கனவெல்லாம் பலிக்குதே கண் முன்னே நடக்குதே
வாழ்க்கைக்கு அர்த்தங்கள் கிடைக்கிறதே
வானவில் நிமிடங்கள் நடக்கிறதே
என்னுடைய பிள்ளை என்னை ஜெயிக்கிறதே
என்னை விட உயரத்தில் பறந்து சிகரம் தொட
என் வானத்தில் ஒரு நட்சத்திரம் புதிதாக பூப்பூத்து சிரிக்கின்றதே
எங்கே எங்கேயென்று என்று தினம்தோறும் நான் எதிர்ப்பார்த்த நாள் இன்று நடக்கின்றதே
கனவெல்லாம் பலிக்குதே கண் முன்னே நடக்குதே
கனவெல்லாம் பலிக்குதே கண் முன்னே நடக்குதே
நீ நடந்த காட்சி இன்னும் கண்களிலே
நாளை உன் பேரைச் சொல்லும் பெருமிதம் நெஞ்சினிலே
என் தோளைத் தாண்டி வளர்ந்ததனால் என் தோழன் நீயல்லவா
என் வேள்வியாவும் வென்றதனால் என் பாதி நீயல்லவா
சந்தோஷத் தேரில் தாவியேறி மனமொன்று மிதந்திட
என் வானத்தில் ஒரு நட்சத்திரம் புதிதாக பூப்பூத்து சிரிக்கின்றதே
எங்கே எங்கேயென்று என்று தினம்தோறும் நான் எதிர்ப்பார்த்த நாள் இன்று நடக்கின்றதே
கனவெல்லாம் பலிக்குதே
கண் முன்னே நடக்குதே
கிளிக்கூட்டில் பொத்தி வைத்து புலி வளர்த்தேன் இது வரையில்
உலகத்தை நீ வென்று விடு உயிரிருக்கும் அது் வரையில்
என்னாளும் காவல் காப்பவன் நான் என் காவல் நீயல்லவா
எப்போதும் உன்னை நினைப்பவன் நான் என் தேடல் நீயல்லவா
என் ஆதி அந்தம் யாவும் இன்று ஆனந்தக் கண்ணீரில்
என் வானத்தில் ஒரு நட்சத்திரம் புதிதாக பூப்பூத்து சிரிக்கின்றதே
எங்கே எங்கேயென்று என்று தினம்தோறும் நான் எதிர்ப்பார்த்த நாள் இன்று நடக்கின்றதே
கனவெல்லாம் பலிக்குதே
கண் முன்னே நடக்குதே
No comments:
Post a Comment