
என் சுவாசத்தில் காதலின்
வாசம் வீச வைத்ததாரோ?
என் தோட்டத்தில் பூக்களை
கூட பேச வைத்ததாரோ?
மனம் ஏனோ மணி
ஊஞ்சல் ஆடுதே
இது நானா..
என கேட்க தோன்றுததே
இங்கு காதல் என்பது
கடவுள் என்றால்
இதுவரை நானும்
நாத்திகனெ ....
நம் மனமே கோவில்
முத்தம் திருநீர்
பக்தன் நீயே
காதலனே ....
இமை அசைந்திடும் ஓசையும் கேட்கிறதே
உயிர் வரையிலும் பார்வைகள் பார்க்கிறதே
அன்பே ....
அன்பே ....
என் உள்ளம்
எந்தன் தேகம்
ஜீவன் ஆதி அந்தம்
யாவும் நீதானே
ஹோய் ஹோய்
ஹோய் ஹோய்
என் சுவாசத்தில் காதலின்
வாசம் வீச வைத்ததாரோ?
என் தோட்டத்தில் பூக்களை
கூட பேச வைத்ததாரோ?
என் மனம் எனும் சாலையில் இதுநாள் வரையில்
பெண்ணின் சுவடுகள் கிடையாதே
ஒரு ஆணின் வாசம் என்ன என்ன செய்யும்
இதுவரை நெஞ்சம் அறியாதே
நொடியினை ஒரு ஆண்டு என மாறிடலாம்
மணிக்கணக்கினில் மௌனத்தை பேசிடதலாம்
ஆஹா
ஆஹா
இனி உன்னில் என்னை என்னில் உன்னை
மாற்றி மாற்றி ஊற்றி வைப்போமா
ஹோய் ஹோய்
ஹோய் ஹோய்
என் சுவாசத்தில் காதலின்
வாசம் வீச வைத்ததாரோ?
என் தோட்டத்தில் பூக்களை
கூட பேச வைத்ததாரோ?
மனம் ஏனோ மணி
ஊஞ்சல் ஆடுதே
இது நானா..
என கேட்க தோன்றுததே
என் சுவாசத்தில் காதலின்
வாசம் வீச வைத்ததாரோ?
என் தோட்டத்தில் பூக்களை
கூட பேச வைத்ததாரோ?
No comments:
Post a Comment