கண்ணை படித்தேன் விண்ணை படித்தேன்
உன்னை படிக்க முடியலையே... இன்னும் முடியலையே
கண்ணை படித்தேன் விண்ணை படித்தேன்
உன்னை படிக்க முடியலையே ... இன்னும் முடியலையே
சுற்றி திரிந்தேன் திக்கித்து இருந்தேன்
சுற்றி திரிந்தேன் திக்கித்து இருந்தேன்
எந்தன் இதய கதவை ஏன் வந்து திறந்தாய்
கண்ணை படித்தேன் விண்ணை படித்தேன்
உன்னை படிக்க முடியலையே... இன்னும் முடியலையே
கண்ணை திறந்தாலும் மறந்தாலும்
தெரியுது உந்தன் உருவம் உயிர் உருவம்
இதயம் அதை வரையும்
கொஞ்சி சிரித்தாலும் தவிர்த்தாலும்
இனிக்குது இந்த பருவம் ..இந்த பருவம்
அலை அலையாய் ஆசைகளை
அடுக்கடுக்காய் அனுப்புகிறாய்
கொஞ்சம் ரசித்து கொஞ்சம் ருசித்து
கொஞ்சி அணைத்து காற்றி மிதக்க
கண்ணை படித்தேன் விண்ணை படித்தேன்
உன்னை படிக்க முடியலையே... இன்னும் முடியலையே
வட்ட வளையோடு கொலுசோடு உன்னை இசைத்திட வரவா
வண்ண நிலவே .. தரவா .. தந்து பெறவா
சின்ன மழையாக வெயிலாக தொட்டு தொட்டு
முத்தம் தரவா தாளம் இடவா
விழி அசைந்தால் உயிர் அசையும்
புது இசையை மீட்டுகிறாய்
இந்த நிமிடம் இந்த ஸ்பரிசம்
என்றும் நிலைக்கும் காலம் முழுதும்
கண்ணை படித்தேன் விண்ணை படித்தேன்
உன்னை படிக்க முடியலையே... இன்னும் முடியலையே
கண்ணை படித்தேன் விண்ணை படித்தேன்
உன்னை படிக்க முடியலையே ... இன்னும் முடியலையே
சுற்றி திரிந்தேன் திக்கித்து இருந்தேன்
சுற்றி திரிந்தேன் திக்கித்து இருந்தேன்
எந்தன் இதய கதவை ஏன் வந்து திறந்தாய்
கண்ணை படித்தேன் விண்ணை படித்தேன்
உன்னை படிக்க முடியலையே... இன்னும் முடியலையே
No comments:
Post a Comment