Sunday, August 6, 2023

இந்தத் தீராத ஆறாத பேராசைக்கு இன்று நான் என்னப் பேர் வைப்பது



 வா வாசுகி வா வாசுகி

என்னோடு வா

உன் பூவிழி என் தாய்மடி

ஆராரோதான்


கிளை ஆகாயம் போனாலும்

வேர் என்றுமே

இந்த மன்னோடுதான் உள்ளது

நான் ஊரெங்கும் சென்றாலும்

எண்ணம் எல்லாம் அடி உன்னோடுதான் உள்ளது

இந்தத் தீராத ஆறாத பேராசைக்கு

இன்று நான் என்னப் பேர் வைப்பது

நெருப்பு இல்லாமல் புகை இல்லாமல்

ஒரு தீ என்னை சூழ்கின்றது


தத்திதான் தாவுது தாவுது தாவுது

தத்திதான் தாவுது தாவுது மனசு

உன்னைத்தான் ஏங்குது ஏங்குது ஏங்குது

உன்னைத்தான் ஏங்குது ஏங்குது வயசு

ஹேய்… ஹேய்…


தத்திதான் தாவுது தாவுது 

உன்னைத்தான் ஏங்குது ஏங்குது

வா வாசுகி வா வாசுகி

என்னோடு வா

உன் பூவிழி என் தாய்மடி

ஆராரோதான்


ஓர் இரு நாள் உரையாடலிலே

உலகம் உலகம்

இனி வேர் ஒரு தோரணை ஆகிறதே

முழுதும் முழுதும்

வீரனை சூரனை போல் இருக்கும்

மனதும் மனதும்

உன் வீடுள்ள வீதியில் போனாலும்

உதறும் உதறும்

உன்னைப் பாராமல் வேர் ஏதும் பணி இல்லை

ஆனால் நேராக பார்க்கின்றத் துணிவில்லை

அன்பே நீ இன்றி என் நாட்கள் இனி இல்லை

இங்கு நீ என்றும் நான் என்றும் தனி இல்லை


உந்தன் வாசம் நுகரும்

அந்த நொடி பொழுதே

உள்ளுக்குள்ளே ஏதோ ஒன்று நடக்கிறதே


வா வாசுகி வா வாசுகி

என்னோடு வா

உன் பூவிழி என் தாய்மடி

ஆராரோதான்


கிளை ஆகாயம் போனாலும்

வேர் என்றுமே

இந்த மன்னோடுதான் உள்ளது

நான் ஊரெங்கும் சென்றாலும்

எண்ணம் எல்லாம் அடி உன்னோடுதான் உள்ளது

இந்தத் தீராத ஆறாத பேராசைக்கு

இன்று நான் என்னப் பேர் வைப்பது

நெருப்பு இல்லாமல் புகை இல்லாமல்

ஒரு தீ என்னை சூழ்கின்றது


தத்திதான் தாவுது தாவுது தாவுது

தத்திதான் தாவுது தாவுது மனசு

உன்னைத்தான் ஏங்குது ஏங்குது ஏங்குது

உன்னைத்தான் ஏங்குது ஏங்குது வயசு

ஹேய்… ஹேய்…


தத்திதான் தாவுது தாவுது 

உன்னைத்தான் ஏங்குது ஏங்குது

வா வாசுகி வா வாசுகி

என்னோடு வா

உன் பூவிழி என் தாய்மடி

ஆராரோதான்





Saturday, March 25, 2023

இதயம் முழுதும் நீ தானடா

 


விழிகள் திறந்தால் நீ தானடா

 விடியும் வெளிச்சம் நீ தானடா

இதயம் முழுதும் நீ தானடா 

இரவின் விரகம் நீதானடா

எனது  நதியே நீ தானடா 

உனது படகு நான் தானடா 

உயிரின் மழையும் நீதானடா 

நனைந்து சிலிர்த்தேன் நான் தானடா  

உடலின் கதவு நீதானடா 

திறந்து நுழைந்து

நீ கொஞ்சம் உள்ளிருந்து என்னில்

வாழ வாடா 


வண்டு மலர்ந்திருக்கும் பூக்கள் சிறகடிக்கும் காட்சி ஒன்று நெஞ்சில் தோன்றுதே 

தேடி வந்து உனை தீண்டும் பூவிரலை 

தாண்டி சென்றுவிட எண்ணாதே 

இதழ் இனிக்கும் உடல் மணக்கும் 

ஒரு மயக்கம் 

மஞ்சள் ஜரிகை வெயில் 

மாலை பொழுது இது 

உன்னை நினைத்தபடி ஆடும் விழுது இது 

முத்தம் கொடுத்த படி பாடும் பறவை இது 

சேலை சிறகோடு வானில் விளையாட 

 அழைக்குதே அழைக்குதே 


விழிகள் திறந்தால் நீ தானடா

 விடியும் வெளிச்சம் நீ தானடா

இதயம் முழுதும் நீ தானடா 

இரவின் விரகம் நீதானடா 



உன்னை பார்த்த இடம் உன்னை பார்த்த சுகம் 

மேகம் போல என்னை மூடுதே  

முன்னும் பின்னும் உந்தன் மின்னல்  பின்னி வர 

சிந்தும் செல்ல மழை விடாதே 

இந்த தவிப்பும் இந்த துடிப்பும் புது தொடக்கம் 

கண்ணில் கனவு வந்து இரவை உடைக்கிறது 

உன்னை சுமந்த மனம் வெளியில் துடிக்கிறது 

உயிரும் உடலும் உந்தன் பெயரை அழைக்கிறது 

காற்றில் உன் வாசம் எந்தன் மூச்சோடு 

கலக்குதே கலக்குதே

விழிகள் திறந்தால் நீ தானடா

விடியும் வெளிச்சம் நீ தானடா

இதயம் முழுதும் நீ தானடா 

இரவின் விரகம் நீதானடா


















Wednesday, March 1, 2023

வெண் நீலக்கண்கள் உள்ளாக நின்று என்னோடு பேசும் உல்லாசம் கண்டு


கண்ணனை நினைக்காத நாளில்லையே
காதலில் துடிக்காத நாளில்லையே
உண்ணும்போதும் உறங்கும்போதும்
எண்ணம் முழுதும் கண்ணன்தானே
கண்ணா... கண்ணா...


கண்ணன்தானே... கண்ணன்தானே


ராதாவின் ஜாடை ரோஜாவின் வாடை
அன்னத்தின் பேடை நானாடும் மேடை
செந்தூர ரேகை மின்னாமல் மின்னும்
சிங்காரத் தோகை நீ எந்தன் கண்ணு

கண்ணன் மணிவண்ணன் திருவாய்மொழி
உன்னால் மனமெங்கும் யமுனா நதி
கண்ணன் மணிவண்ணன் திருவாய்மொழி
உன்னால் மனமெங்கும் யமுனா நதி
கண்ணா உன்னை மறப்பேனோ
நான் உன்னை மறப்பேனோ


வெண் நீலக்கண்கள் உள்ளாக நின்று
என்னோடு பேசும் உல்லாசம் கண்டு

நாளாக ஆக தாளாது கண்ணா
நீயில்லை என்றால் நானென்ன பெண்ணா

கங்கா நதி ரங்கா வரும் மார்கழி
உன் கை அதில் என் கை அதுதான் வழி
கங்கா நதி ரங்கா வரும் மார்கழி
உன் கை அதில் என் கை அதுதான் வழி

கண்ணே உன்னை மறப்பேனோ..
நான் உன்னை மறப்பேனோ

கண்ணா முகுந்தா முராரே
ஜெய கண்ணா முகுந்தா முராரே
கண்ணா முகுந்தா முராரே
ஜெய கண்ணா முகுந்தா முராரே
கண்ணா முகுந்தா முராரே
ஜெய கண்ணா முகுந்தா முராரே

Sunday, February 12, 2023

உன்னை எனக்கு ரொம்பப் புடிக்கும் சொல்லுறத கேளு கண்ணு முழிச்சா உன்னை நெனச்சு சுத்துது என் காலு


எளந்தாரி சொல்லு என்ன வேணும்
தருவேனே நெஞ்ச அள்ளி நானும்
உனப் பாத்தா மல்லு கட்டத் தோணும்
ஒதுங்காம ஒத்துக் கொள்ளு போதும்
வெரசா தொடவா 
முழுசா கெடவா
நெருங்காம தூர நின்னே நெல்லு குத்தாத

எளந்தாரி சொல்லு என்ன வேணும்
தருவேனே நெஞ்ச அள்ளி நானும்
உனப் பாத்தா மல்லு கட்டத் தோணும்
ஒதுங்காம ஒத்துக் கொள்ளு போதும்

உன்னை எனக்கு ரொம்பப் புடிக்கும்
சொல்லுறத கேளு
கண்ணு முழிச்சா உன்னை நெனச்சு
சுத்துது என் காலு


கொத்துக் கறி போல நீயும் ஏன்
என்ன குடை சாய்க்குற
வெக்கயில தூரல் மாதிரி
நீ குறுக பாக்குற
கருவாட்டப் பாத்தா வட்டம் போடும் காக்கா
அது போல நானே ஒண்ணா சேரும் வாழ்க்கை 
மனசால என நீயும் மஞ்சக் குளிக்க வை


இளந்தாரி சொல்லு என்ன வேணும்
தருவேனே நெஞ்ச அள்ளி நானும்

நெஞ்ச பொளந்து உள்ள இருக்கும்
உன்னை நித்தம் பாப்பேன்
உச்சந்தலையில் அம்மி அரைக்கும்
முத்தமிட கேப்பேன்
மெத்தையில தூங்கிடாம நீ
வித்தைகள காட்டிடு
கையில் உள்ள ரேகை தேயவே
கட்டிக் கொள்ள பாத்திடு
உனக்காகத் தானே உப்பு புளி காரம்
ஒதுக்காம வாங்கி திங்குது என் தேகம்
தலை வாழை  இலை போட்டு தண்ணி தெளிச்சு வை

இளந்தாரி சொல்லு என்ன வேணும்
தருவேனே நெஞ்ச அள்ளி நானும்
வெரசா தொடவா முழுசா கெடவா
நெருங்காம தூர நின்னே நெல்லு குத்தாத

இளந்தாரி ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்
தருவேனே.ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

இளந்தாரி