Saturday, August 6, 2011

சந்தோசம் மந்திரம் ஓத சந்தர்ப்பம் சாதகமாக நாள் பார்த்ததோ இன்னமும் இந்த நாடகம் போட


வா வா என் வீணையே
லலா
விரலோடு கோபமா
லலா

மீட்டாமல் காதல் ராகம்
யாவும் விளங்கிடுமா ஆஆஆஆ
கிள்ளாத முல்லையே
காற்றோடு கோபமா
இளந்தென்றல் தேடும் போது
ஊடல் ஆகுமா ஆஆஆஆ
(வா வா வீணையே...)

தண்டோடு தாமரையாட வண்டோடு மோகனம் பாட
நான் பார்த்ததும் நெஞ்சிலே உன் ஞாபகம் கூட

தண்டோடு தாமரையாட வண்டோடு மோகனம் பாட
நான் பார்த்ததும் நெஞ்சிலே உன் ஞாபகம் கூட

துணை தேடுதோ தனிமை துயர் கூடுதோ
தடை மீறுதோ உணர்ச்சி அலை பாயுதோ
நாள் தோறும் ராத்திரி வேளையில்
ரகசிய பாஷை தாஆஆஆஆனோ

வா வா உன் வீணை நான்
தனனா...
விரல் மீட்டும் வேளை தான்
தனனா..
மீட்டாமல் காதல் ராகம்
யாவும் விளங்கிடுமா ஆஆஆஆ

சந்தோசம் மந்திரம் ஓத சந்தர்ப்பம் சாதகமாக
நாள் பார்த்ததோ இன்னமும் இந்த நாடகம் போட

சந்தோசம் மந்திரம் ஓத சந்தர்ப்பம் சாதகமாக
நாள் பார்த்ததோ இன்னமும் இந்த நாடகம் போட

இரவாகலாம் இளமை அரங்கேறலாம்
உறவாடலாம் இனிய ஸ்வரம் பாடலாம்
கேட்காத வாத்திய ஓசைகள்
கேட்க்கையில் ஆசைகள் தீ..ரு..ம்
(வா வா என் வீணையே...)
(வா வா உன் வீனை நான்..)

No comments: