மழையுதிர் காலம் மழையுதிர் காலம் நெஞ்சில் தெரிகிறதே
மனசுக்குள் ஏதோ மனசுக்குள் ஏதோ மின்னல் அடிக்கிறதே
பனியின் துளிகள் விழும் போது இலைகள் அறியாதே
உன் முகம் பார்த்து உன்னுடன் நடந்தால் தூரம் தொலைகிறதே
வார்த்தை சொல்ல துடிப்பதை உன் பார்வை சொல்கிறதே
மௌனம் போலவே ஒரு மொழிதான் ஏதடி
எத்தனையோ பயணங்கள் வந்தது போனது
இது போல் பயணம் இல்லை
என்னை விட்டு தள்ளி நின்று என்னை நானே பார்கிறேன்
பரவசம் குறையவில்லை
கத்தி மேல் நடக்கும் பயம் இந்த காதலில் நடக்கும்
இந்த வலிகளும் இனித்திடுமே
புத்தியினை குழப்பும் ஆனால் மனதுக்கு பிடிக்கும்
அது மறுபடி குழப்பிடுமே
காதலது பொல்லாதது
கொல்லாமலே கொல்லும் அது
கூச்சம் நாச்சம் இல்லாதது
ஹையோ ஹையோ
மழையுதிர் காலம் மழையுதிர் காலம் நெஞ்சில் தெரிகிறதே
மனசுக்குள் ஏதோ மனசுக்குள் ஏதோ மின்னல் அடிக்கிறதே
சின்னதொரு புன்னகை என்னை என்ன பண்ணுது
எனக்கே புரியவில்லை
புயல் வந்து படகென புலன்களும் துடிக்கிது
கரையேற தெரியவில்லை
கண்ணிலொரு கனவு விடிந்தால் அது கலைந்திடும் தெரியுது
ஆனால் மனம் நம்பிவிட மறுக்கிறது
ரெண்டுக்கெட்ட வயசு மெதுவாய் ஒரு தூண்டிலை போடுது
மனசும் அதில் மாட்டிக்கிட்டு முழிக்கிறது
பெண்ணே நாளை என்ன நடக்கும் ?
உன்னை என்னை கனவிணைக்கும்
பெண்ணே நாளை என்ன நடக்கும் ?
உன்னை என்னை ....