Tuesday, June 9, 2009

அநியாயம் ஜெயிக்காதே ஜெயித்தாலும் நிலைக்காதே அம்மா உன் சத்தியமே வெல்லும் அது நிச்சயமே

ஓம்..சக்தி ...ஓம்..சக்தி ...

மருவத்தூர் ஓம்சக்தி மகாமாயி கருமாரி
உறையூரு வெக்காளி உஜ்ஜைனி மாகாளி

கொள்ளுறு மூகாம்பா கேதாரம் ஸ்ரீகௌரி
மாயவரம் அபயாம்பிக்கா
மதுரை நகர் மீனாக்ஷி சிபுரம் காமாட்சி
காசி விசாலாக்ஷி திருக்கடவூர் அபிராமி
சிதம்பரத்து சிவகாமி ச்ரிங்கேரி சாதம்பா
திருவாரூர் கமலாம்பிகா

நாகாம்பா யோகாம்பா லலிதாம்பா ஜெகதாம்பா
பாலாம்பா நீலாம்பா கனகாம்பா சௌடாம்பா
சிவகாளி நவகாளி திரிசூலி சுபாநீலி
ஸ்ரீதேவி பூதேவி ஜெயதேவி மலையரசி
அம்மாயி பொம்மாயி அன்பாயி புழுமாயி
பொன்னாயி பூவாயி ஏராயி வீராயி

ஆரல் வைசக்கியம்மா வாடி ஆரணி படவேட்டம்மா
திருமம்பூர் மேகவல்லி தாயே திரிகூடல் மதுரவல்லி
புதுகோட்டை புவனேஸ்வரி நங்கநல்லூர் ராஜேஸ்வரி
மண்ணடியில் மல்லேஸ்வரி மாதேஸ்வரம் மாதேஸ்வரி
அலங்கார கல்யாணி நாமக்கல் அருக்காணி
அங்காளி செங்காளி சந்தோஷி மாதா
மயிலாப்பூர் கற்பகமே மலைக்கோட்டை சென்பகமே
செல்லாயி சிலம்பாயி கண்ணாத்தா வா வா


கஞ்சனூர் வனதுர்கா மாவூரு ஸ்ரீகாளி
கைலாச பார்வதி மைசூரு சாமுண்டி
மலரேல் திருமாயி வழிகாட்டும் திருபாச்சி
உமையாம்பா தேனாண்ட மலையம்மா தேனம்மா
திருவத்தூர் வடிவுடையாள் காளத்தி ஞானாம்பாள்
மகாராசியே எங்கள் பாலயதாம்மா
விராலி மலைமேகன்ம்மா முக்கூடல் பவனி
காரைக்குடியம்மா கொப்புடையம்மா
ஸ்ரீசக்தி ஜெயசக்தி சிவசக்தி நவசக்தி
பாஞ்சாலி ராக்காயி பைரவி சாம்பவி
திருவானைக்கவாளும் அகிலாண்டேஸ்வரி
திருந்தாத பேய் ஓட்ட நீ இங்கு வாடி

ஓம்..சக்தி ...ஓம்..சக்தி ... மருவத்தூர் ஓம்சக்தி
ஓம்..சக்தி ...ஓம்..சக்தி ...உலகாளும் ஓம்..சக்தி
உயிர் காக்க வா சக்தி ...


எல்லைதனை காக்கின்ற கன்யாகுமரி
அண்ணாமலையாரின் உண்ணாமுலையம்மா
சேதியார் தோப்பு தீப்பாஞ்சியம்மா
கொயம்பத்துரின் கொனியம்மவே
சத்தியமங்கலம் பண்ணாரியம்மா
கொல்லிமலை வாழும் எட்டுக்கை அம்மா
பாகேஸ்வரி வாகேஸ்வரி வைதீச்வரி லோகேஸ்வரி
ஸ்ரீசைலம் வாழ்கின்ற ப்ரம்மராதாவே
அமுதேஸ்வரி குமுதேஸ்வரி ஜெகதீஸ்வரி பரமேஸ்வரி
யாபூரை ஆள்கின்ற வைதாகினி தாயே
ராமேஸ்வரத்தின் பர்வதவர்தினி காசிநகர் அன்னை அன்னபூரணி
மலைக்கோட்டை வாழும் மதுவார் குழலி
திருசெங்கோட்டம்மா அர்தனாறேச்வரி
திருபதூர் பூமாரி தீயாக உருமாறி சிவதாண்டவமாதா
ஓடோடி வாம்மா


ஓம்..சக்தி ...ஓம்..சக்தி ... மருவத்தூர் ஓம்சக்தி
ஓம்..சக்தி ...ஓம்..சக்தி ...உலகாளும் ஓம்..சக்தி
உயிர் காக்க வா சக்தி ...

வா சக்தி வா சக்தி வா சக்தி வா சக்தி
உயிர் காக்க வா சக்தி ...

தம்புசெட்டித்தேறு காளிகாம்பாவே
தேனாம்பேட்டை தெய்வம் மாலையம்மாவே
நாட்டரசன்கோட்டை நாச்சியம்மாவே
ஆதாகருப்பூறு பெட்டிக்காளியே
பேச்சி பாறையில் உள்ள பெச்சியம்மாவே
பட்டிஸ்வரன் கோயில் துர்கையம்மாவே
நெல்லையை ஆள்கின்ற காந்திமதியே
சங்கரன் கோயில் கோமதியம்மா

மேல்மலையனூர் அங்காளம்மா அடி கங்கையம்மா
தாயே துளசியம்மா
வேம்புலியம்மாவே துளுக்கனதம்மா
உப்பிலியம்மாவே குளுக்கியம்மா
செண்ணியம்மா அடி பொன்னியம்மா
எங்கள் கண்ணியம்மா தாயே செல்லியம்மா
முதுமாளையம்மா ஜெயமாதம்மா
அடி சிந்தாமணிம்மா நருழியம்மா
உறங்கினி அம்மாவே கோலவிழி அம்மா
சுந்தரி சௌந்தரி சோலையம்மா
அழகம்மா வா வா ஜகம்மா வா வா
அடங்காத பேய் ஓட்ட மாயம்மா வா வா


ஓம்..சக்தி ...ஓம்..சக்தி ... மருவத்தூர் ஓம்சக்தி
ஓம்..சக்தி ...ஓம்..சக்தி ...உலகாளும் ஓம்..சக்தி
உயிர் காக்க வா சக்தி ...

வா சக்தி வா சக்தி வா சக்தி வா சக்தி
உயிர் காக்க வா சக்தி ...


குலசேகரபட்டினம் முத்தார அம்மாவே
குத்தாலம் சக்தி பராசக்தி தாயே
பரமக்குடி வாழும் முத்தாலம்மாவே
பட்டுகோட்டை தெய்வம் நாடியம்மாவே
கொடிஎடையம்மா திருவுடையம்மா
கடும்பாடி இலங்கை காந்தாரியம்மா
திருவக்கரையின் வக்கிர காலி
சிருவாசூரலே தென் மதுரக்காளி
சேலத்து ராஜகாளியம்மாவே
சிங்களக் கரையில் வாழ்வம்பாள் நீயே
சோட்டானிக்கரை பகவதியம்மா
திருமுல்லைவாயில் வைஷ்ணவியம்மா
பம்பைமணி சண்டை இது சிந்தும் ஒலி சந்தங்களில்
என் பாட்டுக்கேக்க வாடி என் தாயே
மண்ணும் உயர் விண்ணும் உன் அக கண்ணின் கண்டாலே
உடைப்பட்டு சிதறும் உருமாறி போகும்
என்னை இங்கு தேடி எழுந்தோடி வாடி
உன்னை வேண்டி அழைத்தேன் உயிராலே பாடி
கடலுக்கு மூடி உலகத்தில் ஏது
காற்றுக்கு வேலி கிடையாது வாடி
தஞ்சம் உன்னை தஞ்சம்
என கெஞ்சும் இனம் நன்மையை தர
அன்னை திருக்கயிலாய அருள் வழங்கிடு தாயே
வஞ்சம் நயவஞ்சம் அதன் நெஞ்சம் இனி அஞ்சும்படி
மண்ணும் துயர் கண்ணீர் விட கொதிதெழுந்திடுவாயே
வரவேண்டும் வரவேண்டும் ரேணுகா பரமேஸ்வரி
மாசாணி அம்மா என் தாயே
பதினேழாம் திருசூலம் எடுக்கின்ற ஓரு காலம்
உயிர்தின்னும் பேய் ஓட்ட வாடி வராகி
மாயங்களை கெட்ட மர்மங்களை வாய்த்த ஏவல்களை
செய்த இடைஞ்சல்களை அடி
தீப்பட்ட ரசம்போல ஊர் விட்டு நீ ஓட்ட
வெங்கரை அம்மாவே வாடியம்மா
நீ வாடியே வாடி பூங்கொதையம்மா
நீ வாடியே வாடி என் முப்பாத்தம்மா
ஏளியம்பேடு அபிராமசுந்தரி
ஏழேழு லோகங்கள் ஆள்கின்ற சங்கரி
பாடி உன்னை பாடி அடைந்தோமே நலம்கொடி
அடி தேவி அருளாடி வரவேண்டும் எனைத்தேடி


திருமாலின் துணையாலே ஸ்ரீரங்கநாயகி
வடிவேலின் மனையாளே தெய்வானையம்மா
பண்ருட்டி வாழ்கின்ற கன்னிகாபரமேஸ்வரி
திண்டுக்கல் தாயே கோட்டைமாரி
திருச்சானூர் அலமேலு மகிஷாசூர மர்தினி
புன்னைநல்லூர் மாறி கொபாடைகாரி
இனிமேலும் தயங்காதே உலகம்தான் தாங்காதே
திருபாச்சி வீரம்மா வெளியே நீ வாடி
அநியாயம் ஜெயிக்காதே ஜெயித்தாலும் நிலைக்காதே
அம்மா உன் சத்தியமே வெல்லும் அது நிச்சயமே
வாடியம்மா ....வாடியம்மா . ...வாடியம்மா ....
அம்மா ..அம்மா ..அம்மா ..அம்மா ..அம்மா ..அம்மா ...

3 comments:

Anonymous said...

தோழி, மருவத்தூர் ஓம் சக்தி 108 அம்மன் போற்றி பாடல் வரிகளை www.tamilaccess.blogspot.com
போஸ்ட் செய்துள்ளேன், தவறிருப்பின் தெரிவிக்கவும். மிகவும் நன்றி. உங்கள் ப்ளாக் மென்மேலும் வளர எனது வாழ்த்துக்கள்.

இசை காதலி said...

ithil thavaru ethuvum illai , amman padal anaivarum padalam , ezhuthalam

Nandri

Anonymous said...

Super