
அம்மம்மா சரணம் சரணம் உன் பாதங்கள்
அப்பப்போ தரணும் தரணும் என் தேவைகள்
அடி ராதா தெரியாதா இளம் போதை
தெரியாதா தொடராதா அதன் பாதை
கொடுத்தால் நான் எடுத்தால்
தேன் மொழி ராதா
அப்பப்பா அப்பப்பா பெரிது பெரிது உன் பெண் பக்தி
அப்பப்போ நான் அறிவேன் அறிவேன் உன் சக்தி
நீ தானே நான் போற்றும் சிவலிங்கம்
இவள் மேனி சரிபாதி உன் அங்கம்
பகலும் நல் இரவும் பூஜைகள் தானே
அம்மம்மா சரணம் சரணம் உன் பாதங்கள்
அப்பப்போ தரணும் தரணும் என் தேவைகள்
ஆராதனை செய்ய அம்பாளும் இருக்க
அடியேனும் தான் பாலில் அபிஷேகம் நடத்த
ஆராதனை செய்ய அம்பாளும் இருக்க
அடியேனும் தான் பாலில் அபிஷேகம் நடத்த
நீ வாங்க வந்த வரமென்னவோ
நீங்காத காட்சி தரவேண்டுமோ
நான் பார்க்க மனம் சேர்க்க
அருள் சேர்க்க வா ஈஸ்வரி
அப்பப்பா அப்பப்பா பெரிது பெரிது உன் பெண் பக்தி
அப்பப்போ நான் அறிவேன் அறிவேன் உன் சக்தி
புல்லாகுழல் கண்ணன் கையோடு இருக்க
ராதா மனம் அதை பார்த்தாலே துடிக்க
புல்லாகுழல் கண்ணன் கையோடு இருக்க
ராதா மனம் அதை பார்த்தாலே துடிக்க
குழலோடு வந்த கோபாலன் நான்தான்
கோபாலன்பாடும் பூபாளம் நீ
உன் பாட்டு நான் கேட்டு பாராட்ட
நாள் வேணுமோ
அம்மம்மா சரணம் சரணம் உன் பாதங்கள்
அப்பப்போ தரணும் தரணும் என் தேவைகள்
நீ தானே நான் போற்றும் சிவலிங்கம்
இவள் மேனி சரிபாதி உன் அங்கம்
கொடுத்தால் நான் எடுத்தால்
தேன் வடியாதா ராதா
No comments:
Post a Comment