Thursday, October 12, 2017

பூமியின் பிறந்த நாள் என்று என சொல்லவா காதலின் பிறந்த நாள் அன்றுதான் அல்லவா


இங்கே இங்கே ஒரு முறை பார் டோல்னா
இரக்கமே உனக்கில்லையா டோல்னா 

டோல்னா டோல்னா ஓர் நொடி பாரடி
அகிலமே மாறுமே அஹிம்சையாய் சில நொடி

பூமியின் பிறந்த நாள் என்று என சொல்லவா
காதலின் பிறந்த நாள் அன்றுதான் அல்லவா

பூமியின் பிறந்த நாள் என்று என சொல்லவா
காதலின் பிறந்த நாள் அன்றுதான் அல்லவா

எது முதல் நான் என்பதை சொல்
எது வரை நீ கலந்ததை சொல் ஓஹோ
அணு முதல் உன் வேண்டுதல் சொல்
உயிர் வரை என் தூண்டுதல் சொல்
சொல்வதை சொல்வதை சீக்கிரம்  சொல்
தொலைவதா கலைவதா சீக்கிரம்  சொல்
முதல் முறை முதல் முறை மென்மையாய் தொட்டு சொல்
மொத்தமாய் மொத்தமாய் பெண்மையை கொண்டு சொல்

இதயத்தில் இதயத்தில் ஹைய ஹைய
இருவிழி அவஸ்தைகள் ஹைய ஹைய
மனசுக்குள் உயிர் திரை ஹைய ஹைய
கனவுக்குள் அடை மழை  ஹைய ஹைய


நிற்க என்றாய் நின்றுவிட்டேன்
வாழ்க என்றாய் வாழ்ந்துவிட்டேன்
பூக்க என்றாய் பூத்துவிட்டேன்
சேர்க என்றாய் சேர்ந்துவிட்டேன்
பூவிலே பூவிலே என்னதான் நீ
இல்லையே இல்லையே பெண்மையே நீ
உலகமே உலகமே உன்னிடம் கெஞ்சுமே
ஒருமுறை ஒருமுறை பார்வையும் கேட்குமே


இங்கே இங்கே ஒரு முறை பார் டோல்னா
இரக்கமே உனக்கில்லையா டோல்னா 

Friday, March 31, 2017

என் நினைவோ தினம் உன்னை சுற்றும் தானே மனம் எல்லாம் சுகம் தானே எங்கும் உன்னை கண்டேனே


நீ கிடைத்தாய் ஒரு முன்னை தவம் போலே
இளம் கன்னி பிறப்பாலே
இது உந்தன் அன்பாலே
இந்நாளே பொன்னாளே
என் நினைவோ தினம் உன்னை சுற்றும் தானே 
 மனம் எல்லாம் சுகந்தானே
 எங்கும் உன்னை கண்டேனே
 என்னானேன் ஏதானேன்..

விடுதலையான    மனம் அடிமை என்றாவதென்ன ?
முடிவின்றி போவதென்ன
முன்னும் பின்னும்  எண்ணமின்றி தடுமாற
 
படைத்த போதே  இணைந்த உயிரானோம்
பதவியேற்றோம் , உண்மை இதுதான்
 
மனம் எல்லாம் துள்ள துள்ள
மகிழ்ந்தோடும் காவேரி
விழியெல்லாம் வண்ணம் பூச்சி, விளையாடிடுதே
மனம் எல்லாம் துள்ள துள்ள
மகிழ்ந்தோடும் காவேரி
மேலேறி ஓடாதோ,
இங்கும், அங்கும்,
எங்கும் பொங்கி பாயாதோ
 
என் நினைவோ  தினம் உன்னை சுற்றும் தானே  
மனம் எல்லாம் சுகம் தானே
எங்கும் உன்னை கண்டேனே
என்னனேன்  ஏதானேன்
 
எங்கே போனாலும்  உன்னுடைய எண்ணம் இல்லாமல்
என்னிடத்தில் சொல்லாமலே  என் இதயம், நின்றே போகும்
ஆ…. அன்புடைய ஆதிக்கமே
என்றும் என்னை பதிக்குமே
அற்புதங்கள் சாதிக்கும்
வாழும் வரை நீடிக்குமே   நீங்காதே
எனது ஜீவன், எனது ஆதாரம்
எனது சுவாசம், உந்தன் கண்ணோரம்
 
நீ கிடைத்தாய் ஒரு முன்னை தவம் போலே
இளம் கன்னி பிறப்பாலே
இது உந்தன் அன்பாலே
இந்நாளே பொன்னாலே
என் நினைவோ தினம் உன்னை சுற்றும் தானே
மனம் எல்லாம் சுகம்தானே
எங்கும் உன்னை கன்டெனே
என்னனேன்  ஏதானேன்
 
மனம் எல்லாம் துள்ள துள்ள
மகிழ்ந்தோடும் காவேரி , மேலேறி
ஓடாதோ இங்கும் அங்கும்
எங்கும் பொங்கி பாயாதோ
 

Monday, February 13, 2017

நீ பிரியா வரம் தந்தால் அதுவே போதும்



நிதா நிதா நிதானமாக யோசித்தாலும்  
 நில்லா நில்லா நில்லாமலோடி யோசித்தாலும்  
 நீதான் மனம் தேடும் அன்பாழன்    
 பூவாய் எனை ஏந்தும் பூபாலன்  
 என் மடியின் மணவாளன்  எனத்தோன்றுதே
 செந்தூரா     
 சேர்ந்தே செல்வோம் செந்தூரா   
 செங்காந்தல் பூ உன் தேரா
 மாறன் அம்பு ஐந்தும் வைத்து  
 ஒன்றாய் காற்றில் எய்தாயா  
 செந்தூரா    
 சேர்ந்தே செல்வோம் செந்தூரா   
 செங்காந்தல் பூ உன் தேரா    
 மாறன் அம்பு ஐந்தும் வைத்து  
 ஒன்றாய் காற்றில் எய்தாயா  


 நடக்கையில் அணைத்தவாறு போகவேண்டும்  
 விரல்களை பிணைத்தவாறு பேசவேண்டும்  
 காலை எழும்போது நீ வேண்டும்  
 தூக்கம் வரும்போது தோள் வேண்டும்  
 நீ பிரியா வரம் தந்தால் அதுவே போதும்
   
செந்தூரா    
 சேர்ந்தே செல்வோம் செந்தூரா   
 செங்காந்தல் பூ உன் தேரா    
 மாறன் அம்பு ஐந்தும் வைத்து  
 ஒன்றாய் காற்றில் எய்தாயா 

 மழையின் இரவில் ஒரு குடையென நடப்போமா  
 மரத்தின் அடியில் மணிகணக்கினில் கதைப்போமா  
 பாடல் கேட்போமா பாடி பார்ப்போமா  
 மூழ்கத்தான் வேண்டாமா…   
 யாரும் காணாத இன்பம் எல்லாமே  
 கையில் வந்தே விழுமா………  
 நீ இன்றி இனி என்னால் இருந்திட முடிந்திடுமா   
   
செந்தூரா    
 சேர்ந்தே செல்வோம் செந்தூரா   
 செங்காந்தல் பூ உன் தேரா    
 மாறன் அம்பு ஐந்தும் வைத்து  
 ஒன்றாய் காற்றில் எய்தாயா 

 அலைந்து நான் கலைத்துப்போகும் போது  
 மெலிந்து நான் இளைத்து போவதாக சொல்லி விட்டு  
 நலபாகம் செய்வாயா  
 பொய்யாய் சில நேரம் நீ  வைவாயா
 நான் தொலைந்தால் உனை சேரும் வழி சொல்வாயா 

செந்தூரா    
 சேர்ந்தே செல்வோம் செந்தூரா   
 செங்காந்தல் பூ உன் தேரா    
 மாறன் அம்பு ஐந்தும் வைத்து  
 ஒன்றாய் காற்றில் எய்தாயா 

எய்தாயா 
கண்கள் சொக்க செய்தாயா
கையில் சாய சொல்வாயா
ஏனோ ஆச்சு வெப்பம் மூச்சு
வெட்கம் போயே போச்சு