Saturday, April 25, 2009

எந்தன் குரல் கேட்டு உன்னை தூக்கம் தழுவாதா


எந்தன் குரல் கேட்டு
உன்னை தூக்கம் தழுவாதா

எந்தன் குரல் கேட்டு
உன்னை தூக்கம் தழுவாதா
பந்தம் நானில்லை
பரிதாபம் கூடாதா
நண்பனே நண்பனே நண்பனே...
இவள் சொல்லும் வேதம் அரங்கேறுமா
உனக்கென்று வாழ்வில் ஓர் நியாயமா
இதை யாரிடம் சொல்வேன்
நண்பனே நண்பனே நண்பனே...

எந்தன் குரல் கேட்டு
உன்னை தூக்கம் தழுவாதா
பந்தம் நானில்லை
பரிதாபம் கூடாதா

ல ல லா ல ல லா........

இரவென்றும் பகலென்றும்
உனக்கில்லையே...
இளங்காலை பொன்மாலை
உனக்கில்லையே....
மது வென்னும் தவறுக்கு
ஆளாகிறாய்....
அதற்காக நியாயங்கள்
நீ தேடுகிறாய்
ஆயிரம் பூக்களில்
ஆனந்தம் காண்கிறாய்
நிறங்களே வேற்றுமை
நினைத்திடு நண்பனனே....
மது கிண்ணம் தலை எடுத்து
பெண்ணை விலைக்கொடுத்து
நீ மூடுவாய்.....

எந்தன் குரல் கேட்டு
உன்னை தூக்கம் தழுவாதா
பந்தம் நானில்லை
பரிதாபம் கூடாதா

ல ல லா ல ல லா........

வரவின்றி செலவானால்
தவறில்லையே
வாழ்நாட்கள் செலவானால்
வரவில்லையே
நேற்றோடும் இன்றோடும்
நீயில்லையே
நாளை உன் கையோடு
உனக்கில்லையே
யாரிடம் தவறு இல்லை
யாரிடம் குறை இல்லை
தூக்கமே நிம்மதி
தூங்கிடு நண்பனே.....
நீ கடந்த காலங்களை
களைந்து எறிந்துவிடு
விழி மூடுவேன்........

எந்தன் குரல் கேட்டு
உன்னை தூக்கம் தழுவாதா
பந்தம் நானில்லை
பரிதாபம் கூடாதா
நண்பனே.. நண்பனே ...நண்பனே...
இவள் சொல்லும் வேதம் அரங்கேறுமா
உனக்கென்று வாழ்வில் ஓர் நியாயமா
இதை யாரிடம் சொல்வேன்
நண்பனே... நண்பனே... நண்பனே...

ம்...ம்...ம்...ம்...ம்...ம்......