Sunday, April 17, 2011

கண்ணாடி பார்க்கையில அங்க முன்னாடி உம் முகம்தான்


ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ
என் பேரைச் சொல்லும் ரோசாப்பூ
ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ
என் பேரைச் சொல்லும் ரோசாப்பூ
காற்றில் ஆடும் தனியாக
என் பாட்டு மட்டும் துணையாக
காற்றில் ஆடும் தனியாக
என் பாட்டு மட்டும் துணையாக


மனசெல்லாம் பந்தலிட்டு மல்லிக்கொடியாக ஒன்னா விட்டேன்
உசுருக்குள் கோயில் கட்டி ஒன்னக் கொலு வச்சுக் கொண்டாடினேன்
மழை பேய்ஞ்சாதானே மண் வாசம் ஒன்ன நெனச்சாலே பூவாசம்தான்
பாத மேல பூத்திருந்தேன் கையில் ரேகை போல சேர்ந்திருதேன்

ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ
என் பேரைச் சொல்லும் ரோசாப்பூ
காற்றில் ஆடும் தனியாக
என் பாட்டு மட்டும் துணையாக


கண்ணாடி பார்க்கையில அங்க முன்னாடி உம் முகம்தான்
கண்ணே நீ போகையில கொஞ்சும் கொலுசாக என் மனம்தான்
நிழலுக்கும் நெத்தி சுருங்காம ஒரு குடையாக மாறட்டுமா
மலை மேல் விளக்க ஏத்தி வைப்பேன்
உன்னப் படம்போல் மனசில் மாட்டிவைப்பேன்


ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ
என் பேரைச் சொல்லும் ரோசாப்பூ
ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ
என் பேரைச் சொல்லும் ரோசாப்பூ
காற்றில் ஆடும் தனியாக
என் பாட்டு மட்டும் துணையாக
காற்றில் ஆடும் தனியாக
என் பாட்டு மட்டும் துணையாக

No comments: