Friday, May 3, 2019

விரதம் இருந்து நான்.நான்.நான் வேண்டி வந்த நாயகன்


மஞ்சள் முகமே மங்கள விளக்கே

வருக வருக வா 

தூறல் சிந்திடும் காலை தென்றலே வா வா வா

கண்களுக்குள்ளே தொலைந்த உருவம்

கண்ணீரின் வழியே வரைந்த கடிதம்

தெறித்த துழியால் வரிகள் மறைய

உப்பு கரிசல் உரையிலே

உணர்ந்து கொள் என் உதட்டிலே 

வாசத்தோடு வந்த உன்னை

நாசிகளுக்குள் நுழைத்து கொண்டேன்

பாரம் தாங்க வந்த விழுதே

மரத்தின் வேராய் ஆன அமுதே

பூக்களை சுமக்கும் ஆ...

புனித பயணம்


ஊமை  நெஞ்சின், ஊர்வலத்தில்

உனது குரலில் கோடி ராகம்

விரதம் இருந்து நான்.நான்.நான்

வேண்டி வந்த நாயகன்

இன்று வரைக்கும் நீ.நீ.நீ

அள்ளி தந்த உறவுகள்

இனி விருதுகள் என் விருதுகள் 


நெஞ்சு என்னும் பஞ்சு இங்கே...

நெருப்பு பட்டும் எரிய வில்லை

காயம் பட்ட பார்வை ஒன்று..

கட்டு போட்ட கைகள் ஒன்று

இரண்டும் பறக்க...வானம் உண்டு..ஓஒ ..

புத்தன் பாதை சித்தன் பாதை

மாறி போனேன் மறந்து போனேன்

வெள்ளத்தில் நீந்திய நான்.நான்.நான்

வறண்ட போது மூழ்கிறேன்

இருட்டில் ஓடிய நான்.நான்.நான்

விளக்கில் இடறி வீழ்கிறேன்

உனது மடியில் வாழ்கிறேன் 

No comments: