
நாயகி நான்முகி நாராயணிகை நளின பஞ்ச நாயகி
சாம்பவி சங்கரி சாமனை சாதி நச்சு நாயகி
மாலினி வாராகி சூலினி மாதங்கி என்று
ஆயாகியாதி உடையாள் சரணம் சரணம் சரணம்
சரணம் சரணம் சரணம்
பார்த்தவிழி பார்த்தபடி பூத்து இருக்க
காத்திருந்த காட்சி இங்கு காணக் கிடைக்க
ஊனுருக உயிருருக தேன் தரும் தடாகமே
மதி மருக வழி நெடுக ஒளி நிறைக வாழ்விலே
இடங்கொண்டு விம்மி இணை கொண்டு இறுகி
இடங்கொண்டு விம்மி இணை கொண்டு இறுகி
இளகி முத்து வடங்கொண்ட கொங்கை மலை
கொண்டிறைவர் வலிய நெஞ்சை நலம்
கொண்ட நலம் கொண்ட நாயகி நல்லிரவின்
படங் கொண்ட அல்குல் பனிமொழி
வேதப் பரிபுரையே! வேதப் பரிபுரையே!
பார்த்தவிழி பார்த்தபடி பூத்து இருக்க காத்திருந்த
காட்சி இங்கு காணக் கிடைக்க....
No comments:
Post a Comment