Monday, December 8, 2008

உன்னை முதல் முறை முதல் முறை பார்த்தேன்
நீயும் எனக்கென பிறந்தததை உணர்ந்தேன்


நிபுணா நிபுணா என் நிபுணா
மனம் படித்திடும் புது நிபுணா
மதனா மதனா மன்மதனா
என்னை மடக்கிய மந்திறனா

உன்னை முதல் முறை முதல் முறை பார்த்தேன்
நீயும் எனக்கென பிறந்தததை உணர்ந்தேன்
நீ பல முறை தொடர்வதை அறிந்தேன்
என்னை உனக்கென கொடுத்திட துணிந்தேன்
நீ எனக்குள் வசிக்க பரிதவித்தேன்

ஒரு பார்வை பார்க்கின்றாய்
உயிர் சுண்டி இழுக்கின்றாய்
உனை எண்ணில் விதைக்கின்றாய்
சுகமாய் சுகமாய் வதைக்கின்றாய்

நெருப்பாக கொதிக்கின்றாய்
மறு நொடியே குளிர்கின்றாய்
உறக்கத்தை கெடுக்கின்றாய்
மனத்தில் நுழைந்து குதிக்கின்றாய்

உடைகள் இன்றி இருப்பதனால்
நிலவை நீ அழகு என்றாய்
நிலவாய் என்னை நினைப்பத்னால்
உடைகள் உனக்கு எதற்கென்றாய்

அடடா நீதான் அலைகின்றாய்
எதையோ நினைத்து சிரிக்கின்றாய்
முழு தரிசனம் காண பறக்கின்றாய்

நிபுணா நிபுணா என் நிபுணா
மனம் படித்திடும் புது நிபுணா
மதனா மதனா மன்மதனா
என்னை மடக்கிய மந்திறனா


எதிர்பாரா நேரத்திலே எதிர்கொண்டு அனைத்தாயே
எதிர்பார்க்கும் சமையத்திலே தவிக்க வைத்து ரசித்தாயே

புதிர் போடும் கண்களிலே என் மனதை கலைத்தாயே
அதிசையங்கள் காட்டிடவே வில்லாய் எனையே வளைத்தாயே

வாசல் புள்ளி கோலங்களில் பின்னல்கள் போல் நாமே
இனிமேல் நாம் இருவருமே பின்னி பிணைந்து கிடப்போமே

விரலால் இடை மேல் நடந்தாயே
வேக தடைகள் கடந்தாயே
என் அழகை முழுதாய் அளந்தாயே

நிபுணா நிபுணா என் நிபுணா
மனம் படித்திடும் புது நிபுணா
மதனா மதனா மன்மதனா
என்னை மடக்கிய மந்திறனா

உன்னை முதல் முறை முதல் முறை பார்த்தேன்
நீயும் எனக்கென பிறந்தததை உணர்ந்தேன்
நீ பல முறை தொடர்வதை அறிந்தேன்
என்னை உனக்கென கொடுத்திட துணிந்தேன்
நீ எனக்குள் வசிக்க பரிதவித்தேன்

No comments: