Saturday, March 30, 2019

சங்கதி பேசும் கண்களும் கூசும் காதல் சந்தனமே பறவை போல பறந்து போக கூட சேர்ந்து நீயும் வருவியா




ஒத்தயடி பாதையில தாவி ஓடுறேன்

அத்த பெத்த பூங்குயிலே தேடி வாடுறேன்

சந்தன மாலை அள்ளுது ஆள வாசம் ஏறுது

என் கிளி மேல சங்கிலி போல சேர தோணுது


சக்கர ஆலை சொக்குது ஆள
மாலை மாத்த மாமன் வரட்டுமா
கண்மணியே….



வழியில பூத்த சாமந்தி நீயே
விழியில சேத்த பூங்கொத்து நீயே
அடியே அடியே பூங்கொடியே
கவலை மறக்கும் தாய் மடியே

அழகே அழகே பெண்ணழகே
தரையில் நடக்கும் தேரழகே
நிழலாதான் பின்னால நா ஓடி வந்தேனே
ஒரு வாட்டி என்ன பாரேன் மா



ஒத்தயடி பாதையில தாவி ஓடுறேன்
அத்த பெத்த பூங்குயிலே தேடி வாடுறேன்

பல முறை நீயும் பாக்காம போன
இரும்புக்கு மேல துருவென ஆனேன்
உசுரு உனக்கே நேந்து விட்டேன்
இருந்தும் நெருங்க பயந்துக்கிட்டேன்
உயிரே உயிரே என் உயிரே
உலகம் நீதான் வா உயிரே
மனசெல்லாம் கண்ணாடி
ஒடைக்காத பந்தாடி
வதைக்காத கண்ணே கண்மணியே


ஒத்தயடி பாதையில தாவி ஓடுறேன்
அத்த பெத்த பூங்குயிலே தேடி வாடுறேன்


நெஞ்சுல வீசும் கண்மணி வாசம்
காட்டுசெண்பகமே
சங்கதி பேசும் கண்களும் கூசும்
காதல் சந்தனமே
பறவை போல பறந்து போக கூட சேர்ந்து நீயும் வருவியா

கண்மணியே… கொஞ்சிடவே…

Sunday, March 17, 2019

கொஞ்சும் காட்சியாய் கடலே சாட்சியாய் காதலை சொன்னதும் நீயா



மந்திர கண்ணிலே
காதல் மின்னுதே
புன்னகை ஓவியம் நீயே


பின்னலை காட்சிகள்
முன்னே தோன்றுதே
நீர்த்திடா வண்ணங்கள் நீயே



காலை நேர தூறல் பொலிவும் நீயே
சாலை ஓர கள்ள வளைவும் நீயே

உள்ளம் போகும் செல்ல பயணம் நீதானே



தாவுகின்ற புள்ளிமானின் மேலே
பாயுகின்ற வெய்யில் கீற்று போலெ


நெஞ்சின் மீது நெஞ்சின் மீது வந்தாயே



வாலிபம் நனைத்தவன் நீயே

நாழிகள் எல்லாம் நீதானே

கவிதையில் சொன்னால் காதல் புரியுமோ




பொன் நிற மாலை சரியா

மெல்லொலி இரவு சரிதானா

காதலை சொல்லும் காலம் எதுவோ



என் பெயரை மெல்ல மறந்தேன்

உன் பெயரால் என்னை அழைத்தேன்

உன் தோளில் சாயும்போது


என் கனவை உன்னில் வரைந்தேன்


நடைபாதை பூக்களை போல்

பொது வெளியில் ஆசை வளர்த்தேன்

இளமார்பு வழிந்திடாமல்

உன் வாசம் எண்ணில் நிறைத்தேன்




வானம் குளியலறை பூந்திட

மேகம் உன்னை தெளிக்க

வாழ்வே வானவில் ஆகிறதே




தாவுகின்ற புள்ளிமானின் மேலே

பாயுகின்ற வெய்யில் கீற்று போலெ

நெஞ்சின் மீது நெஞ்சின் மீது வந்தாயே



பாதி மனதில் உன்னை பிரியும் வேலை

இதழின் நுனியில் இதயம் துடிக்கும் தொல்லை

வார்த்தை இன்றி மூர்ச்சையாகி போவேனே



வாலிபம் நனைத்தவன் நீயே

நாழிகை எல்லாம் நீதானே

கவிதையில் சொன்னால் காதல் புரியுமோ



சந்திய கரையிலே
காதல் நுரைக்குதே

கண்களில் காண்பது மெய்யா

கொஞ்சும் காட்சியாய்

கடலே சாட்சியாய்

காதலை சொன்னதும் நீயா



வாலிபம் நனைத்தவன் நீயே
நாழிகை எல்லாம் நீதானே
நாடகம் ஆடி தீர்த்தாய் மாயனே



பௌர்ணமி நிலவுகள் வேண்டாம்
ஆயிரம் பிறவிகள் வேண்டாமே

காதலின் முதலாம் ஸ்பரிசம் போதுமே

கண்ணசைவில் மின்னல் விழ புன்னகையில் பூக்கள் விழ கை அசைவில் வானம் விழ


புது மலர் தொட்டு செல்லும், காற்றை நிறுத்து!
புது கவி பாடி செல்லும், ஆற்றை நிறுத்து!
கீசு-கீசு கொண்டு செல்லும், கிளியை நிறுத்து!
காதல் வந்ததே, இரு முயல் துடிக்கின்ற,
முத்தம் நிறுத்து! இருதயம் அடிக்கின்ற,
சத்தம் நிறுத்து! இலங்கையில் நடக்கின்ற,
யுத்தம் நிறுத்து! காதல் வந்ததே,
எனக்கு காதல் வந்ததே,

கூவ சொல்லாதே, குயிலை நிறுத்து,
ஆட சொல்லாதே, அலையை நிறுத்து,
காய சொல்லாதே, நிலவை கொளுத்து, ஓ
முட்டி விழுகின்ற, அருவி நிறுத்து,
சுற்றி வருகின்ற, பூமி நிறுத்து,
பூமி துளைக்கின்ற,புல்லை நிறுத்து,

இந்த அகிலத்தின் ஓசைகள் நின்றுவிடு வேண்டும்,
அவள் விடும் சுவாசத்தின் சத்தம் மட்டும் வேண்டும்,
நட்சத்திர மண்டலத்தில் ஓர் இடம் வேண்டும்,
நாங்கள் மட்டும் பேசிக்கொள்ள தனி மொழி வேண்டும்,
கண்ணசைவில் மின்னல் விழ
புன்னகையில் பூக்கள் விழ
கை அசைவில் வானம் விழ
பெண் அசைவில் நானும் விழவே
காதல் வந்ததே,
காதல் வந்ததே,
காதல் வந்ததே,
எனக்கு காதல் வந்ததே,

காதில் வேல் வீசும், கொலுஸை நிறுத்து,
சேதம் செய்கின்ற, சிரிப்பை நிறுத்து,
வாதம் செய்கின்ற, வளையல் நிறுத்து,
கண்கள் கள வாடும், மின்னல் நிறுத்து,
கதறி அழுகின்ற, இடி யை நிறுத்து,
கத்தி எழுகின்ற, மலையை நிறுத்து,
அந்த இரு விழி தெறிக்கின்ற மின்னல்கள் வேண்டும்,
இடை வெளி பொழிகின்ற மழை மட்டும் வேண்டும்,
அவளுக்கும் நான் மட்டும் தெரிந்திட வேண்டும்,
அவள் முகம் நான் மட்டும் அறிந்திட வேண்டும்,
சிந்தி விழும் முதல் மழை,
வந்து விழும் முதல் அலை,
எந்திரிக்கும் முதல் மலை,
சுந்தரிக்கு சொந்தமாகவே,
காதல் வந்ததே,
காதல் வந்ததே,
காதல் வந்ததே,
எனக்கு காதல் வந்ததே,

Saturday, March 16, 2019

இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால் காதல் இரண்டு எழுத்து


விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்
பெண்மீன் விழியில் எனையே தொலைத்தேன்
மழையின் இசை கேட்டு மலரே தலையாட்டு
மழலை மொழி போல மனதில் ஒரு பாட்டு
இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால்
காதல் இரண்டு எழுத்து

விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்
பெண்மீன் விழியில் எனையே தொலைத்தேன்
மழையின் இசை கேட்டு மலரே தலையாட்டு
மழலை மொழி போல மனதில் ஒரு பாட்டு
இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால்
காதல் இரண்டு எழுத்து

விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்
பெண்மீன் விழியில் எனையே தொலைத்தேன்


நான் பேசாத மௌனம் எல்லாம்
உன் கண்கள் பேசும்
உனை காணாத நேரம் என்னை
கடிகாரம் கேட்கும்
மணல் மீது தூவும் மழை போலவே
மனதோடு நீதான் நுழைந்தாயடி
முதல் பெண்தானே நீதானே
எனக்குள் நானே ஏற்பேனே
இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால்
காதல் இரண்டு எழுத்து

ஒரு பெண்ணாக உன் மேல்
நானே பேராசை கொண்டேன்
உனை முன்னாலே பார்க்கும் போது
பேசாமல் நின்றேன்
எதற்காக உன்னை எதிர்ப்பார்க்கிறேன்
எனக்குள்ளே நானும் தினம் கேட்கிறேன்
இனிமேல் நானே நீயானேன்
இவன் பின்னாலே போனேனே

இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால் காதல் இரண்டு எழுத்து
விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்
பெண்மீன் விழியில் எனையே தொலைத்தேன்
மழையின் இசை கேட்டு மலரே தலையாட்டு
மழலை மொழி போல மனதில் ஒரு பாட்டு
இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால்
காதல் இரண்டு எழுத்து

விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்
பெண்மீன் விழியில் எனையே தொலைத்தேன்

Monday, March 11, 2019

சொத்து பத்து ஏதும் வேணாம் சொக்கி போகுவேன் பத்து சென்மம் போதாதம்மா சொந்தம் நீளவே

தனே தனே தனே தானேனா
தனே தனே தனே தானேனா
சிங்கக்குட்டி நான்தான்டி
உன்ன செல்லங்கொஞ்ச வாரேன்டி
சொல்ல சொல்ல கேட்காம வந்து
குப்பக்கொட்டப்  போறேன்டி
அடங்கி நீ நடக்கனும்
ஆட்டம் போடாம
என்ன கலந்து தான் செவக்கனும்
கூச்சம் காட்டாம
மொற மாமன் தொடவேணும்
வா வட்டாம ஆ ஆ………

சிங்கக்குட்டி நீதானே ஒன்ன
செல்லங்கொஞ்ச வாறேனே
சொல்ல சொல்ல கேட்காம வந்து
குப்பக்கொட்டப் போறேனே
அடங்கி நீ நடக்கனும் ஆட்டம் போடாம
ஒன்னக் கலந்து நான் செவக்கனும்
கூச்சம் காட்டாம
இல போட்டும் பசியானேன் நீ ஊட்டாம……

கண்ண வச்சி நீ தான் என்ன கத்திரிக்கப்போற
மந்திரிச்ச ஆடா உயிர் சுத்துன சேர
அச்ச வெல்லப்பேச்சில் நீதான்
சுண்டக்காச்சுர………

எச்சுவைக்க ஏங்கித்தானே
வண்டி ஓட்டுற

நீ வர மாறுது பாத
உச்சு மூட மோதுது போத
வெலகாத………

சிங்கக்குட்டி சங்கக்குட்டி எங்கேயோ
 சிங்கக்குட்டி நான் தான்டி

ஒன்ன செல்லங்கொஞ்ச வாறேனே
 சொல்ல சொல்ல கேட்காம

அள்ள அள்ள கூடும்
நல்ல அன்புக்கில்ல தோல்வி

ஒட்டு மொத்தமாக தர ஒன்னும் இல்ல கேள்வி

சொத்து பத்து ஏதும் வேணாம்
சொக்கி போகுவேன்

பத்து சென்மம் போதாதம்மா
சொந்தம் நீளவே

கோடியிலே ஒரு ஆளு
மஞ்சத்தாளிய நீ இடும் நாளு திருநாளு  (சிங்கக்குட்டி)

Monday, March 4, 2019

பொழுதே விடிஞ்சா போதும். நடந்தான் அவ பின்ன நாளும் இரவே வருகிற போதும். நடப்பான் கனவிலும் போலும்


சொல்லத்தான் நினைக்கிறேனே
சொல்லாம நடக்குறானே.

யாரென்ன சொன்னாலும் பல்லத்தான்
காட்டுறானடா.

வழியே பார்த்து சிரிச்சதெல்லாம்
துணையா ஜோடி சேரத்தான் ஓ ஓ.

கடலு ஏழு தாண்டி வந்து
காதல் நீட்டுறான்.

கேட்டது கெடைக்கமா இவனும் நடைய கூட்டுறான்.

எத்தன காலம்
இன்னும் ஒத்தையா சுத்துரானோ.

சம்மதிச்சா கல்யாணாம் தான்
மாட்டிக்கிட்டான் ஆம்பள தான்.

மனசு துணிந்தே விட்டான்
அடடா அச்சம்.

அவள் முகத்தில் நாலும்தான் தோணுமா
மனைவி என்றே அமையும் பெண்ணே.
அட பார்க்க வெக்கம் வேணுமா

பொழுதே விடிஞ்சா போதும்.
நடந்தான் அவ பின்ன நாளும்
இரவே வருகிற போதும்.
நடப்பான் கனவிலும் போலும்
சேரனும் ரெண்டும் சேர்ந்து
வாழ்வதை பாக்கணும்.

சிறக காதலும் இறகா
அது ஒரு சறுக நான் கேட்கிறேன்.

சிரைதான் இது ஒரு இரைதான்
அனுபவம் உரைதான் நான் வாழ்கிறேன்.

வங்க கரைய வளச்சு புடிக்க
பையன் வலைய வீசுரான்.

கடலு ஏழு தாண்டி வந்து
காதல் நீட்டுறான்.

கேட்டது கெடைக்கமா இவனும்
நடைய கூட்டுறான்.

எத்தனை காலம்
அவன் ஒத்தையா சுத்துரானோ.

சம்மதிச்ச பொம்பளதான்.
மாட்டிக்கிட்டான் ஆம்பளதான்.

சொல்லத்தான் நினைக்கிறேனே
சொல்லாம நடக்குறானே.

யாரென்ன சொன்னாலும் பல்லத்தான்
காட்டுறாண்டா.

Sunday, March 3, 2019

காதல் கதை என்றும் தோற்றதில்லை தேவனின் விதியில் மாற்றம் இல்லை நாள் முழுக்க உந்தன் ஞாபகம் தான் எதிர்பார்த்திருக்கும் இந்த பூ முகம் தான்


ஒரு தேதி பார்த்தா தென்றல் வீசும்
ஒரு கேள்வி கேட்டா முல்லைபேசும்

உயிர் நாடியெங்கும் அனல் மூட்டும்
உன்னை தீண்ட தீண்ட சுகம் காட்டும்

முதல் முதல் தொடும் போது
மடல் விடும் உயிர் காதல்
வா வா எந்தன் வாழ்வே

ஒரு தேதி பார்த்தா தென்றல் வீசும்
ஒரு கேள்வி கேட்டா முல்லைபேசும்

உயிர் நாடியெங்கும் அனல் மூட்டும்
உன்னை தீண்ட தீண்ட சுகம் காட்டும்

பார்வை மீது உந்தன் பேரழகே
மனப்பாடம் செய்யும் இந்த பூங்குருவி

நேரில் ஆடி வரும் தேன் அருவி
இதில் நீந்த வேண்டும் இந்த ஆண் குருவி

கோடையிலும் இதழ் காய்வதில்லை
ஆசையின் அலை தான் ஓய்வதில்லை

காதல் கதை என்றும் தோற்றதில்லை
தேவனின் விதியில் மாற்றம் இல்லை

நாள் முழுக்க உந்தன் ஞாபகம் தான்
எதிர்பார்த்திருக்கும் இந்த பூ முகம் தான்

ஒரு தேதி பார்த்தா தென்றல் வீசும்
ஒரு கேள்வி கேட்டா முல்லைபேசும்

உயிர் நாடியெங்கும் அனல் மூட்டும்
உன்னை தீண்ட தீண்ட சுகம் காட்டும்

போடவேண்டும் ஒரு பூ விலங்கை
இசை பாடவேண்டும் உந்தன் கால் சலங்கை

ஏற்றவேண்டும் சின்ன பூ திரியை
அதில் பார்க்க வேண்டும் முதல் ராத்திரியை

தாமரையே சிறு வான்பிரையே
மார்பினில் வழியும் தேன் மழையே

காதலனே இசை பாடகனே
கீதங்கள் பொழியும் பாவலனே

நீ இல்லையேல் இங்கு நான் இல்லையே
குளிர் நீர் இல்லையே துள்ளும் மீன் இல்லையே

ஒரு தேதி பார்த்தா தென்றல் வீசும்
ஒரு கேள்வி கேட்டா முல்லைபேசும்

உயிர் நாடியெங்கும் அனல் மூட்டும்
உன்னை தீண்ட தீண்ட சுகம் காட்டும்

முதல் முதல் தொடும் போது
மடல் விடும் உயிர் காதல்

வா வா எந்தன் வாழ்வே

ஒரு தேதி பார்த்தா தென்றல் வீசும்
ஒரு கேள்வி கேட்டா முல்லைபேசும்

உயிர் நாடியெங்கும் அனல் மூட்டும்
உன்னை தீண்ட தீண்ட சுகம் காட்டும்

Friday, March 1, 2019

உன் நெனப்பு நெஞ்சு குழி வர இருக்கு என் உலகம் முழுசும் உன்ன சுத்தி சுத்தி கெடக்கு



உயிர் உருவாத உருக்குளைக்காத

என்னில் வந்து சேர  நீ யோசிக்காத


திசை அறியாத  பறவையைப்போல

பறக்கவும் ஆச உன்கூட தூர


வாழ்கை தீர தீர வாயேன் நிழலா கூட

போகும் தூரம் போக துணையா நீயும் தேவை

நான் உன்கூட ....



உன் நெனப்பு நெஞ்சு குழி வர இருக்கு

என் உலகம் முழுசும் உன்ன சுத்தி சுத்தி கெடக்கு


உன் நெனப்பு நெஞ்சு குழி வர இருக்கு

என் உலகம் முழுசும்

உன்ன சுத்தி சுத்தி கெடக்கு


மனசுல ஒரு வித வலிதான் சுகமா சுகமா

எனக்குள்ள உருக்குற உன்ன நீயும்

நெஜமா நெஜமா



கண்ணே கண்ணே

காலம் தோரும்

என் கூட நீ மட்டும்

போதும் போதும்

நீ நாளும்



நான் முழுசா

உன்ன எனக்குள்ள பொதச்சேன்

என் உசுர அழகே

உன்ன நித்தம் நித்தம் நெனச்சேன்



நான் முழுசா

உன்ன எனக்குள்ள பொதச்சேன்

என் உசுர அழகே

உன்ன நித்தம் நித்தம் நெனச்சேன்





இனி வரும் ஜென்மம் மொத்தம்

நீயும் தான் உறவா வரணும்

மறுபடி உனக்கென பிறந்திடும்

வரம் நான் பெறனும்




பெண்ணே பெண்ணே

வாழ்க நீள

என் கூட நீ மட்டும்

போதும் போதும்

நீ நாளும்