Thursday, April 9, 2009

மன வீட்டை பூட்டி வைத்தேனே நான் தான், விழி ஜன்னல் பார்த்து குதித்தாயே நீ தான்ஏன்டா ராட்சசா நீ என்னை தொடர்கிறாய்
ஐயோ அந்த மாதிரி என் மேல் படர்கிறாய்
காதலில் வன்முறை காதலன் நீயே
கொண்டு போ என்னை நீயே கொண்டு போ


நீ கொஞ்சம் முரடன் தான்
திமிர் கொண்ட உருவம் தான்
ஆனாலும் உன்னை பிடிக்குமே
நீ நல்ல மனுஷன் தான்
ஸ்ரிங்கார புருஷன் தான்
அன்பே உன் கண்கள் பலிக்குமே

மன வீட்டை பூட்டி வைத்தேனே நான் தான்
விழி ஜன்னல் பார்த்து குதித்தாயே நீ தான்
உஷ்ணங்கள் ஏறி நிற்கிறேன்
நீ வா வா உன் கையில் என்னை சேர்கிறேன்

ஏன்டா ராட்சசா நீ என்னை தொடர்கிறாய்
ஐயோ அந்த மாதிரி என் மேல் படர்கிறாய்
காதலில் வன்முறை காதலன் நீயே
கொண்டு போ என்னை நீயே கொண்டு போ

எறும்பூற கல் தேயும்
நீ ஊற நான் தேய்ந்தேன்
பிடிவாத மன்னன் நீயாட
தொலை தூரம் சென்றாலும்
தொடும் தூரம் நின்றாலும்
பிரியாத நிழல் போல் நானாட

குளம் கொண்ட நீரில் கல் வீசினார் போல்
உள்ளம் கொஞ்சம் ஆட கண் வீசலாமா
நெஞ்சத்தை லேசாய் கிள்ளினாய்
நீ ஏன்டா நெருப்பாற்றில் என்னை தள்ளினாய்

ஏன்டா ராட்சசா நீ என்னை தொடர்கிறாய்
ஐயோ அந்த மாதிரி என் மேல் படர்கிறாய்
காதலில் வன்முறை காதலன் நீயே
கொண்டு போ என்னை நீயே கொண்டு போ

No comments: