Thursday, August 6, 2009

சொக்க தங்க தாலி செய்ய கூரை பட்டுசேலை நெய்ய டவுணு பக்கம் போக வேணும் அவங்கள பாத்தியா


மாமர அணிலே மாமர அணிலே ..
அவங்கள பாத்தியா
என் மாமன் வெதைச்சா அவரை செடியே
அவங்கள பாத்தியா
பஞ்சாயத்து ஆல மரமே
அவங்கள பாத்தியா
பஞ்சா மெதக்கும் பருத்தி பூவே
அவங்கள பாத்தியா
அந்த பஞ்சுல நெய்ஞ்ச பாரத கோடியே
அவங்கள பாத்தியா
மாமர அணிலே மாமர அணிலே ..
அவங்கள பாத்தியா
என் மாமன் வெதைச்சா அவரை செடியே
அவங்கள பாத்தியா

மருதாணி நான் அரைச்சு மாமன் பேரை பூசி வச்சேன்
அவங்கள பாத்தியா
மாசாணி அம்மனுக்கு நெசத்துல பூசை வச்சேன்
அவங்கள பாத்தியா
பட்டு வெட்டி மடிப்புக்குள்ளே என் மனசை மடிச்சி கட்டி
கொள்ள காட்டு பக்கம் போன
அவங்கள பாத்தியா
சொக்க தங்க தாலி செய்ய கூரை பட்டுசேலை நெய்ய
டவுணு பக்கம் போக வேணும்
அவங்கள பாத்தியா

தினம் எட்டுபட்டி சாதி சனம் கட்டுப்பட்டு கூட வரும்
அவங்கள பாத்தியா ... அவங்கள பாத்தியா ...

மாமர அணிலே மாமர அணிலே ..
அவங்கள பாத்தியா
என் மாமன் வெதைச்சா அவரை செடியே
அவங்கள பாத்தியா

ஆத்துல நீந்தும் அயிர மீனே
அவங்கள பாத்தியா
அந்த அயிர மீனே ஆவாத ஐயரே
அவங்கள பாத்தியா
தினம் மண்ணுல மணக்கும் மஞ்ச கிழங்கே
அவங்கள பாத்தியா

மாமர அணிலே மாமர அணிலே ..
அவங்கள பாத்தியா
என் மாமன் வெதைச்சா அவரை செடியே
அவங்கள பாத்தியா

மச்சான் வாக்கப்பட்டு நான் ஒரசி சொக்குபட்ட
அவங்கள பாத்தியா
ராஜாதி கூட வர ராஜ நடை போட்டு வரும்
அவங்கள பாத்தியா

அச்சுவெல்லம் பாகு கூட பச்சரிசி மாவு போல
ஒட்டி உறவாக வேணும்
அவங்கள பாத்தியா
வெக்கப்பட்டு நானும் துள்ள கிட்ட வந்து சேர்த்து அள்ள
கட்டில் ஒன்னு செய்ய போறேன்
அவங்கள பாத்தியா

அவர் நெத்தி பொட்டு வேர்வையிலும் அத்தை மக பேரு இருக்கும்
அவங்கள பாத்தியா...அவங்கள பாத்தியா ..

மாமர அணிலே மாமர அணிலே ..
அவங்கள பாத்தியா
என் மாமன் வெதைச்சா அவரை செடியே
அவங்கள பாத்தியா
காட்டுலே மெய்யும் தாய் பசுமாடே
அவங்கள பாத்தியா
நீ கொடுக்கிற பால் போல் மனசு வெளுத்த
அவங்கள பாத்தியா
மகராசா நடக்குற வாய்க்கால் வரப்பே
அவங்கள பாத்தியா

மாமர அணிலே மாமர அணிலே ..
அவங்கள பாத்தியா
என் மாமன் வெதைச்சா அவரை செடியே
அவங்கள பாத்தியா

No comments: