Tuesday, December 16, 2008

இரு கண்ணிலும்
உன் ஞாபகம்
உறங்காமல் இருக்கின்றது


ஒரு ஜீவன் தான்
உன் பாடல் தான்
ஓயாமல் இசைக்கின்றது
இரு கண்ணிலும்
உன் ஞாபகம்
உறங்காமல் இருக்கின்றது
பாசங்களும் பந்தங்களும்
பிரித்தாலும் பிரியாதது
காலங்களும் நேரங்களும்
கலைத்தாலும் கலையாதது

ஒரு ஜீவன் தான்
உன் பாடல் தான்
ஓயாமல் இசைக்கின்றது

ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உனைச் சேருவேன்
வேறாரும் நெருங்காமல் மனவாசல்தனை மூடுவேன்
உருவானது நல்ல சிவரஞ்சனி
உனக்காகத்தான் இந்த கீதாஞ்சலி
ராகங்களின் ஆலாபனை
மோகங்களின் ஆராதனை
உடலும் மனமும் தழுவும் பொழுதில் உருகும்

ஒரு ஜீவன் தான்
உன் பாடல் தான்
ஓயாமல் இசைக்கின்றது

காவேரி கரை சேர
அணை தாண்டி வரவில்லையோ
ஆசைகள் அலைபாய ஆனந்தம் பெறவில்லையோ
வரும் நாளெல்லாம் இனி மதனோற்சவம்
வளையோசைதான் நல்ல மணிமந்திரம்
நான்தானய்யா நீலாம்பரி
தாலாட்டவா நடுராத்திரி
சுதியும் லயமும் சுகமாய் இணையும் தருணம்

ஒரு ஜீவன் தான்
உன் பாடல் தான்
ஓயாமல் இசைக்கின்றது
இரு கண்ணிலும்
உன் ஞாபகம்
உறங்காமல் இருக்கின்றது
பாசங்களும் பந்தங்களும்
பிரித்தாலும் பிரியாதது
காலங்களும் நேரங்களும்
கலைத்தாலும் கலையாதது

கீழ் வர்க்கம் மேல் வர்க்கம்
இணயாத இரு கோடுகள் ஹாஹ் ஹ ஹ ஹ
சேர்ந்தாலும் சில நாளில்
கரைகின்ற மணல் வீடுகள்
கட்டில் சொந்தம் என்னைக் கைவிட்டது
தொட்டில் சொந்தம் என்னைத் தொடர்கின்றது
உயிர் வாழ்கிறேன் உனக்காகத்தான்
யாருமில்லை எனக்காகத்தான்
மலரே மலரே மடியும் தவழும் நிலவே

ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான்
ஓயாமல் இசைக்கின்றது

தெய்வங்கள் சில நேரம் தவறாக நினைக்கின்றது
பொருந்தாத இரு நெஞ்சை
மணவாழ்வில் இணைக்கின்றது
கல்யாணமே அன்பின் ஆதாரம்தான்
உன் வாழ்விலே அது வியாபாரம் தான்
மணி மாளிகை உன் வீடுதான்
மாஞ்சோலையில் என் கூடு தான்
மதுதான் மனைவி இனி என் வாழ்க்கை துணைவி

ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான்
ஓயாமல் இசைக்கின்றது
இரு கண்ண்ணிலும் உன் ஞாபகம்
உறங்காமல் இருக்கின்றது
பாசங்களூம் பந்தங்களும்
பிரித்தாலும் பிரியாதது
காலங்களும் நேரங்களும்
கலைத்தாலும் கலையாதது

No comments: