Monday, May 17, 2021

கொஞ்சும் எனை கொஞ்சும் ஒரு நெஞ்சம் அதில் தங்கம் என தங்கும் சுகம் பொங்கும்

 


கலகலக்கும் மணியோசை

சலசலக்கும் குயிலோசை

மனதினில் பல கனவுகள் மலரும்

கொடி கொடியாம் பூங்கோடியாம் 

மின்மினிபோல் கண்மணியாம்

உறவினில் பல உரிமைகள் தொடரும்

இனி ஒரு பிரிவேது ஓ ஓ 

தடைகளும் இனி ஏது ஓ

இனி ஒரு பிரிவேது

தடைகளும் இனி ஏது ஓ

கலகலக்கும் மணியோசை

சலசலக்கும் குயிலோசை

மனதினில் பல கனவுகள் மலரும்

கொடி கொடியாம் பூங்கோடியாம்

மின்மினிபோல் கண்மணியாம்

உறவினில் பல உரிமைகள் தொடரும்


திங்கள் முகம் மங்கை இவள் பக்கம்

தினம் தென்றல் வர முத்தம் தர சொர்க்கம்

மன்னன் இவன் மஞ்சம் தர கொஞ்சும்

அதில் கன்னம் இட கன்னம் மெல்ல கெஞ்சும்

பழகிடவே வந்தாலும் பருகிடவே தந்தாலும்

இதழினிலே ஒரு கவிதை தா

அருகினிலே வந்தாலும் அழகினையே தந்தாலும்

இனிமையிலே ஒரு மனதை தா


இனி ஒரு பிரிவேது ஓ

தடைகளும் இனி ஏது

கலகலக்கும் மணியோசை

சலசலக்கும் குயிலோசை

மனதினில் பல கனவுகள் மலரும்


கொஞ்சும் எனை கொஞ்சும் ஒரு நெஞ்சம்

அதில் தங்கம் என தங்கும் சுகம் பொங்கும்

அங்கம் ஒரு தங்கம் என மின்னும்

அதை சங்கம் என சங்கத்தமிழ் கொஞ்சும்

படுக்கையிலே தாலாட்டு படிக்கையிலே நீ கேட்டு

துடிக்கையிலே அணைக்கையிலே ஓ

தடுக்கிறதே உன் பேச்சு

தவிக்கிறதே என் மூச்சு

துடிக்கிறதே ரசிக்கிறதே ஹோ


இனி ஒரு பிரிவேது ஓ

தடைகளும் இனி ஏது ஓ

கலகலக்கும் மணியோசை

சலசலக்கும் குயிலோசை

மனதினில் பல கனவுகள் மலரும்

கலகலக்கும் மணியோசை

சலசலக்கும் குயிலோசை

மனதினில் பல கனவுகள் மலரும்

கொடி கொடியாம் பூங்கோடியாம்

மின்மினிபோல் கண்மணியாம்

உறவினில் பல உரிமைகள் தொடரும்

இனி ஒரு பிரிவேது ஓ

தடைகளும் இனி ஏது ஓ

இனி ஒரு பிரிவேது ஓ

தடைகளும் இனி ஏது ஓ

கலகலக்கும் மணியோசை

சலசலக்கும் குயிலோசை

மனதினில் பல கனவுகள் மலரும்

கொடி கொடியாம் பூங்கோடியாம்

மின்மினிபோல் கண்மணியாம்

உறவினில் பல உரிமைகள் தொடரும்

No comments: