
எண்டே நெஞ்சு முழுக்க சந்தனம் பூச
மன்மதன் வந்தல்லோ
எண்டே கண்ணு முழுக்க அஞ்சனம் பூச
சந்திரன் வந்தல்லோ
எண்டே இந்திரன் இங்கே வந்தல்லோ
ஓரு மந்திர முத்தம் தந்தல்லோ
மலரடி திருவிழி மாறனை கண்டல்லோ
என் கண்ணாடி தோப்புக்குள்ளே கண்ணா கண்ணா
உன் நிழலாட தாக்கு பிடித்தேன் கண்ணா கண்ணா
என் வாசலில் நீ தோரணம் நான் வாழவே நீ காரணம்
மனம் வானவில் தூக்கே காவடி ஆடாதோ
என் கண்ணாடி தோப்புக்குள்ளே கண்ணே கண்ணே
உன் நிழலாட தாக்கு பிடித்தேன் கண்ணே கண்ணே
கனவில் உன்னை நான் அழைத்தேனே
நிலவினில் நீராட கொதிதேனே
உயிரால் உன்னை நான் வலைத்தேனே
இதழினில் தீ மூட்ட மலைத்தேனே
தேனே தேனே சிந்துது தேனே
தினமும் உன்னை சிந்திதேனே
உன்னை பிரிந்தேனே உடல் மெலிந்தேனே
அட மறுபடி பிறந்தேனே
இமையால் எனை நீ செதுக்காதே
இடையினை உளி தொட இருக்காதே
இருக்கும் அழகை பதுக்காதே
மருதுவின் தூரிகை பொறுக்காதே
வெக்கம் தன்னை சந்திதாயா
அருகில் செல்ல யோசித்தாயா
கடல் குடித்தாயா அலை அடித்தாயா
அடி பௌர்ணமி கவிழ்தாயா
என் கண்ணாடி தோப்புக்குள்ளே கண்ணா கண்ணா
உன் நிழலாட தாக்கு பிடித்தேன் கண்ணா கண்ணா
என் வாசலில் நீ தோரணம் நான் வாழவே நீ காரணம்
மனம் வானவில் தூக்கே காவடி ஆடாதோ
என் கண்ணாடி தோப்புக்குள்ளே கண்ணே கண்ணே
உன் நிழலாட தாக்கு பிடித்தேன் கண்ணே கண்ணே
No comments:
Post a Comment