Saturday, September 5, 2009

உன்னை மாலையிட தேடி வரும் நாலு எந்த நாலு


மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒன்னு கேளு
உன்னை மாலையிட தேடி வரும் நாலு எந்த நாலு
மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒன்னு கேளு
உன்னை மாலையிட தேடி வரும் நாலு எந்த நாலு
முத்து முத்து கண்ணாலே
நான் சுத்தி வந்தேன் பின்னாலே

(மாங்குயிலே)

தொட்டு தொட்டு விலக்கி வச்ச வெங்கலத்து செம்பு அத
தொட்டெடுத்து தலையில் வச்ச பொங்குதடி தெம்பு
பட்டெடுத்து உடுத்தி வந்த பாண்டியரு தேரு இப்போ
கிட்ட வந்து கிலருதடி என்ன படு ஜோரு
கன்னுக்கழகா பொன்னு சிரிச்சா
பொன்னு மனச தொட்டு பரிச்ச
தன்னந்தனிய எண்ணி ரசிச்ச
கண்ணு வலை தான் விட்டு விரிச்ச
ஏரெடுத்து பாத்து எம்மா நீரெடுத்து ஊத்து
சீரெடுத்து வாரேன் எம்மா சேர்த்து என்னை சேர்த்து
முத்தையன் படிக்கும் முத்திரை கவிக்கு
நிச்சயம் பதிலு சொல்லனும் மயிலு

மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒன்னு கேளு
உன்னை மாலையிட தேடி வரும் நாலு எந்த நாலு
மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒன்னு கேளு
உன்னை மாலையிட தேடி வரும் நாலு எந்த நாலு
முத்து முத்து கண்ணாலே
நான் சுத்தி வந்தேன் பின்னாலே


உன்ன மறந்திருக்க ஒரு பொழுதும் அறியேன் எம்மா
கன்னி இவ முகத்த விட்டு வேரேதையும் அறியேன்
வங்கத்துல விலஞ்ச மஞ்சள் கிழங்கெடுத்து உரசி எம்மா
இங்கும் அங்கும் பூசி வரும் எழிலிருக்கும் அரசி
கூடியிருப்போம் கூண்டு கிளியே
கொஞ்சி கிடப்போம் வாடி வெலியே
ஜாடை சொல்லிதான் பாடி அழைச்சேன்
சம்மதமுன்னு சொல்லு கிளியே
சாமத்தில வாரேன் எம்மா சாமந்திபூ தாரேன்
கோவப்பட்டு பாத்த எம்மா வந்த வழி போரேன்
சந்தனம் கரச்சி பூசனும் எனக்கு
முத்தையன் கனக்கு மோத்தமும் உனக்கு

மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒன்னு கேளு
உன்னை மாலையிட தேடி வரும் நாலு எந்த நாலு
மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒன்னு கேளு
உன்னை மாலையிட தேடி வரும் நாலு எந்த நாலு
முத்து முத்து கண்ணாலே
நான் சுத்தி வந்தேன் பின்னாலே

Monday, August 31, 2009

காதல இதுதானோ காதல் இதுதானோ யாரை பார்த்தாலும் உன்னை கண்டேனோ


ஆறடி ராட்சசனோ என்னை அடியோட சாய்ச்சவனோ
அண்ணாந்து பார்த்தவளை அவன் கண்ணாலே கொன்னவனோ

பாஞ்சாலி குறிச்சி பெண்ணோ பரிசம் போடாம நான் நிற்பேனோ
ஐந்தடி பூவை பெத்த நல்ல கவிஞன் தான் உன் அப்பனோ

காதல இதுதானோ காதல் இதுதானோ
யாரை பார்த்தாலும் உன்னை கண்டேனோ
காதல இதுதானோ காதல் இதுதானோ
யாரை பார்த்தாலும் உன்னை கண்டேனோ

ஒஹோ ஆறடி ராட்சசனோ என்னை அடியோட சாய்ச்சவனோ
ஐந்தடி பூவை பெத்த நல்ல கவிஞன் தான் உன் அப்பனோ


பேசாத பேச்சை எல்லாம் பேசித்தான் தீர்க்க வந்தேன்
ஆசாரி வீட்டை தேடி தங்க தாலி தான் செய்ய சொன்னேன்
முச்சந்தி பிள்ளையார் கோவிலின் தேங்காவாய்
என்னை நீ தூள் ஆக்கினாய்
முன் ஜாமீன் இல்லாமல் உன் நெஞ்சில்
சிறை வைத்து என்னை நீ கைதாக்கினாய்
காதல இதுதானோ காதல் இதுதானோ
யாரை பார்த்தாலும் உன்னை கண்டேனோ

ஒஹோ ஆறடி ராட்சசனோ என்னை அடியோட சாய்ச்சவனோ
ஐந்தடி பூவை பெத்த நல்ல கவிஞன் தான் உன் அப்பனோ


தேரோடும் தெருவை போல நெஞ்சில் உற்சாகம் உருண்டோடுதே
கிளையோடு மட்டும் இல்லை எந்தன் வேரோடும் பூ பூக்குதே
என் என்று தெரியாமல் ஏன் என்று புரியாமல் ஏதேதோ மயக்கம் வரும்
கை போடும் கோலங்கள் ரெண்டும் தான் போட தித்திக்கும் தயக்கம் வரும்

காதல இதுதானோ காதல் இதுதானோ
யாரை பார்த்தாலும் உன்னை கண்டேனோ

ஒஹோ ஆறடி ராட்சசனோ என்னை அடியோட சாய்ச்சவனோ
ஐந்தடி பூவை பெத்த நல்ல கவிஞன் தான் உன் அப்பனோ

காதல இதுதானோ காதல் இதுதானோ
யாரை பார்த்தாலும் உன்னை கண்டேனோ
காதல இதுதானோ காதல் இதுதானோ
யாரை பார்த்தாலும் உன்னை கண்டேனோ

அஹா ஆறடி ராட்சசனோ .....

Sunday, August 30, 2009

நேருக்கு நேர் காதல் சொன்னால் நெஞ்சுக்கு நிறைவு தான்


ஒற்றை வார்த்தையில் ஒற்றை வார்த்தையில்
உள்ளே உள்ளதை சொன்னால் என்ன
கற்றை பார்வையில் கற்றை பார்வையில்
கண்ணால் ஜாடைகள் செய்தால் என்ன

வார்த்தை வந்தாலும் காதல் வராமல் வாழ்பவர் கோடியே
காதல் வந்தாலும் வார்த்தை வராமல் வாழ்வது கொடுமையே

ஒற்றை வார்த்தையில் ஒற்றை வார்த்தையில்
உள்ளே உள்ளதை சொன்னால் என்ன

வார்த்தை வந்தாலும் காதல் வராமல் வாழ்பவர் கோடியே
காதல் வந்தாலும் வார்த்தை வராமல் வாழ்வது கொடுமையே

ஒற்றை வார்த்தையில் ஒற்றை வார்த்தையில்
உள்ளே உள்ளதை சொன்னால் என்ன

கவிதையிலே பொய்களுக்கு கெளரவம் அதிகம் தான்
காதலிலே உயிர்களுக்கு கெளரவம் குறைவு தான்
நேருக்கு நேர் காதல் சொன்னால் நெஞ்சுக்கு நிறைவு தான்
காதலின் வீதியில் மௌனமே இரைச்சல் தான்

ஒற்றை வார்த்தையில் ஒற்றை வார்த்தையில்
உள்ளே உள்ளதை சொன்னால் என்ன

வார்த்தை வந்தாலும் காதல் வராமல் வாழ்பவர் கோடியே
காதல் வந்தாலும் வார்த்தை வராமல் வாழ்வது கொடுமையே

Saturday, August 29, 2009

கண்களால் என் தேகம் எங்கும் காயம் செய்கிறாய் கைகளால் என் பாதம் நீவி ஆறச் செய்கிறாய்


கண்மணியே பேசு மௌனம் என்ன கூறு
கன்னங்கள் புது ரோசாப்பூ உன் கண்கள் இரு ஊதாப்பூ
இது பூவில் பூத்த பூவையோ

அந்தப்புறம் இந்தப்புறம் விழி மையிட்ட
அந்திக்கலை சொல்லித் தருமோ இருகை தொட்டு
அந்தப்புறம் இந்தப்புறம் விழி மையிட்ட
அந்திக்கலை சொல்லித் தருமோ இருகை தொட்டு

ஆயிரம் பொன் பூக்கும் எந்தன் தேகம் எங்குமே
அங்குலம் விடாமல் இன்ப கங்கை பொங்குமே
தோளிலும் என் மார்பிலும் கொஞ்சிடும் என் அஞ்சுகம் நான் நீ ஏது

உன்னைக் கொடு என்னைத் தருவேன்
ஒரு தாலாட்டில் பிள்ளைத் தமிழ்
சொல்லித் தருவேன் விழி மூடாமல்

கண்களால் என் தேகம் எங்கும் காயம் செய்கிறாய்
கைகளால் என் பாதம் நீவி ஆறச் செய்கிறாய்
கண்களால் என் தேகம் எங்கும் காயம் செய்கிறாய்
கைகளால் என் பாதம் நீவி ஆறச் செய்கிறாய்
வானகம் இவ்வையகம் யாவுமே என் கைவசம் நீதான் தந்தாய்....

Thursday, August 27, 2009

நான் பண்ணிய புண்ணியம் என் மனம் கூடிடும் உன்னுடன் இன்று


பாராமல் பார்த்த நெஞ்சம் ஜம் சஜம்ஜம் ஜம்
போடாமல் போட்ட மஞ்சம் ஜம் சஜம்ஜம் ஜம்

இரு பார்வை அது பாடட்டும்
இரு பார்வை பாடட்டும் ராகங்கள்
பாராமல் பார்த்த நெஞ்சம் ஜாம் சஜம்ஜம் ஜம்
போடாமல் போட்ட மஞ்சம் ஜாம் சஜம்ஜம் ஜம்


நித்திரை கெட்டது கண்ணே என் சித்திர பெண்ணே
முத்திரை கண்டது முன்னே நீ தொட்டது பின்னே
நித்திரை கெட்டது கண்ணே என் சித்திர பெண்ணே
முத்திரை கண்டது முன்னே நீ தொட்டது பின்னே
பூபாலம் கேட்டேன் னே பெண் மானை பார்த்தேனே
பேசாமல் நின்றேனே பெண் என்று ஆனெநெ
கட்டளை இட்டதும் பட்டதும் தொட்டதும் கற்பனை அல்ல
இள வெற்றிலை என்றொரு வெற்றிலை கண்டது அற்புதம் அல்ல
நீ பட்டதும் சுட்டது பட்டுடை விட்டது நானும் சொல்ல

பாராமல் பார்த்த நெஞ்சம் ஜம் சஜம்ஜம் ஜம்
போடாமல் போட்ட மஞ்சம் ஜம் சஜம்ஜம் ஜம்
இரு பார்வை அது பாடட்டும்
இரு பார்வை பாடட்டும் ராகங்கள்
பாராமல் பார்த்த நெஞ்சம் ஜாம் சஜம்ஜம் ஜம்
போடாமல் போட்ட மஞ்சம் ஜாம் சஜம்ஜம் ஜம்


மெல்லிய மல்லிகை பூவே புது மெல்லிசை பாடு
வள்ளியின் மெல்லிடை மேலே ஒரு சங்கதி போது
மெல்லிய மல்லிகை பூவே புது மெல்லிசை பாடு
வள்ளியின் மெல்லிடை மேலே ஒரு சங்கதி போது
பூந்தேகம் தாங்காது என் தேவன் ஏந்தாது
ஆறாது தீராது நீ வந்து சேராது
பெண் இவள் மேனியில் கண் இமை மூடிடும் காவியம் கண்டு
நான் பண்ணிய புண்ணியம் என் மனம் கூடிடும் உன்னுடன் இன்று
புவி மண்ணிலும் விண்ணிலும் கவி பாடிடும் மேகம் ஒன்று


பாராமல் பார்த்த நெஞ்சம் ஜம் சஜம்ஜம் ஜம்
போடாமல் போட்ட மஞ்சம் ஜம் சஜம்ஜம் ஜம்
இரு பார்வை அது பாடட்டும்
இரு பார்வை பாடட்டும் ராகங்கள்
பாராமல் பார்த்த நெஞ்சம் ஜாம் சஜம்ஜம் ஜம்
போடாமல் போட்ட மஞ்சம் ஜாம் சஜம்ஜம் ஜம்

Friday, August 21, 2009

திட்டமிட்டு வாழ வாரேன் மாமா சட்டம் ஒன்னு போடு



சித்தகத்தி பூக்களே சுத்தி வர பாக்குதே
அத்தி மர தோப்பில்லே உச்சி வெயில் வேர்க்குதே
அத்த மகளே அத்த மகளே சொத்து சுகம் யாவும் நீதான் ஹொய்

சித்தகத்தி பூக்களே சுத்தி வர பாக்குதே
அத்தி மர தோப்பில்லே உச்சி வெயில் வேர்க்குதே
அத்த மகனே அத்த மகனே சொத்து சுகம் யாவும் நீதான் ஹொய்

தும்..தும்..தும்...தும்...
தும்..த...தும்

நாள் பாத்து பாத்து ஆளான நாத்து
தோள் சேர தானே வீசும் பூங்க்காத்து
ஆனந்த கூத்து நானாட பாத்து
பூவோரம் தானே ஊரும் தேனூத்து
நான் மாலை சூட நாள் பாரையா
ஆதாரம் நீதான் வேராரையா
பட்டிடத்தில் மேளம் கொட்டி முழங்க
தொட்டு விடு நாணம் விட்டு விலக
திட்டமிட்டு வாழ வாரேன் மாமா சட்டம் ஒன்னு போடு..ஹொய்

சித்தகத்தி பூக்களே சுத்தி வர பாக்குதே
அத்தி மர தோப்பில்லே ஒத்திகைய கேக்குதே
அத்த மகனே அத்த மகனே சொத்து சுகம் யாவும் நீதான்
சித்தகத்தி பூக்களே சுத்தி வர பாக்குதே
அத்தி மர தோப்பில்லே ஒத்திகைய கேக்குதே

ஆஹ்ஹ்ஹ்ஹ்ன்ன்...பூந்தேரில் ஏறி
ஏழேழு லோகம் ஊர்கோலமாக நாமும் போவோமா
பாராளும் ஜோடி நாம் என்று பாடி
ஊராரும் நாளும் வாழ்த்த வாழ்வோமா

நீரிண்ட்றி வாழும் மீன் ஏதம்மா
நீ இன்றி நானும் வீண் தானம்மா
பட்டு உடல் மீட்டு தொட்டு அணைக்க
தொட்டில் ஒன்னு ஆடு முத்து பிறக்க
கட்டிலறை பாடம் தாரேன் மானே கட்டளைய போடு..ஹொய்

சித்தகத்தி பூக்களே சுத்தி வர பாக்குதே
அத்தி மர தோப்பில்லே ஒத்திகைய கேக்குதே
அத்த மகனே அத்த மகனே சொத்து சுகம் யாவும் நீதான்
ஹொய்

Wednesday, August 19, 2009

அன்புள்ள மன்னா அன்புள்ள கணவா அன்புள்ள கள்வனே அன்புள்ள கண்ணாளனே


நிலா நீ வானம் காற்று
மழை என் கவிதை மூச்சு
இசை துளி தேனா மலரா
திசை ஒலி பகல்

நிலா நீ வானம் காற்று
மழை என் கவிதை மூச்சு
இசை துளி தேனா மலரா
திசை ஒலி பகல்

தேவதை அன்னம் பட்டாம்பூச்சி
கொஞ்சும் தமிழ் குழந்தை
சிணுங்கள் சிரிப்பு முத்தம்
மௌனம் கனவு ஏக்கம்
மேகம் மின்னல் ஓவியம்
செல்லம் பிரியம் இம்சை

இதில் யாவுமே நீதான் எனினும்
உயிர் என்றே உனை சொல்வேனே
நான் உன்னிடம் உயிர் நீ என்னிடம்
நாம் என்பதே இனிமேல் மெய் சுகம்

நிலா நீ வானம் காற்று
மழை என் கவிதை மூச்சு
இசை துளி தேனா மலரா
திசை ஒலி பகல்

அன்புள்ள மன்னா அன்புள்ள கணவா
அன்புள்ள கள்வனே அன்புள்ள கண்ணாளனே
அன்புள்ள ஒளியே அன்புள்ள தமிழே
அன்புள்ள செய்யுளே அன்புள்ள இலக்கணமே
அன்புள்ள திருக்குறளே அன்புள்ள நற்றினையே
அன்புள்ள படவா அன்புள்ள திருடா
அன்புள்ள ரசிகா அன்புள்ள கிறுக்கா
அன்புள்ள திமிரே அன்புள்ள தவறே
அன்புள்ள உயிரே அன்புள்ள அன்பே
இதில் யாவுமே இங்கு நீதான் என்றால்
என்ன தான் சொல்ல சொல் நீயே
பேர் அன்பிலே ஒன்று நான் சேர்ந்திட
வீண் வார்த்தைகள் இனி ஏன் தேடிட

நிலா நீ வானம் காற்று
மழை என் கவிதை மூச்சு
இசை துளி தேனா மலரா
திசை ஒலி பகல்

அன்புள்ள மன்னா அன்புள்ள கணவா
அன்புள்ள கள்வனே அன்புள்ள கண்ணாளனே