Wednesday, January 21, 2015

கனவும் நனவும் தொடும் ஓர் இடத்தில் இருக்கச் செய்தானே!




ஏன் இங்கு வந்தான்? பேசாதே என்றான்
செல் என்று சொன்னேன் என்னுள்ளே சென்றான்

உறங்கிக் கிடந்த புலன்களை எல்லாம் எழுப்பி விடுகின்றான்!
சிறிது சிறிதாய் கிறக்கங்கள் எல்லாம் கிளப்பி விடுகின்றான்!

பூவும் திறக்கும் நொடியின் முன்னே
தேனை எடுக்கின்றான்!
காதல் பிறக்கும் நொடியின் முன்னே
காமம் கொடுக்கின்றான்!

ஏன் இங்கு வந்தான்?   ஏன் இங்கு வந்தான்?
பேசாதே என்றான் !  பேசாதே என்றான் !
ஓஹோ
செல் என்று சொன்னேன்  ! செல் என்று சொன்னேன்
என்னுள்ளே சென்றான் ! என்னுள்ளே சென்றான் !

என் அழகை இரசிக்கிறான்
என் இளமை ருசிக்கிறான்
என் இடையின் சரிவிலே
மழைத் துளியென உருள்கின்றான்

என் தோளினில் மெதுவாய் அமர்ந்தான்
என் கோபத்தை மதுவாய் சுவைத்தான்

என் கண்களின் சிவப்பை அலகினில் ஏந்தி கன்னத்தில் பூசுகின்றான்!
 
விடிய விடிய இரவினை வடித்துக்  குடிக்கச் செய்தானே!
ஓஹோ
கொடிய கொடிய வலிகளைக் கூட பிடிக்கச் செய்தானே!

ஏன் இங்கு வந்தான்?   ஏன் இங்கு வந்தான்?
பேசாதே என்றான் !  பேசாதே என்றான் !
ஓஹோ
செல் என்று சொன்னேன்  ! செல் என்று சொன்னேன்
என்னுள்ளே சென்றான் ! என்னுள்ளே சென்றான் !


நான் ஒளியில் நடக்கிறேன் என் நிழலாய் தொடர்கிறான்
என் விளக்கை அணைக்கிறேன் ஏன் இருளென படர்கின்றான்?

முன் அனுமதி இன்றி நுழைந்தான்
என் அறையினில் எங்கும் நிறைந்தான்
இது முறையில்லை என்றேன்
வரையறை இன்றி எனை அவன் சிறைபிடித்தான்!

சிறையின் உள்ளே சிறகுகள் தந்து பறக்கச் செய்தானே!
ஓஹோ
கனவும் நனவும் தொடும் ஓர் இடத்தில் இருக்கச் செய்தானே!

ஏன் இங்கு வந்தான்?   ஏன் இங்கு வந்தான்?
பேசாதே என்றான் !  பேசாதே என்றான் !
ஓஹோ
செல் என்று சொன்னேன்  ! செல் என்று சொன்னேன்
என்னுள்ளே சென்றான் ! என்னுள்ளே சென்றான் !