Sunday, December 28, 2008

என் காவல் நாயகனே, கலப்படம் அற்ற தூயவனே


புது காதல் காலமிது இருவர் வாழும் உலகிமிது
நீ நான் என்பதில் பொருள் படவில்லை ஏனோ?
புது தேடல் படலமிது தேகம் தேயும் தருணம்இது
கரைவதும் நுரைவதும் கண் முன் நிகழுது ஏனோ?
கொடு உனையே நீ எடுடா எனைத்தானே
நீ தொட்டால் பனி பாறை போலே
தேகம் கரையும் மாயம் என்ன
கொடு எனையே நான் உந்தன் துணை தானே
உன் வெட்கம் எனை வேட்டையாடி வேட்டையாடி விடுகிறதே

பனிமலை நடுவில் விழுந்தது போலே
உன் மடி இடையில் விழுந்தேன்
கிளைகளின் நுனியில் மலர்களை போலே
உன் கிளை மேலே வளர்ந்தேன்
மறைக்கின்றே பாகம் எல்லாம் விடுதலை கேட்குதே
விடு விடு வேகமாக விருப்பம் போல மலாரட்டும்
தொட தொட தேகமெல்லாம் தேன் துளி சுரக்குதே
தொடு தொடு வேகமாக சுரந்து வழிந்து ஓடட்டும்
வா அருகே நான் வாசனை மரம் தானே
என் நிழலில் நீ மயங்கி கொள்ள மருத்துவம்
இருக்கு நீ அறிவாய்
தேன் மழையால் நீ நனைத்தாய் எனையே
அது ஏதோ நீ சொல்லு சொல்லு சொல்லு சொல்லு நானறியேன்
என் காவல் நாயகனே, கலப்படம் அற்ற தூயவனே
என்னை ரசித்து இம்சை செய்வது ஏண்டா
என் காதல் தாயகமே, காமன் செய்த ஆயுதமே
உயிரை குடித்து தாகம் தீர்ப்பது என்டி?


உடல் வழி ஊர்ந்து, உயிர் வழி புகுந்து
ஆய்வுகள் செய்ய வந்தாயோ
என்னுடல் திறந்து நீ அதில் நிறைந்து
தவம் பல செய்திட வந்தாயோ
உடல் எங்கும் ரேகை வேண்டும் உன் நகம் வரையுமோ
விரல் படும் பாகம் எல்லாம் வெடிக்கு தே எரிமலை
வாலிப வாசம் என்னை வாட்டிடும் பொழுதிலே
வன்முறை செய்ய சொல்லி என் காதல் தேவி
ஏய் புயலே, என்னை வதைக்கும் வெயிலே
இடி போலே என்னை தாக்கி முதலில்
கைது செய்தாய் ஏன் சொல்வாய்
உன் உள்ளே நான் போரை தொடங்கிடாவா
நீ அதனை இன்று மெல்ல மெல்ல மெல்ல மெல்ல
வழி நடத்து

புது காதல் காலமிது இருவர் வாழும் உலகிமிது
நீ நான் என்பதில் பொருள் படவில்லை ஏனோ?
புது தேடல் படலமிது தேகம் தேயும் தருணம்இது
கரைவதும் நுரைவதும் கண் முன் நிகழுது ஏனோ?
கொடு உனையே நீ எடுடா எனைத்தானே
நீ தொட்டால் பனி பாறை போலே
தேகம் கரையும் மாயம் என்ன
கொடு எனையே நான் உந்தன் துணை தானே
உன் வெட்கம் எனை வேட்டையாடி வேட்டையாடி விடுகிறதே

No comments: