Wednesday, December 17, 2008

உள்ளத்துல நான் உன்னை நெனச்சேன்
கண்ணாளா தான வளைச்சுபுட்டேன்
நாள் முழுக்க உன்னை நெனச்சு
நூலாக தான் எலைச்சுபுட்டேன்


இவன் வீரன் சூரன்
மதுரைக்கார மாமன் மாமன்
உனக்கு மாலை போட
மணமகளா நானே வாரேன்
என்னை பொண்னெல்லாம் பாத்தாச்சு
நாள் ஒண்ணும் வச்சாச்சு
நளுங்கோடு கல்யாண பேச்சு

கண்ணுக்கழகா வண்ண மயிலு
கண்ணு படுமோ சின்ன குயிலு
கொஞ்சும் கிளி தான் கோவ பழம் தான்
கோவப்பட்ட நீ மண்ணு புழு தான்
பொம்பள கிட்ட தெம்பு இருக்கு
புரிஞ்சுக்கணும் புரிஞ்சுக்கணும்
வம்பு இழுத்தா என்ன நடக்கும்
தெரிஞ்சுக்கணும் தெரிஞ்சுக்கணும்
அட பொட்ட புள்ளைங்க சொன்னபடி தான்
நடந்துக்கணும் நடந்துக்கணும்
பட்டு புடைவ பாவாடை தான்
அவசியம் எடுத்து கொடுத்திடனும்
மாமான்னு பாக்காம நான் ஒண்ணும் கேட்காம
காதோரம் பூ சுத்தாலாமா

இவன் வீரன் சூரன்
மதுரைக்கார மாமன் மாமன்
உனக்கு மாலை போட
மணமகளா நானே வாரேன்
என்னை பொண்னெல்லாம் பாத்தாச்சு
நாள் ஒண்ணும் வச்சாச்சு
நளுங்கோடு கல்யாண பேச்சு

உள்ளத்துல நான் உன்னை நெனச்சேன்
கண்ணாளா தான வளைச்சுபுட்டேன்
நாள் முழுக்க உன்னை நெனச்சு
நூலாக தான் எலைச்சுபுட்டேன்
சொப்பணத்துல உன்னோட தான் கதை படிச்சேன் கதை படிச்சேன்
கற்பனையில் உன்னோட தான் கவி படிச்சேன் கவி படிச்சேன்
ஊரு முழுக்க பெண் கேட்டும் ஒதுக்கி புட்டேன் ஒதுக்கி புட்டேன்
கண்ணா வாசல் வரைக்கும் வந்தாணுங்க
மறுத்து புட்டேன் மறுத்து புட்டேன்
மாமான்னு பாக்காம நான் ஒண்ணும் கேட்காம
காதோரம் பூ சுத்தாலாமா

இவன் வீரன் சூரன்
மதுரைக்கார மாமன் மாமன்
உனக்கு மாலை போட
மணமகளா நானே வாரேன்
என்னை பொண்னெல்லாம் பாத்தாச்சு
நாள் ஒண்ணும் வச்சாச்சு
நளுங்கோடு கல்யாண பேச்சு

Tuesday, December 16, 2008

இரு கண்ணிலும்
உன் ஞாபகம்
உறங்காமல் இருக்கின்றது


ஒரு ஜீவன் தான்
உன் பாடல் தான்
ஓயாமல் இசைக்கின்றது
இரு கண்ணிலும்
உன் ஞாபகம்
உறங்காமல் இருக்கின்றது
பாசங்களும் பந்தங்களும்
பிரித்தாலும் பிரியாதது
காலங்களும் நேரங்களும்
கலைத்தாலும் கலையாதது

ஒரு ஜீவன் தான்
உன் பாடல் தான்
ஓயாமல் இசைக்கின்றது

ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உனைச் சேருவேன்
வேறாரும் நெருங்காமல் மனவாசல்தனை மூடுவேன்
உருவானது நல்ல சிவரஞ்சனி
உனக்காகத்தான் இந்த கீதாஞ்சலி
ராகங்களின் ஆலாபனை
மோகங்களின் ஆராதனை
உடலும் மனமும் தழுவும் பொழுதில் உருகும்

ஒரு ஜீவன் தான்
உன் பாடல் தான்
ஓயாமல் இசைக்கின்றது

காவேரி கரை சேர
அணை தாண்டி வரவில்லையோ
ஆசைகள் அலைபாய ஆனந்தம் பெறவில்லையோ
வரும் நாளெல்லாம் இனி மதனோற்சவம்
வளையோசைதான் நல்ல மணிமந்திரம்
நான்தானய்யா நீலாம்பரி
தாலாட்டவா நடுராத்திரி
சுதியும் லயமும் சுகமாய் இணையும் தருணம்

ஒரு ஜீவன் தான்
உன் பாடல் தான்
ஓயாமல் இசைக்கின்றது
இரு கண்ணிலும்
உன் ஞாபகம்
உறங்காமல் இருக்கின்றது
பாசங்களும் பந்தங்களும்
பிரித்தாலும் பிரியாதது
காலங்களும் நேரங்களும்
கலைத்தாலும் கலையாதது

கீழ் வர்க்கம் மேல் வர்க்கம்
இணயாத இரு கோடுகள் ஹாஹ் ஹ ஹ ஹ
சேர்ந்தாலும் சில நாளில்
கரைகின்ற மணல் வீடுகள்
கட்டில் சொந்தம் என்னைக் கைவிட்டது
தொட்டில் சொந்தம் என்னைத் தொடர்கின்றது
உயிர் வாழ்கிறேன் உனக்காகத்தான்
யாருமில்லை எனக்காகத்தான்
மலரே மலரே மடியும் தவழும் நிலவே

ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான்
ஓயாமல் இசைக்கின்றது

தெய்வங்கள் சில நேரம் தவறாக நினைக்கின்றது
பொருந்தாத இரு நெஞ்சை
மணவாழ்வில் இணைக்கின்றது
கல்யாணமே அன்பின் ஆதாரம்தான்
உன் வாழ்விலே அது வியாபாரம் தான்
மணி மாளிகை உன் வீடுதான்
மாஞ்சோலையில் என் கூடு தான்
மதுதான் மனைவி இனி என் வாழ்க்கை துணைவி

ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான்
ஓயாமல் இசைக்கின்றது
இரு கண்ண்ணிலும் உன் ஞாபகம்
உறங்காமல் இருக்கின்றது
பாசங்களூம் பந்தங்களும்
பிரித்தாலும் பிரியாதது
காலங்களும் நேரங்களும்
கலைத்தாலும் கலையாதது

எப்பொழுதும் உன் சொப்பனங்கள்
முப்பொழுதும் உன் கற்பனைகள்
சிந்தனையில் நம் சங்கமங்கள்
ஒன்றிரண்டா என் சஞ்சலங்கள்


தாலாட்டும் பூங்காற்று நானல்லவா
நீகேட்டுப் பாராட்டு ஓ மன்னவா
வருவாயோ வாராயோ
ஓ நெஞ்சமே ஓ நெஞ்சமே
என் நெஞ்சமே உன் தஞ்சமே

நள்ளிரவில் நான் கண்விழித்தேன்
உன் நினைவில் நான் மெய்சிலிர்த்தேன்
பஞ்சணையில் நீ முள்விரித்தாய்
பெண் மனதை நீ ஏன் பறித்தாய்
ஏக்கம் தீயாக ஏதோ நோயாக
காணும் கோலங்கள் யாவும் நீயாக
வாசலில் மன்னா உன் தேர் வர ஆடுது பூந்தோரணம்

தாலாட்டும் பூங்காற்று நானல்லவா
நீகேட்டுப் பாராட்டு ஓ மன்னவா
வருவாயோ வாராயோ
ஓ நெஞ்சமே ஓ நெஞ்சமே
என் நெஞ்சமே உன் தஞ்சமே

எப்பொழுதும் உன் சொப்பனங்கள்
முப்பொழுதும் உன் கற்பனைகள்
சிந்தனையில் நம் சங்கமங்கள்
ஒன்றிரண்டா என் சஞ்சலங்கள்
காலையில் நான் கேட்கும் காதல் பூபாளம்
காதில் கேட்காதோ கண்ணா என்னாளும்
ஆசையில் நான் தொடும் ஆலயம் நீயல்லவா

தாலாட்டும் பூங்காற்று நானல்லவா
நீகேட்டுப் பாராட்டு ஓ மன்னவா
வருவாயோ வாராயோ
ஓ நெஞ்சமே ஓ நெஞ்சமே
என் நெஞ்சமே உன் தஞ்சமே

ஸ்ரீராமன் ஜானகி பந்தம் இந்த சொந்தம்
தேவாதி தேவரும் சூழ.. நலம் பாட


தேவதை போல் ஒரு பெண்ணிங்கு வந்தது
நம்பி உன்னை நம்பி
இந்த மைத்துனன் கைத்தலம் பற்றிட வந்தது
தம்பி தங்க கம்பி
பூச்சூடவும் பாய் போடவும்
பூச்சூடவும் பாய் போடவும்
சுபவேளை தான்

ஸ்ரீராமன் ஜானகி பந்தம் இந்த சொந்தம்
தேவாதி தேவரும் சூழ.. நலம் பாட
மூன்று முடி போல ஆண்டாள் துணைக்கூட
வேதங்களின் பாரயணம் பூப்பந்தளில் ஆலிங்கனம்

சீதாவை பிரித்தது மான் தான்
புள்ளி மான் தான்
தோதாக சேர்ந்தது மான் தான்
அனுமான் தான்
நாங்கள் அனுமான்கள் வாழ்க இளமான்கள்
கல்யாணமே வைபோகம் தான்
பூந்தென்றலே ஊர்கோலம் தான்

அவன் தான் அன்புள்ள எதிரி கொஞ்சம் குறும்புள்ள எதிரி
எனக்கும் பிடிக்கின்ற எதிரி எனக்குள் இருக்கின்ற எதிரி



ஜீலை மலர்களே ஜீலை மலர்களே
உங்கள் எதிரியாய் ஒரு அழகி இருக்கிறாள்
அவள்தான் அன்புள்ள எதிரி கொஞ்சம் குறும்புள்ள எதிரி
எனக்கும் பிடிக்கின்ற எதிரி எனக்குள் இருக்கின்ற எதிரி

ஜீலை மலர்களே ஜீலை மலர்களே
உங்கள் எதிரியாய் ஒரு அழகன் இருக்கிறான்
அவன் தான் அன்புள்ள எதிரி கொஞ்சம் குறும்புள்ள எதிரி
எனக்கும் பிடிக்கின்ற எதிரி எனக்குள் இருக்கின்ற எதிரி

தூக்கம் எனக்கு பிடித்த நண்பனே அந்த
நண்பன் இன்று இல்லையே
காதல் வெப்பத்தை கண்ணில் ஊற்றினாள்
வெட்கம் எனக்கு பிடித்த தோழியே
அந்த தோழி இன்று இல்லையே
அர்த்த ராத்திரி அர்த்த மாற்றினாய்
யார் நீ குளிரான பூவா யார் நீ மெய்யான பொய்யா

உந்தன் கண்கள் பார்த்த நாள் முதல்
என்னை மட்டும் காற்று மண்டலம்
பறக்கும் மனுஷியாய் மாற்றிவிட்டதே
ஏய்..... உன்னை நானும் சேர்ந்த நாள் முதல்
இதயம் என்னும் மைய பகுதியில்
மைனஸ் டிகிரியில் ஹேய் ரத்தம் ஓடுதே
இதமாய் இம்சைகள் செய்தாய் அழகாய் அவஸ்தைகள் தந்தாய்

ஜீலை மலர்களே ஜீலை மலர்களே
உங்கள் எதிரியாய் ஒரு அழகி இருக்கிறாள்
அவள்தான் அன்புள்ள எதிரி கொஞ்சம் குறும்புள்ள எதிரி
எனக்கும் பிடிக்கின்ற எதிரி எனக்குள் இருக்கின்ற எதிரி

ஜீலை மலர்களே ஜீலை மலர்களே
உங்கள் எதிரியாய் ஒரு அழகன் இருக்கிறான்
அவன் தான் அன்புள்ள எதிரி கொஞ்சம் குறும்புள்ள எதிரி
எனக்கும் பிடிக்கின்ற எதிரி எனக்குள் இருக்கின்ற எதிரி

என்னை போல எவரும் உன்னை காதலிக்க முடியாது
முடியும் என்றால் கூட அவனை காதலிக்க முடியாது


இடம் பொருள் பார்த்து இதயத்தை மாற்று
இது ஒரு காதல் கூத்து
விழிகளை கோர்த்து விரல்களை சேர்த்து
உயிரினில் என்னை போர்த்து
என்னை போல எவரும் உன்னை காதலிக்க முடியாது
முடியும் என்றால் கூட அவனை காதலிக்க முடியாது

உன் நகங்களில் பார்த்தேன்
என் இருபது முகங்கள்
உன் கன்னங்கள் பார்த்தேன்
என் இதழின் ரேகைகள்
காதல் என்ற மரத்தின் கீழே புத்தனாகிறேன்
போதை கொண்ட உந்தன் மடியில் பூக்களாகிறேன்
நீ பார்க்கும் திசை எந்தன் நடை பாதையே
நீ பேசும் மொழி எந்தன் அகராதியே

உன் விழிகளின் வெயிலில்
என் வேர்வை இனிக்கிதே
உன் புன்னகை நினைவில் என் தூக்கம் தொலைந்ததே
காதல் என்ற தாயின் மடியில் குழந்தை ஆகிறேன்
மழலை பேசும் மொழியில் இன்று மனிதனாகிறேன்
கனவோடு உனை காண இமை தேடுவேன்
இமையாக நான் வந்து உனை மூடுவேன்

Monday, December 15, 2008

சிந்தைக்குள் ஆடும் ஜீவனே கண்மணியே
சந்திக்க வேண்டும் தேவனே என்னுயிரே


இந்த மான் உன்தன் சொந்த மான்
பக்கம் வந்து தான் சிந்து பாடும்
சிந்தைக்குள் ஆடும் ஜீவனே கண்மணியே
சந்திக்க வேண்டும் தேவியே என்னுயிரே

வேல்விழி போடும் தூண்டிலே
நான் விழலாலேன் தோளிலே
நூலிடை தேயும் நோயிலே
நான் வரம் கேட்கும் கோயிலே
அன்னமே என்தன் சொர்ணமே உன்தன்
எண்ணமே வனவில் வண்ணமே
கன்னமே மதுக் கிண்ணமே - அதில்
பொன்மணி வைரங்கள் மின்னுமே
எண்ணமே தொல்லை பன்னுமே
பெண்ணென்னும் கங்கைக்குள் பேரின்பமே

இந்த மான் உன்தன் சொந்த மான்
பக்கம் வந்து தான் சிந்து பாடும்
சிந்தைக்குள் ஆடும் ஜீவனே கண்மணியே
சந்திக்க வேண்டும் தேவனே என்னுயிரே

பொன்மணி மேகலை ஆடுதே
உன் விழி தான் இடம் தேடுதே
பெண்ணுடல் பார்த்ததும் நாணுதே
இன்பத்தின் வேதனை ஆனதே
எண்ணத்தான் உன்னை எண்ணித்தான் - உடல்
மின்னத்தான் மேகலை பின்னத்தான்
சொல்லித்தான் நெஞ்சைக் கிள்ளித்தான் - என்னை
சொர்க்கத்தில் தேவனும் சோதித்தான்
மோகந்தான் சிந்தும் தேகந்தான்
தாகத்தில் நான் நிற்க ஆனந்தம் தான்