Sunday, November 3, 2013

என் செல்ல செல்ல மாமா நீ சொல்ல சொல்ல காதல் வரும் நீ Tellify


fy fy fy கலாய்ச்சிfy
கருப்பா ! நீ வா என்னை  கலாய்ச்சிfy!
fy fy fy சொதப்பிfy
பொறுப்பா நீ இருக்காத சொதப்பிfy
வெட்கத்தை வேணான்னு ஓட்டிfy
நெஞ்சோடு நீங்காம ஒட்டிfy
மிட்டாயி முத்தத்தை வாயொடு வாய் வைச்சு

fy fy fy கலாய்ச்சிfy
கருப்பா ! நீ வா என்னை  கலாய்ச்சிfy!
fy fy fy சொதப்பிfy
பொறுப்பா நீ இருக்காத சொதப்பிfy
வெட்கத்தை வேணான்னு ஓட்டி fy
நெஞ்சோடு நீங்காம ஒட்டிfy
மிட்டாயி முத்தத்தை வாயொடு வாய் வைச்சு

செல்லு கடை மாமா
என் செல்ல செல்ல மாமா நீ
சொல்ல சொல்ல காதல் வரும் நீ Tellify
ஆசை இல்லா ஆணா நீ
SIMமு  இல்லா Phoneனா நீ
Signal இங்க  Fullu நாளும் ஏன் திக்கி  FY
Touchச்சு Touchச்சு  Screenனாட்டம்  முன்னே வந்து நின்ன
என்ன வந்து நீ நோண்டி Fy Fy
பச்சை பச்சையாக என் இச்சை எல்லாம் சொல்ல 
அச்சம் எல்லாம் நீ போக்கி  Fy Fy Fy Fy Fy Fy

fy fy fy கலாய்ச்சிfy கருப்பா! நீ வா என்னை  கலாய்ச்சிfy!
fy fy fy சொதப்பிfy

பஞ்சாயத்தை கூட்டி Fy
எட்டுப் பட்டி கேட்டுFy
நியாயம் எது தர்மம் எது நீ பார்த்துFy
நாட்டத்த நான் சொல்லிfy
குத்த முன்னா தள்ளி Fy
நாட்டாமையும் தீர்ப்பை கொஞ்சம் நீ  மாத்திFy

திக்கு திக்கு பேச்சாலே 
கொக்கி கொக்கி போட்டேன் 
என்னை என்னை நீ தூக்கி  Fy Fy
நெல்லி வட்டுக் கண்ணால
அல்லி மொட்டு மேல
தட்டி தட்டி நீ தாக்கிfy fy fy fy fy

fy fy fy கலாய்ச்சிfy
கருப்பா ! நீ வா என்னை  கலாய்ச்சிfy!
fy fy fy சொதப்பிfy
பொறுப்பா நீ இருக்காத சொதப்பிfy
வெட்கத்தை வேணான்னு ஓட்டி fy
நெஞ்சோடு நீங்காம ஒட்டிfy
மிட்டாயி முத்தத்தை வாயொடு வாய் வைச்சு


Saturday, October 12, 2013

என் காதல் மடித்து தந்திடுவேன் ! ஏன் என்றால் உன் பிறந்தநாள்







ஏன் என்றால் உன் பிறந்தநாள்

உலக பூக்களின் வாசம்
உனக்கு சிறை பிடிப்பேன்
உலர்ந்த மேகத்தை கொண்டு
நிலவின் கறை துடைப்பேன்

ஏன் என்றால் உன் பிறந்தநாள்
ஏன் என்றால் உன் பிறந்தநாள்


கிளை  ஒன்றில் மேடை அமைத்து
ஒளிவாங்கி கையில் கொடுத்து
பறவைகளை பாட செய்வேன்
இலை எல்லாம் கைகள் தட்ட
அதில் வாழும்  பறவை ஒன்றை
உன் காதில் கூவ செய்வேன்
உன் அறையில் கூடு கட்டிட
கட்டளை இடுவேன்
அதிகாலை உன்னை எழுப்பிட
உத்தரவு இடுவேன்

ஏன் என்றால் உன் பிறந்தநாள்
ஏன் என்றால் உன் பிறந்தநாள்


மலை உச்சி ஏத்தி
பனி  கட்டி வெட்டி
உன் குளியல் தொட்டியில் கொட்டி
சூரியனை வடி கட்டி
பனி  எல்லாம் ஒதிக்கிடுவென்
உன்னை அதில் குளிக்கத்தான்
இதம் பார்த்து இரக்கிடுவேன்
ய ய ய
கண்ணில்லா பெண் மீன்கள் பிடித்து
ஓ ஓ ஓ..
உன் மீது  நான் நீந்த விடுவேன்.. ஓ..
நீ குளித்து முடித்து துவட்டதான்
என்  காதல் மடித்து  தந்திடுவேன்

ஏன் என்றால் உன் பிறந்தநாள்
ஏன் என்றால் உன் பிறந்தநாள்

நூறாயிரம் ஊதுபைகளில்...
என் மூச்சினை நான் இன்று நிரப்பிடுவேன்.
அவை அனைத்தையும் வானத்தில் அடுக்கிடுவேன்
என் மூச்சினில் உன் பெயர் வரைந்திடுவேன்!
ஏன் என்றால்.... உன் பிறந்தநாள்!
ஏன் என்றால்.... உன் பிறந்தநாள்!

நெஞ்சத்தை வெதுப்பகம் ஆக்கி
அணிச்சல்   செய்திடுவேன்
மெழுகு பூக்கள் மேலே என்
காதல் ஏற்றிடுவேன்
நீ ஊதினால் அணையாதடி
நீ வெட்டவே முடியாதடி
என் கண்களை நீ மூழ்கடி
என்ன வேணும் அதை கேளடி

ஏன் என்றால் உன் பிறந்தநாள்
ஏன் என்றால் உன் பிறந்தநாள்

கடவுள் கூட்டம் அணிவகுத்து
வரங்கள் தந்திடுமே
இந்நாளே முடியக் கூடாதென்று
உலகம் நின்றிடுமே!
ஏன் என்றால் உன் பிறந்தநாள்
ஏன் என்றால் உன் பிறந்தநாள்

Wednesday, August 7, 2013

நீ எனது கனவில் வரவே எழாமல் இருக்கிறேன் உன் சுவாசம் உயிரை தொடவே விடமால் பிடிக்கிறேன்


வெண்ணிலவே தரையில் உதித்தாய்
ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய்
வெண்ணிலவே தரையில் உதித்தாய்
ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய்
நீ எனது கனவில் வரவே எழாமல் இருக்கிறேன்
உன் சுவாசம் உயிரை தொடவே விடாமல் பிடிக்கிறேன்

வெண்ணிலவை விழியில் பிடித்தாய்
ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய்
நீ எனது கனவில் வரவே எழாமல் இருக்கிறேன்
உன் சுவாசம் உயிரை தொடவே விடமால் பிடிக்கிறேன்

அழகே நீ ஓர் பூகம்பம் தானா ?
அருகே வந்தால் பூ கம்பம் தானா ?
தீயா நீரா தீராத மயக்கம்
தீயும் நீரும் பெண்ணுள்ளே இருக்கும்
மடைதிட எறிந்திடும் பெண்தேகம் அதிசயம்

வெண்ணிலவே தரையில் உதித்தாய்
ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய்

ஒருநாள் கண்ணில் நீ வந்து சேர்ந்தாய்
மறுநாள் என்னை கண்டேனே புதிதாய்
விழிகள் மீனா தூண்டில்கள் என்பேன்
விழுந்தேன் பெண்ணே ஆனந்தம் கொண்டேன்
நிலவரம் கலவரம் நெஞ்சோடு மழைவரும்

வெண்ணிலவே தரையில் உதித்தாய்
ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய்
நீ எனது கனவில் வரவே எழாமல் இருக்கிறேன்
உன் சுவாசம் உயிரை தொடவே விடாமல் பிடிக்கிறேன்

Sunday, June 2, 2013

மாறி மாறி உன்னை பார்க்க சொல்லி விழி கெஞ்சும் எந்தன் நெஞ்சோடு நெஞ்சோடு காதல் பொங்கி வருதே



அமுளி துமுளி நெளியும் வேலி
என்னை கவ்வி கொண்டதே
அழகு இடுப்பின் ஒரு பாதி
என்னை அள்ளி சென்றதே
கொலம்பஸ் கனவிலும் நெனைக்காத
ஒரு தேசம் அழைக்குதே
கொளுத்தும் வெயிலிலும் என்னக்குளே
குளிர் காற்றும் வீசுதே

ரோஜா பூவும்
அடி முள்ளில் பூக்கும் என அறிவேனே
பேனா முள்ளில்
இந்த பூவும் பூர்த்ததொரு மாயம்
மாறி மாறி
உன்னை பார்க்க சொல்லி விழி கெஞ்சும்
எந்தன் நெஞ்சோடு நெஞ்சோடு காதல் பொங்கி வருதே

அமுளி துமுளி நெளியும் வேலி
என்னை கவ்வி கொண்டதே
அழகு இடுப்பின் ஒரு பாதி
என்னை அள்ளி சென்றதே
கொலம்பஸ் கனவிலும் நெனைக்காத
ஒரு தேசம் அழைக்குதே
கொளுத்தும் வெயிலிலும் என்னக்குளே
குளிர் காற்றும் வீசுதே


வா என சொல்லவும் தயக்கம்
மனம் போ என தள்ளவும் மறுக்கும்
இங்கு காதலின் பாதையில் அனைத்தும்
அட பெருங்குழப்பம்
ஆறுகள் அருகினில் இருந்தும்
அடை மழை அது சோ என பொழிந்தும்
அடி நீ மட்டும் தூரத்தில் இருந்தால்
நா வரண்டு விடும்
ஹேய் கூவ்வா கூவா கூவா கூவ்வா குயில் ஏது
ஹேய் தவ்வா தவ தவ தவ்வா மனமேது
ஓ முதல் மழை நனைத்ததை போலே
முதல் புகழ் அடைந்ததை போலே
குதிக்கிறேன் குதிக்கிறேன் மேலே
ஆருயிரே
ஓ எனக்குனை கொடுத்தது போதும்
தரை தொட மறுக்குது பாதம்
எனக்கினி உறக்கமும் தூரம்
தேவதையே


அமுளி துமுளி நெளியும் வேலி
என்னை கவ்வி கொண்டதே
அழகு இடுப்பின் ஒரு பாதி
என்னை அள்ளி சென்றதே
கொலம்பஸ் கனவிலும் நெனைக்காத
ஒரு தேசம் அழைக்குதே
கொளுத்தும் வெயிலிலும் என்னக்குளே
குளிர் காற்றும் வீசுதே

கால்களில் ஆடிடும் கொலுசு
அதன் ஓசைகள் பூமிக்கு புதுசு
அதை காதுகள் கேட்டிடும் பொழுது
நான் கவி அரசு
மேற்கிலும் சூரியன் உதிக்கும்
நீர் மின்மினி சூட்டிலும் கொதிக்கும்
அட அருகினில் நீ உள்ள வரைக்கும்
மிக மணமணக்கும்
ஹேய் பூவ்வா பூவா பூவா பூவ்வா சிரிப்பாலே
ஹேய் அவ்வா அவா அவா அவ்வா தீர்த்தயே

ஹேய் சூடாமலே அணிகலன் இல்லை
தொடாமலே உடல் பலன் இல்லை
விடாமலே மனதினில் தொல்லை
காதலியே
தொட தொட இனித்தன இல்லை
இடைவெளி மிகப்பெரும் தொல்லை
அட எல்லாம் மகிழ்ச்சியின் எல்லை
கூடலையே

அமுளி துமுளி நெளியும் வேலி
என்னை கவ்வி கொண்டதே
அழகு இடுப்பின் ஒரு பாதி
என்னை அள்ளி சென்றதே
கொலம்பஸ் கனவிலும் நெனைக்காத
ஒரு தேசம் அழைக்குதே
கொளுத்தும் வெயிலிலும் என்னக்குளே
குளிர் காற்றும் வீசுதே

ரோஜா பூவும்
அடி முள்ளில் பூக்கும் என அறிவேனே
பேனா முள்ளில்
இந்த பூவும் பூர்த்ததொரு மாயம்
மாறி மாறி
உன்னை பார்க்க சொல்லி விழி கெஞ்சும்
எந்தன் நெஞ்சோடு நெஞ்சோடு காதல் பொங்கி வருதே

Thursday, May 30, 2013

இரவில்லா உலகம் கண்டேன் ,நிறமெல்லாம் உன்னில் கண்டேன்



கனா கண்டேனேடி………தோழி

கனா கண்டேனேடி கனா கண்டேனேடி
கனா கண்டேனேடி…

கனா கண்டேனேடி கனா கண்டேனேடி
கனா கண்டேனேடி…
.
உன் விழி முதல் மொழி வரை
முழுவதும் கவிதைகள்
அகம் எது புறம் எது புரிந்தது போலே
கனா கண்டேனேடி…
…..
உன் முடி முதல் அடி வரை
முழுவதும் இனிமைகள்
சுவை எது சுகம் எது
அறிந்தது போலே

கனா கண்டேனேடி………தோழி
கனா கண்டேனேடி….

எதையோ என் வாய் சொல்ல தொடங்க
அதையே உன் வாய் சொல்லி அடங்க
உதடுகள் நான்கும் ஒட்டிக் கொள்ள
நான் கண்டேன்….
நிலம் போல் உன் மனம் விரிந்துகிடக்க
நிழல் போல் என் மனம் சரிந்துபடுக்க
இதயம் இரண்டும் கட்டிக்கொள்ள
நான் கண்டேன்….
ஒரு கண்ணில் அமுதம் கண்டேன்
மறு கண்ணில் அமிலம் கண்டேன்
எங்எங்கோ தேடி தேடி
உன்னில் என்னை நான் கண்டேன்…

கனா கண்டேனேடி
கனா கண்டேனேடி
கனா கண்டேனேடி….
உன் விழி முதல் மொழி வரை
முழுவதும் கவிதைகள்
அகம் எது புறம் எது
புரிந்தது போலே
கனா கண்டேனேடி……..
உன் முடி முதல் அடி வரை
முழுவதும் இனிமைகள்
சுவை எது சுகம் எது
அறிந்தது போலே…


இடையினில் என் விரல் கவிதை கிறுக்க
படை போல் உன் விரல் பதறி தடுக்க
கூச்சம் உன்னை நெட்டி தள்ள
நான் கண்டேன்…
கொடியினில் காயும் சுடிதார் எடுத்து
மடிக்கிற சாக்கில் வாசனை பிடித்து
மூச்சில் உன்னை சொட்ட சொட்ட
நான் கண்டேன்……
இரவில்லா உலகம் கண்டேன்
நிறமெல்லாம் உன்னில் கண்டேன்
எங்எங்கோ தேடி தேடி
உன்னில் என்னை நான் கண்டேன்…


கனா கண்டேனேடி………தோழி
கனா கண்டேனேடி
கனா கண்டேனேடி
கனா கண்டேனேடி….
உன் விழி முதல் மொழி வரை
முழுவதும் கவிதைகள்
அகம் எது புறம் எது
புரிந்தது போலே
கனா கண்டேனேடி……..
உன் முடி முதல் அடி வரை
முழுவதும் இனிமைகள்
சுவை எது சுகம் எது
அறிந்தது போலே…


கனா கண்டேனேடி………தோழி
கனா கண்டேனேடி
கனா கண்டேனேடி
கனா கண்டேனேடி….
கனா கண்டேனேடி…

லவ்லெட்டர் தந்தால் வாங்கி பேப்பர் கப்பல் செய்வேன்



சுற்றி வரும் பூமிஎன்னைக் கேட்டுத் தானே
சுற்றி வர வேண்டும் என் பின்னாலே
கோயம்புத்தூர் குசும்பு
ஆ…கோவில்பட்டி திமிரு
தென்மதுரை பாசம்
உள்ள பெண் நானே
.
குண்டுமல்லி பூப்பூக்க
கொக்குக்கூட்டம் தான் பறக்க
கோவில் தேரில் வனம் பிடிக்க
நான் சொல்வேன் ஹேய்..
சல சல சல நதிகள் தொடங்கி
நெடு நெடு நெடு மலைகள் வரையில்
நான் போட்ட கோட்டை தாண்ட கூடாதே..
சிறு சிறு சிறு சிறுவன் தொடங்கி
கிடு கிடு கிடு கிழவன் வரையில்
நான் வைத்த சட்டம் மீரக் கூடாதே

சன்சனா சன் சன்சனா சன் சன்சனா சன் ஒஹோ
சன சன் சன்சன சன் சன் சன சன் சன் ஒஹோ
சன்சனா சன் சன சன் சன் சன்சனா சன் ஒஹோ
சுற்றி வரும் பூமி
என்னைக் கேட்டுத் தானே
சுற்றி வர வேண்டும் ம்
என் பின்னாலே


பகலோடு விண்மீன்கள்
ஹோய்
பார்க்கின்ற கண்கள் வேண்டும்…
ஹோய்
கனவோடு கார்காலம்.
ஹோய்
நனைக்கின்ற சுகம் வேண்டும்.
ஹோய்
செஸ்போர்டில் ராணி நானே
கிரிடம் அந்த வானம்
செல்போனில் ரிங்டோன் எல்லாம்
எந்தன் சிரிப்பில் ஆகும்
லவ்லெட்டர் தந்தால் வாங்கி
பேப்பர் கப்பல் செய்வேன்
லவ் பேர்ட்ஸை கண்டால் வாங்கி
வானில் போகச் சொல்வேன்…


சல சல சல நதிகள் தொடங்கி
நெடு நெடு நெடு மலைகள் வரையில்
நான் போட்ட கோட்டை தாண்ட கூடாதே..
சிறு சிறு சிறு சிறுவன் தொடங்கி
கிடு கிடு கிடு கிழவன் வரையில்
நான் வைத்த சட்டம் மீரக் கூடாதே
சன்சனா சன் சன்சனா சன் சன்சனா சன் ஒஹோ
சன சன் சன்சன சன் சன் சன சன் சன் ஒஹோ
சன்சனா சன் சன சன் சன் சன்சனா சன் ஒஹோ


சுற்றி வரும் பூமி
ஆஹா…
என்னைக் கேட்டுத் தானே
ஆஹா
சுற்றி வர வேண்டும் ம்
என் பின்னாலே
ஹே
ரோஜாக்கள் பூக்கட்டும்
ஹோய்
முள் ஏதும் இல்லாமல்
ஹோய்
என் ஊஞ்சல் ஆடட்டும்
ஹோய்
காற்றுக்கும் நோகாமல்
ஹோய்


கால் கொலுசு வாங்கித் தந்தால்
கட்டி காலில் மாட்டி
தாவணி தான் வாங்கித் தந்தால்
ஜன்னல் திரையாய் மாற்றி
பூ வாங்கி வைக்கச் சொன்னால்
தலையில் ஹெல்மட் மாட்டி
ஒன்வேயில் ஓட்டி போவேன்
ஊரை சுற்றி ஸ்கூட்டி


சல சல சல நதிகள் தொடங்கி
நெடு நெடு நெடு மலைகள் வரையில்
நான் போட்ட கோட்டை தாண்ட கூடாதே..
சிறு சிறு சிறு சிறுவன் தொடங்கி
கிடு கிடு கிடு கிழவன் வரையில்
நான் வைத்த சட்டம் மீரக் கூடாதே

சன்சனா சன் சன்சனா சன் சன்சனா சன் ஒஹோ
சன சன் சன்சன சன் சன் சன சன் சன் ஒஹோ
சன்சனா சன் சன சன் சன் சன்சனா சன் ஒஹோ
சன்சனா சன் சனஞ்சன் சன் சன்சனா சன் ஒஹோ

Wednesday, May 29, 2013

மனம் போலே மகள் வாழ நீ வாழ்த்தும் தாயாச்சே



ஏதோ ஒன்று ஏதோ ஒன்று உன்னை கேட்பேன்
இல்லை என்றால் இல்லை என்றால் உயிர் துடிப்பேன்


ஏதோ ஒன்று ஏதோ ஒன்று உன்னை கேட்பேன்
இல்லை என்றால் இல்லை என்றால் உயிர் துடிப்பேன்
உன் பாதம் நடக்க நான் பூக்கள் விரிப்பேன்
உன் தேகம் முழுக்க தங்கத்தால் பதிப்பேன்


உல்லாஹி... உல்லாஹி... லாஹி...
உல்லாஹி... உல்லாஹி... லாஹி...
ஒரு ஆசை மனதுக்குள் போதும்
அதை மட்டும் நீ தந்தால் போதும்
ஏதோ ஏதோ ஏதோ ஒன்று உன்னை கேட்பேன்
இல்லை இல்லை இல்லை என்றால் உயிர் துடிப்பேன்


நல்ல மனம் உன் போல் கிடையாது
நன்றி சொல்ல வார்த்தை எனக்கேது
ஒரு தாய் நீ உன் சேய் நான்
இந்த உறவுக்கு பிரிவேது


தாய்மடியில் சேய் தான் வரலாமா
தள்ளி நின்று துன்பம் தரலாமா
உன்னை கொஞ்ச மனம் கெஞ்ச
என்னை தனியே விடலாமா


குழந்தையும் குமரி என்றாயாச்சே
கொஞ்சிடும் பருவமும் போயாச்சே
மனம் போலே மகள் வாழ
நீ வாழ்த்தும் தாயாச்சே


ஒ... ஏதோ ஏதோ ஏதோ ஒன்று உன்னை கேட்பேன்
இல்லை இல்லை இல்லை என்றால் உயிர் துடிப்பேன்


உன் பாதம் நடக்க நான் பூக்கள் விரிப்பேன்
உன் தேகம் முழுக்க தங்கத்தால் பதிப்பேன்
உல்லாஹி... உல்லாஹி... லாஹி...
உல்லாஹி... உல்லாஹி... லாஹி...


வெண்ணிலவை பூவாய் வைப்பேனே
வானவில்லை உடையாய் தைப்பேனே
உனக்காக ஏதும் செய்வேன்
நீ எனக்கேன செய்வாயோ


இந்த ஒரு ஜென்மம் போதாது
ஏழு ஜென்மம் எடுத்தும் தீராது
அந்த தெய்வம் உன்னை காக்க
தினம் தொடர்வேன்  தவறாது


என்ன நான் கேட்பேன் தெரியாதா
இன்னமும் என் மனம் புரியாதா
அட ராமா இவன் பாடு
இந்த பெண்மை அறியாதா


ஏதோ ஏதோ ஏதோ ஒன்று உன்னை கேட்பேன்
இல்லை இல்லை இல்லை என்றால் உயிர் துடிப்பேன்
உன் பாதம் நடக்க நான் பூக்கள் விரிப்பேன்
உன் தேகம் முழுக்க தங்கத்தால் பதிப்பேன்


உல்லாஹி... உல்லாஹி... லாஹி...


உல்லாஹி... உல்லாஹி... லாஹி...


உல்லாஹி... உல்லாஹி... லாஹி...


உல்லாஹி... உல்லாஹி.......... லாஹி... 



 

Tuesday, May 28, 2013

அன்பில் விளைந்த உறவு ஒரு தொடர்கதை ,அந்த உறவு உனக்கு ஒரு சிறுகதை



வார்த்தை தவறி விட்டாய்…. கண்ணமா
மார்பு துடிக்குதடி
பார்த்த இடத்தில் எல்லாம் உன்னைபோல்
பாவை தெரியுது அடி
என்னடி மீனாட்சி – சொன்னது என்னாச்சு
என்னடி மீனாட்சி – சொன்னது என்னாச்சு
நேற்றோடு நீ சொன்ன வார்த்தை காற்றோடு போயாச்சு
என்னடி மீனாட்சி – சொன்னது என்னாச்சு
நேற்றோடு நீ சொன்ன வார்த்தை காற்றோடு போயாச்சு


உந்தன் உதட்டில் நிறைந்திருகும் பழரசம்
அந்த மனத்தில் மறைந்து இருக்கும் துளி விஷம்
உந்தன் உதட்டில் நிறைந்திருகும் பழரசம்
அந்த மனத்தில் மறைந்து இருக்கும் துளி விஷம்
நெஞ்சம் துடித்திடும் நாழி
நீயோ அடுத்தவன் தோளில்
என்னை மறந்துபோவதும் நியாயமோ
இந்த காதல் ஒவியத்தின்
பாதை மாறியது
காலம் செய்துவிட்ட மாயமோ
ஒரு மனம் உருகுது
ஒரு மனம் விலகுது
ஏய்


என்னடி மீனாட்சி – சொன்னது என்னாச்சு
நேற்றோடு நீ சொன்ன வார்த்தை காற்றோடு போயச்சு
அன்பில் விளைந்த உறவு ஒரு தொடர்கதை
அந்த உறவு உனக்கு ஒரு சிறுகதை
அன்பில் விளைந்த உறவு ஒரு தொடர்கதை
அந்த உறவு உனக்கு ஒரு சிறுகதை
கண்ணன் தனிமையிலே பாட
ராதை தன் வழியே ஓட
இந்த பிரிவை தங்குமோ என் மனம்
ஒரு நூலில் அடுகின்ற ஊஞ்சல் போன்றதடி
நாளும் மாறுகின்ற உன் மனம்
எனக்கு இன்று புரிந்தது
எவள் என்று தெரிந்தது
ஏய்


என்னடி மீனாட்சி – சொன்னது என்னாச்சு
என்னடி மீனாட்சி – சொன்னது என்னாச்சு
நேற்றோடு நீ சொன்ன வார்த்தை காற்றோடு போயாச்சு
வார்த்தை தவறி விட்டாய்…. கண்ணமா
மார்பு துடிக்குதடி

மெய்யாக நீ என்னை விரும்பாத போதும் பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும் , நிஜம் உந்தன் காதலென்றால்?



அன்பே... அன்பே... அன்பே... அன்பே...

எனைக் காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு அன்பே...
நான் நிழலில்லாதவன் தெரியாதா
என் நிழலும் நீயெனப் புரியாதா
உடல் நிழலைச் சேரவே முடியாதா அன்பே...

நடை போடும் பூங்காற்றே பூங்காற்றே
வா வா... என் வாசல்தான்...
வந்தால்... வாழ்வேனே நான்

எனைக் காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு அன்பே

ஆகாரம் இல்லாமல் நான் வாழக்கூடும்
அன்பே உன் பேரைச் சிந்தித்தால்
தீக்குச்சி இல்லாமல் தீ மூட்டக்கூடும்
கண்ணே நம் கண்கள் சந்தித்தால்

நான் என்று சொன்னாலே நான் அல்ல நீ தான்
நீ இன்றி வாழ்ந்தாலே நீர் கூடத் தீ தான்
உன் சுவாசக் காற்றில் வாழ்வேன் நான்

எனைக் காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு அன்பே
நான் நிழலில்லாதவன் தெரியாதா
என் நிழலும் நீயெனப் புரியாதா
உடல் நிழலைச் சேரவே முடியாதா அன்பே

நிமிஷங்கள் ஒவ்வொன்றும் வருஷங்களாகும்
நீ என்னை நீங்கிச் சென்றாலே
வருஷங்கள் ஒவ்வொன்றும் நிமிஷங்களாகும்
நீ எந்தன் பக்கம் நின்றாலே

மெய்யாக நீ என்னை விரும்பாத போதும்
பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும்
நிஜம் உந்தன் காதலென்றால்

எனைக் காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு அன்பே...
நான் நிழலில்லாதவன் தெரியாதா
என் நிழலும் நீயெனப் புரியாதா
உடல் நிழலைச் சேரவே முடியாதா அன்பே...

நடை போடும் பூங்காற்றே பூங்காற்றே
வா வா... என் வாசல்தான்...
வந்தால்... வாழ்வேனே நான்

எனைக் காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு அன்பே...

Monday, May 27, 2013

தனிமைகள் தீர துணையும் வேண்டும் தாங்கும் தோளில் சாய்ந்திட வேண்டும்




கண்டும் காணாமல் விழி காண்பது ஏன்
கேட்டும் கேளாமல் செவி சாய்ப்பது ஏன்

கண்டும் காணாமல் விழி காண்பது ஏன்
கேட்டும் கேளாமல் செவி சாய்ப்பது ஏன்
வந்து போவது ஏன் தந்து கேட்பது ஏன்

கண்டும் காணாமல் விழி காண்பது ஏன்
கேட்டும் கேளாமல் செவி சாய்ப்பது ஏன்

நினைவுகள் போல மறதியும் வேண்டும்
நேற்றும் நீங்க நாளை வேண்டும்

தனிமைகள் தீர துணையும் வேண்டும்
தாங்கும் தோளில் சாய்ந்திட வேண்டும்

அருகிலே வந்த போதிலும் ஏனோ தூரமே
நினைவினிலே தேங்கும் ஞயாபகம்
நீங்குமோ எந்த நாளுமே
சேருவோம் சேருவோம் வாழவே

கண்டும் காணாமல் விழி காண்பது ஏன்
கேட்டும் கேளாமல் செவி சாய்ப்பது ஏன்

உறவுகள் நீங்கி வாழும் வாழ்வில்
ஏங்கும் நொடிகள் சுமை என தெரியும்

திரைகடல் ஓடி தேடும் தேடல்
தீரும் போது தொலைந்தது தெரியும்

சிறகுகள் வாங்கும் ஆசையில்
வானை நீங்கினோம்
விடைகளை தேடும் அளவில்
கேள்விகள் தேடும் ஆவலில்
கேள்விபோல் நாளும் தேங்கினோம்
மாறுதல் ஆறுதல் ஆகுமே

கண்டும் காணாமல் விழி காண்பது ஏன்
கேட்டும் கேளாமல் செவி சாய்ப்பது ஏன்
வந்து போவது ஏன் தந்து கேட்பது ஏன்

கண்டும் காணாமல் விழி காண்பது ஏன்
கேட்டும் கேளாமல் செவி சாய்ப்பது ஏன்

Friday, May 17, 2013

திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா



திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்
திருச் செந்தூரிலே வேலாடும்
திருப்புகழ் பாடியே கடலாடும்

திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்
திருச்செந்தூரிலே வேலாடும்
திருப்புகழ் பாடியே கடலாடும்


பழநியிலே இருக்கும் கந்தப் பழம் - நீ
பார்வையிலே கொடுக்கும் அன்புப் பழம்
பழமுதிர்ச் சோலையில் முதிர்ந்த பழம் -
பக்திப் பசியோடு வருவோர்க்கு ஞானப் பழம்

திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்
திருச்செந்தூரிலே வேலாடும்
திருப்புகழ் பாடியே கடலாடும்


சென்னையிலும் கந்த கோட்டம் உண்டு - உன்
சிங்கார மயிலாடத் தோட்டம் உண்டு
உனக்கான மனக்கோயில் கொஞ்சமில்லை - அங்கு
உருவாகும் அன்புக்கோர் பஞ்சமில்லை!

திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்
திருச்செந்தூரிலே வேலாடும்
திருப்புகழ் பாடியே கடலாடும்

யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டு பூவென்று முள்ளைக் கண்டு புரியாமல் நின்றேன் இன்று



உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா
உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா
உனதாணை பாடுகின்றேன் நான் ரொம்ப நாளா
உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா

தாய் மடியில் பிறந்தோம் தமிழ் மடியில் வளர்ந்தோம்
நடிகரென மலர்ந்தோம் நாடகத்தில் கலந்தோம்
ததோம்த தோம்த தகதின
தோம்த தோம்த தோம்த தோம்த தகதின
தோம்த தோம்த தோம்த தோம்த தகதின தோம் (இசை)

ஆடாத மேடை இல்லை போடாத வேஷம் இல்லை
ஆடாத மேடை இல்லை போடாத வேஷம் இல்லை

சிந்தாத கண்ணீர் இல்லை சிரிப்புக்கும் பஞ்சம் இல்லை
கால் கொண்டு ஆடும் பிள்ளை நூல் கொண்டு ஆடும் பொம்மை
கால் கொண்டு ஆடும் பிள்ளை நூல் கொண்டு ஆடும் பொம்மை
உன் கையில் அந்த நூலா ஹ.. நீ சொல்லு நந்தலாலா

யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டு
யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டு

பூவென்று முள்ளைக் கண்டு புரியாமல் நின்றேன் இன்று
பால் போலக் கள்ளும் உண்டு நிறத்தாலே ரெண்டும் ஒன்று

பால் போலக் கள்ளும் உண்டு நிறத்தாலே ரெண்டும் ஒன்று
நானென்ன கள்ளா பாலா நீ சொல்லு நந்தலாலா

உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா
உனதாணை பாடுகின்றேன் நான் ரொம்ப நாளா

தகதினதக தகந்தோம்
தகதினதக தகந்தோம்
தகதினதக தகந்தோம்
தகதினதக தகந்தோம் ததோம்த தோம்த தகதின
தோம்த தோம்த தோம்த தோம்த தகதின
தோம்த தோம்த தோம்த தோம்த தகதின தோம்

உனக்கென்ன மேலே நின்றாய் ஓ.... நந்த....லா....லா......

Saturday, May 11, 2013

கொஞ்ச நேரம் கூட ஒத்தாசையா வாழவே இல்ல



ஊரான ஊருக்குள்ள உன்னப்போல யாருமில்ல
ஆனா நீ என்ன மட்டும் சேரவே இல்ல
கொஞ்ச நேரம் கூட ஒத்தாசையா வாழவே இல்ல
ஊரான ஊருக்குள்ள உன்னப்போல யாருமில்ல
ஆனா நீ என்னை மட்டும் தீண்டவே இல்ல
உன்ன உத்து பார்த்த கண்ணுரெண்டும் தூங்கவே இல்ல

காணமே காண வெச்ச கண்ணுக்குள்ள தீய வெச்ச
ஆனா நீ என்னை மட்டும் பார்க்கவே இல்ல
கொஞ்சி நாலு வார்த்த நல்லா பேசி கேட்கவே இல்ல
பேசாம பேச வெச்ச பிரியத்தோட கண்ணடிச்ச
ஆனா நீ என்னை மட்டும் பேசவே இல்ல
மஞ்ச தாலி வாங்க கூட சேரும் ஆசையே இல்ல

கூவாம கூவ வச்ச கொண்டையிலே பூவ வெச்ச
ஆனா நீ என்னை மட்டும் சூடவே இல்ல ? அய்யோ
தொலைஞ்சி போன ஆளை நீயும் தேடவே இல்ல
மூடாம மூடி வெச்ச முந்தானையில் சேதி வெச்ச
ஆனா நீ என்னை மட்டும் மூடவே இல்ல
காதலோடு நானிருக்கேன் மாறவே இல்ல
கள்ளி காதலோடு நானிருக்கேன் மாறவே இல்ல


ஊரான ஊருக்குள்ள உன்னப்போல யாருமில்ல
ஆனா நீ என்ன மட்டும் சேரவே இல்ல


தானாவே உன்னை வந்து சேருவா புள்ள

கொஞ்ச நேரம் கூட ஒத்தாசையா வாழவே இல்ல
ஊரான ஊருக்குள்ள
உன்ன உத்து பார்த்த கண்ணுரெண்டும் தூங்கவே இல்ல


கொஞ்சம் நோகா கண்ணை மூடி தூங்கு மாப்பிள்ளே

Friday, May 10, 2013

எழுதிய கவிதை ஏன்? முதல் வரி முதல் முழுவதும் பிழை





ஏன் நண்பனே என்னை ஏய்த்தாய் ஓ
என் பாவமாய் வந்து வாய்த்தாய்
உன் போலவே நல்ல நடிகன்
ஊர் எங்கிலும் இல்லை ஒருவன்

நல்லவர்கள் யாரோ தீயவர்கள் யாரோ
கண்டு கொண்டு கன்னி யாரும்
காதல் செய்வதில்லையே
கங்கை நதியல்ல கானல் நதி என்று
பிற்பாடு ஞானம் வந்து லாபம் என்னவோ

காதல் என்பது கனவு மாளிகை
புரிந்து கொள்ளடி என் தோழியே
உண்மை காதலை நான் தேடி பார்கிறேன்
காணவில்லையே என் தோழியே

வளைக்கையை பிடித்து வளைக்கையில் விழுந்தேன்
வலக்கரம் பிடித்து வலம் வர நினைத்தேன்
உறவெனும் கவிதை உயிரினில் வரைந்தேன்
எழுதிய கவிதை ஏன்? முதல் வரி முதல் முழுவதும் பிழை
விழிகளின் வழி விழுந்தது மழை
எல்லாம் உன்னால் தான்
இதுவா உந்தன் நியாங்கள்
எனக்கேன் இந்த காயங்கள்
கிழித்தாய் ஒரு காதல் ஓவியம்
முருகன் முகம் ஆறு தான்
மனிதன் முகம் நூறு தான்
ஒவ்வொன்றும் வேறு வேறு நிறமோ


ஏன் நண்பனே என்னை ஏய்த்தாய்

காதல் வெல்லுமா காதல் தோற்குமா
யாரும் அறிந்ததில்லையே ஏன் தோழியே

காதல் ஓவியம் கிழிந்து போனதால்
கவலை ஏனடி இதுவும் கடந்திடும்

அடிக்கடி எனை நீ அணைத்ததை அறிவேன்
அன்பெனும் விளக்கை அணைத்ததை அறியேன்
புயல் வந்து சாய்த்த மரம் ஒரு விறகு
உனக்கென்ன தெரியும்
என் இதயத்தில் வந்து விழுந்தது எடி
இள மனம் எங்கும் இருந்தது வலி
யம்மா யம்மா
உலகில் உள்ள பெண்களே
உரைப்பேன் ஒரு பொன்மொழி
காதல் ஒரு கனவு மாளிகை
எதுவும் அங்கு மாயம் தான்
எல்லாம் வர்ணஜாலம் தான்
நம்பாமல் வாழ்வதென்றும் நலமே

காதல் என்பது கனவு மாளிகை
புரிந்து கொள்ளடி என் தோழியே
உண்மை காதலை நான் தேடி பார்கிறேன்



Saturday, April 13, 2013

நான் ஏங்கி ஏங்கி பாக்குறப்போ ராங்கி பண்ணுறியே



சிறுவாணி தண்ணியப்போல் சிலுசிலுன்னு சிரிப்பிருக்கும்
கடையாணிச் சக்கரமபோல் கண்ணிரண்டும் சுத்தி வரும்
மருதாணிச் சிவப்பாட்டம் மணிக்கன்னம் மின்னி வரும்
மகராசி அழகையெல்லாம் மலக்காத்துப் பாடி வரும்



செங்குருவி செங்குருவி காரமடை செங்குருவி
சேலை கட்டி மாமனுக்கு மாலையிட்ட செங்குருவி
செங்குருவி செங்குருவி காரமடை செங்குருவி
சேலை கட்டி மாமனுக்கு மாலையிட்ட செங்குருவி
ஒத்திகைக்குப் போவமா ஒத்துமையா ஆவமா
முத்திரையைப் போடம்மா முத்தமிட்டு பாடம்மா
வெக்கமெல்லாம் மூட்டகட்டி வச்சா என்ன ஓரமா



செங்குருவி செங்குருவி காரமடை செங்குருவி
சேலை கட்டி மாமனுக்கு மாலையிட்ட செங்குருவி

வெண் பருத்தி நூலெடுத்து வாய் வெடிச்ச பூவெடுத்து
நான் அணிஞ்சிட தொடுத்துவச்ச நளினமான மாலையிது

தன தனனானான தானனனா தனன தனனான தனனனா
சென்னிமல தேனெடுத்து செங்கரும்பின் சாறெடுத்து
நீ பருகிட கலந்து வச்ச நெருக்கமான வேளையிது
தன தனனானான தானனனா தனன தனனான தனனனா
ஹா..ராசாத்தி ஒடம்பிலிருக்கும் ரவிக்க துணி நானாக
அன்னாடம் சூடிக்கொள்ள ஆச வச்ச ஆகாதா
ஆத்தாடி மறைஞ்சிருக்கும் அழகையெல்லாம் நீ பாத்தா
எம்மானம் ரெக்க கட்டி எட்டுத்திக்கும் போகாதா
அடி சீனி சக்கரையே எட்டி நீயும் நிக்கிறியே
நான் ஏங்கி ஏங்கி பாக்குறப்போ ராங்கி பண்ணுறியே

செங்குருவி செங்குருவி காரமடை செங்குருவி
சேலை கட்டி மாமனுக்கு மாலையிட்ட செங்குருவி

கள்ளழகர் வைகையிலே கால் பதிக்கும் வேளையிலே
பால் நிலவில் படுத்திகிட்டு பருவராகம் பாடணுமே
தன தனனானான தானனனா தனன தனனான தனனனா
சொக்கனுக்குப் பக்கத்திலே ஜோடி என்று வந்தவளே
நூல் பொடவையில் ஒளிஞ்சுகிட்டு நெனச்ச தாளம் போடணுமே
தன தனனானான தானனனா தனன தனனான தனனனா
ஆனாலும் உனக்கு ரொம்ப அவசரம்தான் மாமாவே
ஒண்ணாகி கூடும்போது ஊர் முழுக்கப் பாக்காதா
அஹ்..பாத்தாலும் தவறு இல்ல பனி உறங்கும் ரோசாவே
முன்னால சோத்த வச்சா மூக்குலதான் வேக்காதா
என்ன வாட்ட எண்ணுறியே கை கோத்து பின்னுறியே
உன் பாட்டப் பாடி பலவிதமா சேட்ட பண்ணுறியே

செங்குருவி செங்குருவி காரமடை செங்குருவி
சேலை கட்டி மாமனுக்கு மாலையிட்ட செங்குருவி
செங்குருவி செங்குருவி காரமடை செங்குருவி
சேலை கட்டி மாமனுக்கு மாலையிட்ட செங்குருவி
ஒத்திகைக்குப் போவமா ஒத்துமையா ஆவமா
முத்திரையைப் போடம்மா முத்தமிட்டு பாடம்மா
வெக்கமெல்லாம் மூட்டகட்டி வச்சா என்ன ஓரமா

செங்குருவி செங்குருவி காரமடை செங்குருவி
சேலை கட்டி மாமனுக்கு மாலையிட்ட செங்குருவி