Sunday, November 30, 2014

நாளும் பாத்தாச்சு ஆளும் பாத்தாச்சு ஜோடி எப்பொது சேரும்



பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம் பம் பம்
பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம்
பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம் பம் பம்
பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம்
கககா கிகிகுகு கககே குகுகுகு கெகே
கககா கிகிகுகு கககே குகுகுகு கெகே
கககா கிகிகுகு? இம்ம்ம்ம்ம்ம்ம்
கககா கிகிகுகு... Very Good
கககா கிகிகுகு கககே குகுகுகு கெகே
கககா கிகிகுகு கககே குகுகுகு கெகே

புதுசேரி கட்சேரி எக்கசக்க party ஒன்னு புடிச்சேன் 
புது டைகெர் ஆச்சாரி வரதாச்சாரி போல படிச்சேன்
ஹெய்ய் பாக்கும் பாப்பாக்கும் முத்து போல் புல்லாக்கு
கேக்கும் மத்தாப்பு மேலாக்கு
புது காத்துக்கும் பாட்டுக்கும் பூட்டுக்கள்  போட்டது
தகிட ததிதோம்...

(புதுசேரி கட்சேரி)

பிறக்கையில் என்னோடு பிறந்தது  வளர்ந்தது பாட்டு
நடக்கையில் என்னோடு நடந்தது கலந்தது Beatடு
இருக்குது Guitar Drumsகள் Trumphet Flute
இவைகளை  ஒன்றாக இசைப்பவன் எவன் இங்கு காட்டு
வித விதமா வகை வகையா
சுகம் சுகமா சுரம் படிப்பேன்
இமயம் முதல் குமரி வரை
இதயங்களில்  இடம் பிடிப்பேன்

குயிலின் சங்கீதம் கு கூ
கிளியின் சங்கீதம் கி கீ
எனது சங்கீதம் சா பா
இதுக்கு கிடையாது தாப்பா
குமரி ஆனாலும்  கிழவி ஆனாலும்
நின்னு காதார கேப்பா

(புதுசேரி கட்சேரி)

மிருதங்கம் சூடேர அடிக்கடி கொடுக்கனும் டேக்கா
மனுஷங்க முன்னேர அடிக்கடி புடிக்கனும் காக்கா
விவரங்கள் சொல்லாம விஷயத்த முடிக்கனும் நேக்கா
முடிச்சதும் எல்லாரும் புகழ்ந்திட நடக்கனும் ஷோக்கா
சரக்கிருக்கு முருக்கிருக்கு
எனக்கெதுக்கு மனக்கவலை
ஆரிஞ்சுக்கனும் புரிஞ்சுக்கனும்
தெரிஞ்சுக்கனும் நில தவளை
காலம் என்னோட காலம்
நேரம் என்னோட நேரம்
கல்லும் காயாக மாரும்
முல்லும் பூவாக மலரும்
நாளும்  பாத்தாச்சு   ஆளும் பாத்தாச்சு
ஜோடி எப்பொது சேரும்

(புதுசேரி கட்சேரி)

பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம் பம் பம்
பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம்
பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம் பம் பம்
பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம்

Thursday, November 20, 2014

என் கண் விழிக்குள் விழுந்ததனால் கவிதையாக மலர்ந்தாய்




சின்ன சின்ன மழை துளிகள் சேர்த்து வைப்பேனோ
மின்னல் ஒளியில் நூலெடுத்து கோர்த்து வைப்பேனோ
சின்ன சின்ன மழை துளிகள் சேர்த்து வைப்பேனோ
மின்னல் ஒளியில் நூலெடுத்து கோர்த்து வைப்பேனோ
சக்கரவாகமோ மழையை அருந்துமாம்
நான் சக்கரவாக பறவை ஆவேனோ
மழையின் தாரைகள் வைர விழுதுகள்
விழுது பிடித்து விண்ணில் சேர்வேனோ

சிறு பூவினில் விழுந்தால் ஒரு தேன் துளியாய் வருவாய்
சிறு சிப்பியிலே விழுந்தால் ஒரு முத்தெனவே முதிர்வாய்
பயிர் வேரினிலே விழுந்தால் நவ தானியமாய் விளைவாய்
என் கண் விழிக்குள் விழுந்ததனால் கவிதையாக மலர்ந்தாய்
அந்த இயற்கை அன்னை படைத்த ஒரு பெரிய ஷவர் இது
அட இந்த வயது கழிந்தால் பிறகெங்கு நனைவது
இவள் கண்ணி என்பதை இந்த மழை கண்டறிந்து சொல்லியது
சக்கரவாகமோ மழையை அருந்துமாம்
நான் சக்கரவாக பறவை ஆவேனோ
மழையின் தாரைகள் வைர விழுதுகள்
விழுது பிடித்து விண்ணில் சேர்வேனோ

மழை கவிதை கொண்டு வருது யாரும் கதவடைக்க வேண்டாம்
ஒரு கருப்பு கொடி காட்டி யாரும் குடை பிடிக்க வேண்டாம்
இது தேவதையின் பரிசு யாரும் திரும்பி கொள்ள வேண்டாம்
நெடுஞ்சாலையிலே நனைய ஒருவர் சம்மதமும் வேண்டாம்
அந்த மேகம் சுரந்த பாலில் ஏன் நனைய மறுக்கிறாய்
நீ வாழ வந்த வாழ்வில் ஒரு பகுதி இழக்கிறாய்
நீ கண்கள் மூடி கரையும் போது மண்ணில் சொர்க்கம் ஏதுவாய்
கண்கள் மூடி கரையும் போது மண்ணில் சொர்க்கம் ஏதுவாய்

சக்கரவாகமோ மழையை அருந்துமாம்
நான் சக்கரவாக பறவை ஆவேனோ
மழையின் தாரைகள் வைர விழுதுகள்
விழுது பிடித்து விண்ணில் சேர்வேனோ

சின்ன சின்ன மழை துளிகள் சேர்த்து வைப்பேனோ
மின்னல் ஒளியில் நூலெடுத்து கோர்த்து வைப்பேனோ
சின்ன சின்ன மழை துளிகள் சேர்த்து வைப்பேனோ
மின்னல் ஒளியில் நூலெடுத்து கோர்த்து வைப்பேனோ
சக்கரவாகமோ மழையை அருந்துமாம்
நான் சக்கரவாக பறவை ஆவேனோ
மழையின் தாரைகள் வைர விழுதுகள்
விழுது பிடித்து விண்ணில் சேர்வேனோ