Friday, December 26, 2008

உனைத் தேடி மண்ணில் வந்தேன் எனைத்தேடி நீயும் வந்தாய்
உன்னை நானும் என்னை நீயும் கண்டுகொண்டோம்


கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
நல்லான் தீம்பால் நிலத்து உக்காங்கு
எனக்கும் ஆகாது என் ஐக்கும் உதவாது
பசலை நோயிற் வேண்டும்
திதலை அருந்தும் என் மாமைக் கவினே

தீண்டாய் மெய் தீண்டாய் தாண்டாய் படி தாண்டாய்
தீண்டாய் மெய் தீண்டாய் தாண்டாய் படி தாண்டாய்
ஒரு விரல் வந்து என்னைத் தீண்டியதே
என் நரம்போடு வீணை மீட்டியதே
மனம் அவந்தானா இவன் என்று திடுக்கிட்டதே

தீண்டாய் மெய் தீண்டாய் தாண்டாய் படி தாண்டாய்
ஒரு விரல் வந்து உன்னைத் தீண்டியதோ
உன் நரம்போடு வீணை மீட்டியதோ
உன் உயிர்க்குள்ளே காதல் அம்பைத் தொடுத்திட்டதோ

விழியோடும் தீண்டல் உண்டு விரலோடும் தீண்டல் உண்டு
இரண்டோடும் பேதம் உள்ளது
விழித்தீண்டல் உயிர் கிள்ளும் விரல் தீண்டல் உள்ளம் கிள்ளும்
அதுதானே நீ சொல்வது
நதியோரப் பூவின்மேலே ஜதிபாடும் சாரல் போலே
என்னில் இன்பதுன்பம் செய்குவதோ
ஒரு கன்னம் தந்தேன் முன்னே மறு கன்னம் தந்தாய் பெண்ணே
ஏசுனாதர் காற்று வந்து வீசியதோ
உறவின் உயிரே உயிறே என்னைப் பெண்ணாய்ச் செய்க
அழகே அழகே உன் ஆசை வெல்க

கடலோடு முத்தம் தந்தும் கலையாத வானம் போல
உடலோடு ஒட்டிக்கொள்ளவோ
உடலோடு அங்கும் இங்கும் உறைகின்ற ஜீவன் போல
உன்னோடு கட்டிக்கொள்ளவோ
உனைத் தேடி மண்ணில் வந்தேன் எனைத்தேடி நீயும் வந்தாய்
உன்னை நானும் என்னை நீயும் கண்டுகொண்டோம்
பல பேர்கள் காதல் செய்து பழங்காதல் தீரும்போது
பூமி வாழப் புதிய காதல் கொண்டுவந்தோம்
பனியோ பனியின் துளியோ உன் இதழ்மேல் என
பனியோ தேனோ நீ சுவைத்தால் என்ன

தீண்டாய் மெய் தீண்டாய் தாண்டாய் படி தாண்டாய்
தீண்டாய் மெய் தீண்டாய் தாண்டாய் படி தாண்டாய்
படி தாண்டாய்...படி தாண்டாய்...
படி தாண்டாய்...படி தாண்டாய்...

எத்தனையோ கவிதைகள் எழுதி இதயங்கள் எல்லாம் வென்றேனே
காதல் என்ற கவிதையை மட்டும் இலக்கண பிழையாய் எழுதிவிட்டேன்


என்னையும் உன்னையும் நெருங்கவைத்து இயற்கை நம்மை பழிக்கிறதே
இயற்கை இணைத்து வைத்தாலும் உன் செயற்கை தான் நம்மை பிரிக்கிறதே

என் கேள்விகளுக்கு பதிலில்லை என் உறவுகளுக்கு முகம் இல்லை
உன் கேள்விக்கு பதிலும் நான் தானே உன் உறவின் முகவரி நான் தானே

எத்தனையோ வீடுகள் கட்டி தோள்களில் மாலை சூடினேன்
காதல் என்ற வீட்டை மட்டும் கவனக்குறைவாய் கட்டினேன்

எத்தனையோ கவிதைகள் எழுதி இதயங்கள் எல்லாம் வென்றேனே
காதல் என்ற கவிதையை மட்டும் இலக்கண பிழையாய் எழுதிவிட்டேன்

தாகம் தீர்க்க தண்ணீர் கேட்டேன் சமுத்திரம் தந்தது யார் குற்றம்
கடல் நீரெல்லாம் கூடி நீராக்கும் சூத்திரம் மறந்தது உன் குற்றம்
கடல் நீரெல்லாம் குடிநீர் செய்வேன் கண்ணீரின் உப்பை நான் என்ன செய்வேன்

என்னையும் உன்னையும் நெருங்கவைத்து இயற்கை நம்மை பழிக்கிறதே
இயற்கை இணைத்து வைத்தாலும் உன் செயற்கை தான் நம்மை பிரிக்கிறதே

என் கேள்விகளுக்கு பதிலில்லை என் உறவுகளுக்கு முகம் இல்லை
உன் கேள்விக்கு பதிலும் நான் தானே உன் உறவின் முகவரி நான் தானே

தாமரை பூ பறிக்க வந்தேன் தங்க குளத்தில் விழுந்து விட்டேன்
தங்கச் சகதியில் புதைந்து புதைந்து தாமரை பூவை மறந்துவிட்டேன்

நினைத்த பூவை பறித்து கொண்டு குளத்தைவிட்டு வெளியேறு
தாமரை தண்டை பற்றிக்கொண்டே தங்க குளத்தில் கரையேறு

சொல்வது எளிவது செய்வது கடினம் என்பது தானே தகராறு
குளத்தின் கரைகள் போனாலும் உன் குலத்தின் கறைகள் போகாதே

வாங்கிய காதலை மீண்டும் என்னிடம் தந்துவிடு
தூங்கிய நாட்கள் மறந்து போனேன் எனக்கொரு முடிவை சொல்லிவிடு

என்னையும் உன்னையும் நெருங்கவைத்து இயற்கை நம்மை பழிக்கிறதே
இயற்கை இணைத்து வைத்தாலும் உன் செயற்கை தான் நம்மை பிரிக்கிறதே

என் கேள்விகளுக்கு பதிலில்லை என் உறவுகளுக்கு முகம் இல்லை
உன் கேள்விக்கு பதிலும் நான் தானே உன் உறவின் முகவரி நான் தானே

கனவுகளில் வாழ்ந்துவிட்டேன் இறுதிவரை
கண்களிலே தூவிவிட்டாய் மண்துகளை



உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி
உனக்கென வாழ்கிறேன் நானடி
விழியிலே உன் விழியிலே விழுந்தவன் தானடி
உயிருடன் சாகிறேன் பாரடி
காணாமல் போனாய் இது காதல் சாபமா?
நீ கரையை கடந்த பின்னாலும்
நான் மூழ்கும் ஓடமா?

கனவுகளில் வாழ்ந்துவிட்டேன் இறுதிவரை
கண்களிலே தூவிவிட்டாய் மண்துகளை
இந்த சோகம் இங்கு சுகமானது
அது வரமாக நீ தந்தது
நீ மறந்தாலுமே உன் காதல் மட்டும்
என் துணையாக வருகின்றது
ஆறாத காயங்கள் என் வாழ்க்கை பாடமா?
இனி தீயை வைத்து எரித்தாலும் என் நெஞ்சம் வேகுமா?

கடலினிலே விழுந்தாலும் கரையிருக்கும்
காதலிலே விழுந்தபின்னே கரையில்லையே
இந்த காதல் என்ன ஒரு நடை வண்டியா?
நான் விழுந்தாலும் மீண்டும் எழ
இரு கண்ணை கட்டி ஒரு காட்டுக்குள்ளே
என்னை விட்டாயே எங்கே செல்ல?
ஆண் நெஞ்சம் எப்போதும் ஒரு ஊமை தானடி
அது தெருவின் ஓரம் நிறுத்திவைக்கும்
பழுதான தேரடி

உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி
உனக்கென வாழ்கிறேன் நானடி
விழியிலே உன் விழியிலே விழுந்தவன் தானடி
உயிருடன் சாகிறேன் பாரடி
காணாமல் போனாய் இது காதல் சாபமா?
நீ கரையை கடந்த பின்னாலும்
நான் மூழ்கும் ஓடமா?

பெண்ணின் காதல் வலியில் இன்பம்
ஆணின் காதல் பிறவி துன்பம்


உன்னை தொட்ட உற்சாகத்தில்
விண்ணை தொட்டு மண்ணில் வந்தேன்

தொட்டு கொண்டது கனவா கனவா
விட்டு சென்றது நனவா நனவா

பிறக்கும் முன்பே சந்தித்தோமா
சொல்லு சொல்லு சொல்லு

பிறந்த பொழுதே பிரிவு உற்றோமா
சொல்லு சொல்லு சொல்லு

என்னை போல வலி கண்டாயா
இதயம் இரண்டாய் சிதறுண்டாயா
இற்று போகும் உயிர் கண்டாயா

பெண்ணின் காதல் வலியில் இன்பம்
ஆணின் காதல் பிறவி துன்பம்

நீயும் நானும் ஒன்று ஒன்று
நெஞ்சும் நெஞ்சும் கூடும் என்று
காதல் தெய்வம் காற்றில் சொன்னதே
புருவம் ரெண்டும் முட்டிக்கொள்ள
பருவம் ரெண்டும் கட்டிக்கொள்ள
சந்தர்ப்பங்கள் தானாய் வந்ததே

ஓ நீ என்னை எப்படி அறிவாய்
நான் உன்னை எப்படி அறிவேன்
சந்தித்து பிரிந்தோமா

அலையோடு எரியும் பூக்கள்
தரையோடு வருதல் போல
மீண்டும் நான் இனைந்தோமா

உன் கள்ள கண்களால் உயிர் கொத்தி குடித்தாய்
உன் நெஞ்ச பள்ளத்தில் ஏன் காதல் மறைத்தாய்

என்னை போல வலி கண்டாயா
இதயம் இரண்டாய் சிதறுண்டாயா
இற்று போகும் உயிர் கண்டாயா
பெண்ணின் காதல் வலியில் இன்பம்
ஆணின் காதல் பிறவி துன்பம்

பெண்ணே உந்தன் நெஞ்சில் நெஞ்சில்
காதல் ஏதும் இல்லை என்றால்
என்னை நானே மூட்டை கட்டுவேன்

தொண்டை வரையில் காதல் வைத்து
கொஞ்சம் கூட இல்லை என்றால்
சாட்சிக்காக யாரை தேடுவேன்

காற்றோடு போகும் மேகம்
எங்கேதான் சிந்தும் என்று
யாருக்கும் தெரிவதில்லை

அகங்கார கண்ணி பெண்ணின்
அன்றாட முடிவும் என்ன
ஆணுக்கு புரிவதில்லை

ஒரு ஈட்டி எடுத்து என் நெஞ்சில் செலுத்து
உன் பேரை சொல்லுமே அதில் உள்ள எழுத்து

என்னை போல வலி கண்டாயா
இதயம் இரண்டாய் சிதறுண்டாயா
இற்று போகும் உயிர் கண்டாயா
பெண்ணின் காதல் வலியில் இன்பம்
ஆணின் காதல் பிறவி துன்பம்

உன்னை தொட்ட உற்சாகத்தில்
விண்ணை தொட்டு மண்ணில் வந்தேன்

தொட்டு கொண்டது கனவா கனவா
விட்டு சென்றது நனவா நனவா

பிறக்கும் முன்பே சந்தித்தோமா
சொல்லு சொல்லு சொல்லு

பிறந்த பொழுதே பிரிவு உற்றோமா
சொல்லு சொல்லு சொல்லு

என்னை போல வலி கண்டாயா
இதயம் இரண்டாய் சிதறுண்டாயா
இற்று போகும் உயிர் கண்டாயா

பெண்ணின் காதல் வலியில் இன்பம்
ஆணின் காதல் பிறவி துன்பம்

மார்போரம் மன்றாடி நான் தோற்று போனாலும் கண்ணா அதுவே சுகம்



தாங்குமா கனாக்களின் பாரத்தை பாவை விழி
நான் வாடும் கார்காலத்தில்சூடான போர்வை தர
காற்றோடு காற்றாகவே உன் மூச்சு காற்றும் வர
ஆ அது ஓர் தவம்
மார்போரம் மன்றாடி நான் தோற்று போனாலும்
கண்ணா அதுவே சுகம்
தாங்குமா கனாக்களின் பாரத்தை பாவை விழி

தாங்குமா கனாக்களின் பாரத்தை பாவை விழி


சேரும் வினாடிகளில் உன் மூச்சே எந்தன் மேலாடை
கண் கொட்ட மறந்தாயே நீ அங்கம் எங்கிலும் தேன் வாடை
ஓயும் இடைவேளையில் வந்தாயே வம்பாகவெ
தள்ளாடி நான் சாய்கையில் நின்றாயே கொம்பாகவெ
மார்போரம் மன்றாடி நான் தோற்று போனாலும்

கண்ணா அதுவே சுகம்

தாங்குமா கனாக்களின் பாரத்தை பாவை விழி
தாங்குமா கனாக்களின் பாரத்தை பாவை விழி


பேச்சே இல்லை அந்நேரம் மோகத்துடன் நான் வாட
என் வேர்வை ஆறாய் ஓடி தேகத்துடன் போராட
அந்நாள் பொன்னால் இல்லையே அந்நாளும் இன்றில்லையே
உன் நெஞ்சில் நான் வீழ்ந்ததும் பித்தாகினென் நண்பனே
ஆ அது கண் பாடும்
மார்போரம் மன்றாடி நான் தோற்று போனாலும்

கண்ணா அதுவே சுகம்

Thursday, December 25, 2008

பூ உலகை அவன் புதிதாய் செய்தானே, என் புத்தம் புதிய வாழ்வே அவன்தானே


வான் மழை, அது வானம் விட்ட தூது,
என் நண்பனுக்கு என் தூது சேர்ந்திடும்,
நாள் எப்போது?
புது பூ மனம், அது பூக்கள் விட்டு தூது,
என் காதல் பார்த்ததை கண்கள் பார்த்திடும்,
நாள் எப்போது?
இரு கண் பூத்து நான் காத்திருக்கும்போது,
ஒரு பூ திறந்ததும், புதையல் கொட்டிடும்,
நாள் எப்போது?
அடி நான் அன்று, உயிர் தத்தலித்தபோது,
என்னை வாழ வைத்தவன் ஆள வந்திடும்,
நாள் எப்போது?

தோழிகளே, என் சொர்ககம் தெரிகிறதே,
அதை தொட்டு தொடரும் முகவரி தெரியல்லையே,
வாசல் வந்து ஒரு வாழ்க்கை அழைக்கிறதே,
என் வலமும் இடமும் ரெண்டும் துடிக்கிறதே,
நெஞ்சிலே நெஞ்சிலே மின்னல் பூச்சி சுற்றுதே,
நிற்க சொன்னால் நிற்க மறுக்கிறதே,
ஆயிரம் நினைவுகள், ஆசை மூட்டிய கனவுகள்,
அவனை காண கண்கள் அரிக்கிறதே,
நண்பானா? வம்பனா?
நீ நண்பானா இல்லை வம்பனா?
முன்னால் வந்து முகவரி சொல்லு,


வான் மழை, அது வானம் விட்ட தூது,
என் நண்பனுக்கு என் தூது சேர்ந்திடும்,
நாள் எப்போது?


பூ உலகை அவன் புதிதாய் செய்தானே,
என் புத்தம் புதிய வாழ்வே அவன்தானே,
செவிகளிலே என் ஜீவன் தொட்டானே,
நெஞ்சில் சின்ன சின்ன பூக்கள் நட்டானே,
நேரிலே நேரிலே பார்த்தால் என்ன நேருமோ,
என் நெற்றிக்குள்ளே மின்னல் வெட்டு மடி,
வாழ்விலே முதல் முறை வெட்கம் வந்து சேருமோ?
மௌனம் என்னை வெட்டி தின்னும் அடி,
மன்மதா (மன்மதா), நீ யாரடா (யாரடா)?
டேய் மன்மதா, நீ யாரடா?
என் மாற்புக்கு முன்னே வாடா,


வான் மழை, அது வானம் விட்ட தூது,
என் நண்பனுக்கு என் தூது சேர்ந்திடும்,
நாள் எப்போது?
புது பூ மனம், அது பூக்கள் விட்டு தூது,
என் காதல் பார்த்ததை கண்கள் பார்த்திடும்,
நாள் எப்போது?
இரு கண் பூத்து நான் காத்திருக்கும்போது,
ஒரு பூ திறந்ததும், புதையல் கொட்டிடும்,
நாள் எப்போது?
அடி நான் அன்று, உயிர் தத்தலித்தபோது,
என்னை வாழ வைத்தவன் ஆள வந்திடும்,
நாள் எப்போது?

Tuesday, December 23, 2008

இதய பூ எப்போது மலரும் என்று இதுவரை சொன்னவர் கிடையாது


மலரே ஒரு வார்த்தை பேசு இப்படிக்கு பூங்காற்று
காற்று வந்து காது கடித்தும் இன்னும் என்ன மௌனமமோ
மோதி வந்து முத்தமிட்டால் மௌனம் தீருமோ
அச்சம் தான் உன் ஆடையோ வெட்கம் தான் முந்தாணையோ
மௌனம் தான் உன் வேளியோ செம்பூவே வா வா வா வா
விழியே ஒரு வார்த்தையானால் மொழி என்பது வேண்டாமே

வார்த்தையாடி பார்த்த போது காதல் வரவில்லை
காதல் வந்து சேர்ந்தபோது வார்த்தை வரவில்லை
நான்கு கண்கள் பேசும் போது தாய்மொழிக்கு இடமில்லை
மௌனம் பாடும் பாடல் போலே மனதுக்கு சுகமில்லை
மலர்களை எரிப்பது முறையில்லை மௌனத்தை உடைப்பது சரியில்லை
மௌனத்தின் ஓசைகள் கேளாமல் வார்த்தைகள் புரிவது எளிதில்லை
கண்ணில் ஆசை துடிக்குதே அன்பே அன்பே
நெஞ்சு பிடிக்குது முல்லை வெளியில் சொல்லவில்லை
வெட்க படாத பூக்களை வண்டுகள் தொடாதடி
முத்தம் தராமல் வெட்கமும் சாயம் போகாதடி

மலரே ஒரு வார்த்தை பேசு இப்படிக்கு பூங்காற்று


பெண்ணிடத்தில் உள்ளதெல்லாம் பெண்ணுக்கு தெரியாது
ஒரு ஆணின் கைகள் தீண்டு மட்டும் அவசியம் புரியாது
காதல் மங்கை சொன்ன வார்த்தை கவிதையில் கிடையாது
அட காதலிக்கும் ஆட்கள் போலே கவிஞர்கள் கிடையாது
இரவிலே தாமரை மலராது பகலிலே அல்லியும் அவிழாது
இதய பூ எப்போது மலரும் என்று இதுவரை சொன்னவர் கிடையாது
ராஜமோஹினி ரம்பா ரம்பா
உன் எடைக்கெடை தங்கம் தர துடிக்கும் நெஞ்சம்
கைகள் தொடாமல் கண்களால் நெஞ்சை பந்தாடினாய்
ரத்தம் வராமல் பார்வையால் என்னை தூண்டாடினாய்

மலரே ஒரு வார்த்தை பேசு இப்படிக்கு பூங்காற்று
காற்று வந்து காது கடித்தும் இன்னும் என்ன மௌனமமோ
மோதி வந்து முத்தமிட்டால் மௌனம் தீருமோ
அச்சம் தான் உன் ஆடையோ வெட்கம் தான் முந்தாணையோ
மௌனம் தான் உன் வேளியோ செம்பூவே வா வா வா வா
விழியே ஒரு வார்த்தையானால் மொழி என்பது வேண்டாமே