Thursday, February 17, 2011

ஏனடா பொய்க் கோபம் கொண்டாய் .... காதலில் ஏனோ எனை பழி வாங்கினாய்


துள்ளி துள்ளி குதிக்குது நெஞ்சம்
நீ அருகினில் வந்து நின்றால்
காதலே காதலே சுகம் தானா

மெல்ல மெல்ல திறக்கிற ரோஜா
என் உயிரைக் கொள்ளை கொண்டாள்
வானிலே பறவை ஆனேனே

ஏனடா பொய்க் கோபம் கொண்டாய்
என் மனம் உடைகின்றது ரெண்டாய்
காவிரி ஆறே நீ கரை தாண்டினாய்
காதலில் ஏனோ எனை பழி வாங்கினாய்
ஓ ஹோ..

துள்ளி துள்ளி குதிக்குது நெஞ்சம்
நீ அருகினில் வந்து நின்றால்
காதலே காதலே சுகம் தானா

ஓ ஹோ..
மூக்குத்தியை பார்த்தாலே
மூச்சு பறிப்போகும்
முத்தம் ஒன்று தந்தாலே
எல்லாம் சரி ஆகும்
ஒரு கண்ணில் பார்த்தேனே
கன்னி மனம் தாங்காதே
மேனி தொடும் நொடியெல்லாம்
மின்சாரமாய் தாக்காதே
நீதான் எந்தன் சுவாசம் ஓ..

துள்ளி துள்ளி குதிக்குது நெஞ்சம்
நீ அருகினில் வந்து நின்றால்
காதலே காதலே சுகம் தானா


கோடை வெயில் கூட
மோசமில்லை பெண்ணே
கொஞ்சும் உந்தன் பார்வை
வாட்டியது என்னை
வெட்கப்பட்டு முகமெல்லாம்
வேர்வைத்துளி வழிந்ததோ
பக்கம் வந்து நின்றேனே
உந்தன் கையால் பூச்சூட
காதல் காற்றே வாழ்க

துள்ளி துள்ளி குதிக்குது நெஞ்சம்
நீ அருகினில் வந்து நின்றால்
காதலே காதலே சுகம் தானா

மெல்ல மெல்ல திறக்கிற ரோஜா
என் உயிரைக் கொள்ளை கொண்டாள்
வானிலே பறவை ஆனேனே

ஏனடா பொய்க் கோபம் கொண்டாய்
என் மனம் உடைகின்றது ரெண்டாய்
காவிரி ஆறே நீ கரை தாண்டினாய்
காதலில் ஏனோ எனை பழி வாங்கினாய்
ஓ ஹோ..

துள்ளி துள்ளி குதிக்குது நெஞ்சம்
நீ அருகினில் வந்து நின்றால்
காதலே காதலே சுகம் தானா

Monday, February 14, 2011

காதல் ஒரு ஞாபக மறதி என்னையே நானும் மறந்தேன்


சில் சில் சில் சில்லல்லா சொல் சொல் நீ மின்னலா
சில் சில் சில் சில்லல்லா சொல் சொல் நீ மின்னலா

நீ காதல் ஏவாளா உன் கண்கள் கூர் வாளா
நீ சாரலா இசை தூறலா பூஞ்சோலையானவளா

சில் சில் சில் சில்லல்லா சொல் சொல் நான் மின்னலா

நீயிருக்கும் நாளில் எல்லாம் இமயத்தின் மேலே இருப்பேன்
நீயுமிங்கு இல்லா நாளில் என் மீது இமயம் இருக்கும்

அகிம்சயாய் அருகில் வந்து வன்முறையில் இறங்குகிறாய்
சிற்பமே என்னடி மாயம் சிற்பியை செதுக்குகிறாய்

ஒரு சுவாசம் போதுமே நாமும் வாழலாம்

சில் சில் சில் சில்லல்லா சொல் சொல் நீ மின்னலா
சில் சில் சில் சில்லல்லா சொல் சொல் நான் மின்னலா

காதல் ஒரு ஞாபக மறதி என்னையே நானும் மறந்தேன்
உன்னையே நீயும் மறந்தாய் மறந்ததால் ஒன்றாய் இணைந்தோம்

உன்னைப் போல் கவிதை சொன்னால் உலகமே தலையாட்டும்
நம்மைப் போல் காதலர் பார்த்தால் தாஜ்மகால் கைதட்டும்

காதலெனும் புள்ளியில் பூமி உள்ளதே

சில் சில் சில் சில்லல்லா சொல் சொல் நீ மின்னலா
சில் சில் சில் சில்லல்லா சொல் சொல் நான் மின்னலா

நீ காதல் ஏவாளா உன் கண்கள் கூர் வாளா
நீ சாரலா இசை தூறலா பூஞ்சோலையானவளா

சில் சில் சில் சில்லல்லா சொல் சொல் நான் மின்னலா
சில் சில் சில் சில்லல்லா சொல் சொல் நீ மின்னலா

Sunday, February 13, 2011

கற்பனை ஓராயிரம் ஒரு முறை பார்த்தாலென்ன


ஹலோ...ஹலோ
ஹலோ மை டியர் ராங் நம்பர்
ஹலோ மை டியர் ராங் நம்பர்
கேட்கவே உந்தன் குரல் சொர்க்கம்
நேரிலே பார்த்தால் என்ன வெட்கம்
கேட்கவே உந்தன் குரல் சொர்க்கம்
நேரிலே பார்த்தால் என்ன வெட்கம்
கற்பனை ஓராயிரம் கற்பனை ஓராயிரம்
ஒரு முறை பார்த்தாலென்ன
ஹலோ...ஹலோ மை டியர் ராங் நம்பர்
கேட்பதில் தீரும் உங்கள் தாகம்
நேரிலே பார்த்தால் என்ன லாபம்
கேட்பதில் தீரும் உங்கள் தாகம்
நேரிலே பார்த்தால் என்ன லாபம்
அற்புதம் ஏதும் இல்லை
அதிசய பெண்மை இல்லை

ஹலோ...ஹலோ மை டியர் ராங் நம்பர்
கேட்பதில் தீரும் உங்கள் தாகம்...ம்ம்ஹ்ம்
நேரிலே பார்த்தால் என்ன லாபம்

காவிரியின் மீனோ...No பூவிரியும் தேனோ...No No
காவிரியின் மீனோ பூவிரியும் தேனோ
தேவமகள் தானோ தேடி வரலாமோ...Not Yet
பூவை என்னை பார்த்தால் காதல் வரக்கூடும்...Really
பூவை என்னை பார்த்தால் காதல் வரக்கூடும்
பூஜையறை ஆசை வரக்கூடும்...I Don't Mind
கற்பனை ஓராயிரம்...கற்பனை ஓராயிரம்
ஒரு முறை பார்த்தாலென்ன

ஹலோ...ஹலோ மை டியர் ராங் நம்பர்
கேட்கவே உந்தன் குரல் சொர்க்கம்...ம்ம்
நேரிலே பார்த்தால் என்ன வெட்கம்...ம்ம்ஹ்ம்

உன்னிடத்தில் காதல் உள்ளவர்கள் யாரோ
என்னவென்று சொல்வேன் உன்னையன்றி யாரோ
வேலி உள்ள முல்லை...வேலி எனக்கில்லை
வேலி உள்ள முல்லை...வேலி எனக்கில்லை
பொறுமையுடன் இருங்கள்...முதுமை வரும் வரையோ

ஹலோ...ஹலோ மை டியர் ராங் நம்பர்
கேட்கவே உந்தன் குரல் சொர்க்கம்...ம்ம்
நேரிலே பார்த்தால் என்ன வெட்கம்...ம்ம்ஹ்ம்
ஹலோ...ஹலோ

Sunday, December 19, 2010

நிறையை மட்டுமே காதல் பார்க்கும் குறையை மட்டுமே கல்யாணம் பார்க்கும் ஏன் கண்ணா?



செப்டம்பர் மாதம் செப்டம்பர் மாதம்
வாழ்வின் துன்பத்தைத் தொலைத்து விட்டோம்
செப்டம்பர் மாதம் செப்டம்பர் மாதம்
வாழ்வின் துன்பத்தைத் தொலைத்து விட்டோம்;
அக்டோபர் மாதம் அக்டோபர் மாதம்
வாழ்வின் இன்பத்தைத் தொலைத்து விட்டோம்

துன்பம் தொலைந்தது எப்போ? காதல் பிறந்ததே அப்போ!
இன்பம் தொலைந்தது எப்போ? கல்யாணம் முடிந்ததே அப்போ!

செப்டம்பர் மாதம் செப்டம்பர்; மாதம்
வாழ்வின் துன்பத்தைத் தொலைத்து விட்டோம்;
அக்டோபர் மாதம் அக்டோபர் மாதம்
வாழ்வின் இன்பத்தைத் தொலைத்து விட்டோம்
துன்பம் தொலைந்தது எப்போ? காதல் பிறந்ததே அப்போ!
இன்பம் தொலைந்தது எப்போ? கல்யாணம் முடிந்ததே அப்போ!


ஏ பெண்ணே! காதல் என்பது இனிக்கும் விருந்து
கல்யாணம் என்பது வேப்பங் கொழுந்து ஏன் கண்ணே?
நிறையை மட்டுமே காதல் பார்க்கும்
குறையை மட்டுமே கல்யாணம் பார்க்கும் ஏன் கண்ணா?
காதல் பார்ப்பது இருண்டு கண்ணில்
கல்யாணம் பார்ப்பது நாலு கண்ணிலடி பெண்ணே
கிளிமூக்கின் நுனிமூக்கில் கோபங்கள் அழகென்று
ரசிக்கும் ரசிக்கும் காதல்
கல்யாணம் ஆனாலே துரும்பெல்லாம் தூணாக
ஏன் ஏன் ஏன் மோதல்?

பெண்கள் இல்லாமல் ஆண்களுக் காறுதல் கிடைக்காது
பெண்களே உலகில் இல்லையென்றால்
ஆறுதலே தேவை இருக்காது

செப்டம்பர் மாதம் செப்டம்பர்; மாதம்;
அக்டோபர் மாதம் அக்டோபர் மாதம்


நான் கண்டேன் காதல் என்பது கழுத்துச் சங்கிலி
கல்யாணம் என்பது காலில் சங்கிலி என் செய்வேன்;?
கல்யாணம் என்பதைத் தள்ளிப் போடு
தொண்ணூறு வரைக்கும் டூயட் பாடு வா அன்பே!
காதல் பொழுதில் விரும்பும் குறும்பு
கல்யாணக் கட்டிலில் கிடைப்பதில்லையே நண்பா!
பிரிவொன்று நேராத உறவொன்றில் சுகமில்லை
காதல் காதல் அதுதான்
உறவோடு சிலகாலம் பரிவோடு சிலகாலம்
நாம் வாழ்வோம் வா! வா!
ஆண்கள் இல்லாமல் பெண்களுக்காறுதல் கிடைக்காது
ஆண்களே உலகில் இல்லையென்றால்
ஆறுதலே தேவை இருக்காது

செப்டம்பர் மாதம் செப்டம்பர்; மாதம்
வாழ்வின் துன்பத்தைத் தொலைத்து விட்டோம்;
அக்டோபர் மாதம் அக்டோபர் மாதம்
வாழ்வின் இன்பத்தைத் தொலைத்து விட்டோம்

துன்பம் தொலைந்தது எப்போ?
காதல் பிறந்ததே அப்போ!
இன்பம் தொலைந்தது எப்போ?
கல்யாணம் முடிந்ததே அப்போ!

Wednesday, December 15, 2010

கண்ணோடு மணியானாய் அதனால் கண்ணைவிட்டுப் பிரிவதில்லை நீ என்னைவிட்டு பிரிவதில்லை


ப பனி பனிபம பனிபம கமப
சகசனி பனிபம கமகச கமப
தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதகஜம்
தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதகஜம்

கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா கண்களுக்குச் சொந்தமில்லை
கண்களுக்குச் சொந்தமில்லை
கண்ணோடு மணியானாய் அதனால் கண்ணைவிட்டுப் பிரிவதில்லை நீ
என்னைவிட்டு பிரிவதில்லை

தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதகஜம்
தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதகஜம்

சலசல சலசல இரட்டைக் கிளவி தகதக தகதக இரட்டைக் கிளவி
உண்டல்லோ தமிழில் உண்டல்லோ
பிரித்து வைத்தல் நியாயம் இல்லை பிரித்துப் பார்த்தால் பொருளும் இல்லை
இரண்டல்லோ இரண்டும் ஒன்றல்லோ
தினக்கு தினக்கு தின திந்தின்னானா நாகிருதானி தோங்கிருதானி தினதோம்
இரவும் பகலும் வந்தாலும் நாள் என்பது ஒன்றல்லோ
கால்கள் இரண்டு கொண்டாலும் பயணம் என்பது ஒன்றல்லோ
இதயம் இரண்டு என்றாலும் காதல் என்பது ஒன்றல்லோ

கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா கண்களுக்குச் சொந்தமில்லை
கண்களுக்குச் சொந்தமில்லை
கண்ணோடு மணியானாய் அதனால் கண்ணைவிட்டுப் பிரிவதில்லை நீ
என்னைவிட்டு பிரிவதில்லை

தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதகஜம்
தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதகஜம்

அன்றில் பறவை இரட்டைப் பிறவி
ஒன்றில் ஒன்றாய் வாழும் பிறவி
பிரியாதே விட்டுப் பிரியாதே
கண்ணும் கண்ணும் இரட்டைப் பிறவி
ஒரு விழி அழுதால் மறுவிழி அருவி
பொழியாதோ அன்பே வழியாதோ
தினக்கு தினக்கு தின திந்தின்னானா நாகிருதானி தோங்கிருதானி தினதோம்
ஒருவர் தூங்கும் தூக்கத்தில் இருவர் கனவுகள் காணுகிறோம்
ஒருவர் வாங்கும் சுவாசத்தில் இருவர் இருதயம் வாழுகிறோம்
தாங்கி கொள்ள மட்டும்தான் தனித் தனியே தேடுகின்றோம்

Tuesday, December 14, 2010

மரபு வேலிக்குள் நீ இருக்க மறக்க நினைக்கிறேன் முடியவில்லை


உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
என் நினைவு தெரிந்து நான் இதுபோல இல்லையே
எவளோ எவளோ என்று நெடுநாள் இருந்தேன்
இரவும் பகலும் சிந்தித்தேன்....
இவளே, இவளே, என்று இதயம் தெளிந்தேன்
இளமை இளமை பாதித்தேன்....
கொள்ளை கொண்ட அந்த நிலா
என்னைக் கொன்று கொன்று தின்றதே
இன்பமான அந்த வலி
இன்னும் வேண்டும் வேண்டும் என்றதே....

உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
என் நினைவு தெரிந்து நான் இதுபோல இல்லையே

ஏன் பிறந்தேன் என்று நான் இருந்தேன்
உன்னைப் பார்த்தவுடன் உண்மை நான் அறிந்தேன்
என் உயிரில் நீ பாதி என்று
உன் கண்மணியில் நான் கண்டு கொண்டேன்
எத்தனை பெண்களைக் கடந்திருப்பேன்
இப்படி என் மனம் துடித்ததில்லை
இமைகள் இரண்டையும் திருடிக் கொண்டு
உறங்கச் சொல்வதில் நியாயமில்லை
நீ வருவாய இல்லை மறைவாயோ? ஏ ஏ ஏ ஏ ஏ!
தன்னைத் தருவாயோ? இல்லை கரைவாயோ

உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
என் நினைவு தெரிந்து நான் இதுபோல இல்லையே

நீ நெருப்பு என்று தெரிந்த பின்னும்
உன்னைத் தொடத் துணிந்தேன் என்ன துணிச்சலடி
மணமகளாய் உன்னைப் பார்த்த பின்னும்
உன்னைச் சிறையெடுக்க மனம் துடிக்குதடி
மரபு வேலிக்குள் நீ இருக்க
மறக்க நினைக்கிறேன் முடியவில்லை
இமயமலை என்று தெரிந்த பின்னும்
எறும்பின் ஆசையோ அடங்கவில்லை
நீ வருவயோ? இல்லை மறைவாயோ? ஏ ஏ ஏ ஏ ஏ!
தன்னைத் தருவாயோ இல்லை கரைவாயோ


உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
என் நினைவு தெரிந்து நான் இதுபோல இல்லையே
எவளோ எவளோ என்று நெடுநாள் இருந்தேன்
இரவும் பகலும் சிந்தித்தேன்....
இவளே, இவளே, என்று இதயம் தெளிந்தேன்
இளமை இளமை பாதித்தேன்....
கொள்ளை கொண்ட அந்த நிலா
என்னைக் கொன்று கொன்று தின்றதே
இன்பமான அந்த வலி
இன்னும் வேண்டும் வேண்டும் என்றதே....

Monday, December 13, 2010

கண்ணால் கண்ணில் கற்பித்தோம் காதல் பாடம் ஒப்பித்தோம்


தோம் தோம் தித்தித்தோம்
தொலைவில் இருந்தும் சந்தித்தோம்
தோம் தோம் தித்தித்தோம்
தொலைவில் இருந்தும் சந்தித்தோம்

கண்ணால் கண்ணில் கற்பித்தோம்
காதல் பாடம் ஒப்பித்தோம்
கண்ணால் கண்ணில் கற்பித்தோம்
காதல் பாடம் ஒப்பித்தோம்
தீண்டித் தீண்டித் தூண்டும் விரலை
திட்டிக்கொண்டே தித்தித்தோம்

தோம் தோம் தித்தித்தோம்
தொலைவில் இருந்தும் சந்தித்தோம்
தோம் தோம் தித்தித்தோம்
தொலைவில் இருந்தும் சந்தித்தோம்

ஆணில் உள்ள பெண்ணைக் கொஞ்சம்
பெண்ணில் உள்ள ஆணைக் கொஞ்சம்
கொஞ்சச் சொல்லி கொஞ்சச் சொல்லி
கொஞ்சச் சொல்லி யாசித்தோம்
ஆணில் உள்ள பெண்ணைக் கொஞ்சம்
பெண்ணில் உள்ள ஆணைக் கொஞ்சம்
கொஞ்சச் சொல்லி கொஞ்சச் சொல்லி
கொஞ்சச் சொல்லி யாசித்தோம்
கொத்திக் கொத்தி பேசும் கண்ணை
திக்கி திக்கி வாசித்தோம்
சுற்றிச் சுற்றி வீசும் காற்றை
நிற்கச் சொல்லி ஸ்வாசித்தோம்
உன்னை என்னை துண்டித்தோம்
உயிரினில் ஒன்றாய் சந்தித்தோம்
மீண்டும் மீண்டும் சீண்டும் இதழை
முத்தம் செய்து தித்தித்தோம்

தோம் தோம் தித்தித்தோம்
தொலைவில் இருந்தும் சந்தித்தோம்
தோம் தோம் தித்தித்தோம்
தொலைவில் இருந்தும் சந்தித்தோம்


தீயில் உள்ள நீரைக் கொஞ்சம்
நீரிலுள்ள தீயைக் கொஞ்சம்
சேரச் சொல்லி சேரச் சொல்லி
சேரச் சொல்லி யாசித்தோம்
தீயில் உள்ள நீரைக் கொஞ்சம்
நீரிலுள்ள தீயைக் கொஞ்சம்
சேரச் சொல்லி சேரச் சொல்லி
சேரச் சொல்லி யாசித்தோம்

ஒற்றைச் சொல்லை சொல்லத்தானே
கோடி சொல்லை வாதித்தோம்
மெல்லப் பேசி மெல்ல தொட்டு
மெதுவாய் வயதை சோதித்தோம்
நிழலையும் தேடி நேசித்தோம்
கனவிலும் ஒன்றாய் யோசித்தோம்
இன்னும் இன்னும் என்றே நம்மை
தின்னச்சொல்லி தித்தித்தோம்

தோம் தோம் தித்தித்தோம்
தொலைவில் இருந்தும் சந்தித்தோம்
தோம் தோம் தித்தித்தோம்
தொலைவில் இருந்தும் சந்தித்தோம்

கண்ணால் கண்ணில் கற்பித்தோம்
காதல் பாடம் ஒப்பித்தோம்
கண்ணால் கண்ணில் கற்பித்தோம்
காதல் பாடம் ஒப்பித்தோம்
தீண்டித் தீண்டித் தூண்டும் விரலை
திட்டிக்கொண்டே தித்தித்தோம்

தோம் தோம் தித்தித்தோம்
தொலைவில் இருந்தும் சந்தித்தோம்
தோம் தோம் தித்தித்தோம்
தொலைவில் இருந்தும் சந்தித்தோம்