Thursday, August 6, 2009

சொக்க தங்க தாலி செய்ய கூரை பட்டுசேலை நெய்ய டவுணு பக்கம் போக வேணும் அவங்கள பாத்தியா


மாமர அணிலே மாமர அணிலே ..
அவங்கள பாத்தியா
என் மாமன் வெதைச்சா அவரை செடியே
அவங்கள பாத்தியா
பஞ்சாயத்து ஆல மரமே
அவங்கள பாத்தியா
பஞ்சா மெதக்கும் பருத்தி பூவே
அவங்கள பாத்தியா
அந்த பஞ்சுல நெய்ஞ்ச பாரத கோடியே
அவங்கள பாத்தியா
மாமர அணிலே மாமர அணிலே ..
அவங்கள பாத்தியா
என் மாமன் வெதைச்சா அவரை செடியே
அவங்கள பாத்தியா

மருதாணி நான் அரைச்சு மாமன் பேரை பூசி வச்சேன்
அவங்கள பாத்தியா
மாசாணி அம்மனுக்கு நெசத்துல பூசை வச்சேன்
அவங்கள பாத்தியா
பட்டு வெட்டி மடிப்புக்குள்ளே என் மனசை மடிச்சி கட்டி
கொள்ள காட்டு பக்கம் போன
அவங்கள பாத்தியா
சொக்க தங்க தாலி செய்ய கூரை பட்டுசேலை நெய்ய
டவுணு பக்கம் போக வேணும்
அவங்கள பாத்தியா

தினம் எட்டுபட்டி சாதி சனம் கட்டுப்பட்டு கூட வரும்
அவங்கள பாத்தியா ... அவங்கள பாத்தியா ...

மாமர அணிலே மாமர அணிலே ..
அவங்கள பாத்தியா
என் மாமன் வெதைச்சா அவரை செடியே
அவங்கள பாத்தியா

ஆத்துல நீந்தும் அயிர மீனே
அவங்கள பாத்தியா
அந்த அயிர மீனே ஆவாத ஐயரே
அவங்கள பாத்தியா
தினம் மண்ணுல மணக்கும் மஞ்ச கிழங்கே
அவங்கள பாத்தியா

மாமர அணிலே மாமர அணிலே ..
அவங்கள பாத்தியா
என் மாமன் வெதைச்சா அவரை செடியே
அவங்கள பாத்தியா

மச்சான் வாக்கப்பட்டு நான் ஒரசி சொக்குபட்ட
அவங்கள பாத்தியா
ராஜாதி கூட வர ராஜ நடை போட்டு வரும்
அவங்கள பாத்தியா

அச்சுவெல்லம் பாகு கூட பச்சரிசி மாவு போல
ஒட்டி உறவாக வேணும்
அவங்கள பாத்தியா
வெக்கப்பட்டு நானும் துள்ள கிட்ட வந்து சேர்த்து அள்ள
கட்டில் ஒன்னு செய்ய போறேன்
அவங்கள பாத்தியா

அவர் நெத்தி பொட்டு வேர்வையிலும் அத்தை மக பேரு இருக்கும்
அவங்கள பாத்தியா...அவங்கள பாத்தியா ..

மாமர அணிலே மாமர அணிலே ..
அவங்கள பாத்தியா
என் மாமன் வெதைச்சா அவரை செடியே
அவங்கள பாத்தியா
காட்டுலே மெய்யும் தாய் பசுமாடே
அவங்கள பாத்தியா
நீ கொடுக்கிற பால் போல் மனசு வெளுத்த
அவங்கள பாத்தியா
மகராசா நடக்குற வாய்க்கால் வரப்பே
அவங்கள பாத்தியா

மாமர அணிலே மாமர அணிலே ..
அவங்கள பாத்தியா
என் மாமன் வெதைச்சா அவரை செடியே
அவங்கள பாத்தியா

Tuesday, August 4, 2009

வினோதனே வினோதனே உன் பேரை சொல்லும் வேளையில் உற்சாகம் கொள்ளுவேன்


வினோதனே வினோதனே
விண்மீன்கள் தூங்கும் நேரத்தில் உன் தோளில் தூங்குவேன்
வினோதனே வினோதனே
உன் பேரை சொல்லும் வேளையில் உற்சாகம் கொள்ளுவேன்
குடையை மறந்த நேரத்தில் கொட்டும் மழையை போலவே
மனதினில் காதலில் சாரல் அடிக்கிறதே

வினோதனே வினோதனே
விண்மீன்கள் தூங்கும் நேரத்தில் உன் தோளில் தூங்குவேன்
வினோதனே வினோதனே
உன் பேரை சொல்லும் வேளையில் உற்சாகம் கொள்ளுவேன்

ஓவிய பெண்ணே தூரிகையாலே சூரியன் என்னை சிறை எடுத்தாய்
மாபெறும் மலைகள் ஆயினும் கூட மல்லிகை பூக்கள் உடைத்திடுமே

உன்னை தினம் சுமப்பதால் போதையில் பூமி சுற்றுதோ
உன்னை மனம் நினைப்பதால் மயக்கம் பிறக்கின்றதோ

விறகென இருந்தேன் இதழ்களை செதுக்கி புள்ளங்குலலாய் இசைக்கின்றாய்
அழகே நீ தான் அதிசிய விளக்கு அணைக்கின்ற பொழுதும் எரிகின்றாய்
காதலின் ஜன்னல் கண்களே கண்களில் காய்ச்சல் கொடுக்கின்றாய்
சேலையை நீ வீசியே சிங்கத்தை பிடிக்கின்றாய்

வினோதனே வினோதனே
விண்மீன்கள் தூங்கும் நேரத்தில் உன் தோளில் தூங்குவேன்
வினோதனே வினோதனே
உன் பேரை சொல்லும் வேளையில் உற்சாகம் கொள்ளுவேன்
குடையை மறந்த நேரத்தில் கொட்டும் மழையை போலவே
மனதினில் காதலில் சாரல் அடிக்கிறதே

வினோதன் நான் வினோதன் நான்
விண்மீன்கள் தூங்கும் வேளையில் உன் தோளில் தூங்குவேன்
வினோதன் நான் வினோதன் நான்
உன் பேரை சொல்லும் வேளையில் உற்சாகம் கொள்ளுவேன்

ஊரை கூட்டி சொல்வேன் காதல் பாட்டு வா வா கண்ணா நீயும் காதில் கேட்டு


ஊரை கூட்டி சொல்வேன் காதல் பாட்டு
வா வா கண்ணா நீயும் காதில் கேட்டு
ஆசை அரும்புகள் மலரும் நாள் இது
வீணை நரம்புகள் மீட்டும் நாள் இது

ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ

ஊரை கூட்டி சொல்வேன் காதல் பாட்டு
வா வா கண்ணா நீயும் காதில் கேட்டு


உன்னோடு பறந்து வரும் உல்லாச பறவை இது
சந்தோஷம் ஸ்வரம் எதுத்து சங்கீதம் படிக்கிறது
அன்றாடம் முழங்கட்டுமே இந்த ஆண்டாளின் திருப்பாவை
பெண் மானும் தழுவட்டுமே இந்த அம்மானின் திருத்தோளை
நீ எந்தன் ஸ்ரீரங்கம் ஆகும் காவேரி வேர் எங்கு போகும்
நீ இன்றி நான் இல்லை ஐ லவ் யூ
நான் வந்தேன் உன் எல்லை ஐ லவ் யூ


ஊரை கூட்டி சொல்வேன் காதல் பாட்டு
வா வா கண்ணா நீயும் காதில் கேட்டு
ஆசை அரும்புகள் மலரும் நாள் இது
வீணை நரம்புகள் மீட்டும் நாள் இது

ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ


கண்ணே உன் உதடுகள் தான்
அது என்ன பொன் தகடுகளா
உன் நெஞ்சில் நுழைவதற்க்கு
உண்டான கதவுகளா
நம் வீட்டு நடைமுறையில்
இது பொல்லாத உறவாகும்
என்றாலும் நம் வரையில்
இது பொன்னான வராவாகும்
நீங்காது ஓர் நாளும் பாசம்
நம் நேசம் காலங்கள் பேசும்
யார் என்ன சொன்னாலும் ஐ லவ் யூ
ஊர் என்ன செய்தாலும் ஐ லவ் யூ


ஊரை கூட்டி சொல்வேன் காதல் பாட்டு
வா வா கண்ணா நீயும் காதில் கேட்டு
ஆசை அரும்புகள் மலரும் நாள் இது
வீணை நரம்புகள் மீட்டும் நாள் இது

ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ

Wednesday, July 29, 2009

கண் விரலால் கண் விரலால் என் உயிரை மீட்டுரியா


காவிரியா காவிரியா மனதுக்குள் பாயுரியா
பூம்புனலாய் புகுந்ததென்னா கண் வழியா ஹோய்
கண் விரலால் கண் விரலால் என் உயிரை மீட்டுரியா
பூ முடிக்கும் மோகத்திலே நீ வாரியா ஹோய்
நானா உன்னை நினைத்தேன்
நெடுநாள் விலகி இருந்தேன்
தடுக்கி உன் மேல் விழுந்தேன் ஹோ
மயிலின் இறகால் மனதை நீவுறியா
நீவுறியா ஹோய்

காவிரியா காவிரியா மனதுக்குள் பாயுரியா
பூம்புனலாய் புகுந்ததென்னா கண் வழியா ஹோய்
கண் விரலால் கண் விரலால் என் உயிரை மீட்டுரியா
பூ முடிக்கும் மோகத்திலே நீ வாரியா ஹோய்
நானா உன்னை நினைத்தேன்
நெடுநாள் விலகி இருந்தேன்
தடுக்கி உன் மேல் விழுந்தேன் ஹோ
மயிலின் இறகால் மனதை நீவுறியா
நீவுறியா ஹோய்

உன் பேரை எந்த நாளிலும்
உள்ளத்தில் எழுதவில்லையே
எனை ஓரு வார்த்தைதான் கேட்காமலே
என் ஜீவன் உன்னை சேர்ந்ததோ
என்னுள்ளே என்ன நேர்ந்ததோ
உதட்டினில் நாள் எல்லாம் உன் பாடலே
காதல் வரும் தேதி கிழமை எதுவென்ன எவர்க்கும்
காலண்டர் காட்டாதே
அதுவாக வேர் விட அன்பே நீ நீர்விட
பூ பூவாய் பூக்கும் வண்ணம்
பேரின்பம் உண்டாச்சோ
பெண் பாவை உனது ஆச்சோ

காவிரியா காவிரியா மனதுக்குள் பாயுரியா
பூம்புனலாய் புகுந்ததென்னா கண் வழியா ஹோய்

வானம் முதல் முறை மழை வார்க்கும் நிலம் என
நெஞ்சில் ஓரு சீதனம் காரணம் நீதான் நண்பனே
யாரும் முதல் முறை விரல் மீட்டும் சுகம் எனும்
நெஞ்சே நீ ஆகணும் காரணம் நீதான் நண்பனே
மங்கை அல்ல மல்லிகை பூவிது
உனை அன்றி வேறு கைகள் தொடலாமா?
மழை கூந்தல் ஏன் வளர்த்தேன் ?
பூ முடிக்க நான் வளர்த்தேன்
மாலை இட்டு பூ முடிக்கும் மண நாள் தான் வருமா ?
மண நாள் தான் வருமா ?

காவிரியா காவிரியா மனதுக்குள் பாயுரியா
பூம்புனலாய் புகுந்ததென்னா கண் வழியா ஹோய்

Saturday, July 25, 2009

உன்னை எந்தன் பின்னால் என்றும் சுற்ற வைக்கும் வார்த்தை


அட மூன்றெழுத்து கெட்ட வார்த்தை
அந்த வார்த்தை, சிஷ்யா என்னவென்று சொல்லி தரவா ?

அட மூன்றெழுத்து கெட்ட வார்த்தை
அந்த வார்த்தை, சிஷ்யா என்னவென்று சொல்லி தரவா ?

அது உன்னை என்னை சுட்ட வார்த்தை
அந்த வார்த்தை, சிஷ்யா என்னவென்று சொல்லி தரவா ?

போட்டு பின்னுதடி என்ன தின்னுதடி
அது என்ன வார்த்தை சொல்லுங்கோ குருவே ?

தினம் நித்திரை கேட்டு
ஓரு முத்தரை இட்டு
அத கத்துக்க வேணும்
ரொம்ப சுலவா !

குரு தக்ஷன என்னான்னு
சொல்லணும் நீங்க

கம்பன் மகனை கொன்ற வார்த்தை
தெய்வீக வார்த்தை
அது பௌர்ணமி நிலவையும்
நெருப்பென காட்டும்
காவிய வார்த்தை

நிலவோடு நெருப்பை வைத்தாய்
அது என்ன சேர்க்கை ?
அதை நீயும் இங்கே சொல்லா விட்டால்
எனக்கேது வாழ்கை ?


நினைத்தாலே நெஞ்சுக்குள்ளே இனிக்கின்ற வார்த்தை
நெடுங்காலம் நோன்பிருந்தால் பலிக்கின்ற வார்த்தை

சொல்லுங்க குருவே
சொல்லுங்க குருவே
சுருண்டு சுனாமியாக நிக்கிறேன்

அட மூன்றெழுத்து கெட்ட வார்த்தை
அந்த வார்த்தை, சிஷ்யா
என்னவென்று சொல்லி தரவா ?

உன் பேரை சொல்லி நூறு தேங்காய்
உடைக்கிறேன் குருவே
சொல்லு அந்த கெட்ட வார்த்தை

தினம் நித்திரை கேட்டு
ஓரு முத்தரை இட்டு
அத கத்துக்க வேணும்
ரொம்ப சுலவா !

தினம் நித்திரை கேட்டு
ஓரு முத்தரை இட்டு
அத கத்துக்க வேணும்
ரொம்ப சுலவா !
குரு தக்ஷன என்னான்னு
சொல்லணும் நீங்க

உன்னை எந்தன் பின்னால் என்றும்
சுற்ற வைக்கும் வார்த்தை
புது கவிஞருக்கெல்லாம் பைத்தியம்
தன்னை முற்றவைக்கும் வார்த்தை
அது என சொக்குபொடி ? மந்திர வார்த்தை
நான் வாழ்வே மாயம் பாடிக்கொண்டு
தாடிவைக்கும் முன்னே
சொல் அந்த வார்த்தை

ஆப்பிள் பழம் ஆரம்பித்த
அதிசய வார்த்தை
ஆதாம் ஏவாள் பேசி கொண்ட
அழகிய வார்த்தை

சொல்லுங்க குருவே
சொல்லுறேன் ஷிஷியா !
அலையாதே அலையாதே !

உன் பேரை சொல்லி நூறு தேங்காய்
உடைக்கிறேன் குருவே
சொல்லு அந்த கெட்ட வார்த்தை

உன் துணிகளை பத்து மாசம்
துவைக்கிறேன் குருவே
சொல்லு அந்த நல்ல வார்த்தை

நான் சொல்லமாட்டேன் !
அத சொல்லமாட்டேன் !
நீ சோப்பு போட்டா போடு ஷிஷியா !
'கா'- வில் ஆரம்பிக்கும்
'ல்'- இல் போயே நிக்கும்
கண்டுபிடி கண்டுபிடி ஷிஷியா !

Tuesday, July 14, 2009

ராமன் எனது மனதின் மன்னன் ! ராமனே இரு கண்மணி , ராமன் பெயரை ஏந்தும் பெண் நான் , ராமனே என் ஜீவனே என்பேன்


மழை மேக வண்ணா உன்  வைதேகி இங்கே
பூவை மன்றாட அன்பே உன் அருள் எங்கே
நாவெழும் வார்த்தையோ ரகுபதி ராம நன்றோ
பூஜை மலர் தான் தூவி போற்றும் ஜெய ராமனன்றோ
ராம நாமம் ஜபித்து ஏங்கும் உள்ளம் இது ராமா
ராம நாமம் ஜபித்து ஏங்கும் உள்ளம் இது ராமா
பல ராட்சத நங்கை இனமேவியலங்கை
நெஞ்சம் தினம் குமுராதோ உன்னை அழைக்கதோ
தூண்டில் புழுவாய் மங்கை துடித்தாள்

...
...
என்னுடைய ஒரு சொல்லே உன்னை தீர்க்கும்
நீ எண்ணிடுக இலங்கேசா
தசரதன் மகன் வில்லுக்கு இழுக்கு ஆகும்
அவர் மும்மூர்த்தி மகராசா

மலரினும் மேன்மை மழலையின் தன்மை
வரிவில்லின் திண்மை வெண்ணிலவின் தன்மை
எவர் வந்து களங்கம் இழைத்தாலும்
பெரும் எரிமலை பெண்மையடா
...
...

மழை மேக வண்ணா உன் வைதேகி இங்கே
பூவை மன்றாட அன்பே உன் அருள் எங்கே

...
...

ராமன் எனது மனதின் மன்னன்
ராமனே இரு கண்மணி
ராமன் பெயரை ஏந்தும் பெண் நான்
ராமனே என் ஜீவனே என்பேன்
ராமன் தழுவ மஞ்சள் மேனி
ராமனே எந்தன் சுவாசமே
ராமன் அல்லால் க்ஷேமம் ஏது
ராமன் தான் இங்கு யாவுமே



ஒ ஒ
நன்மை என்னும் நல்ல மனதில் நின்றான் பார் ராமனே
தீமையற்ற நெஞ்சம் எல்லாம் பார்க்கலாமே ராமனை

ராமன் பண்பை சொல்கிறேன் எல்லாருக்கும் பெரிய நண்பனே
தீய செயல் தான் பாவ ராவணன் ராமன் என்றால் பண்பு தான்
ராமன் என்றால் பண்பு தான் ராமன் பேரே பண்பு தான்
ராமன் சீரே பண்பு தான் ராமன் பேரே பண்பு தான்
ராமன் சொல் தான் கனிமொழி ராமன் தான் இரு கண்விழி
மாற்று ராவண குணம் அனைத்தும் ராமன் உந்தன் பார்வையில்
மாற்று ராவண குணம் அனைத்தும் ராமன் உந்தன் பார்வையில்


ஒ ஒ ஒ
ஆ ஆ ஆ
ஒ ஒ ஒ
ஆ ஆ ஆ
மழை மேக வண்ணா உன் வைதேகி இங்கே
பூவை மன்றாட அன்பே உன் அருள் எங்கே

ராஜா ராமனும் வந்தான் சீதா ராமனும் வந்தான்
ராஜா ராமச்சந்திரன் வந்தான்
ஸ்ரீ ராமச்சந்திரன் வந்தான் ஒ ஒ
ராமனும் வந்தான் ராஜா ராமனும் வந்தான்
ஸ்ரீ ராமச்சந்திரன் வந்தான் ஒ ஒ


ராஜா ராமனும் வந்தான் சீதா ராமனும் வந்தான்
ராஜா ராமச்சந்திரன் வந்தான்
ஸ்ரீ ராமச்சந்திரன் வந்தான் ஒ ஒ
ராமனும் வந்தான் ராஜா ராமனும் வந்தான்
ஸ்ரீ ராமச்சந்திரன் வந்தான் ஒ ஒ

Monday, July 13, 2009

மோதலுக்கு நான் பழசு அட காதலுக்கு நான் புதுசு


மீயோவ் மீயோவ்
மீயோவ் மீயோவ்
மீயோவ் மீயோவ்
ஹே மீயோவ் மீயோவ் பூனை
அட மீச இல்லா பூனை

ஹே மீயோவ் மீயோவ் பூனை
அட மீச இல்லா பூனை
திருடி தின்ன பாக்குறியே
திம்சுகட்டை மீனு
ஹே மீயோவ் மீயோவ் பூனை
அட மீச இல்லா பூனை
திருடி தின்ன பாக்குறியே
திம்சுகட்டை மீனு


ஹே மீயோவ் மீயோவ் பூனை
அட மீச இல்லா பூனை
வீட்ட தேடும் பூனை
சூ போ ன்னு வெரட்ட மாட்டேன்
உன் அப்பன் மேலே ஆணை

One - நம் இதயம் ஒன்னு
Two- நம் உடல் தான் ரெண்டு
Three- நாம் ஒண்ணா சேர்ந்தா ஆவோம் மூணு

One- உன் பார்வை ஒன்னு
Two- அதில் அர்த்தம் ரெண்டு
Three- அத சொல்ல தூண்டும் வார்த்தை மூணு

ஹே மீயோவ் மீயோவ் பூனை
அட மீச இல்லா பூனை

திருடி தின்ன பாக்குறியே
திம்சுகட்டை மீனு

மீயோவ் மீயோவ்
மீயோவ் மீயோவ்
மீயோவ் மீயோவ்

வேகத்துக்கு நான் பழசு
வெட்கத்துக்கு அட நான் புதுசு
மோதலுக்கு நான் பழசு
அட காதலுக்கு நான் புதுசு

One- நாம் மெத்தை ஒன்னு
Two- அதில் தூக்கம் ரெண்டு
Three- அதில் நித்தம் வேணும் யுத்தம் மூணு

One உன் இடுப்பு ஒன்னு
Two- அதில் உடுப்பு ரெண்டு
Three- அதில் வேணும் கடிச்ச தடிப்பு மூணு

கூச்சத்துக்கு லீவு கொடு
தேகத்துக்கு நோவு குடு
ஆடைகளை தூர விடு
அசைகளை சேர விடு

One- நம் முத்தம் ஒன்னு
Two- அதில் இச்சு ரெண்டு
Three- அந்த போதையில் மறக்கும் காலம் மூன்னு

One- உன் மேனி ஒன்னு
Two- அதில் தேனீ ரெண்டு
Three- எனை கொட்டும் நாளே ஹனிமூணு

ஹே மீயோவ் மீயோவ் பூனை
அட மீச இல்லா பூனை

ஹே மீயோவ் மீயோவ் பூனை
அட மீச இல்லா பூனை
திருடி தின்ன பாக்குறியே
திம்சுகட்டை மீனு
ஹே மீயோவ் மீயோவ் பூனை
அட மீச இல்லா பூனை
திருடி தின்ன பாக்குறியே
திம்சுகட்டை மீனு