Sunday, December 21, 2025

காதலைக் கண்டு கொள்ளும் கண்களைக் கண்டாய்




 மலர் வில்லிலே அம்பொன்று விட்டானே தோழி

மங்கை நெஞ்சில் காயங்கள் செய்தானே தோழி

பூவேந்தன் இல்லாது புலராதென் பொழுது

வான் நிலவும் தேன் நிலவும் சேர்ந்ததே சேர்ந்ததே

பூங்குருவி மாலை கொண்டு வந்ததே வந்ததே


மங்கள வாத்தியம் முழங்குது முழங்குது

மணிகளும் ஆசையில் குலுங்குது குலுங்குது

மஞ்சளும் குங்குமம் கலந்தது கலந்தது

சிலிர்க்கிற மனதினில் துளிர்ந்திட அரும்பிடும்


மலர் வில்லிலே அம்பொன்று விட்டானே தோழி

மங்கை நெஞ்சில் காயங்கள் செய்தானே தோழி

ஆசைத் தோழி……தோழி தோழி



ஓடும் மேகங்கள் ஒரு பந்தல் போடட்டும்

தாவும் மின்னல்கள் ஒளி வட்டம் போடட்டும்

பாடும் பறவைகள் அவன் பேரைப் பாடட்டும்

வானம் தேடிப் போய் நல் வாழ்த்துக் கூறட்டும்

ஆ… நிலவில் மஞ்சம் அது தேய்ந்து விடக் கூடும்

மலரில் மஞ்சம் கூட வாடி விடும்

 மனதில் மஞ்சம் கூட ஏக்கம் கொள்ளக் கூடும்

மடியில் மஞ்சம் ஒன்று இட வேண்டும்

கனவினில் போய் விட வரம் தந்தாய்

காதலைக் கண்டு கொள்ளும் கண்களைக் கண்டாய்


மங்கள வாத்தியம் முழங்குது முழங்குது

மணிகளும் ஆசையில் குலுங்குது குலுங்குது

மஞ்சளும் குங்குமம் கலந்தது கலந்தது

சிலிர்க்கிற மனதினில் துளிர்ந்திட அரும்பிடும்


மலர் வில்லிலே அம்பொன்று விட்டானே தோழி

மங்கை நெஞ்சில் காயங்கள் செய்தானே தோழி


காலை அதிகாலை அவன் முகத்தில் எழ வேண்டும்


மாலை வந்தாலோ அவன் மார்பில் விழ வேண்டும்

பொய்யாய் சில நேரம் சிறு ஊடல் வர வேண்டும்


கையால் அணைக்காமல் அவன் மெய்யால் தொட வேண்டும்


நதியில் இறங்கிடும் படகினைப் போல

நினைவின் அலைகளில் அவன் நீந்த


ஆ… இடையில் தவழ்ந்திடும் மேகலை மணிகள்

மன்னன் தீண்டிட தினம் ஏங்க ! 


மாயவன் திருமுகம் பார்ப்பதுதான்

கரு மை விழிகள் களித்திடும் வசந்த விழா!


மங்கள வாத்தியம் முழங்குது முழங்குது

மணிகளும் ஆசையில் குலுங்குது குலுங்குது

மஞ்சளும் குங்குமம் கலந்தது கலந்தது

சிலிர்க்கிற மனதினில் துளிர்ந்திட அரும்பிடும்


மலர் வில்லிலே அம்பொன்று விட்டானே தோழி

மங்கை நெஞ்சில் காயங்கள் செய்தானே தோழி

பூவேந்தன் இல்லாது புலராதென் பொழுது

வான் நிலவும் தேன் நிலவும் சேர்ந்ததே சேர்ந்ததே

பூங்குருவி மாலை கொண்டு வந்ததே வந்ததே


மங்கள வாத்தியம் முழங்குது முழங்குது

மணிகளும் ஆசையில் குலுங்குது குலுங்குது

மஞ்சளும் குங்குமம் கலந்தது கலந்தது

சிலிர்க்கிற மனதினில் துளிர்ந்திட அரும்பிடும்


மலர் வில்லிலே அம்பொன்று விட்டானே தோழி

மங்கை நெஞ்சில் காயங்கள் செய்தானே தோழி

ஆசைத் தோழி……தோழி தோழி

No comments: