Wednesday, February 6, 2019

உன்னோடு லவ் என்று ஊர் சொன்னது நீ வேறு வேறு நான் வேறு யார் சொன்னது


என்னோடு காதல் என்று பேச வைத்தது
நீயா இல்லை நானா
ஊரெங்கும் வதந்திக் காற்று வீச வைத்தது
நானா இல்லை நீயா

உன்னோடு லவ் என்று ஊர் சொன்னது
நீ வேறு வேறு நான் வேறு யார் சொன்னது

என்னோடு காதல் என்று பேச வைத்தது
நீயா இல்லை நானா


என் சட்டை பட்டனோடு கூந்தல் முடியை சிக்கவைத்து
ஐயோ விடுடா என்றாய் நோ நோ நோ நோ
என் கண்ணில் தூசு கண்டு ஊதும் சாக்கில் ஒட்டி நின்று
மனசை குப்பை செய்தாய் சீ சீ சீ சீ

கண்ணை ஊதும் வேளை பார்த்து
வாயை ஊதி விட்டதாரு
நீயா இல்லை நானா
சரி வளைக்க முயன்றது யாரு யாரு
நீயா நானா
வளைந்து கொடுத்தது யாரு யாரு
நீயா நானா

நான் வந்து நீயோடு ஒன்றானது
நாம் என்ற சொல் ஒன்று உண்டானது - ஆண்டவா

என்னோடு காதல் என்று பேச வைத்தது நீயா இல்லை நானா


நம் ஹோட்டல் மாடி அறைக்கு நடந்து செல்வோம் என்ற போது
லிஃப்டில் செல்வோம் என்றாய் நோ நோ நோ நோ
பெண்ணே நம் லிஃப்டுக்குள்ளே நீள அகலம் நிறைய இருந்தும்
என்னை ஒட்டி நின்றாய் சீ சீ சீ சீ

லிஃப்டின் கதவு திறந்த பிறகும்
லிஃப்பை மூடிக் கிடந்ததாரு
நீயா இல்லை நானா
ஒட்டி வந்தது யாரு; யாரு யாரு
நீயா நானா
ஒத்துழைத்தது யாரு; யாரு நீயா நானா

உன்னோடு லவ் என்று ஊர் சொன்னது
நீ வேறு வேறு நான் வேறு யார் சொன்னது


என்னோடு காதல் என்று பேச வைத்தது
நீயா இல்லை நானா 

No comments: