
காதல் காதல் என்று பேச
கண்ணன் வந்தானோ
காலம் பார்த்து ஜாலம் செய்ய
மன்னன் வந்தானோ
மன்னன் வந்தானோ
காதல் காதல் என்று பேச
கண்ணன் வந்தானோ
காலம் பார்த்து ஜாலம் செய்ய
மன்னன் வந்தானோ
மன்னன் வந்தானோ
கண்ணா நீ கொண்டாடும்
பிருந்தாவனம்
கல்யாணப் பூப்பந்தல் எந்தன் மனம்
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஆஅ ஆஅ ஆஅ
கண்ணா நீ கொண்டாடும்
பிருந்தாவனம்
கல்யாணப் பூப்பந்தல் எந்தன் மனம்
நீராட நீ செல்லும் யமுனா நதி
நீராட நீ செல்லும் யமுனா நதி
மங்கல மங்கையின் மேனியில்
தங்கிய மஞ்சள் நதியோ குங்கும நதியோ
ஆஆஆஆஆ
காதல் காதல் என்று பேச
கண்ணன் வந்தானோ
காலம் பார்த்து ஜாலம் செய்ய
மன்னன் வந்தானோ
ஆஅ ஆஅ ஆஅ
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ஆஆஆஆஆ
காணாத உறவொன்று நேர் வந்தது
கண்ணா உன் அலங்காரத் தேர் வந்தது
வாழாத பெண் ஒன்று வழி கண்டது
வாழாத பெண் ஒன்று வழி கண்டது
வாடிய பூங்கொடி நீரினில் ஆடுது
மன்னா வருக மாலை தருக
ஆஆஆஆஆ
காதல் காதல் என்று பேச
கண்ணன் வந்தானோ
காலம் பார்த்து ஜாலம் செய்ய
மன்னன் வந்தானோ
பூமாலை நீ தந்து சீராட்டினாய்
புகழ் மாலை நான் தந்து தாலாட்டுவேன்
பாமாலை பல கோடி பாராட்டுவேன்
பாமாலை பல கோடி பாராட்டுவேன்
பள்ளியின் மீதொரு மெல்லிய நாடகம்
சொல்லிட வருவேன் ஏதோ தருவேன்
ஆஆஆஆஆ
காதல் காதல் என்று பேச
கண்ணன் வந்தானோ
காலம் பார்த்து ஜாலம் செய்ய
மன்னன் வந்தானோ
மன்னன் வந்தானோ
ஹம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்