மன்னிக்க மாட்டாயா உன் மனம் இறங்கி
நீ ஒரு மேதை நான் ஒரு பேதை
நீ தரும் சோதனை நான் படும் வேதனை
போதும் போதும்
என் விழிகள் தீபங்களாய் உனக்கென ஏற்றி வைத்தேன்
பொன் அழகு தேவி உந்தன் தரிசனம் பார்த்து வந்தேன்
உன் அடிமை உன் அருளை பெற ஒரு வழி இல்லையா
உன் அருகில் வாழ உந்தன் நிழலுக்கு இடமில்லாயா
மன்னிக்க மாட்டாயா உன் மனம் இறங்கி
நீ ஒரு மேதை நான் ஒரு பேதை
நீ தரும் சோதனை நான் பாடும் வேதனை
போதும் போதும்
என் மனதில் நாள் முழுதும் இருப்பது நீ அல்லவா
என் குரலில் ராகங்களாய் ஒலிப்பதும் உன் மூச்சல்லவா
என் இதயம் உன் உடைமை உனக்கது புரியாதா
இன்னும் அதை நீ மிதித்தால் உனக்கது வலிக்காதா
No comments:
Post a Comment