Monday, October 3, 2011

நல்ல பூப்போல உள்ளத்தைக் காட்டு இந்தப் பெண் மீது எண்ணத்தை மாற்று


ரங்கா ரங்கையா எங்கே போனாலும்
ரகசியம் மனசுக்கு சுமைதானே
ரங்கா ரங்கையா எங்கே போனாலும்
ரகசியம் மனசுக்கு சுமைதானே
பொல்லாத கோபத்தைத் தள்ளு
இங்கு என்னோடு ஏதேனும் சொல்லு
பொல்லாத கோபத்தைத் தள்ளு
இங்கு என்னோடு ஏதேனும் சொல்லு
நல்ல பூப்போல உள்ளத்தைக் காட்டு
இந்தப் பெண் மீது எண்ணத்தை மாற்று

ஹா.... ரங்கா ரங்கையா எங்கே போனாலும்
ரகசியம் மனசுக்கு சுமைதானே

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
பொய்யான கணக்கெழுதும் வணிகருண்டு
பொழுதெல்லாம் ஊர் கெடுக்கும் மனிதருண்டு
தவறாகப் பணம் சேர்க்கும் கயவர் உண்டு
சத்தியமே தலை மறைவாய்ப் போனதுண்டு
நல்ல மனிதர் ஆயிரம் சொல்லி நியாயம் நிலைக்கவில்லை
நல்ல மனிதர் ஆயிரம் சொல்லி நியாயம் நிலைக்கவில்லை
நாலு டாக்டர் பார்த்த பின்னும் நீதி பிழைக்கவில்லை
சொர்கத்தைக் காண்கின்ற வயசு
இது சொந்தங்கள் கொண்டாடும் மனசு
ஆஹா....பக்கத்தில் நிற்கின்ற இளசு
உன் பார்வைக்கு தவிக்கின்ற புதுசு

ஹா.... ரங்கா ரங்கையா எங்கே போனாலும்
ரகசியம் மனசுக்கு சுமைதானே

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
மை தீட்டும் கண்களிலே மயக்கம் உண்டு
மலர் சூடும் கூந்தலிலே மஞ்சம் உண்டு
கையோடு சேர்ந்திருக்க கன்னி உண்டு
காதலிலே நமக்கென்றோர் கவிதை உண்டு
பருவச்சிலையைப் பக்கத்தில் வைத்து உலகை நினைக்காதே
பாவம் நிறைந்த உலகத்துக்காக வேதம் படிக்காதே
பூங்காற்று தாலாட்டும் இரவு
இந்தப் பூவைக்கு உன்னோடு உறவு
அடி அம்மாடி என்னென்ன கனவு
இதை அறியாமல் ஏனிந்த நினைவு

ஹா.... ரங்கா ரங்கையா எங்கே போனாலும்
ரகசியம் மனசுக்கு சுமைதானே

No comments: