Tuesday, November 8, 2011

சுத்திச்சுத்தி நிதமும் என்ன சுத்தி புடிச்சுப்புட்டே இந்நேரம் வலை வீசி


அடி ராக்கோழி கூவும் நேரம்
நம்ம ராசாங்கம் ஆகிப்போச்சு
அடி ராக்கோழி கூவும் நேரம்
நம்ம ராசாங்கம் ஆகிப்போச்சு
அந்த ஏற்ககாடு ஊட்டி போல
குளிர் ஏராளம் ஆகிப்போச்சு
குளிர் அடிக்க அடிக்க கட்டிப் புடிக்க புடிக்க
குளிர் அடிக்க அடிக்க கட்டிப் புடிக்க புடிக்க
வா மாமா அடி ஆத்தி ஆடு சுதி ஏத்திப் பாடு
அட ராக்கோழி கூவும் நேரம்
நம்ம ராசாங்கம் ஆகிப்போச்சு

தட்டி தட்டி தவுல மெல்ல தட்டி
விடியும் வர கச்சேரி வெக்கலாமா
பக்க மேளம் உன் பக்கம் வரும் நேரம்
நீ வித்தைகள காட்டாம நிக்கலாமா
கட்டி கட்டி இருக உன்ன கட்டி
கனிஞ்சிருக்கும் கொய்யாவ கிள்ளலாமா
என்ன வேணும் என் எண்ணங்கள நானும்
உங்கிட்ட வந்து காதோடு சொல்லலாமா
அடி நீ என்ன கேட்டாலும் தாரேன்
அந்த தோப்போறம் வான்னாலும் வாறேன்
விடிஞ்சாலும் மாமா விடமாட்டேன் ஆம்மா

அட ராக்கோழி கூவும் நேரம்
நம்ம ராசாங்கம் ஆகிப்போச்சு

கொஞ்சி கொஞ்சி மடியில் உன்னக் கொஞ்சி
கலந்திருக்க வந்தாச்சு திருநாளு
கன்னி தோளு கை தொட்டு கொஞ்சும் ஆளு
என் வள்ளிக்குப்பம் கொண்டாடும் வடிவேலு
சுத்திச்சுத்தி நிதமும் என்ன சுத்தி
புடிச்சுப்புட்டே இந்நேரம் வலை வீசி
மெத்தப் போட உன் மந்திரத்திலாட
நான் ஒத்துக்கிட்டேன் வாயேண்டி மஹராசி
நிலா எம்மேல தீயாட்டம் காயும்
இப்போ உம்மேல என்மேனி சாயும்
அடி ஆத்தி ஆடு சுதி ஏத்திப் பாடு

அடி ராக்கோழி கூவும் நேரம்
நம்ம ராசாங்கம் ஆகிப்போச்சு
குளிர் அடிக்க அடிக்க கட்டிப் புடிக்க புடிக்க
குளிர் அடிக்க அடிக்க கட்டிப் புடிக்க புடிக்க
வாம்மா வா அடி ஆத்தி ஆடு சுதி ஏத்திப் பாடு
அட ராக்கோழி கூவும் நேரம்
நம்ம ராசாங்கம் ஆகிப்போச்சு

No comments: