
ஓடம் நதியிணிலே
ஒருத்தி மட்டும் கரையினிலே
உடலை விட்டு உயிர் பிரிந்து
பறக்குதம்மா வெளியிலே
ஆசை எனும் மேடையிலே
ஆடி வரும் வாழ்விலே
யார் மனதில் யார் இருப்பார்
யார் அறிவார் உலகிலே
கூட்டுக்குள்ளே குயில் இருக்கும்
பாட்டு வரும் வெளியிலே
குரலை மட்டும் இழந்த பின்னே
குயில் இருந்தும் பயனில்லை
ஓடம் நதியிணிலே
ஒருத்தி மட்டும் கரையினிலே
உடலை விட்டு உயிர் பிரிந்து
பறக்குதம்மா வெளியிலே
No comments:
Post a Comment