Friday, December 26, 2008

எத்தனையோ கவிதைகள் எழுதி இதயங்கள் எல்லாம் வென்றேனே
காதல் என்ற கவிதையை மட்டும் இலக்கண பிழையாய் எழுதிவிட்டேன்

என்னையும் உன்னையும் நெருங்கவைத்து இயற்கை நம்மை பழிக்கிறதே
இயற்கை இணைத்து வைத்தாலும் உன் செயற்கை தான் நம்மை பிரிக்கிறதே

என் கேள்விகளுக்கு பதிலில்லை என் உறவுகளுக்கு முகம் இல்லை
உன் கேள்விக்கு பதிலும் நான் தானே உன் உறவின் முகவரி நான் தானே

எத்தனையோ வீடுகள் கட்டி தோள்களில் மாலை சூடினேன்
காதல் என்ற வீட்டை மட்டும் கவனக்குறைவாய் கட்டினேன்

எத்தனையோ கவிதைகள் எழுதி இதயங்கள் எல்லாம் வென்றேனே
காதல் என்ற கவிதையை மட்டும் இலக்கண பிழையாய் எழுதிவிட்டேன்

தாகம் தீர்க்க தண்ணீர் கேட்டேன் சமுத்திரம் தந்தது யார் குற்றம்
கடல் நீரெல்லாம் கூடி நீராக்கும் சூத்திரம் மறந்தது உன் குற்றம்
கடல் நீரெல்லாம் குடிநீர் செய்வேன் கண்ணீரின் உப்பை நான் என்ன செய்வேன்

என்னையும் உன்னையும் நெருங்கவைத்து இயற்கை நம்மை பழிக்கிறதே
இயற்கை இணைத்து வைத்தாலும் உன் செயற்கை தான் நம்மை பிரிக்கிறதே

என் கேள்விகளுக்கு பதிலில்லை என் உறவுகளுக்கு முகம் இல்லை
உன் கேள்விக்கு பதிலும் நான் தானே உன் உறவின் முகவரி நான் தானே

தாமரை பூ பறிக்க வந்தேன் தங்க குளத்தில் விழுந்து விட்டேன்
தங்கச் சகதியில் புதைந்து புதைந்து தாமரை பூவை மறந்துவிட்டேன்

நினைத்த பூவை பறித்து கொண்டு குளத்தைவிட்டு வெளியேறு
தாமரை தண்டை பற்றிக்கொண்டே தங்க குளத்தில் கரையேறு

சொல்வது எளிவது செய்வது கடினம் என்பது தானே தகராறு
குளத்தின் கரைகள் போனாலும் உன் குலத்தின் கறைகள் போகாதே

வாங்கிய காதலை மீண்டும் என்னிடம் தந்துவிடு
தூங்கிய நாட்கள் மறந்து போனேன் எனக்கொரு முடிவை சொல்லிவிடு

No comments: