Thursday, September 23, 2010

கொன்றாலும் அழியாத உந்தன் ஞாபகம் கண்ணீரில் முடிந்தால்தான் காதல் காவியம்


ஆறுயிரே ஆறுயிரே அன்பே
உன் அன்பில் தானே நான் வாழ்கிறேன்
நீயில்லையேல் நான் இல்லையே
நீப்போகும் முன்னே அன்பே நான் சாகிறேன்

உயிரே என் உயிரே
எனக்குள் உன் உயிரே
கண்கள் மூடி அழுகிறேன் கரைகிறேன்
எண்ணி பிரிகிறேன்

ஆறுயிரே ஆறுயிரே அன்பே
உன் அன்பில் தானே நான் வாழ்கிறேன்
நீயில்லையேல் நான் இல்லையே
நீப்போகும் முன்னே அன்பே நான் சாகிறேன்

விழி தாண்டி போனாலும் வருவேன் உன்னிடம்
எங்கே நீ தொலைந்தாலும் நெஞ்சில் உன் முகம்
காற்றினில் வருவேனோ
சுவாசத்தில் சேர்வேனோ
நீ சுவாசிக்கும்போது வெளிவரமாட்டேன்
உனக்குள் வசிப்பேனே
உயிரே என்னுயிரே
உனக்குமள் என்னுயிரே
உனை எண்ணி அழுகிறேன் கரைகிறேன்
என்னில் உறைகிறேன்

ஆறுயிரே ஆறுயிரே அன்பே
உன் அன்பில் தானே நான் வாழ்கிறேன்
நீயில்லையேல் நான் இல்லையே
நீப்போகும் முன்னே அன்பே நான் சாகிறேன்

கொன்றாலும் அழியாத உந்தன் ஞாபகம்
கண்ணீரில் முடிந்தால்தான் காதல் காவியம்
நேற்றினில் வாழ்வேனோ
உன் தோள்களில் சாய்வேனோ
உன் கைவிரல் பிடித்து காதலில் திளைத்து
காலங்கள் மறப்பேனோ
உயிரே என்னுயிரே நாமே ஓருயிரே
நம்மை எண்ணி அழுகிறேன் கரைகிறேன்
உயிரை துறக்கிறேனே

Wednesday, September 22, 2010

காதல் வந்து வானவில்லை பாலம் போட்டு அழைக்குது


மருதாணி பூவப்போல மருதாணி பூவப்போல
குறு குறு குறு வெட்கப்பார்வை கண்ணுக்குள்ள
சிலு சிலு சிலு சூறக்காத்து நெஞ்சுக்குள்ள
(மருதாணி..)


விட்டு விட்டு வெயிலும் அடிக்குது
விட்டு விட்டு மழையும் அடிக்குது
காதல் வந்து வானவில்லை பாலம் போட்டு அழைக்குது
தொட்டு தொட்டு பிடிக்குது
தூண்டில் போட்டு இழுக்குது
திட்டித் திட்டிக் காலு ரெண்டும் உன்னை தேடி நடக்குது

மருதாணிப் பூவே ஹே ஹே ஹே
மருதாணிப் பூவே ஹே ஹே ஹே
மருதாணிப் பூவே ஹே ஹே ஹே

மருதாணி பூவப்போல மருதாணி பூவப்போல
குறு குறு குறு வெட்கப்பார்வை கண்ணுக்குள்ள
சிலு சிலு சிலு சூறக்காத்து நெஞ்சுக்குள்ள

ம்ம்.. தட்டித்தட்டி நெஞ்சத்தொறக்குற
எட்டி எட்டி உள்ள குதிக்கிற
வெட்டி வெட்டி வேலை வெட்டி
அம்புட்டையும் கெடுக்கிறே
நெத்திப் பொட்டு மத்தியில சுத்தி வச்சி அடிக்கிற
இம்புட்டையும் பண்ணிப்புட்டு நல்லவனா நடிக்கிறே

மருதாணிப் பூவே ஹே ஹே ஹே
மருதாணிப் பூவே ஹே ஹே ஹே
மருதாணிப் பூவே ஹே ஹே ஹே

மருதாணி பூவப்போல மருதாணி பூவப்போல
குறு குறு குறு வெட்கப்பார்வை கண்ணுக்குள்ள
சிலு சிலு சிலு சூறக்காத்து நெஞ்சுக்குள்ள

என் நெஞ்சு என் நெஞ்சு உன்னைத்தேடி ஓடுதே


என் நெஞ்சே என் நெஞ்சே என்னென்னமோ ஆகுதே
என் நெஞ்சு என் நெஞ்சு உன்னைத்தேடி ஓடுதே
ஆமாங்க ஆமாங்க என்னென்னமோ ஆகுதே
அங்குட்டும் இங்குட்டும் ஆச முகம் தேடுதே ஹே

எட்டுக்கண்ணு காளைமேல் நேத்து...
உனக்காக காத்திருந்தேன் பாத்து...
நாலுக்கோட்டை தேவர் என்னைப்பார்த்து
கேள்விக்கேட்க நடுங்கிப்போனேன் நேத்து

வாடா வாடா வாடா வாடா வாடா
வாடா வாடா வாடா வாடா வாடா
வாடா வாடா வாடா வாடா வாடா
வாடா வாடா வாடா வாடா வாடா
(என் நெஞ்சே..)

விழித்து எழுந்தவுடன் தாய்முகம் பார்க்கும்
பழக்கம் மறந்துப்போச்சே
வெயிலத்திறந்தவுடன் உன் முகம் தானே
தெரிஞ்சுப் பழக்கமாச்சே
ஹே யாரோ பார்த்துப்பேசும் போது
நீயே வந்துப் போற
ஹம் மஞ்சப்பூசம் என்னுக்கிட்ட மாட்டிக்கிச்சு மாராப்பு
அட கிறுக்கா..
அடி கிறுக்கி..
அட கண்ணுப்பட்டு ஒன்னா சேர்ந்து
பாதம் போடுதடா
கைகள் போடும் கோலம் இப்போ காலும் போடுதடா
என் நெஞ்சே என் நெஞ்சே ஆ ஆ..
(என் நெஞ்சே..)

ஆத்துக்குள்ள அள்ளிப்பூவுப் பார்க்க
அந்தப்பூவ அத்தை மகன் பார்க்க
அவ பார்க்க அவன் பார்க்க
அவ பார்க்க அவன் பார்க்க
அங்க யாரும் கேட்க யாரும் இல்லையே

கெழக்கு வழக்கு என் திசை தெரியாம
கிறுக்குப்பிடிச்சுப் போச்சு
எடக்கு மடக்கு என பேசறப்பேச்சு
எதுக்கு மௌனமாச்சு
ஏ காலை மாலை மூணு வேளை
மூளை கெட்டுப்போச்சினா
காப்பித்தூளில் கொழம்பு வச்சி கேவலமா ஆச்சு
அடி கிறுக்கி..
அட கிறுக்கா..
ஊருக்குள்ள காதல் எல்லாம் குறையில் நடக்குமடி
நம்ம காதல் மட்டும்தானே மேலே மெதக்குதடி
(என் நெஞ்சே..)

Tuesday, September 21, 2010

பகவான் பேசுவதில்லை அட பக்தியும் குறைவது இல்லை , காதலி பேசவும் இல்லை என் காதல் குறையவும் இல்லை


மெல்லினமே மெல்லினமே நெஞ்சில்
மெல்லிய காதல் பூக்கும்
என் காதல் ஒன்றே மிக உயர்ந்ததடி
அதை வானம் அண்ணந்து பார்க்கும்...

மெல்லினமே மெல்லினமே நெஞ்சில்
மெல்லிய காதல் பூக்கும்
என் காதல் ஒன்றே மிக உயர்ந்ததடி
அதை வானம் அண்ணந்து பார்க்கும்...
நான் தூரத் தெரியும் வானம்
நீ துப்பட்டாவில் இழுத்தாய்
என் இருபத்தைந்து வயசை
ஒரு நொடிக்குள் அடைந்தாய்.. ஹோ..ஹோ..

மெல்லினமே மெல்லினமே நெஞ்சில்
மெல்லிய காதல் பூக்கும்
என் காதல் ஒன்றே மிக உயர்ந்ததடி
அதை வானம் அண்ணந்து பார்க்கும்...

வீசிப்போன புயலில் என் வேர்கள் சாய வில்லை
ஒரு பட்டாம் பூச்சி மோத அது பட்டென்று சாய்ந்ததடி
எந்தன் காதல் சொல்ல என் இதயம் கையில் வைத்தேன்
நீ தாண்டிப்போன போது அது தரையில் விழுந்ததடி
மண்ணிலே செம்மண்ணிலே என் இதயம் துள்ளுதடி
ஒவ்வொரு துடிப்பிலும் உன் பெயர் சொல்லுதடி
கனவுப் பூவே வருக உன் கையால் இதயம் தொடுக.
எந்தன் இதயம் கொண்டு நீ உந்தன் இதயம் தருக.
ஹோ..ஹோ...

மெல்லினமே மெல்லினமே
நெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும்
என் காதல் ஒன்றே மிக உயர்ந்ததடி
அதை வானம் அண்ணந்து பார்க்கும்...

மண்ணைச்சேரும் முன்னே அடி மழைக்கு லட்சியம் இல்லை
மண்னைச் சேர்ந்த பின்னே அதன் சேவை தொடங்குமடி
உன்னைக் காணும் முன்னே என் உலகம் தொடங்கவில்லை
உன்னைக் கண்ட பின்னே என் உலகம் இயங்குதடி..
வானத்தில் ஏறியே மின்னல் பிடிக்கிறவன்
பூக்களைப் பறிக்கவும் கைகள் நடுங்குகிறேன்...
பகவான் பேசுவதில்லை அட பக்தியும் குறைவது இல்லை ,
காதலி பேசவும் இல்லை என் காதல் குறையவும் இல்லை ஹோ..ஹோ..
(மெல்லினமே மெல்லினமே)

Monday, September 13, 2010

ஏன் எந்தன் வாழ்வில் வந்தாய் , என் இரவையும் பகலையும் மாற்றிபோனாய்


ஏதோ ஒன்று என்னை தாக்க
யாரோ போல உன்னை பார்க்க
சுற்றி எங்கும் நாடகம் நடக்க
பெண்ணே நானும் எப்படி நடிக்க
காலம் முழுதும் வாழும் கனவை
கண்ணில் வைத்து தூங்கினேன்
காலை விடிந்து போகும் நிலவை
கையில் பிடிக்க ஏங்கினேன்
பெண்ணே உந்தன் நியாபகத்தை
நெஞ்சில் சேர்த்து வைத்தேனே
உன்னை பிரிந்து போகையிலே
நெஞ்சை இங்கு தொலைத்தேனே

என்னை உன்னிடம் விட்டு செல்கிறேன்
எதுவும் இல்லையே என்னிடத்தில்
எங்கே போவது யாரை கேட்பது
எல்லா பாதையும் உன்னிடத்தில்
ஏன் எந்தன் வாழ்வில் வந்தாய்
என் இரவையும் பகலையும் மாற்றிபோனாய்
ஏன் இந்த பிரிவை தந்தாய்
என் இதயத்தில் தனிமையை ஊற்றிபோனாய்
உள்ளே உன் குரல் கேட்குதடி
என்னை என்னுயிர் தாக்குதடி
எங்கே இருக்கிறேன் எங்கே நடக்கிறேன்
மறந்தேன் நான்

பெண்ணே உந்தன் ஞாபகத்தை
நெஞ்சில் சேர்த்து வைத்தேனே
உன்னை பிரிந்து போகையிலே
நெஞ்சை இங்கு தொலைத்தேனே

ஏதோ ஒன்று என்னை தாக்க
யாரோ போல உன்னை பார்க்க
சுற்றி எங்கும் நாடகம் நடக்க
பெண்ணே நானும் எப்படி நடிக்க
காலம் முழுதும் வாழும் கனவை
கண்ணில் வைத்து தூங்கினேன்
காலை விடிந்து போகும் நிலவை
கையில் பிடிக்க ஏங்கினேன்
பெண்ணே உந்தன் நியாபகத்தை
நெஞ்சில் சேர்த்து வைத்தேனே
உன்னை பிரிந்து போகையிலே
நெஞ்சை இங்கு தொலைத்தேனே

Sunday, September 12, 2010

நீ என்னை காண்பதே, வானவில் போன்றதே , தூரத்தில் உன்னை கண்டால் தூறல் நெஞ்சில் சிந்துதே


இறகை போலே, அலைகிறேனே
உந்தன் பேச்சை கேட்கையிலே
குழந்தை போலே, தவழ்கிறேனே
உந்தன் பார்வை தீண்டையிலே
தொலையாமல் தொலைந்தேனே
உன் கைகள் என்னை தொட்டதும்
கரையாமல் கரைந்தேனே
உன் மூச்சு காற்று பட்டதும்
அநியாய காதல் வந்ததே, அட காதல் ஆசை தந்ததே
எனக்குள்ளே எதோ மின்னல் போலே தொட்டு சென்றதே

கண்ணோரம் காதல் வந்தால் கண்ணீரும் தித்திப்பாகும்
வேறுஒன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்
என்னோடு நீயும் வந்தால், எல்லாமே கையில் சேரும்
வேறுஒன்றும் தேவையில்லை, நீ மட்டும் போதும் போதும்

கூட வந்து நீ நிற்பதும் , கூடுவிட்டு நான் செல்வதும்
தொடருதே, தொடருதே நாடகம்
பாதி மட்டுமே சொல்வதும், மீதி நெஞ்சிலே என்பதும்
புரியுதே, புரியுதே காரணம்
நேரங்கள் தீருதே, வேகங்கள் கூடுதே
பூவே உன் கண்ணுக்குள்ளே பூமி பந்து சுத்துதே


கண்ணோரம் காதல் வந்தால் கண்ணீரும் தித்திப்பாகும்
வேறுஒன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்
என்னோடு நீயும் வந்தால், எல்லாமே கையில் சேரும்
வேறுஒன்றும் தேவையில்லை, நீ மட்டும் போதும் போதும்

ஏய் என்னானதோ, ஏதானதோ இல்லாமல் போச்சே தூக்கமும்
கண்ணே உன்னை காணாமல் நான் இல்லை
என்மீதிலே உன் வாசனை எப்போதும் வீச பார்கிறேன்
அன்பே உன்னை சேராமல் வாழ்வில்லை
நீ என்னை காண்பதே, வானவில் போன்றதே
தூரத்தில் உன்னை கண்டால் தூறல் நெஞ்சில் சிந்துதே

கண்ணோரம் காதல் வந்தால் கண்ணீரும் தித்திப்பாகும்
வேறுஒன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்
என்னோடு நீயும் வந்தால், எல்லாமே கையில் சேரும்
வேறுஒன்றும் தேவையில்லை, நீ மட்டும் போதும் போதும்

Monday, August 30, 2010

கண்ணால் சிரிக்கிறாள் முன்னால் நடக்கிறாள் ... நெஞ்சை இழுக்கிறாள் ஒஹோ ... கூட்டத்தில் இருந்தும் தனியாக தெரிந்தாள் ...


யார் இந்த பெண்தான் என்று கேட்டேன் முன்னாலே
இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே
என்னை பார்க்கிறாள்... ஏதோ கேட்கிறாள்...
எங்கும் இருக்கிறாள் ஒஹோ
கண்ணால் சிரிக்கிறாள் முன்னால் நடக்கிறாள்
நெஞ்சை இழுக்கிறாள் ஒஹோ
கூட்டத்தில் இருந்தும் தனியாக தெரிந்தாள்
தோட்டத்தில் மலர்ந்த பூவாக திரிந்தாள்
என்னை ஏதோ செய்தாள் ...

யார் இந்த பெண்தான் என்று கேட்டேன் முன்னாலே
இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே


என் வீடு முற்றத்தில் இவள் போடும் கோலங்கள்
எப்போதும் வேண்டும் என்று கேட்பேன்
அணில் ஆடும் கூடத்தில் இவள் பாடும் ராகத்தில்
அதிகாலை சூரியனை பார்ப்பேன்
கண்ணாடி வளையலை போலே
கையோடு நானும் பிறக்கவே துடிப்பேன்
கால்தீண்டும் கொழுசில் என்னோட மனச
சேர்த்து கோர்க்கவே தவிப்பேன்
காதோடு தவழும் கம்மல் போல்கிடப்பேன்
கன்னத்தை உறசி என் ஜென்மம் முடிப்பேன்
என்னை ஏதோ செய்தாள் ...

யார் இந்த பெண்தான் என்று கேட்டேன் முன்னாலே
இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே ...

நான் கொஞ்சம் பார்த்தால் எங்கேயோ பார்ப்பாள்
பார்க்காத நேரம் என்னை பார்ப்பாள்
எனை பார்த்து சிரிப்பாள் நான் பார்த்தால் மறைப்பாள்
மெய்யாக பொய்யாகத்தான் நடிப்பாள்
பெண் நெஞ்சம் புதையலை எப்போதும்
யாரும் யாரும் அறிந்ததே இல்லை
ஆண் நெஞ்சின் துடிப்பும் அன்றாட தவிப்பும்
பெண்கள் மதிப்பதே இல்லை
மனம் நொந்த பிறகே முதல் வார்த்தை சொல்வாள்
மழை நின்ற பிறகே குடை தந்து செல்வாள்
என்னை ஏதோ செய்தாள் ...

யார் இந்த பெண்தான் என்று கேட்டேன் முன்னாலே
இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே

என்னை பார்க்கிறாள்... ஏதோ கேட்கிறாள்...
எங்கும் இருக்கிறாள் ஒஹோ
கண்ணால் சிரிக்கிறாள் முன்னால் நடக்கிறாள்
நெஞ்சை இழுக்கிறாள் ஒஹோ
கூட்டத்தில் இருந்தும் தனியாக தெரிந்தாள்
தோட்டத்தில் மலர்ந்த பூவாக திரிந்தாள்
என்னை ஏதோ செய்தாள் ...