Monday, December 8, 2008

சொந்த வேரோட தான் கொண்ட காதலினை
அது சொல்லாமல் போனாலும் புரியாதா?
போடும்


ஆவாரம்பூ அந்நாளில் இருந்தே யாருக்கு காத்திருக்கு
அந்தி பகல் மழை வெயில் சுமந்து உனக்காக பூத்திருக்கு

சொந்த வேரோட தான் கொண்ட காதலினை
அது சொல்லாமல் போனாலும் புரியாதா?

காற்றில் ஆடி தினந்தோறும் உனது திசையை தொடறுதடா
குழந்தை கால ஞாபகத்தில் இதழ்கள் விரித்தே கிடக்குதடா
நெடுநாள் அந்த நெருக்கம் நினைத்தே அது கெடக்கும்
சருகள் சத்தம் போடும் தினம் சுவடு கையெழுத்து போடும்
அது வார்த்தை அல்ல மௌனம் ஆகும்

ஆயுள் முழுதும் தவம் கிடந்தே ஒற்றை காலில் நிர்குதடா
மாலை ஆகி தவிழ்ந்திடவே உனது மார்பை கேட்குதடா
தனியே அது கிடக்கும் நீயும் பார்த்தால் உயிர் பிழைக்கும்
வண்ணங்கள் எல்லாம் நீதான் அதன் வாசங்கள் எல்லாம் நீதான்
நீ விட்டு சென்றால் பட்டு போகும்

சொந்த வேரோட தான் கொண்ட காதலினை
அது சொல்லாமல் போனாலும் புரியாதா?

ஆவாரம்பூ அந்நாளில் இருந்தே யாருக்கு காத்திருக்கு
அந்தி பகல் மழை வெயில் சுமந்து உனக்காக பூத்திருக்கு

No comments: