Tuesday, July 24, 2018

கண் கதவை சாத்திக்கொள்வேன் காலம் முழுதும் இருப்பாயா



இடம் தருவாயா மனசுக்குள்ளே

இடம் தருவாயா மனசுக்குள்ளே



தர மாட்டேன் தர மாட்டேன் இடம் தர மாட்டேன்

உள்ளே சென்றால் மனசை விட்டு வர மாட்டாய்



பகலில் வீட்டின் காவலன் ஆவேன்

இரவில் எப்போதும் சேவகன் ஆவேன்

விளக்காய் விழித்திருப்பேன் அன்பே…..



இடம் தருவாயா மனசுக்குள்ளே

இடம் தருவாயா மனசுக்குள்ளே



இதய வீட்டில் ஓர் இடம் நீ கெஞ்சிக் கேக்கிறாய்

வீட்டின் உள்ளே காற்றில்லை என்றால் என் செய்வாய்



இதய வீட்டில் காற்றில்லையா என்ன செய்குவேன்

உந்தன் மூச்சு பிச்சையிலே தான் நான் வாழ்வேன்



வீட்டை விட்டு வெளியேறு

ஆணைகள் இட்டால் என் செய்வாய்



இருப்பவருக்கே மனை சொந்தம் என்று

ஒரு சட்டம் நான் இடுவேன்



இடம் ஒன்று கொடுத்தால் மடம் ஒன்று பிடிக்கும்

கள்ளக் கண்ணாளன் நீ என்று கண்டேன்

தரவே தர மாட்டேன்



இடம் தருவாயா….

இடம் தருவாயா மனசுக்குள்ளே

இடம் தருவாயா மனசுக்குள்ளே



தர மாட்டேன் தர மாட்டேன் இடம் தர மாட்டேன்

உள்ளே சென்றால் மனசை விட்டு வர மாட்டாய்



பகலில் வீட்டின் காவலன் ஆவேன்

இரவில் எப்போதும் சேவகன் ஆவேன்

விளக்காய் விழித்திருப்பேன் அன்பே…..



இதயம் என்னும் மாளிகையில் நூறு வாசலே

எந்த வழி புகுவது என்று கேக்கின்றேன்



கண்கள் என்னும் வாசல் வழி புகுந்த கள்வனே

நுழைந்து கொண்டு வாசல் வழியா கேக்கின்றாய்



வீட்டுக்குள்ளே ஒளிந்திருக்கும்

கள்வனைக் காட்டிக் கொடுப்பாயா



கண் கதவை சாத்திக்கொள்வேன்

காலம் முழுதும் இருப்பாயா



இதயம் போலொரு அழகிய வீடு

எங்கு சென்றாலும் அடைவது ஏது

எனக்கு இடம் தருவாயா அன்பே



இடம் ஒன்று தந்தேன்…

இடம் ஒன்று தந்தேன் மனசுக்குள்ளே…

இடம் ஒன்று தந்தேன் மனசுக்குள்ளே…



தந்தாயே தந்தாயே தந்தாயே

இதய வீட்டில் அத்தனை அறைகள் தந்தாயே



அரண்மணை கதவுகள் மொத்தம் அடைத்தேன்

எல்லா ஜன்னலும் சாத்தி முடித்தேன்

தப்பிக்க முடியாது அன்பே…

No comments: