Thursday, February 7, 2019

சுயநல மன்னா! மறதிகுமாரா! நேரமில்லா உனக்கு, காதல் ஒரு கேடா?


அப்புறம் ஏனோ பசிச்சா வாற?
அப்புறம் ஏனோ ருசிச்சா தூர?
 அப்புறம் ஏனோ பசிச்சா வாற?
அப்புறம் ஏனோ ருசிச்சா தூர?

சுயநல மன்னா! மறதிகுமாரா! வெக்கம் கெட்ட பொழப்பாம், காதல் ஒரு கேடா
மானமெல்லாம் கழட்டிடன்டி
 காலில் வந்து விழுந்துட்டன்டி கொஞ்சமென்ன நீயும் மன்னி ராணி
அப்புறம் ஏனோ சிடுசிடு வார்த்த?
அப்புறம் ஏனோ பிரியமா பாத்த?சுயநல மன்னா! மறதிகுமாரா! நேரமில்லா உனக்கு, காதல் ஒரு கேடா?

இதயம் பாத்தேன் பாசம் இல்லையே
ரகசியம் ஏதும் சொல்லுவதில்லையே
எப்பவும் மனசுக்கு பசியே இல்லையே
பெண் இவ மனசும் நீ கேக்கவில்லையே
சகியே உன் குறையெல்லாம் கேக்குறேன்
நல்லவனா ஆகப் பாக்குறேன்
பாவமெல்லாம் ஒத்துக்குறேன்
மூட்டக்கட்டி வீசிடுறேன்
மன்னிச்சு விட்டா நான் உன் பொம்மையாவேன்!
அப்புறம் ஏனோ, சிரிச்சழைப்பாயோ?
அப்புறம் ஏனோ எரிச்சலாவாயோ?
சுயநல மன்னா! மறதிகுமாரா! பரபரப்பாக, காதல் ஒரு கேடோ?
சொல்லிக்கொடு... காதல் கலை சொல்லித்தா பொண்ணே! சின்ன சின்ன நுணுக்கமெல்லாம் சொல்லித்தா பொண்ணே!  ஆளை எப்படி மடக்குறது சொல்லித்தா பொண்ணே! கோவம் எப்படி அடக்குறது சொல்லித்தா பொண்ணே
பாவ பாப்பா போல வேசம் பொருந்தல...
சூடு வாங்கி கூட திருந்தல...
 பேசி பேசி மடக்கப் பாத்து
மோத வேணா மூட மாத்து
காதல் உனக்கு பொம்மலாட்டக் கூத்து!
அப்புறம் ஏனோ இனிக்கும் முன்னிரவு?
அப்புறம் ஏனோ தனியா பின்னிரவு?அப்புறம் ஏனோ கொடுமை ஏனோ?
அழகே நான் உன் வாசல் மானோ?

No comments: