொல்லி நியாயம் நிலைக்கவில்லை
நல்ல மனிதர் ஆயிரம் சொல்லி நியாயம் நிலைக்கவில்லை
நாலு டாக்டர் பார்த்த பின்னும் நீதி பிழைக்கவில்லை
சொர்கத்தைக் காண்கின்ற வயசு
இது சொந்தங்கள் கொண்டாடும் மனசு
ஆஹா....பக்கத்தில் நிற்கின்ற இளசு
உன் பார்வைக்கு தவிக்கின்ற புதுசு

ஹா.... ரங்கா ரங்கையா எங்கே போனாலும்
ரகசியம் மனசுக்கு சுமைதானே

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
மை தீட்டும் கண்களிலே மயக்கம் உண்டு
மலர் சூடும் கூந்தலிலே மஞ்சம் உண்டு
கையோடு சேர்ந்திருக்க கன்னி உண்டு
காதலிலே நமக்கென்றோர் கவிதை உண்டு
பருவச்சிலையைப் பக்கத்தில் வைத்து உலகை நினைக்காதே
பாவம் நிறைந்த உலகத்துக்காக வேதம் படிக்காதே
பூங்காற்று தாலாட்டும் இரவு
இந்தப் பூவைக்கு உன்னோடு உறவு
அடி அம்மாடி என்னென்ன கனவு
இதை அறியாமல் ஏனிந்த நினைவு

ஹா.... ரங்கா ரங்கையா எங்கே போனாலும்
ரகசியம் மனசுக்கு சுமைதானே