
ஓ மானே மானே மானே
உன்னைத்தானே
ஓ மானே மானே மானே..
உன்னைத்தானே
என் கண்ணில் உன்னைக்கண்டேன்
சின்னப்பெண்ணே
ஆசை நெஞ்சில்
நான் போதைக்கொண்டேன்
தன்னாலே சொக்கிப்போனேன்
நானே நானே
ஓ மானே மானே மானே..
உன்னைத்தானே
என் கண்ணில் உன்னைக்கண்டேன்
சின்னப்பெண்ணே
ஹேய்....காலை பனித்துளி
கண்ணில் தவழ்ந்திட
கனவுகள் மலர்கிறது
பார்வை தாமரை
யாரை தேடுது
பருவம் துடிக்கிறது
ஆசையின் மேடை
நாடகம் ஆடும்
ஆயிரம் பாடல்
பாவையை தேடும்
நீ தேவன் கோவில் தேரோ
என் தெய்வம் தந்த பூவோ
நீ தேனில் ஊறும் பாலோ
தென்றல் தானோ.. ஹோய்..
ஓ மானே மானே மானே..
உனைத்தானே
என் கண்ணில் உன்னைக்கண்டேன்
சின்னப்பெண்ணே
ஆசை நெஞ்சில்
நான் போதைக்கொண்டேன்
தன்னாலே சொக்கிப்போனேன்
தேனே தேனே..
ஓ மானே மானே மானே..
உன்னைத்தானே
என் கண்ணில் உன்னைக்கண்டேன்
சின்னப்பெண்ணே
ஹேய்... நீலபூவிழி
ஜாலம் புரியுது
நினைவுகள் இனிக்கிறது
காதல் கோபுரம்
ஏந்தும் ஓவியம்
கைகளில் தவழ்கிறது
மந்திரம் ஒன்றை
மன்மதன் சொன்னான்
மார்பினில் ஆடும்
மேனகை வந்தாள்
என் ஆசை நெஞ்சின் ராஜா
என் கண்ணில் ஆடும் ரோஜா
என் காதல் கோவில் தீபம்
கண்ணா வா வா ஹோய்..
ஓ மானே மானே மானே..
உன்னைத்தானே
என் கண்ணில் உன்னைக்கண்டேன்
சின்னப்பெண்ணே
ஆசை நெஞ்சில்
நான் போதைக்கொண்டேன்
தன்னாலே சொக்கிப்போனேன்
நானே நானே
ஓஹ் ஓ..மானே மானே மானே..
உன்னைத்தானே
என் கண்ணில் உன்னைக்கண்டேன்
சின்னப்பெண்ணே
No comments:
Post a Comment