ஏன் என்றால் உன் பிறந்தநாள்
உலக பூக்களின் வாசம்
உனக்கு சிறை பிடிப்பேன்
உலர்ந்த மேகத்தை கொண்டு
நிலவின் கறை துடைப்பேன்
ஏன் என்றால் உன் பிறந்தநாள்
ஏன் என்றால் உன் பிறந்தநாள்
கிளை ஒன்றில் மேடை அமைத்து
ஒளிவாங்கி கையில் கொடுத்து
பறவைகளை பாட செய்வேன்
இலை எல்லாம் கைகள் தட்ட
அதில் வாழும் பறவை ஒன்றை
உன் காதில் கூவ செய்வேன்
உன் அறையில் கூடு கட்டிட
கட்டளை இடுவேன்
அதிகாலை உன்னை எழுப்பிட
உத்தரவு இடுவேன்
ஏன் என்றால் உன் பிறந்தநாள்
ஏன் என்றால் உன் பிறந்தநாள்
மலை உச்சி ஏத்தி
பனி கட்டி வெட்டி
உன் குளியல் தொட்டியில் கொட்டி
சூரியனை வடி கட்டி
பனி எல்லாம் ஒதிக்கிடுவென்
உன்னை அதில் குளிக்கத்தான்
இதம் பார்த்து இரக்கிடுவேன்
ய ய ய
கண்ணில்லா பெண் மீன்கள் பிடித்து
ஓ ஓ ஓ..
உன் மீது நான் நீந்த விடுவேன்.. ஓ..
நீ குளித்து முடித்து துவட்டதான்
என் காதல் மடித்து தந்திடுவேன்
ஏன் என்றால் உன் பிறந்தநாள்
ஏன் என்றால் உன் பிறந்தநாள்
நூறாயிரம் ஊதுபைகளில்...
என் மூச்சினை நான் இன்று நிரப்பிடுவேன்.
அவை அனைத்தையும் வானத்தில் அடுக்கிடுவேன்
என் மூச்சினில் உன் பெயர் வரைந்திடுவேன்!
ஏன் என்றால்.... உன் பிறந்தநாள்!
ஏன் என்றால்.... உன் பிறந்தநாள்!
நெஞ்சத்தை வெதுப்பகம் ஆக்கி
அணிச்சல் செய்திடுவேன்
மெழுகு பூக்கள் மேலே என்
காதல் ஏற்றிடுவேன்
நீ ஊதினால் அணையாதடி
நீ வெட்டவே முடியாதடி
என் கண்களை நீ மூழ்கடி
என்ன வேணும் அதை கேளடி
ஏன் என்றால் உன் பிறந்தநாள்
ஏன் என்றால் உன் பிறந்தநாள்
கடவுள் கூட்டம் அணிவகுத்து
வரங்கள் தந்திடுமே
இந்நாளே முடியக் கூடாதென்று
உலகம் நின்றிடுமே!
ஏன் என்றால் உன் பிறந்தநாள்
ஏன் என்றால் உன் பிறந்தநாள்
நண்பரே அது அணிச்சல். அனிச்சல் அல்ல. அணிச்சல் என்றால் Cake
ReplyDeleteNandri Kottravan sir. I don't know the meaning of அணிச்சல் , now I changed the spelling. Thanks for your comment
ReplyDelete