Sunday, April 17, 2011

மனதை மனதை விழி துளைத்தால் காதலின் வண்ணம் விளைவதுண்டு


வெளிநாட்டு காற்று, தமிழ் பேசுதே ஹோ
புரியாத பூக்கள் தலையாட்டுதே
மொழி பெயர்க்கவே அதோ அதோ
குயில் வந்ததே குறை தீர்ந்ததே

வெளிநாட்டு காற்று, தமிழ் பேசுதே ஹோ

உலகை உலகை மறந்துவிட்டேன்
ஓர் இடம் தேடி ஒளிந்து கொள்வேன்
பூவை திறந்து மறைந்து கொண்டு
பூவுக்கு தாழ்பாள் போட்டு கொள்வோம்
கண் காணாமல் முப்போகம் நாம் காணுவோம்
பூ உள்ளூறும் தேனோடு நீராடுவோம்
ஸ்ரீங்கார மாநாடு போடு சிற்றின்ப கச்சேரி பாடு

வெளிநாட்டு காற்று, தமிழ் பேசுதே ஹோ
ஒஹ் தமிழ் பேசுதே

மழையின் துளியை ஒளி துளைத்தால்
வானவில் வண்ணம் எழுவதுண்டு
மனதை மனதை விழி துளைத்தால்
காதலின் வண்ணம் விளைவதுண்டு

உன் மின்சார முத்தங்கள் இட்டாடவா
என் ஆனந்த மூலங்கள் தொட்டாடவா
கண்கண்ட தேகங்கள் போக காணாத பாகங்கள் வாழ்க

வெளிநாட்டு காற்று, தமிழ் பேசுதே ஹோ
புரியாத பூக்கள் தலையாட்டுதே
மொழி பெயர்க்கவே அதோ அதோ
குயில் வந்ததே குறை தீர்ந்ததே."

No comments: