Saturday, October 17, 2020

இது காதலில் ஒரு ரகமோ இங்கு காதலர் அறிமுகமோ

 

ஒரு ராஜா ராணியிடம்

வெகு நாளாக ஆசை கொண்டான்

ஒரு ராஜா ராணியிடம்

வெகு நாளாக ஆசை கொண்டான்



அவன் வேண்டும் வேண்டும் என்றான்

அவள் நாளை நாளை என்றாள்

அவன் வேண்டும் வேண்டும் என்றான்

அவள் நாளை நாளை என்றாள்

 இதை காணாது நீயின்றி தீராதென்றான்


 ஒரு ராஜா ராணியிடம்

 வெகு நாளாக ஆசை கொண்டான்


செந்நிறத்துப் பூச்சரமோ மையெழுதும்

சித்திரத்து தேன் குடமோ

செந்நிறத்துப் பூச்சரமோ மையெழுதும்

சித்திரத்து தேன் குடமோ


மன்னர் என்ன மாநிறமோ பேசும்

மந்திரங்கள் யாரிடமோ

மன்னர் என்ன மாநிறமோ பேசும்

மந்திரங்கள் யாரிடமோ


 ஆசையுள்ள மேனியிலும் ஒரு பக்கம்

அச்சமுள்ள மான் இனமோ


நாடு விட்டு நாடு வந்தால் பெண்மை

நாணம் இன்றி போய் விடுமோ


 ஒரு ராஜா ராணியிடம்

வெகு நாளாக ஆசை கொண்டான்



 ஓடம் பொன்னோடம்

இது உன்னோடும் என்னோடும் ஓடும்

ஓடட்டும் ஓடமென்ன

இனி என் வாழ்வும் உன்னோடு ஓடும்

 ஓடம் பொன்னோடம்

இது உன்னோடும் என்னோடும் ஓடும்

ஓடட்டும் ஓடமென்ன

இனி என் வாழ்வும் உன்னோடு ஓடும்



 விருந்தும் மருந்தும் உன் கண்ணல்லவா

இருந்தும் மறைத்தேன் நான் பெண்ணல்லவா

 விருந்தும் மருந்தும் உன் கண்ணல்லவா

இருந்தும் மறைத்தேன் நான் பெண்ணல்லவா

 நாளை என் வானத்தில் தேவி நீ



மாதத்தில் ஓர் நாள் தான் பௌர்ணமி

 போகட்டும் போகப் போக

இந்தப் பொன்னூஞ்சல் என் நெஞ்சில் ஆடும்

ஒரு ராஜா ராணியிடம்

 வெகு நாளாக ஆசை கொண்டான்


நாளொரு மேனி பொழுதொரு வண்ணம்

ஐ லவ் யூ

 நானொரு தேனீ நீயொரு ரோஜா

ஐ லவ் யூ


காலம் நம்மை தேடுகின்றது வா வா வா

 காதல் தெய்வம் பாடுகின்றதே வாவாவா


{ ஆல்ப்ஸ் மலையின் சிகரத்தில்

அழகிய நைல் நதி ஓரத்தில்

மாலைப் பொழுதின் சாரத்தில்

மயங்கித் திரிவோம் பறவைகள் போல }


மஞ்சள் மலரால் ஆடை

பின்னுவோம் வா வா வா

 வாழ்வே வா என ஆணை போடுவோம் வா வா வா

 வெள்ளிய மேகம் துள்ளி எழுந்து

அள்ளி வழங்கும் வெள்ளைப் பூவில்

புது விதமன சடுகுடு விளையாட்டு

விட்டு விடாமல் கட்டியணைத்து

தொட்டது பாதி பட்டது பாதி

வித விதமான ஜோடிகள் விளையாட்டு

இது காதலில் ஒரு ரகமோ

இங்கு காதலர் அறிமுகமோ

 இது காதலில் ஒரு ரகமோ

இங்கு காதலர் அறிமுகமோ



 இந்தப் பூ மெத்தை

பனியிட்ட பஞ்சு மெத்தையோ

இந்த பூமிக்கு

அவனிட்ட பட்டுச் சட்டையோ

 சித்திரம் போலொரு முத்திரை இட்டானோ


சேர்ந்து களித்திட கட்டளை இட்டானோ

 இன்பத் தேனிடை ஆடும் தேவதை போல

ஆடிட வைத்தானோ

இந்த நேரத்தில் இது சுகமோ

 இதழோரத்தில் பரவசமோ

இந்த நேரத்தில் இது சுகமோ

 இதழோரத்தில் பரவசமோ

Thursday, October 8, 2020

மாலை சூடும் அந்நேரம் மங்கல வாழ்த்தொலி கீதம்



பூங்கதவே தாள்திறவாய் பூவாய் பெண் பாவாய்
பொன் மாலை சூடிடும் பூவாய் பெண் பாவாய்

பூங்கதவே தாள்திறவாய் பூவாய் பெண் பாவாய்
பொன் மாலை சூடிடும் பூவாய் பெண் பாவாய்

நீரோட்டம்
ம்ம்..
போலோடும் 
ம்ம்..
ஆசைக் கனவுகள் ஊர்கோலம்
ம்ம் ம்ம்
ஆஹாஹா  
ம்ம்
ஆனந்தம் 
ம்ம்
ஆடும் நினைவுகள் பூவாகும்
ம்ம்
காதல் தெய்வம் தான் வாழ்த்தும்
காதலில் ஊறிய ராகம்

பூங்கதவே தாள்திறவாய் பூவாய் பெண் பாவாய்
பொன் மாலை சூடிடும் பூவாய் பெண் பாவாய்

திருத் தேகம்  
ம்ம்
எனக்காகும் 
ம்ம்
தேனில் நனைந்தது என் உள்ளம்
ம்ம்
பொன்னாரம்
ம்ம்
 பூவாழை 
ம்ம்
ஆடும் தோரணம் எங்கெங்கும்
ம்ம்
மாலை சூடும் அந்நேரம்
மங்கல வாழ்த்தொலி கீதம்
ம்ம்

பூங்கதவே தாள்திறவாய் பூவாய் பெண் பாவாய்
பொன் மாலை சூடிடும் பூவாய் பெண் பாவாய்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

Wednesday, August 26, 2020

உன் நண்பன் இல்லை நான் உன் வானின் நிலா உன் நண்பன் இல்லை நீ என் உயிரின் விழா



கண்ணுக்குள் கண்ணை ஒற்றிக்கொண்டேஇல்லை இல்லை என்றாயே
கள்ளம் ஒன்றை உள்ளே வைத்து
பார்வை தந்து சென்றாயே
காதல் கொண்டு நான் பேச
கத்தி தூக்கி நீ வீச
பக்கம் வந்து தொட்டுப் பேசும்
கனவுகள் கண்டேன்
இன்னும் சற்றே அருகே வந்து
முத்தமும் தந்தேன்
இத்தனை நடந்தும் காதல் இல்லை
என்பது சரியா
ஆணாய் நானும் பெண்ணாய் நீயும்
இருப்பது பிழையா
உன் நண்பன் இல்லை
நான் உன் வானின் நிலா
உன் நண்பன் இல்லை
நானும் உன் வானின் நிலா
உன் நண்பன் இல்லை
நீ என் உயிரின் விழா
(கண்ணுக்குள்..)

நீயும் நானும்
ஒரே புள்ளி ஒரே கோடு
நீயும் நானும் வாழப் போகும்
அந்த இடம் ஒரே வீடு
காதல் என்றால் காயம் தான்
அன்பே ஓடோடி
வந்து என் கண்ணை பார்த்து
காதல் தான் என்று
சொல்லி என் காயம் ஆற்று
அன்பே ஓடோடி
வந்து என் கண்ணை பார்த்து
காதல் தான் என்று
சொல்லி என் காயம் ஆற்று



கண்ணுக்குள் கண்ணை ஒற்றிக்கொண்டே
இல்லை இல்லை என்றாயே
கள்ளம் ஒன்றை உள்ளே வைத்து
பார்வை தந்து சென்றாயே
காதல் கொண்டு நான் பேச
கத்தி தூக்கி நீ வீச
பக்கம் வந்து தொட்டுப் பேசும்
கனவுகள் கண்டேன்
இன்னும் சற்றே அருகே வந்து
முத்தமும் தந்தேன்
இத்தனை நடந்தும் காதல் இல்லை
என்பது சரியா
ஆணாய் நானும் பெண்ணாய் நீயும்
இருப்பது பிழையா
உன் நண்பன் இல்லை
நான் உன் வானின் நிலா
உன் நண்பன் இல்லை
நானும் உன் வானின் நிலா
உன் நண்பன் இல்லை
நீ என் உயிரின் விழா


Saturday, August 8, 2020

Handsome ஆளு நீ super cool நீ நானும் நீயும்தான் செம ஜோடி


இனிமே டிக் டாக் எல்லாம் இங்க Banமா
நேரா duet பாட வாயேன்ம்மா
ரொம்ப strictடா இருந்ததெல்லாம் போதும்மா
கொஞ்சம் sweetடா சிரிச்சு பேசேம்மா

செல்லம்மா செல்லம்மா
அங்கம் மின்னும் தங்கம்மா
பொன்னம்மா மெல்லம்மா கட்டி கிள்ளேன்மா
கண்ணம்மா கண்ணம்மா
கண்ணு ரெண்டும் gun அம்மா
கொஞ்சம்மா கொஞ்சிம்மா சுட்டு தள்ளேன்ம்மா

பொல்லாத வயச சீண்டித்தான் போனாயே
தடுத்தாலும் உனக்கே விழுவேன் நானே
கண்ணாடி மனச கல் வீசி பார்த்தாயே
ஒடஞ்சாலும் காட்டுவேன் உன்ன நானே

மெழுகு dollலு நீ அழகு schoolலு நீ
எனக்கு ஏத்தவ நீதான்டி
Handsome ஆளு நீ சூப்பர் cool நீ
நானும் நீயும்தான் செம ஜோடி

பொதுவா தோனி போல நானும் calmமும்மா
இன்னைக்கு excitement ஆனேன்ம்மா
கண்ணால் வளைய வீசி என்ன தூக்குமா
Life time settlement நான்தான்ம்மா

இனிமே டிக் டாக் எல்லாம் இங்க banம்மா
நேரா duet பாட வாயேன்ம்மா
ரொம்ப strictடா இருந்ததெல்லாம் போதும்மா
கொஞ்சம் sweetடா சிரிச்சு பேசேம்மா

அய்யயோ குடையிலா நேரம்
வந்தாயே மலையென்ன நீயும்

நெஞ்சோடு இழுக்குற செல்லோடு ஒரசுர
ஹார்மோனில் கலக்குற சிலிர்க்க வைக்கிறியே
கல்லாண மனசத்தான் சில்லான சிரிப்புல
நல்லாவே கரைக்கிற வசியம் வைக்கிறியே

கொஞ்சலா கேக்கும் உன் வார்த்த
அத கோர்ப்பேனே கவிதை வார்ப்பேனே
மின்னலா தாக்கும் உன் கண்ணுல மைய
விழுவேனே அழக தொழுவேனே

பொல்லாத வயச சீண்டித்தான் போனாயே
தடுத்தாலும் உனக்கே விழுவேன் நானே
கண்ணாடி மனச கல் வீசி பார்த்தாயே
ஒடஞ்சாலும் காட்டுவேன் உன்ன நானே

செல்லம்மா மெழுகு dollலு நீ அழகு schoolலு நீ
எனக்கு ஏத்தவ நீதான்டி
ஹன்ட்சம் ஆளு நீ சூப்பர் cool நீ
நானும் நீயும்தான் செம ஜோடி

பொதுவா தோனி போல நானும் calmமும்மா
இன்னைக்கு excitement ஆனேன்ம்மா
கண்ணால் வளைய வீசி என்ன தூக்குமா
லைப் டைம் செட்டில்மென்ட் நான்தான்ம்மா

இனிமே டிக் டாக் எல்லாம் இங்க Ban மா நேரா 
Duet பாட வாயேன்ம்மா
ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருந்ததெல்லாம் போதுமா
கொஞ்சம் ஸ்வீட்டா சிரிச்சு பேசேம்மா

செல்லம்மா செல்லம்மா
அங்கம் மின்னும் தங்கம்மா
பொன்னம்மா மெல்லம்மா கட்டி கிள்ளேன்மா
கண்ணம்மா கண்ணம்மா
கண்ணு ரெண்டும் gun அம்மா
கொஞ்சம்மா கொஞ்சிம்மா சுட்டு தள்ளேம்மா

Friday, August 7, 2020

நாள்முழுக்க உன்னை கண்கள் தின்ற பின்னும் உந்தன் சொற்கள் பெய்து நான் நனைந்த பின்னும்




போதவில்லையே போதவில்லையேஉன்னைப்போல போதை ஏதும் இல்லையே
போதவில்லையே போதவில்லையே
உன்னைப்போல போதை ஏதும் இல்லையே
நாள்முழுக்க உன்னை கண்கள் தின்ற பின்னும்
உந்தன் சொற்கள் பெய்து நான் நனைந்த பின்னும்
இன்னும் இன்னும் பக்கம் வந்தும்
கிட்டத்தட்ட ஒட்டிக்கொண்டும்
மூச்சில் தீயும் பற்றிக் கொண்டும்....ம்ம்
போதவில்லையே போதவில்லையே
உன்னைப்போல போதை ஏதும் இல்லையே
போதவில்லையே போதவில்லையே
உன்னைப்போல போதை ஏதும் இல்லையே


தேநீரை நாம் உறிஞ்சும் மாலை போதாதே
கை கோர்த்து போக இந்த சாலை போதாதே
என்னென்ன விண்கலம் நான் சொல்லவே
கைபேசி மின்கலம் போதாதடி
உன் அழகை பருக என் கண்கள் போதாதடி
என் நிலையை எழுத வானங்கள் போதாதடி
நேரமுல்லை பின் இழுத்தும்
வாரம் எட்டு நாள் கொடுத்தும்
சுற்றும் பூமியை தடுத்துமே....ஹே...
போதவில்லையே போதவில்லையே
உன்னைப்போல போதை ஏதும் இல்லையே




கூழாங்கல் கூவுகின்ற கானம் போதாதே
கூசாமல் கூடுகின்ற நாணம் போதாதே
தொண்ணூறு ஆண்டுகள் நீ கேட்கிறாய்
ஜென்மங்கள் ஆயிரம் போதாதடா
நம் கனவை செதுக்க பேரண்டம் போதாதடா
இவ்வுலகில் இருக்கும் தெய்வங்கள் போதாதடா
குட்டிக்குட்டி கோபம் கொண்டும்
கட்டி முட்டி மோதிக் கொண்டும்
திட்டித்திட்டி தீர்த்த பின்னும்....ம்ம்

போதவில்லையே போதவில்லையே

உன்னைப்போல போதை ஏதும் இல்லையே
சுவாசப் பையில் உந்தன்
வாசம் பூட்டி வைத்தும்
நெஞ்ச ஏட்டில் எங்கும்
உன் பேரை தீட்டி வைத்தும்
பாடல் தீர்ந்து போன பின்னும்
மௌனம் கூட தீர்ந்த பின்னும்
கோடி முத்தம் வைத்த பின்னும்....ம்ம்
போதவில்லையே போதவில்லையே
உன்னைப்போல போதை ஏதும் இல்லையே




Sunday, July 19, 2020

உன்ன நெனச்சபடி உண்மை ஜெயிக்கும்படி வேண்டும் வரம் தா மாரியம்மா காவல் நீதான் காளியம்மா




மாரியம்மா மாரியம்மா
திரி சூலியம்மா நீலியம்மா
மாரியம்மா மாரியம்மா
திரி சூலியம்மா நீலியம்மா
தலை மேல மணி மகுடம்
என் தாயி தந்த பூங் கரகம்
நிலையாக நிலைக்க வைக்கும்
நினைச்சதெல்லாம் பலிக்க வைக்கும்

உன்ன நெனச்சபடி
உண்மை ஜெயிக்கும்படி
வேண்டும் வரம் தா மாரியம்மா
காவல் நீதான் காளியம்மா

மாரியம்மா மாரியம்மா
திரி சூலியம்மா நீலியம்மா
 மாரியம்மா மாரியம்மா
திரி சூலியம்மா நீலியம்மா




மண்ணுக்குள் நீ நல்ல நீரம்மா
காத்தும் கனலும் நீயம்மா
வானத்தபோல் நின்னு பாரம்மா
வந்தேன் தேடி நானம்மா
இந்த மனம் முழுதும் நீதானே
வந்த வழி துணையும் நீதானே
தங்க திருவடிய தொழுதோமே
இங்கு மனம் உருக அழுதோமே
சீரேஸ்வரி காமேஸ்வரி
வேறாரு நீதானே காப்பு
மாரியம்மா மாரியம்மா
திரி சூலியம்மா நீலியம்மா
கரு மாரியம்மா மாரியம்மா
திரி சூலியம்மா நீலியம்மா



வானெல்லாம்வாழ்த்துத்தான் கேட்கட்டும்
வாழ்வே வளமே பாக்கட்டும்
நீ எங்க தாய் என்று காணட்டும்
நிழலும் நிஜமா மாறட்டும்
சக்தி முழுதும் தந்து காப்பாயே
முக்தி நிலையை தந்து சேர்ப்பாயே
பக்தி மனம் விரும்பும் என் தாயே
நித்தம் பரிதவிக்கும் உன் சேயே
சாட்சி சொல்லும் தாயே துணை
தீயெல்லாம் பூவாக மாறட்டும்
மாரியம்மா மாரியம்மா

திரி சூலியம்மா நீலியம்மா
கரு மாரியம்மா மாரியம்மா
திரி சூலியம்மா நீலியம்மா
தலை மேல மணி மகுடம்
என் தாயி தந்த பூங் கரகம் நிலையாக நிலைக்க வைக்கும்
நினைச்சதெல்லாம் பலிக்க வைக்கும்
உன்ன நெனச்சபடி
உண்மை ஜெயிக்கும்படி
வேண்டும் வரம் தா மாரியம்மா
காவல் நீதான் காளியம்மா
மாரியம்மா மாரியம்மா
திரி சூலியம்மா நீலியம்மா

மாரியம்மா மாரியம்மா
திரி சூலியம்மா நீலியம்மா